Sunday 19 April 2020

ஆர்கனான் மணிமொழி-78




The true natural chronic diseases are those that arise from a chronic miasm, which when left to themselves, and unchecked by the employment of those remedies that are specific for them, always go on increasing and growing worse, notwithstanding the best mental and corporeal regimen, and torment the patient to the end of his life with ever aggravated sufferings. These, excepting those produced by medical malpractice (§ 74), are the most numerous and greatest scourges of the human race; for the most robust constitution, the best regulated mode of living and the most vigorous energy of the vital force are insufficient for their eradication.76


Foot note-76: During the flourishing years of youth and with the commencement of regular menstruation joined to a mode of life beneficial to soul, heart and body, they remain unrecognized for years. Those afflicted appeal in perfect health to their relatives and acquaintances and the disease that was received by infection or inheritance seems to have wholly disappeared. But in later years, after adverse events and conditions of life, they are sure to appear anew and develop the more rapidly and assume a more serious character in proportion as the vital principle has become disturbed by debilitating passions, worry and care, but especially when disordered by inappropriate medicinal treatment.


ஆர்கனான் மணிமொழி-78


இயற்கையான நாள்பட்ட நோய்கள் யாவும் நீடிக்கும் குணமுள்ள நோய்மூலக்கூறுகளில் இருந்து தோன்றுகின்றன


உண்மையான இயற்கையான நாள்பட்ட நோய்கள் நீடிக்கும் குணமுள்ள நோய் மூலக் கூறுகளின் ஏதோ ஒன்றினால் தான் தோன்றுகின்றன , அவற்றை அப்படியே விட்டுவிடும் போதும்   , அவற்றிற்கு உரிய திட்டவட்டமான   மருந்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுக்காவிட்டாலும்   , மனம் மற்றும் உடல் சார்ந்த ஆகார நியமமும் எத்தகைய சிறப்பான நிலையிலேயே இருந்தபோதிலும், எப்போதும் அதிகரித்து மற்றும் மோசமாகி வருகின்றன, நோயாளியை அவரது   வாழ்க்கையின் இறுதி வரை வதைத்துத் துன்பத்தை அதிகப்படுத்துவதாக உள்ளன. இந்த நிலை,  தவறான மருத்துவச்  சிகிச்சை முறையினால் தோன்றிய ( மணிமொழி-74 ) சிலவற்றைத் தவிர , எண்ணிக்கையில் அதிகமாக உள்ள இந்த நாட்பட்ட நோய்கள் மனித இனத்தை மிகவும் துன்புறுத்துபவையாக உள்ளன;  மிகவும் வலிமையான உடலமைப்பு ,  சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் மிகவும் வலிமையான உயிராற்றல் ஆகியவை அவர்களுக்கு இருந்த போதிலும்,  அவையாவும் இந்த நாட்பட்ட நோய்களை முற்றிலும் அழித்தொழிப்பதற்கு போதுமானதாக இல்லை-76.



அடிக்குறிப்பு-76:

செழிப்பான இளமைப்பருவத்தின் போதும்  மற்றும் வழக்கமான மாதவிடாய் (பெண்களுக்கு) தொடங்கியவுடன் அவர்களுடைய ஆன்மா, இதயம் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் வாழ்க்கை முறையுடன் இணைந்த பிறகும் , அவை ( நாட்பட்ட நோய்கள்)  பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் அங்கு  இருக்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் சரியான ஆரோக்கியத்துடன் இருப்பவர்களைப் போன்று காட்சியளிக்கிறார்கள்    மற்றும் தொற்று அல்லது பரம்பரை மூலம் பெறப்பட்ட நோய்கள் முற்றிலும் மறைந்துவிட்டவை போன்றும் காணப்படுகின்றன . ஆனால் பிற்காலத்தில், பாதகமான நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குப்  பிறகு, அவை (நாட்பட்டநோய்கள்) புதிதாகத் தோன்றுவது போன்றும்  மற்றும் மிக விரைவாக வளர்ச்சியடைவதாகவும் ஆகி விடுகின்றன மற்றும் அவர்களுடைய தீவிரமான உணர்ச்சிப் பாதிப்புகளுக்கு ஏற்றவாறும் , துக்கம் மற்றும் ஆழ்ந்த கவலை ஆகியவற்றாலும்,  இன்னும் குறிப்பாகக் கூறுவதென்றால் பொருத்தமில்லாத கேடு விளைவிக்கும் மருத்துவ  (அலோபதி) சிகிச்சையினால் அவர்களுடைய உயிரின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூறு (VITAL PRINCIPLE) தளர்ச்சியடைந்து அவர்களது இடர்பாடு மேலும் மோசமடைகிறது.

