Monday 31 August 2015

ஆர்கனான் மணிமொழி-34

§ 34

The greater strength of the artificial diseases producible by medicines is, however, not the sole cause of their power to cure natural disease. In order that they may effect a cure, it is before all things requisite that they should be capable of producing in the human body an artificial disease as similar as possible to the disease to be cured, which, with somewhat increased power, transforms to a very similar morbid state the instinctive life principle, which in itself is incapable of any reflection or act of memory. It not only obscures, but extinguishes and thereby annihilates the derangement caused by the natural disease. This is so true, that no previously existing disease can be cured, even by Nature herself, by the accession of a new dissimilar disease, be it ever so strong, and just as little can it be cured by medical treatment with drugs which are incapable of producing a similar morbid condition in the healthy body.


மிகுந்த பலம் வாய்ந்த செயற்கையான நோய்களை தோற்றுவிக்கிற ஆற்றல் பெற்றுள்ளன என்ற தனித்த காரணத்தால் தான், மருந்துகள் இயற்கையான நோயை நீக்குகிறது என்று எண்ண கூடாது. அவை  மனித உடலில் நலமாக்கும் ஆற்றலைச் செய்யவேண்டுமென்றால், நலபடுத்தவேண்டிய நோயிற்குக் கூடுமானவரை ஒத்த செயற்கையான நோயை அவை உண்டாக்குவதே மற்றவற்றைக் காட்டிலும் இன்றியமையாதவையாக இருக்கிறது. அம்மருந்துகள் தானாகவே அதிகரித்த சக்தியுடன் செயல்பட முடியாததும் , நினைவாற்றலைப் பயன்படுத்தி செயல்புரிய இயலாததும், தூண்டுணர்வின் பாற்பட்டதும் ஆகிய உயிர் முதலாற்றலை சற்று அதிகரித்த மருந்தாற்றலைச் செலுத்தி மிகவும் ஒத்த  தன்மையுடைய செயற்கை நோய்ப்பாதிப்பை உண்டாக்குகின்றன. அதனால் இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒழுங்குலைவு மாற்றப்பட்டு,மங்கச்செய்வது மட்டுமன்றி முற்றிலும் ஒழித்துக்கட்டப்படுகிறது. இயற்கை அன்னையின் ஆற்றல் எவ்வளவு தான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும், ஒத்ததன்மை இல்லாது போனால் அதனால் ஏற்கனவே உறைந்திருக்கும் நோயை நீக்க முடியாது. அதைப்போலவே இயற்கை நோய் குறிகளுடன் ஒத்த செயற்கையான நோய்குறிகளை ஆரோக்கியமான மனித உடலில் உண்டாக்க முடியாத பிற மருத்துவத்தாலும், மருந்துகளாலும் அது எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் ஓரளவே நலப்படுத்த முடியுமே தவிர முற்றிலுமாக இயற்கையான நோயை நீக்குவது இல்லை என்பது தெளிவான உண்மையாகும்.



ஆர்கனான் மணிமொழி-33

§ 33

In accordance with this fact, it is undeniably shown by all experience1 that the living organism is much more disposed and has a greater liability to be acted on, and to have its health deranged by medicinal powers, than by morbific noxious agents and infectious miasms, or, in order words, that the morbific noxious agents possess a power of morbidly deranging man's health that is subordinate and conditional, often very conditional; whilst medicinal agents have an absolute unconditional power, greatly superior to the former.

Foot Note-1:  A striking fact in corroboration of this is, that whilst previously to the year 1801, when the smooth scarlatina of Sydenham still occasionally prevailed epidemically among children, it attacked without exception all children who had escaped it in a former epidemic; in a similar epidemic which I witnessed in Konigslutter, on the contrary, all the children who took in time a very small dose of belladonna remained unaffected by this highly infectious infantile disease. If medicines can protect from a disease that is raging around, they must possess a vastly superior power of affecting our vital force.


இந்த உண்மையைப் பின்பற்றியும், மறுக்க முடியாத எல்லா  பட்டறிவின்  வாயிலாகவும் தெரிந்து கொண்டது என்னவென்றால் மனிதஉடல் இயற்கையாக நோயை உண்டாக்குகிற நச்சுப் பொருள்களாலும் மற்றும் தொற்று நோய் மூலங்களாலும் பாதிக்கப்படுவதைக்காட்டிலும் மருந்துப் பொருள்களின் ஆற்றலால்  தான் அதிகமான அளவிலும் மிக எளிதிலும் தாக்கப்படுகிறது. வேறு விதமாக கூற வேண்டுமென்றால் இயற்கையான நோயாற்றல் , ஆற்றல் குறைந்ததாகவும் , ஒருவித நிபந்தனைக்கு உட்பட்டும், ஏன் மிகவும் நிபந்தனையுடன்  நடந்து கொண்டு மனிதர்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கிறது . ஆனால்  மருந்து பொருள்களின் ஆற்றலோ முற்றிலும் எந்தவிதமான நிபந்தனைக்கும் உட்படாத வகையில் எல்லா சமயங்களிலும் சூழ்நிலைகளிலும் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தன்மையில், இயற்கையான நோயாற்றலை விட அதிக வல்லமையுடையதாக இருக்கின்றன.

அடிக்குறிப்பு -1 

இதை உறுதிபடுத்துவதற்கு கருத்தைக்கவருகிற உண்மை சான்று உள்ளது. 1801 ஆம் ஆண்டு சைடன்காம் நகரில் ( இங்கிலாந்தில்-வடக்கு அயர்லாந்தில்  உள்ள நகரம் ) செங்காய்ச்சல் (அல்லது சிகப்புசுரம் ) அல்லது செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் நோய் சிறுவர்களை அவ்வப்போது தாக்குவதாக இருந்தது. அதுவே தொற்று நோயாகப் பரவிய போது ஏற்கனவே அதிலிருந்து தப்பிய சிறுவர்கள் யாரையும் விட்டு வைக்காமல் அந்நோய் தாக்கியது. அதற்கு மாறாக கோனிக்சுலட்டர் என்ற நகரில் ( ஜெர்மனியில் உள்ள நகரம் ) அந்நோய் , தொற்றுநோயாகப் பரவியபோது சரியான நேரத்தில் பெல்லடோன்னா மருந்தை மிகச் சிறிதளவே உட்கொண்ட சிறுவர்கள் யாரையுமே குழந்தைகளைத் தாக்கும் அந்தத் தொற்று நோய்  தாக்கவில்லை என்பதற்கு நானே ( ஹானிமன் ) சாட்சியாக உள்ளேன். சுற்றுப்புறப்பகுதிகளில் எல்லாம் சீறிப்பாய்ந்து தாக்குகிற ஒரு நோயிடமிருந்து மருந்துகள் பாதுகாக்கின்றன என்றால் அது நமது உயிராற்றலை  மிகப் பெரிய அளவில் தாக்கும் மேம்பட்ட ஆற்றலைக் கொண்டதாகவே இருக்கும்.   


