Saturday 20 June 2020

ஆர்கனான் மணிமொழி-102



In the course of writing down the symptoms of several cases of this kind the sketch of the disease picture becomes ever more and more complete, not more spun out and verbose, but more significant (more characteristic), and including more of the peculiarities of this collective disease; on the one hand, the general symptoms (e.g., loss of appetite, sleeplessness, etc.) become precisely defined as to their peculiarities; and on the other, the more marked and special symptoms which are peculiar to but few diseases and of rarer occurrence, at least in the same combination, become prominent and constitute what is characteristic of this malady-89. All those affected with the disease prevailing at a given time have certainly contracted it from one and the same source and hence are suffering from the same disease; but the whole extent of such an epidemic disease and the totality of its symptoms (the knowledge whereof, which is essential for enabling us to choose the most suitable homoeopathic remedy for this array of symptoms, is obtained by a complete survey of the morbid picture) cannot be learned from one single patient, but is only to be perfectly deduced (abstracted) and ascertained from the sufferings of several patients of different constitutions.

Foot Note-89 :  The physician who has already, in the first cases, been able to choose a remedy approximating to the homoeopathic specific, will, from the subsequence cases, be enabled either to verify the suitableness of the medicine chosen, or to discover a more appropriate, the most appropriate homoeopathic remedy.

ஆர்கனான் மணிமொழி-102
§ 102

பெருவாரியாக தொற்றிப்பரவுகிற நோய்கள் பற்றிய பரிசோதனை அல்லது புலனாய்வு-3

இந்த வகையான நோய்ப்பாதிப்புடைய பல நோயாளிகளின் அறிகுறிகளை  பற்றிய குறிப்புகளை  எழுதும் போது, நோயின் வடிவம் மென்மேலும்  முழுமையடைகிறது, இது  அதிகமாக நீட்டிவிடப்பட்ட மற்றும் தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டதாக இல்லாமல் , அக்கொள்ளைநோயின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குறிகளையும்  (அதிக சிறப்பியல்பு), மற்றும் அந்த முழுமொத்தமான நோயின் விசித்திரமான அல்லது தனித்தன்மையான குறிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.  ஒருவகையில் , பொதுவான அறிகுறிகள் (எ.கா., பசியின்மை, தூக்கமின்மை போன்றவை) அவற்றின் தனித்தன்மையைப் பொறுத்தவரை துல்லியமாக வரையறுக்கப்படுகின்றன; மறுபுறம், மிகவும் குறிப்பிடத்தக்க சில நோய்களில் மட்டுமே    தோன்றும் விசித்திரமான சிறப்பு அறிகுறிகளும்  மற்றும்  அரிதான குறிகளும்  , குறைந்தபட்சம் அந்த நோயின் ஒரே தன்மையில் இணைந்து , முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றன  , மற்றும் அந்த  நோயின் தனிசிறப்புப் பண்புகள்  ( சிறப்பியல்பு)  என்ன என்பதற்கு உருக்கொடுக்கிறது-89 . ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலவும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரே மூலத்தோற்றத்தில் இருந்து தான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் ; ஆனால் இது போன்று பெருவாரியாக பரவுகின்ற நோயையையும் மற்றும் அதன் ஒட்டுமொத்தக் குறிகளையும் ( இதே அறிகுறிகளின் வரிசைக்கு மிகவும் பொருத்தமான ஹோமியோபதி மருந்தை தேர்வு செய்ய நமக்கு உதவும் அறிவானது , உடல் நலம் குன்றியவரின் வடிவத்தை முழுமையாக மதிப்பீடு செய்வதன் மூலம் பெறப்படுகிறது)  ஒரே ஒரு நோயாளியிடமிருந்து கற்றறிந்து கொள்ள முடியாது , ஆனால் பல்வேறு வகையான உடல்வாகுகளைக் கொண்ட பல நோயாளிகளிடமிருந்து தான் துல்லியமாக கண்டறியக் ( பிரித்தெடுக்கப்பட) கூடியதாக இருக்கிறது.

அடிக்குறிப்பு-89:

ஏற்கனவே முதலில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு   ,  தோராயமாக ஒரு குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுக்க முடிந்த மருத்துவர், பின்னர் அடுத்தடுத்து வந்த நோயாளிகளிடமிருந்து , அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் பொருத்தத்தை சரிபார்க்கவோ அல்லது மிகவும் தகுதியுள்ள ( பொருத்தமான) மருந்தைக் கண்டறியும் நிலையோ ஏற்படுகிறது , அதுவே மிகவும் பொருத்தமான ஹோமியோபதி மருந்தாகவும்  இருக்கிறது.

ஆர்கனான் மணிமொழி-101


§ 101


It may easily happen that in the first case of an epidemic disease that presents itself to the physician's notice he does not at once obtain a knowledge of its complete picture, as it is only by a close observation of several cases of every such collective disease that he can become conversant with the totality of its signs and symptoms. The carefully observing physician can, however, from the examination of even the first and second patients, often arrive so nearly at a knowledge of the true state as to have in his mind a characteristic portrait of it, and even to succeed in finding a suitable, homoeopathically adapted remedy for it.


ஆர்கனான் மணிமொழி-101
§ 101

பெருவாரியாக தொற்றிப்பரவுகிற நோய்கள் பற்றிய பரிசோதனை அல்லது புலனாய்வு-2


பெருவாரியாக தொற்றிப்பரவும் நோய்களில் ( கொள்ளை நோயின் போது)   மருத்துவரின் கவனத்திற்கு வரும்  முதல் நோயாளியிடமிருந்து , அவர் அதன் முழுமையான வடிவத்தை  பற்றிய அறிவை பெறமுடியாத நிலை எளிதாக நிகழ்ந்து விடும் , ஏனெனில்  இது போன்ற ஒவ்வொரு கூட்டு நோய்களின் போது பலருடைய நோய் வரலாற்றை  உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலம் மட்டுமே அந்நோயின்  ஒட்டுமொத்த அடையாளங்களையும்   மற்றும் அறிகுறிகளையும்  அவரால் நன்றாக அறிந்து கொள்ள  முடியும். இருப்பினும், மிகவும்  கவனமாக கூர்ந்து  கவனிக்கும் மருத்துவர், முதல் மற்றும் இரண்டாவது நோயாளிகளின் பரிசோதனையிலிருந்து, பெரும்பாலும் உண்மையான நிலையைப் பற்றிய அறிவைப் பெற முடியும், அதன்  சிறப்பியல்பு குறிகளின் உருவப்படத்தை தன் மனதில் உள்வாங்கிக் கொள்ளவும் முடியும் , மேலும் அக்குறிகளுக்கு உரிய  பொருத்தமான மருந்தை  ,  ஹோமியோபதி முறைப்படி    தேர்ந்தெடுப்பதில் கூட வெற்றிபெற முடியும்.

ஆர்கனான் மணிமொழி-100


§ 100

Investigation of the epidemic diseases in particular.

In investigating the totality of the symptoms of epidemic and sporadic diseases it is quite immaterial whether or not something similar has ever appeared in the world before under the same or any other name. The novelty or peculiarity of a disease of that kind makes no difference either in the mode of examining or of treating it, as the physician must any way regard to pure picture of every prevailing disease as if it were something new and unknown, and investigate it thoroughly for itself, if he desire to practice medicine in a real and radical manner, never substituting conjecture for actual observation, never taking for granted that the case of disease before him is already wholly or partially known, but always carefully examining it in all its phases; and this mode of procedure is all the more requisite in such cases, as a careful examination will show that every prevailing disease is in many respects a phenomenon of a unique character, differing vastly from all previous epidemics, to which certain names have been falsely applied - with the exception of those epidemics resulting from a contagious principle that always remains the same, such as smallpox, measles, etc.