ஆர்கனான் மணிமொழி-77



Those diseases are inappropriately named chronic, which persons incur who expose themselves continually to avoidable noxious influences, who are in the habit of indulging in injurious liquors or aliments, are addicted to dissipation of many kinds which undermine the health, who undergo prolonged abstinence from things that are necessary for the support of life, who reside in unhealthy localities, especially marshy districts, who are housed in cellars or other confined dwellings, who are deprived of exercise or of open air, who ruin their health by overexertion of body or mind, who live in a constant state of worry, etc. These states of ill-health, which persons bring upon themselves, disappear spontaneously, provided no chronic miasm lurks in the body, under an improved mode of living, and they cannot be called chronic diseases.

ஆர்கனான் மணிமொழி-77

§ 77

நாள்பட்ட நோய்கள்  என்று   தவறாக  அழைக்கப்படும்  நோய்கள்


தவிர்க்கக்கூடிய  நச்சுத்தன்மை வாய்ந்த   தாக்கங்களுக்கு ஒருவர் தொடர்ந்து தம்மைத் தாமே ஆட்படுத்திக்  கொள்ளுதல் , தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள் அல்லது குடிப்பழக்கத்திற்கு தம்மைத் தாமே ஈடுபடுத்திக் கொள்ளுதல் , உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும்  பல வகையான ஒழுக்கம் கெட்ட வாழ்க்கைக்கு  அடிமையாகி விடுதல் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத துணையாக உள்ள பொருள்களை  நீண்டகாலமாக விலக்கிவிடுதல் , ஆரோக்கியமற்ற இடங்களில்  , குறிப்பாக சதுப்புநில மாவட்டங்கள் , பாதாள அறைகள் (நிலவறை) அல்லது காற்றோட்டம் இல்லாத  குடியிருப்புகள் போன்ற இடங்களில் குடியிருந்து வருதல் , உடற்பயிற்சி அல்லது திறந்த வெளிக்காற்று இல்லாமை , உடல் அல்லது மனதை மிகைப்படுத்தி உழைத்து தங்கள் ஆரோக்கியத்தை அழித்துக் கொள்ளுதல் , மற்றும் நிலையான தீராத கவலையுடன் வாழ்ந்து வருதல்   முதலியவற்றிற்கு தம்மை ஆட்படுத்திக் கொள்வதால் தேடிக்கொள்கிற நோய்கள் பொருத்தமற்ற முறையில் நாட்பட்ட நோய்கள்  என்று பெயரிடப்பட்டுள்ளன. மக்கள்  தாங்களாகவே   தேடிக்  கொள்கிற  இத்தகைய  உடல்நலக் கேடான இந்த நிலைகள், அவர்களது  மேம்பட்ட வாழ்க்கை முறையின் கீழ் , அவரது உடலில் வேறெந்த நாட்பட்ட மியாசங்கள் ( நோய் மூலங்கள்) மறைந்து கிடைக்கவில்லையென்றால் , தன்னிச்சையாக மறைந்துவிடுகின்றன, ஆகவே அவற்றை நாட்பட்ட நோய்கள் என்று அழைக்க முடியாது.


ஆர்கனான் மணிமொழி-76




Only for natural diseases has the beneficent Deity granted us, in Homoeopathy, the means of affording relief; but those devastations and maimings of the human organism exteriorly and interiorly, effected by years, frequently, of the unsparing exercise of a false art,75 with its hurtful drugs and treatment, must be remedied by the vital force itself (appropriate aid being given for the eradication of any chronic miasm that may happen to be lurking in the background), if it has not already been too much weakened by such mischievous acts, and can devote several years to this huge operation undisturbed. A human healing art, for the restoration to the normal state of those innumerable abnormal conditions so often produced by the allopathic non-healing art, there is not and cannot be.


Foot Note-75: If the patient succumbs, the practiser of such a treatment is in the habit of pointing out to the sorrowing relatives, at the post-mortem examination, these internal organic disfigurements, which are due to his pseudo-art, but which he artfully maintains to be the original incurable disease (see my book,  Allopathy: A word of warning to All sick persons , Leipzig,


 Baumgartner [translated in Lesser Writings]). Those deceitful records, the illustrated works on pathological anatomy, exhibit the products of such lamentable bungling. Deceased people from the country and those from the poor of cities who have died without such bungling with hurtful measures are not opened up through pathological anatomy as a rule. Such corruption and deformities would not be found in their corpses. From this fact can be judged the value of the evidence drawn from these beautiful illustrations as well as of the honesty of these authors and book makers.