Wednesday 26 August 2015

ஆர்கனான் மணிமொழி-32

§ 32

But it is quite otherwise with the artificial morbific agents which we term medicines. Every real medicine, namely, acts at all times, under all circumstances, on every living human being, and produces in him its peculiar symptoms (distinctly perceptible, if the dose be large enough), so that evidently every living human organism is liable to be affected, and, as it were, inoculated with the medicinal disease at all times, and absolutely (unconditionally), which, as before said, is by no means the case with the natural diseases.



மருந்துகள் என்று நாம் சொல்லால் குறிப்பிடுவது எதுவென்றால் செயற்கையான நோய் குறிகளை உண்டாக்கும் தன்மையைதான் மருந்து என்கிறோம். ஒவ்வொரு உண்மையான மருந்தும் எல்லா சமயங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் உயிருள்ள எல்லா மனிதர்களிடமும் தவறாமல் வேலை செய்து மனித உடலில் தனக்கே உரியதான வினோதமான நோய்குறிகளைத் தோற்றுவிக்கிறது ( மருந்தின் அளவு அதிகமாக இருக்கும் போது அதன் பாதிப்பு தெளிவாக அறியகூடியதாக இருக்கிறது). அதனால் ஒவ்வொரு மனித உயிரும் இத்தகைய பாதிப்படைந்து மருந்தினால் ஏற்படும் நோய்த்தன்மை உடலில் செலுத்தப்பட்டதைப் போல் எல்லா நேரங்களிலும் (நிபந்தனையற்ற வகையில்) பாதிப்பிற்கு ஆட்படத்தக்க நிலையில் உள்ளதை தெளிவாக அறியமுடிகிறது. ஏற்கனவே கூறியது போல் , இந்த நிலை இயற்கை நோய் பாதிப்புகளுக்கு இல்லை.

ஆர்கனான் மணிமொழி-31



The inimical forces, partly psychical, partly physical, to which our terrestrial existence is exposed, which are termed morbific noxious agents, do not possess the power of morbidly deranging the health of man unconditionally1; but we are made ill by them only when our organism is sufficiently disposed and susceptible to attack of the morbific cause that may be present, and to be altered in its health, deranged and made to undergo abnormal sensations and functions - hence they do not produce disease in every one nor at all times.

Foot Note-1 : When I call a disease a derangement of man's state of health, I am far from wishing thereby to give a hyperphysical explanation of the internal nature of disease generally or of any case of disease in particular. It is only intended by this expression to intimate, what it can be proved diseases are not and cannot be, that they are not mechanical or chemical alterations of material substance of the body, and not dependant on a material morbific substance, but that they are merely spirit-like (conceptual) dynamic derangements of the life.

ஓரளவிற்கு மனதையும், ஓரளவிற்கு உடலையும் தாக்கக்கூடிய நச்சுத்தன்மை  வாய்ந்த இயக்கி ( பொருள்கள்) என்று அழைக்கப்படும் தீங்கு விளைவிக்கிற  ஆற்றல்கள் இந்தப் பூவுலகில் வாழ்கிற வாழ்வு (பிரபஞசம்) முழுவதும் சூழ்ந்திருக்கின்றன. ஆயினும் நிபந்தனையற்ற வகையில்1 அவை மனித உடலின் ஆரோக்கியத்தை தாக்கி கெடுப்பதில்லை. அங்கு காணப்படும் நோய்க் காரணங்களின் தாக்கத்திற்கு எளிதில் ஆட்படுமாறும், ஆரோக்கிய நிலையில் மாற்றம் உண்டாகுமாறும் நமது உயிர்பொருள் உள்ள போது தான் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயல்புநிலைக்கு மாறான உணர்வுநிலைகளும் , செயல்பாடுகளும் உண்டாகுகின்றன. ஆகவே தான் அவை ( தீங்கு விளைவிக்கிற ஆற்றல்கள் ) எல்லோருக்கும் அல்லது எல்லா வேளையிலும் நோய்பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அடிக்குறிப்பு -1


மனிதனுடைய ஆரோக்கிய நிலையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவை, நோய் என்று நான் (ஹானிமன்) அழைப்பது பொதுவான நோயிலும் அல்லது குறிப்பிட்ட வேறு வகையான நோயிலும் உள்ளார்ந்து காணப்படும் இயற்கை கடந்த ஒரு விளக்கத்தைக் கூறும் விருப்பத்தினால் இல்லை . நோய்கள் என்று நிருபிக்கப்பட்டவை என்னவென்றால்; உடலில் இயந்திரங்களால் ஆக்கப்படுகிற அல்லது வேதியல் சார்ந்த பருப்பொருளினால் ஏற்படுகின்ற மாற்றங்களோ அல்ல,  அவை நோய்களாக இருக்கவும் முடியாது என்பதையும் , பருப்பொருள் சார்பான நோய்ப்பொருள்கள் அல்ல என்பதையும் , அவை ஆவிவடிவான உயிரியின் ( கருத்தளவான), இயக்கந்சார்ந்த கோளாறுகளே என்பதையும் உணர்த்தும் எண்ணத்துடன் தான் நான் ( ஹானிமன் ) அப்படிக்  கூறுகின்றேன்.

Monday 24 August 2015

ஆர்கனான் மணிமொழி-30

§ 30

The human body appears to admit of being much more powerfully affected in its health by medicines (partly because we have the regulation of the dose in our own power) than by natural morbid stimuli - for natural diseases are cured and overcome by suitable medicines.1

Foot Note-1:  The short duration of the action of the artificial morbific forces, which we term medicines, makes it possible that, although they are stronger than the natural diseases, they can yet be much more easily overcome by the vital force than can the weaker natural diseases, which solely in consequence of the longer, generally lifelong, duration of their action (psora, syphilis, sycosis), can never be vanquished and extinguished by it alone, until the physician affects the vital force in a stronger manner by an agent that produces a disease very similar, but stronger to wit a homoeopathic medicine. The cures of diseases of many years' duration (§ 46), by the occurrence of smallpox and measles (both of which run a course of only a few weeks), are processes of a similar character.

இயற்கையான நோயநிலையின் தூண்டுதலைக்காட்டிலும் , மருந்துகளினாலே ( ஏனென்றால் மருந்தளவை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாடு ஓரளவு நமது கையில் உள்ளது)  மனித உடல் மிகத் தீவிரமாகப் பாதிக்கபடுவதற்கு இடங்கொடுக்கும் வகையில்   இருப்பது தெரிகிறது. ஏனென்றால் இயற்கையாக உருவாகும் நோய்களை நலமாக்கும் ஆற்றலும் மற்றும் நோய்நிலையை வெற்றிகொள்ளும் தன்மையும் பொருத்தமான மருந்துகளுக்கு இருக்கிறது.

அடிக்குறிப்பு -1


நம்மால் மருந்துகள் என்று அழைக்கப்படும் செயற்கையான நோயை உண்டாக்குகிற ஆற்றல், இயற்கையான நோயாற்றலைக் காட்டிலும் வலிமை வாய்ந்தவை. எனினும் உயிராற்றல் இயற்கை நோய்களை வலுகுறையச் செய்வதை விட இச்செயற்கை நோய்களை மிக எளிதாக வெற்றி கொள்வதற்குக் காரணம் அச்செயற்கை நோய் குறைந்தகாலமே செயலாற்றும் தன்மை கொண்டவையாக இருப்பதேயாகும். இயற்கைநோய் வலிமைகுறைந்ததாக இருப்பினும் அவற்றின் நீண்டகால விளைவின் காரணமாக ( சோரா, சைகோசிஸ் , சிபிலிஸ் ) அந்நோய்கள் பொதுவாக நமது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கின்றன. அத்தகைய இயற்கை நோய்களுக்கு மிகவும் ஒத்தவையாகவும் அதே சமயத்தில் வலிமையானதாகவும் உள்ள நோயின் விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை அதாவது மதிநுட்பம்வாய்ந்த ஹோமியோபதி மருந்தினை  மருத்துவர் கொடுத்து உயிராற்றலின் மீது பாதிப்பை ஏற்படுத்தாதவரை , உயிராற்றல் தானாகவே இயற்கைநோய்களை மறையசெய்யவோ மற்றும் மங்கசெய்யவோ (வெளியேற்றுவதற்கு ) முடிவதில்லை . பல ஆண்டுகளாக நீடித்திருக்கும் நோய்களையும் ( மணிமொழி 46), அத்தகையச் செயல்பாடுகளைக் கொண்ட பெரியம்மை மற்றும் மணல்வாரிஅம்மையையும் ( இரண்டு  நோய்களும் சில வாரங்களுக்கு நீடித்திருக்கும் தன்மையுடையவை) நலமாக்கியதற்கு அத்தகைய சிறப்பியல்பே வழிமுறையாகிறது.  

ஆர்கனான் மணிமொழி-29

§ 29

As every disease (not entirely surgical) consists only in a special, morbid, dynamic alteration of our vital energy (of the principle of life) manifested in sensation and motion, so in every homoeopathic cure this principle of life dynamically altered by natural disease is seized through the administration of medicinal potency selected exactly according to symptom-similarity by a somewhat stronger, similar artificial disease-manifestation. By this the feeling of the natural (weaker) dynamic disease-manifestation ceases and disappears. This disease-manifestation no longer exists for the principle of life which is now occupied and governed merely by the stronger, artificial disease-manifestation. This artificial disease-manifestation has soon spent its force and leaves the patient free from disease, cured. The dynamis, thus freed, can now continue to carry life on in health. This most highly probable process rests upon the following propositions.


ஒவ்வொரு நோயும் (முற்றிலும் அறுவை சிகிச்சைக்கு உட்படாத ) தனிவகையாகவும் , நோய்தன்மையுடனும் நமது உயிராற்றலின் ( உயிர் இயக்கவிதி அல்லது உயிர் பண்பு அல்லது உயிர்முத்லாற்றல் )  உணர்வு நிலையையும் மற்றும் இயக்கத்திலும் வெளிப்படுத்திகாட்டுகிறது . இயற்கை நோயினால் உயிர் முதலாற்றலில் பீடிக்கப்பட்டிருக்கும் அந் நோயிற்கு ஒத்தவையாய் உள்ள செயற்கையான நோய்க்குறிகளை வெளிபடுத்துவதும் , அந்த இயற்கை நோயைக் காட்டிலும் மிகவும் வலிமையானதுமான ஹோமியோபதி மருந்தை மிகச்சரியான வீரியத்திலும் குறிகளுக்கு ஏற்ற ஒத்ததன்மையிலும் கொடுப்பதால் இயகநிலைப்பாதிப்பை உண்டாக்கிய இயற்கைநோயைக் கையகப்படுத்துகிறது. இதனால் இயக்கநிலையில் ஏற்பட்டிருந்த  இயற்கை நோயின் (வலிமை குறைந்த ) பாதிப்பால் ஏற்பட்டிருந்த உணர்வு முடிவுகிறது மற்றும் மறைந்து நீங்குகிறது. இதனால் உயிர் முதலாற்றலில் அந்தநோயின் விளைவுக்கு இடம் இல்லாதவாறு வலிமையான செயற்கை நோயின் விளைவே முழுவதும் சூழ்ந்து கொள்கிறது. பின்னர் இச்செயற்கை  நோயின் ஆற்றலும் வலிமை இழந்து அதன் விளைவும் மறைந்து விடுவதால் நோயாளி நோய்நிலையில்  இருந்து  விடுபட்டு நலமடைகிறார். அதனால் சுதந்திரமடைந்த (நோய் நிலையிலிருந்து விடுபட்ட)  உயிர்இயக்கம் வாழ்க்கையை  ஆரோக்கிய நிலையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. மிகவும் நம்பதக்கதான இந்த செயல்பாடு கீழ்காணும் ஆய்வுப்பொருளை  ஆதாரமாய் கொண்டிருக்கிறது.

Friday 21 August 2015

ஆர்கனான் மணிமொழி-28

§ 28

As this natural law of cure manifests itself in every pure experiment and every true observation in the world, the fact is consequently established; it matters little what may be scientific explanation of how it takes place; and I do not attach much importance to the attempts made to explain it. But the following view seems to commend itself as the most probable one, as it is founded on premises derived from experience.

                                                                                      
இவ்வுலகில், உண்மையாக நடத்தப்படும் ஒவ்வொரு தூய பட்டறிவுகளாலும் மற்றும் ஒவ்வொரு ஆராய்ச்சிகளிலும் இவ்வகையான இயற்கையான வகையில் நலமாக்கும்  விதி தன்னைத்தானே வெளிப்படுத்துவதன் விளைவாகவே  அதன் உண்மை பின்னர் நமக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றிய அறிவியல் மற்றும் விஞ்ஞான விளக்கங்கள் நமக்கு தேவையில்லை. ஆதலால் அதை பற்றிய முயற்சிகளுக்கு நான் (ஹானிமன்) முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை  . ஆயினும், தகுதியானதாகவும் , பட்டறிவின் மூலமாக உறுதியாகி உள்ளதுமான கீழ்காணும் கருத்து கிட்டத்தட்ட சரியானதாக  இருக்கலாம் என்று தெரிகிறது.


ஆர்கனான் மணிமொழி-27


§ 27

The curative power of medicines, therefore, depends on their symptoms, similar to the disease but superior to it in strength (§ 12 - 26), so that each individual case of disease is most surely, radically, rapidly and permanently annihilated and removed only by a medicine capable of producing (in the human system) in the most similar and complete manner the totality of its symptoms, which at the same time are stronger than the disease.



நோய்குறிகளின் பண்பை ஒத்த ஆனால் அவைகளை விட அதிகமான வலிமை (மணிமொழி 12-26 ) பெற்றிருப்பதாலேயே மருந்துகளுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் நோய்குறிகளைப் போன்று அதே பண்பை ஒத்த செயற்கை யான நோய்க்குறிகளை (மனித உடலில்) உண்டாக்கும் இயல்பும் அந்நோய்களை விட அதிக வலிமை பெற்று இருப்பதாலேயே ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு நோயிலும் உள்ள முழுமையான குறிகளையும் நிச்சயமாகவும், ஒழுங்காகவும் விரைவிலும்,  நிரந்தரமாகவும் ஒழித்துக்கட்டுகிறது ( வேரோடு கலைகிறது )  என்பதை பார்க்கிறோம்.

Thursday 20 August 2015

ஆர்கனான் மணிமொழி-26


This depends on the following homoeopathic law of nature which was sometimes, indeed, vaguely surmised but not hitherto fully recognized, and to which is due every real cure that has ever taken place:


A weaker dynamic affection is permanently extinguished in the living organism by a stronger one, if the latter (whilst differing in kind) is very similar to the former in its manifestations.1


Foot Note-1: Thus are cured both physical affections and moral maladies. How is it that in the early dawn the brilliant Jupiter vanishes from the gaze of the beholder? By a stronger very similar power acting on his optic nerve, the brightness of approaching day! - In situations replete with foetid odors, wherewith is it usual to soothe effectually the offended olfactory nerves? With snuff, that affects the sense of smell in a similar but stronger manner! No music, no sugared cake, which act on the nerves of other senses, can cure this olfactory disgust. How does the soldier cunningly stifle the piteous cries of him who runs the gauntlet from the ears of the compassionate bystanders? By the shrill notes of the fife commingled with the roll of the noisy drum! And the distant roar of the enemy's cannon that inspires his army with fear? By the loud boom of the big drum! For neither the one nor the other would the distribution of a brilliant piece of uniform nor a reprimand to the regiment suffice. In like manner, mourning and sorrow will be effaced from the mind by the account of another and still greater cause for sorrow happening to another, even though it be a mere fiction. The injurious consequences of too great joy will be removed by drinking coffee, which produces an excessive joyous state of mind. Nations like the Germans, who have for centuries been gradually sinking deeper and deeper in soulless apathy and degrading serfdom, must first be trodden still deeper in the dust by the Western Conqueror, until their situation became intolerable; their mean opinion of themselves was thereby over-strained and removed; they again became alive to their dignity as men, and then, for the first time, they raised their heads as Germans.

இயற்கை விதிகளுக்குப் பொருந்தியும் , சில நேரங்களில் தெளிவற்ற ஊகமதிப்பிடுகளிலும் , இந் நேரம்வரை முழுமையாக ஏற்றுக் கொள்ளபடாததும், ஒவ்வொரு உண்மையான நலமாக்கலை நிகழ்த்துவதுமான ஹோமியோபதி மருத்துவம் கீழ்காணும் விதிமுறைகளை சார்ந்திருக்கிறது;

உயிருள்ள ஒரு உடலில் வலிமை குன்றிய நிலையில் இருக்கும்  இயக்க ஆற்றலை, அதற்கு மிகவும் ஒத்த வெளிப்பாடுகளைக் கொண்ட வலிமை மிக்க ஒரு பாதிப்பு   ( மாறுபட்ட தன்மையில் ) அவ் உயிரோட்டப்பாதிப்பில் இருந்து நிலையாக அழித்து நீக்குகிறது1.

அடிக்குறிப்பு 1 : உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மனதில் தோன்றும் நோய்கள் ஆகிய இரண்டு வகையான நோய்களும் இவ்வாறு தான் நலபடுத்தப்படுகின்றன. அதிகாலை விடியலின் போது , மிகப் பிரகாசமாக இருக்கும் வியாழன் கோள் ( சூரியனிலிருந்து வரிசை முறையில் ஐந்தாவதாக உள்ள கோள் ) பார்ப்பவர்களின் கண்களிலிருந்து எப்படி மறைகிறது? பொழுது விடிகின்ற போது வெளிப்படும் அதற்கு ஒத்த வலிமையான வெளிச்சத்திற்கு பார்பவர்களின் பார்வை நரம்பு ஆட்படுவதால் தானே இவ்வாறு நிகழுகிறது!. முடைநாற்றம் ( புழுங்கிய வாசம்)  நிறைந்துள்ள சூழ்நிலையில் ஒருவருடைய முகர்வு நரம்புகளில் தூண்டப்படும் கொடிய நாற்றத்தின் தீவிரத்தைப் போக்குவது எப்படி? அதைப் போன்ற ஆனால் மிகவும் வலிமையான மூக்குப்பொடியை முகர்வதால் அவரது முகர்வு உணர்வில் ஏற்படும் பாதிப்பினால் தானே!. அவ்வாறு இல்லாமல் வேறு உணர்வு புலன்களில் செயலாற்றுகின்ற இசையினாலோ, இனிப்புசுவை கொண்ட அப்பத்தினாலோ முகர்வு உணர்வில் ஏற்பட்டுள்ள இந்த வெறுப்புணர்வை போக்க முடியாது. உடம்பில்  கவசத்தை அணிந்து கொண்டு போருக்குச் செல்லும் படைவீரனின் உள்ளத்தில் தோன்றும் வருந்தத்தக்க   துன்ப ஒலியை தன்னருகில் இருப்பவர்களின் காதுகளில் விழாதவாறு தந்திரமாக மூடி மறைத்துக் கொள்வது எப்படி?. படைத்துறைஇசைக்குழல்வாசி எழுப்பும் காதைத்துளைக்கும் கீச்சொலியுடன் சேர்ந்து பேரோசை எழுப்பும் போர்முரசின் ஓசையினால் தானே! தொலைவில் உள்ள எதிரிகளின்  பீரங்கி முழக்கத்தால் தமது படைவீரர்களை பயப்படாமல் இருக்குமாறு செய்வது எப்படி?. பெரிய முரசத்தின் மூலம் எழுப்பும் இடி முழக்கத்தினால் தானே!. இப்படிச் செய்யாமல் அப்படை வீரர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த சீருடைகளை வழங்குவதும் அல்லது அவர்களுக்கு பணிமுறைக் கண்டனம் தெரிவிப்பதும் அவர்களது அச்சத்தைப் போக்குவதற்கு போதுமானவை ஆகாது.  இத்தகைய முறையிலேயே ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இறப்பும் , துன்பமும்  துடைக்கப்படுவது, வேறு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக கற்பனைக் கதை சொல்லியாவது நம்பச் செய்வது தானே!. பொங்கியெழும் (அதிக ) மகிழ்ச்சியினால் ஏற்படும் தீமையை அத்தகைய மகிழ்ச்சி உணர்வை மனதில் உண்டாக்கும் காபியைக் குடிப்பதால் தான் போக்கப்படுகிறது. ஜெர்மானிய நாட்டு மக்கள் , சில நூற்றாண்டுகளாக படிப்படியாக தாழ்வு நிலைமை அடைந்து அடிமை  நிலையில் இருந்தபோது , மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பினால் மேலும் தாங்கமுடியாத அளவிற்கு தாழ்ச்சியடைந்து புழுதியில் மூழ்கிய போது தான்.  அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த  சிறுமையான எண்ணம் அளவிற்கு அதிகமாகி பின்னர் அவர்களின் கடும் முயற்சியினால் அந்த நிலை நீக்கப்பட்டது. அதற்குப் பிறகு தான் தாங்களும் மதிப்பு வாய்ந்த மனிதர்களே என்ற உணர்வுடன் நாங்கள் ஜெர்மானியர்கள் என்று தலை நிமிர்ந்து எழுச்சி பெற்றனர்.   
   

Tuesday 18 August 2015

ஆர்கனான் மணிமொழி-25

§ 25


Now, however, in all careful trials, pure experience,1 the sole and infallible oracle of the healing art, teaches us that actually that medicine which, in its action on the healthy human body, has demonstrated its power of producing the greatest number of symptoms similar to those observable in the case of disease under treatment, does also, in doses of suitable potency and attenuation, rapidly, radically and permanently remove the totality of the symptoms of this morbid state, that is to say (§ 6 - 16), the whole disease present, and change it into health; and that all medicines cure, without exception, those diseases whose symptoms most nearly resemble their own, and leave none of them uncured.


Foot Note-1: I do not mean that sort of experience of which the ordinary practitioners of the old school boast, after they have for years worked away with a lot of complex prescriptions on a number of diseases which they never carefully investigate, but which, faithful to their school, they consider as already described in works of systematic pathology, and dreamed that they could detect in them some imaginary morbific matter, or ascribe to them some other hypothetical internal abnormality. They always saw something in them, but knew not what it was they saw, and they got results, from the complex forces acting on an unknown object, that no human being but only a God could have unraveled - results from which nothing can be learned, no experience gained. Fifty years' experience of this sort is like fifty years of looking into a kaleidoscope filled with unknown colored objects, and perpetually turning round; thousands of ever changing figures and no accounting for them!


இந்நேரத்தில் , எவ்வகையிலேனும, விழிப்புணர்வுடைய ஆய்வினாலும் , தூய பட்டறிவினாலும் 1 நலமாக்கல் கலையின் தனித்த  மற்றும் தவறிழைக்காத மதிப்பு வாய்ந்த அறிவுரை நமக்கு உண்மையாக அறிவுறுத்துவது என்னவென்றால்,  நலமாக உள்ள மனித உடலில் எந்த மருந்துப்பொருள் தலைசிறந்த எண்ணிக்கையிலான குறிகளை உண்டாக்குகிறதோ அம்மருந்தை , நம்மிடம்  சிகிச்சை எடுத்துக் கொள்பவரை கவனமாக ஆராய்ந்தபொழுது காணப்பட்ட அந்த நோய்நிலைக்குப்  பொருத்தமான வீரியத்திலும் , நுண்மையான அளவிலும்  கொடுக்கும் பொழுது அந்நோயின் மொத்தக்குறிகளையும் அதாவது அங்கு காணப்படும் முழுநோயையும்( மணிமொழி 6 முதல் 16 வரை) விரைவாகவும் , அடியோடும், நிரந்தரமாகவும் நீக்கி நலமான நிலைக்கு மாற்றுகிறது. அம்மருந்துகள் , விதிவிலக்கு இல்லாமல் அவற்றிற்கு இணையான குறிகளைக் கொண்ட அந்தநோயில் எதையும் விட்டு வைக்காமல் நலமாக்குகின்றன.


