Saturday 10 October 2015

துயரர் வரலாறு -நேட்ரம் மூரியாடிக்கம்


நான் கடவுளா?

அந்த பெண்ணிற்கு வயது 29. எனது நெருங்கிய உறவினரும் கூட. மிகவும் அமைதியான பெண். யாருடனும் அதிகம் பேசுவதில்லை. ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு பதக் மருந்துகாண் ஏட்டில் மண்டையை உடைத்து கொண்டிருந்தேன் . அப்பெண் என்னருகில் நிற்பதைப் பார்த்து என்னம்மா? என்று கேட்டேன். ஒரு நிமிடம் மௌனம். பின்னர் மெதுவாக வந்தது அந்த வார்த்தை ,அண்ணே! நான் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், எனக்கு மருந்து கொடுங்கள்!.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்   , அவர்களிடமிருந்து குறிகள் ஒற்றை வார்த்தையில் தான் வரும்.  பல சந்தர்ப்பங்களில் சரியான மருந்தை தேர்வு செய்வதற்கு திணறி விடுவதும் உண்டு.

அந்தப் பெண்ணிற்குத் (இரண்டாவது)  திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தன. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருந்தது. அவரிடமிருந்து கிடைத்த தகவல் இதுதான்; இரண்டாவது கணவன் சந்தோசமாக வைத்திருந்தாலும் அடி , உதை மற்றும் வசைகள் தான். எல்லாவற்றையும் மனதிற்குள் வைத்து புழுங்கும் சுபாவம். கணவனை எதிர்த்துப் பேசுவதில்லை. தனியாக வீட்டிற்குள் அழுது கொள்வதுண்டு.  எனக்கு சிந்ததிஸ் ரெபெர்டரியில் படித்த இந்த குறிமொழி தான் ஞாபகத்திற்கு வந்தது.

Children , beget and to have children ; desire to : nat-m, ox-ac, podo ( Synthesis 8.1 page 37)

அடுத்து , அப்பெண்; Taciturn ; Reserved.
மருந்து : நேட்ரம் மூர்-30*

பிறகு ஒரு மாதத்திற்கு இரண்டாவது சரியான மருந்து கொடுக்கப்பட்டது (SL ) . அடுத்த பத்து மாதங்களில் அந்தப்பெண்ணிற்கு பிறந்த அந்தப்பையன் இப்போது UKG படித்துக் கொண்டு வருகிறான். ஒருமுறை எனது இல்லவிழாவிற்கு வந்த பொழுது, அந்தச்சகோதரி அச்சிறுவனின் இரு கரங்களையும் பிடித்து வைத்து , உனக்கு கடவுள் இவர் தான் என்று என்னை வணங்க வைத்தது எனது வாழ்நாளில் மிகவும் நெகிழ வைத்த நிகழ்வு. ஆனால் நான் கடவுள் இல்லை . இது மாமேதை ஹானிமன் இவ்வுலகிற்கு கொடுத்துச் சென்றுள்ள ஹோமியோபதி  மருத்துவத்தினால் விளைந்த கொடை!.


* இந்த மாதியான தருணத்தில் 200 வது வீரியம் தவிர்க்கப்படவேண்டும். ஏனென்றால் அந்த வீரியம் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் என்று படித்ததாக ஞாபகம்.

1 comment:

  1. Very nice. But most of the women have this primary symptom. Taciturnity is also not a big symptom. But these cases restore may faith in the repertories and such rubrics.

    ReplyDelete