ஆர்கனான் மணிமொழி-100

§ 100

பெருவாரியாக தொற்றிப்பரவுகிற நோய்கள் பற்றிய பரிசோதனை அல்லது புலனாய்வு-1

தொற்றிப் பரவுகின்ற நோய்கள் மற்றும் இங்கும் அங்குமாக தோன்றுகிற நோய்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் குறிகளை பரிசோதனை (புலனாய்வு ) செய்யும் போது உலகில் இதற்கு ஒத்த நோய் , இதே பெயரிலோ அல்லது வேறொரு பெயரிலோ , இதற்குமுன் தோன்றியுள்ளதா, இல்லையா என்று ஆராய்வது  நமக்கு முக்கியமில்லாதது. மற்றும் அதே போன்ற  புதுமையான அல்லது  தனித்தன்மையான நோயை மனதில் கொண்டு இந்த நோயை பரிசோதிக்கும் முறையிலோ அல்லது சிகிச்சையளிப்பதிலோ எத்தகைய வேறுபாட்டையும் காட்டவேண்டிய தேவையில்லை, ஏனெனில் தற்போது நிலவும்  ஒவ்வொரு நோயின்  தூய்மையான வடிவத்தையும் ,  புதியதாகவும்  மற்றும் ஏற்கனவே  அறியப்படாத ஒன்றாகவும்   கருத்தில் எடுத்துக் கொண்டு அந்த நோயைப்பற்றி முழுமையாக ஆராய மருத்துவர் முற்பட வேண்டும்,  அவர்  உண்மையாகவும்   மற்றும் அடிப்படை கூறு சார்ந்த   வகையிலும்   மருத்துவப் பயிற்சி செய்ய  விரும்பினால், ஒருபோதும் உண்மையான கூர்ந்த கவனிப்புக்கு  மாறாக  ஊகத்தின் அடிப்படையில் முடிவு செய்யாமலும்   , தமக்கு  முன் உள்ள இந்த நோய் ஏற்கனவே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அறியப்பட்டதாக ஒருபோதும் நம்பி ஏற்பவராகவும் இருக்க கூடாது, ஆனால் நோயின் வளர்ச்சி கட்டங்களை எப்போதும்  கவனமாக ஆராயுங்கள் ; எல்லா நோய்நிலையிலும் இதுபோன்ற செயல்முறை சார்ந்த நடைமுறை  மிகவும் அவசியமானது, ஏனெனில் நடைமுறையில் உள்ள ஒவ்வொரு நோயும் பல விஷயங்களில் நூதனத் தன்மையையும் தனித்தனி இயல்புகளையும்  காண்பிக்கும், இது முந்தைய அனைத்து தொற்றுநோய்களிலிருந்தும் பெரிதும் வேறுபடுகிறது, சில நோய்களின் பெயர்கள் பொய்யாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன- விதிவிலக்காக ,   பெரியம்மை, தட்டம்மை போன்ற ஒரு தொற்றும் தன்மை மூலக்கோட்பாட்டின் விளைவாக ஏற்படும் பெருவாரியாக தொற்றிப் பரவுகின்ற நோய் (அல்லது கொள்ளைநோய்)   தவிர.  இவை எப்போதும் ஒரே மாதிரியான  தன்மையுடன் இருக்கும் நோய்கள்.

Thursday 18 June 2020

ஆர்கனான் மணிமொழி-99


§ 99


On the whole, the investigation of acute diseases, or of such as have existed but a short time, is much the easiest for the physician, because all the phenomena and deviations from the health that has been put recently lost are still fresh in the memory of the patient and his friends, still continue to be novel and striking. The physician certainly requires to know everything in such cases also; but he has much less to inquire into; they are for the most part spontaneously detailed to him.



