Tuesday, 5 January 2021

மணிமொழி-§ 129

 

§ 129

 

If the effects that result from such a dose are but slight, a few more globules may be taken daily, until they become more distinct and stronger and the alterations of the health more conspicuous; for all persons are not effected by a medicine in an equally great degree; on the contrary, there is a vast variety in this respect, so that sometimes an apparently weak individual may by scarcely at all affected by moderate doses of a medicine known to be of a powerful character, while he is strongly enough acted on by others of a much weaker kind. And, on the other hand, there are very robust persons who experience very considerable morbid symptoms from an apparently mild medicine, and only slighter symptoms from stronger drugs. Now, as this cannot be known beforehand, it is advisable to commence in every instance with a small dose of the drug and, where suitable and requisite, to increase the dose more and more from day to day.

 

மணிமொழி-§ 129

 

மேற்க்கூறியவாறு மருந்துகளை எடுத்துக் கொண்டதின் காரணமாக ஏற்பட்ட   விளைவுகள் சிறிதளவாக  இருந்தால், அவை மிகவும் தனித்துவமானதாகவும் வலுவானதாகவும்  மாறும் வரை,  மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட  மாற்றங்கள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் வரை  மேலும்  சில மருந்து ருண்டைகள்    தினமும்  எடுத்துக்கொள்ளப்படலாம் ; எல்லா மனிதர்களும் ஒரு மருந்தால் சமமாக பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை; மாறாக, இந்த விஷயத்தில்  பல்வேறு  வகையான பாதிப்பு  உள்ளது, இதனால்,  சில நேரங்களில் வெளிப்படையாக தெரியும் பலவீனமான ஒரு மனிதர்  ஆற்றல் வாய்ந்த தன்மையைக் கொண்ட ஒரு மருந்தின் மிதமான அளவுகளால் பாதிக்கப்படுவதில்லை, அதே நேரத்தில்  அம்மனிதரிடம்  ஆற்றல் குறைந்த மற்ற மருந்துகள் வலுவாகவும்  போதுமான அளவிற்கும் செயல்படுகிறது  . மறுபுறம், வெளிப்படையான மிதமான  மருந்தினை மிகவும் வலிமைமிக்க மனிதருக்கு கொடுக்கும் போது  மிகவும் கணிசமான நோயுற்ற அறிகுறிகளையும் ,  வலுவான மருந்துகளிலிருந்து மெல்லிய அறிகுறிகளையும் அவர் உணருகிறார் . இப்போது, மருந்தின் இந்த ஆற்றல்களை முன்பே அறியமுடியாததால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு சிறிய அளவிலான மருந்தைக் கொண்டு தொடங்குவது நல்லதென பரிந்துரைக்கப்படுகிறது  , மேலும், பொருத்தமான மற்றும் அவசியமான தருணங்களில் மருந்தின் அளவை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment