§ 134
All external influences, and more especially medicines, possess
the property of producing in the health of the living organism a particular
kind of alteration peculiar to themselves; but all the symptoms peculiar to a
medicine do not appear in one person, nor all at once, nor in the same
experiment, but some occur in one person chiefly at one time, others again
during a second or third trail; in another person some other symptoms appear,
but in such a manner that probably some of the phenomena are observed in the
fourth, eighth or tenth person which had already appeared in the second, sixth
or ninth person, and so forth; moreover, they may not recur at the same hour.
மணிமொழி-§ 134
அனைத்து வெளிப்புற தாக்கங்கள்,
குறிப்பாக மருந்துகள் , உயிரினத்தின் ஆரோக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான , அவைகளுக்கே உரிய விசித்திரமான மாற்றத்தை உருவாக்கும் இயல்பை
தன்னகத்தே கொண்டுள்ளன; ஆனால் ஒரு
மருந்துக்குரிய விசித்திரமான அனைத்து
அறிகுறிகளும் ஒரு மனிதரிடமோ , அனைவரிடமோ ,
அதே நேரத்தில், அதே பரிசோதனையிலோ
தோன்றாது, ஆனால் ஒரு மனிதரிடம் முக்கியமாக
முதல் தடவையிலேயே சில அறிகுறிகள்
ஏற்படுகின்றன, மற்றவர்களுக்கு இரண்டாவது
அல்லது மூன்றாவது பரிசோதனையின் போது
அக்குறிகள் நிகழ்கின்றன; மற்றொரு மனிதரிடத்தில் வேறு சில அறிகுறிகள் தோன்றும், ஆனால்
நான்காவது, எட்டாவது அல்லது பத்தாவது மனிதர்களிடத்தில் இரண்டாவது, ஆறாவது அல்லது ஒன்பதாவது
மனிதரிடத்தில் ஏற்கனவே தோன்றிய சில அறிகுறிகள்
காணப்படுகின்றன; மேலும், அவை ஒரே குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும்
நிகழ்வதில்லை.
No comments:
Post a Comment