During
all the time the experiment lasts the diet must be strictly regulated; it
should be as much as possible destitute of spices, of a purely nutritious and
simple character, green vegetables-100
roots and all salads and herb soups (which, even when most carefully prepared,
possess some disturbing medicinal qualities) should be avoided. The drinks are
to be those usually partaken of, as little stimulating
as possible-101
Foot Note-101:
Young
green peas, green French beans ,boiled potatoes and in all cases carrots are allowable, as the
least medicinal vegetables.
Foot Note-102:
The
subject of experiment must either be not in the habit of taking pure wine,
brandy, coffee or tea, or he must have totally abstained for a considerable
time previously from the use of these injurious beverages, some of which are stimulating,
others medicinal.
மணிமொழி-§ 125
இந்த பரிசோதனை
நீடிக்கும் எல்லா நேரங்களிலும் உணவு
முறையை கண்டிப்பாக ஒழுங்குபடுத்த
வேண்டும்; மற்றும் எந்த அளவிற்கு முடியுமோ
மசாலாப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும், முற்றிலும் சத்தான மற்றும் எளிமையான தன்மைகொண்ட , பச்சை காய்கறிகள் -100
, வேர்கள் மற்றும் அனைத்து பச்சை காய்கறிகள் , பழங்கள் ஆகியவற்றின் கலவைகள் மற்றும் மூலிகை வடிசாறு (அவை மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டாலும் கூட,
சில தீங்கிழைக்கும் மருத்துவ குணங்களைக்
கொண்டிருக்கின்றன) தவிர்க்கப்பட வேண்டும்.மேலும் வழக்கமாக எடுத்துக்
கொள்ளப்படும் பானங்கள் , முடிந்தவரை குறைந்த தூண்டுசக்தி உடையதாக இருக்க வேண்டும் -101 .
அடிக்குறிப்பு-100:
குறைந்த அளவு மருத்துவ குணங்களையுடைய காய்கறிகளான , இளம் பச்சை பட்டாணி, பச்சை பிரஞ்சு பீன்ஸ், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கேரட் அனுமதிக்கப்படுகின்றன.
அடிக்குறிப்பு-101:
பரிசோதனைக்கு உட்படும் மனிதர் தூய ஒயின், பிராந்தி, காபி அல்லது தேநீர் எடுக்கும் பழக்கத்தில் இருக்கக்கூடாது, அல்லது இந்த தீங்கு விளைவிக்கும் பானங்களைப் பயன்படுத்துவதிலிருந்து அவர் கணிசமான காலத்திற்கு முன்பே முற்றிலும் விலகியிருக்க வேண்டும், ஏனென்றால் அவற்றில் சில கிளர்ச்சியூட்டுகிற தன்மை உடையதாகவும் மற்றவை மருத்துவ குணங்கள் கொண்டவைகளாகவும் இருக்கும்
No comments:
Post a Comment