அடிக்குறிப்பு -1
அலோபதி துறையைச் சேர்ந்த சாதாரண மருத்துவப் பயிற்சியாளர்கள்   பல ஆண்டுகள் மருத்துவம் செய்தும் நோய்களைப்பற்றிய போதுமான அனுபவமில்லாமலும் , பல்வேறு நோய்களை கவனமாக புலனாய்வு செய்யாமல் அவற்றிற்கு பற்பல கலவையான மருந்துக்குறிப்புகளைக் கொடுத்தும்  வீண் பெருமை பேசித் திரிவதை நான் குறிப்பிடவில்லை. அவர்கள் தங்களுடைய மருத்துவமுறையின் கொள்கை கோட்பாடுகளில் மாறாத விசுவாசம் கொண்டவராக ,  வரையறுக்கப்பட்ட நோய்ஆய்வியல் நூல்களில், நோய்களைப் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டிருப்பதையும், அந்த நோய்களில் கண்ணுக்குப் புலப்படாத , கற்பனையான ஒரு நோய்ப்பொருளை கண்டுபிடிக்கலாம் என்று கனவு காண்பவர்களாகவும் அல்லது ஒருவர் உடலில் உள்ளே காணப்படும் உறுதிப்படுத்தப்படாத இயல்பு திறந்த ஒரு பிறழ்வு போன்றவற்றைக் கவனத்தில் கொள்கிறார்கள். அவர்கள் அந் நோய்களில் எப்போதுமே ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்கிறார்கள், ஆனால் அவ்வாறு தெரிந்து கொண்டதுதான் என்ன? என்பதை அறிந்து கொள்ளவில்லை. இவ்வாறு சரியாகத் தெரியாத ஒரு நோய்ப் பொருளின் (நோயின்) மீது அவர்கள் கலவை மருந்துகளைக் கொடுத்து எழுப்பிய , அக்கலவையான ஆற்றல்கள் உண்டாக்கிய விளைவுகள் பற்றிய உண்மைகளை அல்லது புதிர்களை எந்த மனிதர்களாலும் விடுவிக்க முடியாமல் அதைக் கடவுள் மட்டுமே தெளிவுபடுத்துவதாக இருக்கிறது.  அத்தகைய விளைவுகளால் உண்டாகிய முடிவுகளில் இருந்து எதையும் கற்கவும் முடியாது; எந்த பட்டறிவும் கிடைக்காது. இவ்வாறு அமைந்த ஐம்பது ஆண்டுகால பட்டறிவு என்பது , அறிந்துகொள்ளமுடியாத வண்ணக்கலவையுடன் கூடிய ஆயிரக்கணக்கான உருவங்களை பலவண்ணக்காட்சி கருவி மூலம் வட்டமாக சுற்றிவிட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருப்பதைப் போன்றதாகும். 

Sunday 16 August 2015

ஆர்கனான் மணிமொழி-24

§ 24


There remains, therefore, no other mode of employing medicines in diseases that promises to be of service besides the homoeopathic, by means of which we seek, for the totality of the symptoms of the case of disease, a medicine which among all medicines (whose pathogenetic effects are known from having been tested in healthy individuals) has the power and the tendency to produce an artificial morbid state most similar to that of the case of disease in question.



ஆகவே , நோய்களில் நலப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகளைப் பயன்படுத்தும் போது ஹோமியோபதி முறை மருந்துகளை தவிர மற்ற வகை மருந்துகளால் வேண்டிய பலன் விளையாது என்பது இப்பொழுது விளங்கி விட்டது. எல்லா  மருந்துகளிலும் எந்த ஒரு மருந்து (ஆரோக்கிய நிலையில் உள்ளவர்களிடம் கொடுத்து ஆய்வு செய்தபோது தெரிந்துகொண்ட நோயை உண்டு பண்ணுகிற விளைவுகள் ) நம்மிடம் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளியின் ஒட்டுமொத்தக்குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள செயற்கையான நோய்குறிகளை உண்டாக்கியது எது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்திற்குத்தான் நோயை  குணபடுத்தும் ஆற்றல் இருக்கும்.

Saturday 15 August 2015

ஆர்கனான் மணிமொழி-23

§ 23


All pure experience, however, and all accurate research convince us that persistent symptoms of disease are far from being removed and annihilated by opposite symptoms of medicines (as in the antipathic, enantiopathic or palliative method), that, on the contrary, after transient, apparent alleviation, they break forth again, only with increased intensity, and become manifestly aggravated (see § 58 - 62 and 69).



நோய்க்குறிகளுக்கு நேரெதிர் குறிகளை உடைய மருந்துகளை கொடுத்து (அலோபதி அல்லது ஆங்கில மருத்துவம், நோயின் குணத்திற்கு எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் முறை, அல்லது நோயைத் தணிவிக்கும் முறை ) சிகிச்சையளிக்கும் போது அங்கு உறுதியாக நிற்கிற நோய்க்குறிகளை நீக்குவதும் மற்றும் ஒழித்துக்கட்டுவதும் சிறிதும் கைகூடுவதில்லை என்பதையே நமது எல்லா தூய பட்டறிவும் , சரிநுட்பமான ஆராய்ச்சியும் நம்மை நம்ப வைக்கின்றன. அதற்கு மாறாக , தற்காலிகமாகவும், உறுதி இல்லாத நிலையிலும் காணப்பட்ட அந்நோய்த் தணிவுக்குப் பிறகு அந்நோய்க்குறிகள் முன்னிலும் கூடுதலான தீவிரமான நிலையில்  வெளிப்படையாகத் தெரியுமாறு அதிகரிக்கின்றன, ( மணிமொழி 58-62 மற்றும் 69 இல் பார்க்கவும்)  

Thursday 13 August 2015

ஆர்கனான் மணிமொழி-22


But as nothing is to be observed in diseases that must be removed in order to change them into health besides the totality of their signs and symptoms, and likewise medicines can show nothing curative besides their tendency to produce morbid symptoms in healthy persons and to remove them in diseased persons; it follows, on the one hand, that medicines only become remedies and capable of annihilating disease, because the medicinal substance, by exciting certain effects and symptoms, that is to say, by producing a certain artificial morbid state, removes and abrogates the symptoms already present, to wit, the natural morbid state we wish to cure. On the other hand, it follows that, for the totality of the symptoms of the disease to be cured, a medicine must be sought which (according as experience shall prove whether the morbid symptoms are most readily, certainly, and permanently removed and changed into health by similar or opposite medicinal symptoms1) have the greatest tendency to produce similar or opposite symptoms.

