Sunday, 31 January 2021

மணிமொழி-§ 139

 

§ 139

 

When the physician does not make the trial of the medicine on himself, but gives it to another person, the latter must note down distinctly the sensations, sufferings, accidents and changes of health he experiences at the time of their occurrence, mentioning the time after the ingestion of the drug when each symptom arose and, if it lasts long, the period of its duration. The physician looks over the report in the presence of the experimenter immediately after the experiment is concluded, or if the trial lasts several days he does this every day, in order, while everything is still fresh in his memory, to question him about the exact nature of every one of these circumstances, and to write down the more precise details so elicited, or to make such alterations as the experimenter may suggest.102

 

Foot Note-102:  He who makes known to the medical world the results of such experiments becomes thereby responsible for the trustworthiness of the person experimented on and his statements, and justly so, as the weal of suffering humanity is here at stake.

 

 

மணிமொழி-§ 139

 

 

மருத்துவர் மருந்தின் பரிசோதனையை தன்மீது நிகழ்த்தாமல் , அதை வேறொரு மனிதரின் மீது நிகழ்த்தும் போது, பரிசோதனையாளர் அவரது கூருணர்வுகள் , துன்பங்கள் , விபத்துக்கள் மற்றும் அவைகள் நிகழும்  போது அவர் அனுபவிக்கும் அவருடைய ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள், மருந்து உட்கொண்ட பிறகு ஒவ்வொரு குறியும் தோன்றும் நேரம் , இந்தக் குறிகள் நீடித்திருந்தால் இதனுடைய கால அளவு முதலியவை அவரால் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு  பரிசோதனையாளர் இருக்கும் போதே மருத்துவர் உடனடியாக அந்த  அறிக்கையை  ஆராய வேண்டும் , அல்லது இந்தப் பரிசோதனை பல நாட்களுக்கு நீடித்திருந்தால் , பரிசோதனையாளரின் நினைவில் அனைத்துக்குறிகளும் இன்னும் புதியதாக இருக்கும்போது, இந்த ஒவ்வொரு நிகழ்வுகளின் துல்லிதத்தன்மையை வினவும் பொருட்டு மருத்துவர் இதைத் தினமும் செய்ய வேண்டும்.  மற்றும் மிகவும் துல்லியமான விவரங்களை மிகவும் சிறப்பான முறையிலும் அல்லது பரிசோதனையாளர்  பரிந்துரைக்கும் மாற்றங்களையும் அவர்  எழுதிக் கொள்ள வேண்டும்- 102

 

அடிக்குறிப்பு-102:

 

 

எவரொருவர் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை மருத்துவ உலகுக்குத் தெரியப்படுத்துகிறாரோ , அவர்  பரிசோதனைக்குட்பட்ட   நபரின் நம்பகத்தன்மைக்கும் அவரது கூற்றுகளுக்கும் பொறுப்பானவர் ஆகிறார்.  அவ்வாறு இருக்கும் போது , துன்பப்படும் மனிதகுலத்தின் வாழ்வு நலம்  இங்கே பணயப்பொருளாக  உள்ளது.

No comments:

Post a Comment