But the best provings of the pure
effects of simple medicines in altering the human health, and of the artificial
diseases and symptoms they are capable of developing in the healthy individual,
are those which the healthy, unprejudiced and sensitive physician institutes on himself
with all the caution and care here enjoined. He knows with the greatest
certainty the things he has experienced in his own person.103
Foot Note-103: Those trials made
by the physician on himself have for him other and inestimable advantages. In
the first place, the great truth that the medicinal virtue of all drugs,
whereon depends their curative power, lies in the changes of health he has
himself undergone from the medicines he has proved, and the morbid states he
has himself experienced from them, becomes for him an incontrovertible fact.
Again by such noteworthy observations on himself he will be brought to
understand his own sensations, his mode of thinking and his disposition (the
foundation of all true wisdom), and he will be also trained to be, what every
physician ought to be, a good observer. All our observations on others are not
nearly so interesting as those made on ourselves. The observer of others must
always dread lest the experimenter did not feel exactly what he said, or lest
he did not describe his sensations with the most appropriate expressions. He
must always remain in doubt whether he has not been deceived, at least to some
extent. These obstacles to the knowledge of the truth, which can never be
thoroughly surmounted in our investigations of the artificial morbid symptoms
that occur in others from the ingestion of medicines, cease entirely when we
make the trials on ourselves. He who makes these trials on himself knows for
certain what he has felt, and each trial is a new inducement for him to
investigate the powers of other medicines. He thus becomes more and more
practised in the art of observing, of such importance to the physician, by
continuing to observe himself, the one on whom he can most rely and who will
never deceive him; and this he will do all the more zealously as these
experiments on himself promise to give him a reliable knowledge of the true
value and significance of the instruments of cure that are still to a great
degree unknown to our art. Let it not be imagined that such slight
indispositions caused by taking medicines for the purpose of proving them can
be in the main injurious to the health. Experience shows on the contrary, that
the organism of the prover becomes, by these frequent attacks on his health,
all the more expert in repelling all external influences inimical to his frame
and all artificial and natural morbific noxious agents, and becomes more
hardened to resist everything of an injurious character, by means of these
moderate experiments on his own person with medicines. His health becomes more
unalterable; he becomes more robust, as all experience shows.
மணிமொழி-141
ஆரோக்கியமான மருத்துவர்கள் ஹோமியோபதி மருந்துகளை தாமே எடுத்துக்கொண்டு
பரிசோதனை செய்து பார்ப்பது தான் சிறந்தது.
மனிதர்களின் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எளிய மருந்துகளின் தூய்மையான விளைவுகள் , மற்றும் ஆரோக்கியமான மனிதரிடத்தில் அவை உண்டாக்கக் கூடிய செயற்கையான
நோய்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை
, ஆரோக்கியமான முன்முடிவற்ற மற்றும் உணர்ச்சிமிக்கவரான மருத்துவர், வரையறை செய்யப்பட்ட எச்சரிக்கையுடனும் மற்றும்
கவனத்துடனும் தமக்குத் தாமே பரிசோதனை செய்து கொள்வது தான் சிறந்த மருந்து நிரூபணம்
ஆகும். அவ்வாறு செய்யும் போது அவர் தமது சொந்த பரிசோதனையாளர்களிடம் பட்டறிந்த
நிரூபணக்குறிகளை அவராலும் மிக உறுதியாக
அறிந்து கொள்ள முடியும் -103.
அடிக்குறிப்பு-103:
மருத்துவர் தன் மீதே அத்தகைய
சோதனைகளை மேற்க்கொள்வது அவருக்கு
வேறு சில மற்றும் விலைமதிப்பிட முடியாத
நன்மைகளையும் கொண்டதாக இருக்கிறது . முதலாவதாக,
எல்லா மருந்துகளின் மருத்துவ நற்பண்புகளும், அவற்றின் நோய் தீர்க்கும் சக்தியைப்
பொறுத்தது ஆகும் , அது அவர் நிரூபித்த மருந்துகளிலிருந்து அவர் அனுபவித்த ஆரோக்கிய
நிலையின் மாற்றங்களையும் , மற்றும்
அவற்றிலிருந்து அவர் அனுபவித்த மோசமான நிலைகளையும் அவரே பட்டறிந்தவர் ஆகிறார் ,
எனவே அது அவருக்கு மறுக்க முடியாத உண்மை ஆகிறது . மேலும் அவர் தன்மீது
மேற்கொள்ளும் இத்தகைய குறிப்பிடத்தக்க
கூர்ந்த கவனிப்புகள் மூலம் அவர் தனது
சொந்த உணர்வுகள், அவரது சிந்தனை முறை மற்றும் அவரது மனநிலை (எல்லா உண்மையான மெய்யறிவுக்கு அடித்தளமாக இருப்பது ) ஆகியவற்றைப் புரிந்துகொள்வார், மேலும்
ஒவ்வொரு மருத்துவரும் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் , ஒரு நல்ல கூர்ந்து
கவனிக்கும் மருத்துவராக இருப்பதற்கும்
தேவையான பயிற்சிகளை அவர் பெறுகிறார் . நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்தி பெரும் கூர்ந்த கவனிப்புகளைப் போல மற்றவர்கள் மீது மேற்கொள்ளும் கவனிப்புகள்
அமைவதும் இல்லை. ஒரு மருத்துவர் அல்லது ஆய்வு செய்பவர் மற்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி
ஆய்வு செய்யும் போது , அந்த சோதனையாளர் அவர் உணர்ந்தவற்றைச் சரியாக சொல்லவில்லை ,
அல்லது அவர் தனது உணர்ச்சிகளை மிகவும் பொருத்தமான வெளிப்பாடுகளுடன் விவரிக்க
வில்லை என்று பெரிதும் பயப்படக்கூடும்.