Foot Note-1: The other possible mode of employing medicines for diseases besides these two is the allopathic method, in which medicines are given, whose symptoms have no direct pathological relation to the morbid state, neither similar nor opposite, but quite heterogeneous to the symptoms of the disease. This procedure plays, as I have shown elsewhere, an irresponsible murderous game with the life of the patient by means of dangerous, violent medicines, whose action is unknown and which are chosen on mere conjectures and given in large and frequent doses. Again, by means of painful operations, intended to lead the disease to other regions and taking the strength and vital juices of the patient, through evacuations above and below, sweat or salivation, but especially through squandering the irreplaceable blood, as is done by the reigning routine practice, used blindly and relentlessly, usually with the pretext that the physician should imitate and further the sick nature in its efforts to help itself, without considering how irrational it is, to imitate and further these very imperfect, mostly inappropriate efforts of the instinctive unintelligent vital energy which is implanted in our organism, so long as it is healthy to carry on life in harmonious development, but not to heal itself in disease. For, were it possessed of such a model ability, it would never have allowed the organism to get sick. When made ill by noxious agents, our life principle cannot do anything else than express its depression caused by disturbance of the regularity of its life, by symptoms, by means of which the intelligent physician is ask for aid. If this is not given, it strives to save by increasing the ailment, especially through violent evacuations, no matter what this entails, often with the largest sacrifices or destruction of life itself.

For the purpose of cure, the morbidly depressed vital energy possesses so little ability worthy of imitation since all changes and symptoms produced by it in the organism are the disease itself. What intelligent physician would want to imitate it with the intention to heal if he did not thereby sacrifice his patient?

நோய்களில், உறுதியாக குணப்படுத்தக் கூடியவையாகவும் அதனால் நலநிலைக்கு மாற்றக்கூடியவையாகவும் உள்ள ஒட்டுமொத்தக்(முழுமையான)குறிகள் மற்றும் அறிகுறிகள் போன்றவற்றைத் தவிர அங்கு கவனிக்கப்படவேண்டியவைகள் ஒன்றுமில்லை. அதேபோல் மருந்துகளில் , ஆரோக்கியமான நிலையில் இருப்பவர்களிடம் செயற்கையான நோய்க்குறிகளை ஏற்படுத்தவும் , நோயுற்றவரிடமிருந்து அந்நோய்க்குறிகளை நீக்கவும் ஆகிய இயல்புகளைத் தவிர வேறு எவற்றையும் காணமுடியாது. அகவே, ஒருபுறம் அந்த மருந்துப்பொருள்கள் மனித உடலில் குறிப்பிட்ட சில பாதிப்புகளையும் , அறிகுறிகளையும் கிளர்ந்தெழச் செய்வதால் அதாவது சில செயற்கையான  நோய்க்குறிகளை உண்டாக்கவும் , ஏற்கனவே அங்கு இருந்த நோய்க்குறிகளை அடியோடு ஒழித்துக்கட்டவும் செய்யக்கூடிய ஆற்றல் மருந்துகளுக்கு இருப்பதால் தான் அவை நோய்களை நீக்குகின்றன. இன்னொருபுறம், குணமாக்கப்பட வேண்டிய நோயின் ஒட்டுமொத்தக் குறிகளையும் நீக்குவதற்கு ( நோய்க்குறிகள் உடனுக்குடனாகவும் , உறுதியாகவும், நிரந்தரமாகவும் நீக்கப்படுவதும்  நலமான நிலைக்கு மாற்றுவதும் அம்மருந்தின் ஒத்ததன்மையிலான குறிகளினாலா அல்லது எதிரான தன்மையிலான குறிகளினாலா என்பதை அனுபவத்தின்  மூலம் அறியலாம்) அவற்றிற்கு ஒத்திருக்கும் குறிகளையோ அல்லது அவற்றிற்கு எதிரான குறிகளையோ மிகப்பெரிய அளவில் உருவாக்கக்கூடிய சக்தியுள்ள மருந்த தேட வேண்டும்.



அடிக்குறிப்பு-1 :