ஆர்கனான் மணிமொழி-76
§ 76

உயிராற்றல்  போதுமான வலிமையுடன் இருக்கும் போது, அதுவே உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை  போராடி அடிக்கடி  நலப்படுத்துகிறது. அப்போது உண்மையான நோய்  ஹோமியோபதி விதிகளுக்கு இணங்க  வெளியேற்றப்படுகிறது .



ஹோமியோபதி மருத்துவத்தின்  மூலமாக , இயற்கை நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும் வழிகளை ,  நலம் செய்கிற தெய்வம் (இயற்கை )  நமக்கு  கொடுத்துள்ளது  ; ஆனால் ஒரு தவறான கலையின் (அலோபதி மருத்துவ)  இடைவிடாத செயல்களால் , 75 அதன் தீங்கு விளைவிக்கும் மருந்துகளும்  மற்றும் சிகிச்சையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து  , மனித உறுப்பமைவின் வெளிப்புறத்திலும் மற்றும் வெளிப்புறத்திலும் ஏற்படுத்தியுள்ள அழிவுகளையும் மற்றும் உறுப்புப் பாதிப்புகளையும் உயிராற்றல் தானாகவே  போராடி நீக்க வேண்டும் என்ற நிலை உள்ளது ( பின்னணியில் பதுங்கியிருக்கக் கூடிய எந்தவொரு நாள்பட்ட  மியாசத்தையும் முற்றிலும் அழிப்பதற்கு பொருத்தமான உதவிகளைத் தரவும் வேண்டும் ), இதுபோன்ற விஷமம் நிறைந்த சிகிச்சையினால் உயிராற்றல்   ஏற்கனவே  மிக அதிகமாக பலவீனமடையவில்லை என்றால், பல ஆண்டுகளாக எந்தப் பாதிப்புமின்றி நலமாக இயங்கியிருக்கக்கூடும்   . குணப்படுத்த இயலாத அந்த அலோபதி சிகிச்சை முறையினால்  உருவாக்கப்படும்   எண்ணற்ற அசாதாரண நிலைமைகளைப் போக்கி , உடலை மீண்டும்  இயல்பான  நிலைக்கு மீட்டெடுக்க உரியதாக உள்ள   , மனித குலத்தை நலப்படுத்தும்  ஒரு மருத்துவக்கலை எதுவும் இல்லை மற்றும் இருக்க முடியாது.


அடிக்குறிப்பு-75:


சிகிசைக்குப்பின் நோயாளி இறந்துவிட்டால், அத்தகைய சிகிச்சையின் பயிற்சியாளர் , அந்தப் போலி மருத்துவக்கலையின் விளைவாக இறந்த நோயாளியின் பிரேத பரிசோதனையின் மூலம்  இறந்தவரின் உடலின் உள்ளே ஏற்பட்ட உள்ளுறுப்புச் சிதைவுகளை சுட்டிக்காட்டி  , அது தொடக்கத்தில் இருந்தே  குணப்படுத்த முடியாத நோயாக இருந்தது என்று அந்த நோயாளியின் உறவினர்களை நோக்கி திறம்பட கூறுகின்றனர் {  ஹானிமன்  புத்தகத்தை பார்க்கவும் :  அலோபதி, எல்லா நோயுற்ற மனிதர்களுக்கும் ஒரு எச்சரிக்கை வார்த்தை ( லீப்ஜிக், பாம்கார்ட்னர்) [குறைந்த எழுத்துக்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது]} . அந்த வஞ்சக பதிவுகள், நோயியல் உடற்கூறியல் பற்றிய விளக்கப்படங்கள், இதுபோன்ற புலம்பக்கூடிய அலங்கோலமான அல்லது குளறுபடியான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. கிராமப்பகுதி அல்லது நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர்கள்  இறந்தாலும் மற்றும் நகர்புறத்தில் வாழ்பவர்களில் ஏழைகளாக இருப்பவர்கள்  இதுபோன்ற குளறுபடிக்கும்  துன்புறுத்தலுக்கும்    ஆளாகி  இறந்துவிட்டாலும் , அவர்களது உடலை  நோயியல் உடற்கூறியல் மூலம் ஆய்வு செய்வதை விலக்கி விடுவது என்பது ஒரு விதியாக பின்பற்றப்படுகிறது.  இத்தகைய ஊழல்களும் குறைபாடுகளும் அவர்களின் சடலங்களில் காணப்படாது. இந்த உண்மையிலிருந்து இந்த அழகான எடுத்துக்காட்டுகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மதிப்பு மற்றும் இந்த ஆசிரியர்கள் மற்றும் புத்தக தயாரிப்பாளர்களின் நேர்மை ஆகியவற்றை தீர்மானிக்க முடியும்.