அவர் ஓரளவுக்கேனும் தாம் ஏமாந்து விட்டோமோ
என்ற சந்தேகத்தில் எப்போதும் இருக்க
வேண்டும். மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுத்து செயற்கை நோய் அறிகுறிகளை நாம்
ஆராய்ச்சி செய்யும் போது அங்கு உண்மையான
பட்டறிவை பெறுவதற்குத் தடையாக உள்ளவற்றை
அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாது. நாமே மருந்துகளை உட்க்கொண்டு சோதனைகளை
செய்யும் போது அத்தகைய தடைகள்
ஏற்படுவதில்லை. இந்த சோதனைகளை தனக்குத்தானே செய்கிறவனுக்கு
அவன் உணர்ந்ததை உறுதியாக அறிய
முடிகிறது , மேலும் இத்தகைய ஒவ்வொரு ஆய்வு முயற்சியும் மற்ற மருந்துகளின் ஆற்றல்களை அறிந்துகொள்ள அவருக்கு ஒரு புதிய தூண்டுதலாகவும் அமைகிறது .
அவர் மென்மேலும் கவனிக்கும் கலையில்
அதிகம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது , அதாவது
தம் மீதே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கவனிப்பு முறை அவரை ஏமாற்றுவதில்லை
ஆதலால் அவர் அதில் உறுதியாக சார்ந்திருக்க முடிகிறது ; மேலும் இத்தகைய பரிசோதனைகளில் தன்னைத்தானே
வைராக்கியத்துடன் ஈடுபடுத்தி கொள்கிறார்கள், ஏனெனில்
, நமது மருத்துவக் கலையில் இன்னும்
பேரளவிற்கு தெரியாத, குணப்படுத்தும்
கருவிகளாக இருக்கிற மருந்துகளின் உண்மையான
மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய நம்பகமான அறிவை அவருக்கு
வழங்குவதற்கும் அத்தகைய ஆய்வு
பயன்படுகிறது . எனவே அந்த மருத்துவர் இன்னும்
மிகுதியாக ஆர்வ உணர்வுடன் அத்தகைய ஆய்வில் ஈடுபடுகின்றார். மருந்துகளை
நிரூபிக்கும் நோக்கத்திற்காக உட்கொள்ளும்
போது அம் மருந்துகளினால் ஏற்படும் சிறிய உடல்நலப்பாதிப்புகள் ஆரோக்கியத்திற்கு முக்கிய தீங்கு விளைவிக்கும்
என்று கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை .
பட்டறிவு அதற்கு மாறாகவே இருக்கிறது, அதாவது
மருந்துகளை நிரூபணம் செய்பவர் மருந்துகளை உட்கொண்டு ஆய்வுகள் செய்யும் போது , அவரது உடல் நலத்தில் அடிக்கடி ஏற்படும்
தாக்குதல்களால், உடல்நலத்திற்குத் தீங்கான புறத்திலிருந்து வந்து தமது
உடல்நலத்தைத் தாக்கும் , அனைத்து செயற்கை மற்றும் இயற்கையான நச்சுப் பொருள்களையும் விரட்டுவதில் வல்லமை வாய்ந்ததாகவும் , மற்றும்
தீங்கு விளைவிக்கும் தன்மையுடன் வரும் எல்லாவற்றையும் எதிர்க்கும்
தன்மையுடைதாகவும் அவரது உறுப்பமைவு மாறுகிறது . அவரது உடல்நலம் மேலும்
மாற்றத்திற்கு உள்ளாகாதவாறு இருக்கிறது; அவரது
உடல்நலம் மேலும் பெருகி வலுவானவராக அல்லது ஆரோக்கியமானவராக மாறுகிறார்
என்பதையே எல்லா பட்டறிவும் காட்டுகிறது.