இந்த இரண்டு முறைகளைத் தவிர நோய்களுக்கு மருந்தளிப்பதற்கு இருக்ககூடிய மற்றொரு முறை , நோய்நிலையில் ஒத்தவகையான   குறிகளையோ அல்லது எதிரான குறிகளுடன் நேரடியான தொடர்பு இல்லாத பல்வேறான முரண்கூறுகளை கொண்ட குறிகளுக்கு  மருந்தளிக்கும்  அலோபதி ( ஆங்கில ) மருத்துவ முறையாகும் . இத்தகைய செயல்முறை வாய்ந்த மருத்துவத்தை நான் ஏற்கனவே வேறொரு இடத்தில் காட்டியுள்ளவாறு, ஆபத்தான , பயங்கரமான விளைவுகளை உள்ளடக்கிய அம்மருந்துகள் போதியசான்றுகள் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுபவையாகவும் , அடிக்கடியும் , திரும்ப திரும்ப அதிக அளவில் கொடுப்பவையாகவும் அமைந்து நோயாளியின் உயிர்வாழ்க்கைக்கு பொறுப்பில்லாமல் , கொடுங்கொலைக்கு சமமாகி விடுகிறது. அத்தோடு, நோயை உடம்பின் வேறு பகுதிகளுக்கு மாற்றிவிடும் எண்ணத்துடன்  வலியை ஏற்படுத்தும் செயல்களாகிய வாய் மற்றும் மலவாய் ஆகிய இருபுறங்களின் வழியாக உடம்பில் உள்ளவற்றை வெளியேற்றுதல் , வியர்வையையும் , உமிழ்நீரையும் பெருகுமாறு செய்தல் , இன்னும் குறிப்பாக கூறவேண்டுமென்றால் இரத்தத்தை வெளியேற்றி வீணடித்தல் போன்றவற்றை வழக்கமாக உடைய இந்த மருத்துவப்பயிற்சியே வழக்கமாகவும், கண்மூடித்தனமாகவும் இடைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. நமது உறுப்பமைவில் அமைந்துள்ள உயிராற்றல் நலமாக இருக்கும் வரையில் உயிர் வாழ்க்கையை ஒத்திசைவுடன் வளர்ச்சியுறச் செய்கிறது. ஆனால் நோயுற்றபோது அது தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ள முடியாதது . இத்தகைய சூழ்நிலையில் மருத்துவர் நோய்குறிகளுக்கு இணையாக  இயற்கைப்போல செய்து அங்கு உதவும் முயற்சியைச் செய்யவேண்டும் என்னும் பாசாங்குடன் , தூண்டுணர்ச்சி உடையதும் , அறிவுத்திறன் இல்லாததும் ஆகிய உயிராற்றலின் மாற்றத்திற்குப்  பொருத்தமில்லாததும், குறைபாடான மருத்துவமுயற்சியைச் செய்வது எத்தகைய பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செயல் என்று எண்ணிப்பார்க்காமலும் அம்மருத்துவப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நோய் உருவாகாமல்  அமையும் திறம் உயிராற்றலுக்கு உள்ளதாக இருந்தால் , அவ்வுருப்பமைவு நோய்வாய்ப்படுவதற்கு அது இசைந்திராது.  நச்சுத் தன்மை வாய்ந்த பொருள்களால் உயிராற்றல் நோய்வாய்பட்டபொழுது உயிர் ஒழுங்குமுறையில் ஏற்பட்டுள்ள இடர்பாட்டினால் உண்டாகிய தனது தாழ்நிலையை குறிகளால் வெளிப்படுத்துவதைத் தவிர , அது வேறொன்றும் செய்யாமல் புத்திசாலித்தனமானமான மருத்துவரின் உதவியை வேண்டிநிற்கிறது. அந்த உதவியை தர இயலாத நிலையில் , பயங்கரமான வெளிப்பாடுகளை உண்டாக்கி உயிரைக் காப்பாற்றுவதற்குக் கடும் முயற்சி செய்கிறது. அத்தகைய வெளிப்பாடுகளினால் உயிரை தியாகம் செய்வதற்கும் அல்லது உயிர் வாழ்க்கையை அழிவிற்கு உட்படுத்துவதற்கும் உயிராற்றல் கவலைப்படுவதில்லை.  


உயிராற்றல் பாதிப்புக்கு உள்ளானதால்  உடல் உறுப்பமைவில்   உண்டாகப்பட்டுள்ள மாற்றங்களும் , குறிகளும் ஆகிய எல்லாமே  அங்குள்ள நோயாகும் . அதனால்  நோயின் தாக்கத்தினால் தாழ்வடைந்துள்ள உயிராற்றலில் நலத்தை கொடுக்கக்கூடிய திறன் குறைவாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் புத்திக்கூர்மை படைத்த மருத்துவரால் அந்தத் துயரறரை தியாகம் செய்வதைத் தவிர குணமாக்கும் நோக்கத்துடன் பின்பற்றுவதற்கு அங்கு எதுவுமில்லை.

ஆர்கனான் மணிமொழி-21



Now, as it is undeniable that the curative principle in medicines is not in itself perceptible, and as in pure experiments with medicines conducted by the most accurate observers, nothing can be observed that can constitute them medicines or remedies except that power of causing distinct alterations in the state of health of the human body, and particularly in that of the healthy individual, and of exciting in him various definite morbid symptoms; so it follows that when medicines act as remedies, they can only bring their curative property into play by means of this their power of altering man's state of health by the production of peculiar symptoms; and that, therefore, we have only to rely on the morbid phenomena which the medicines produce in the healthy body as the sole possible revelation of their in-dwelling curative power, in order to learn what disease-producing power, and at the same time what disease-curing power, each individual medicine possesses.



மருந்துகளிலுள்ள நோயைக்குணபடுத்தும் பண்புகூறுகள் , தானாகவே  உணரக்கூடியத் தன்மையற்றது என்பது இப்போது  மறுக்கமுடியாதவாறு புலனாகும்.  செம்மையான அல்லது வழுவாததன்மையுடைய  உற்றுநோக்குபவரால், மருந்துகளைத் தூய்மையான செய்முறையின் மூலம்  ஆய்வு செய்யும்போது அவைகளால் மனித உடலின் ஆரோக்கிய நிலைமையில் தெளிவான   மாற்றங்களை ஏற்படுத்தும் அவற்றின் ஆற்றலையும், பல வகைப்பட்ட உறுதியான நோய்க்குறிகளை கிளர்ந்தெழுமாறுச் செய்யும் ஆற்றலையும் தவிர, அவைகள் மருந்துப் பொருள்களாகவோ அல்லது நோய்களைக் குணபடுத்தும் பொருளாகவோ ஆவதைக் கவனித்து அறிய முடியாது. எனவே மருந்துகள், நோய்களை தீர்க்க உபயோகமாகின்றன என்றால் ஆரோக்கியமான நிலைமையில் தனித்தன்மையான அறிகுறிகளை உருவாக்கி, அதாவது நோய்க்குறிகளை உண்டு செய்யும் சக்தி அதற்கு இருக்கிறது என்பதை  நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆகவே நாம் மருந்துகளின் உள்ளுறைந்திருக்கும் குணமாக்கும் ஆற்றலை அறிந்து கொள்வதற்கு , ஆரோக்கிய நிலைமையில் அதனுடைய நோய் உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டும், அம்மருந்தின் நோயைக் குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டே நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.  ஆகவே ஒவ்வொரு தனித்தனி மருந்தில் இருக்கும் நோயை உருவாக்கும் ஆற்றல் எது  என்பதையும்,  அதே சமயத்தில் அதனுடைய நோய் தணிக்கும் ஆற்றல் எது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.