ஆர்கனான் மணிமொழி-99
§ 99

துயரர் ஆய்வு-16


ஒட்டுமொத்தமாக, திடீர் வகை நோய்களையும் , அல்லது தோன்றிச் சில நாட்களே ஆன நோய்களையும் விசாரணை செய்வது மருத்துவருக்கு மிகவும் எளிதானது . ஏனென்றால் சமீபத்தில் இழந்த ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நோய்க்குறிகளும் தோன்றிச்சில நாட்களே ஆவதால் அவை நோயாளி மற்றும் அவரது  நண்பர்கள் ஆகியோர்களின் நினைவில் புதுமை வாய்ந்ததாகவும் முனைப்பாகத் தெரிவதாகவும் இருக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவர் நிச்சயமாக நோயின் விவரங்கள் அனைத்தையும் மருத்துவர் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான் என்றாலும் அவர் விசாரனை செய்ய வேண்டியது மிகக் குறைவாய் இருக்கும்;  அவை பெரும்பாலும் அவருக்கு தன்னிச்சையாக விவரிக்கப்பட்டுள்ளன.


ஆர்கனான் மணிமொழி-98


§ 98


Now, as certainly as we should listen particularly to the patient's description of his sufferings and sensations, and attach credence especially to his own expressions wherewith he endeavors to make us understand his ailments - because in the mouths of his friends and attendants they are usually altered and erroneously stated, - so certainly, on the other hand, in all diseases, but especially in the chronic ones, the investigation of the true, complete picture and its peculiarities demands especial circumspection, tact, knowledge of human nature, caution in conducting the inquiry and patience in an eminent degree.


ஆர்கனான் மணிமொழி-98

§ 98

துயரர் ஆய்வு-15


இப்போது ,நோயாளி தனது துன்பங்கள்  மற்றும் உணர்வுகள் பற்றித்  தாமே  விளக்கி கூறுபவைகளுக்கும், அவரது நோய்களைப்பற்றி நாம் புரிந்து கொள்வதற்காக அவர் தாமே தனது சொந்த உணர்வுடன் எடுத்துரைத்தவற்றிற்கும் நாம்    கட்டாயமாக  முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க  வேண்டும் , ஏனென்றால் ,  நோயாளியின் நண்பர்களும் அவரை உடனிருந்து  கவனிப்போரும் சொல்லக்கூடிய நோய்க்குறிகளில் பொதுவாக சில உண்மைக்கு மாறாகவும் மற்றும் தவறாகவும் கூறப்படலாம்- அதற்கு மாறாக ,  எல்லா நோய்களிலும் , குறிப்பாக நாட்பட்ட  அல்லது நீண்டகால  நோய்களில் அவைகளின் உண்மையான, நோயின் முழு உருவத்தையும் மற்றும் அதனுடைய விசித்திரமான குறிகள்  ஆகியவைகளை ஆய்வய் செய்யும் பொழுது , சிறப்பான விழிப்புணர்வு , சாமர்த்தியம் , மனிதர்களின் இயல்பு பற்றிய அறிவு , நோயாளியை விசாரிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை மற்றும்   மிகவும் கூடுதலான அளவில் பொறுமையுணர்வு ஆகியவற்றைக்  கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

ஆர்கனான் மணிமொழி-97



§ 97


Other individuals of an opposite character, however, partly from indolence, partly from false modesty, partly from a kind of mildness of disposition or weakness of mind, refrain from mentioning a number of their symptoms, describe them in vague terms, or allege some of them to be of no consequence.



ஆர்கனான் மணிமொழி-97

§ 97

துயரர் ஆய்வு-14


இதற்கு எதிர்மாறான குணம் படைத்த வேறு சிலரும் இருக்கிறார்கள் , ஆனாலும் , அவர்கள்  ஓரளவு சோம்பல் , ஓரளவு போலி வெட்கம் , ஓரளவு மென்மையுடன் கூடிய  அடக்கமான சுபாவம் அல்லது பலவீனமான மனம்  ஆகியவைகளால் தம் நோய்க்குறிகளில் பலவற்றைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள் , தெளிவில்லாத சொற்களில் குறிப்பிடுகிறார்கள் , அல்லது  அக்குறிகளில் முக்கியத்துவம் எதுவும் இல்லையென்று எண்ணிக் கொண்டு விட்டுவிடுகிறார்கள் .


Monday 15 June 2020

ஆர்கனான் மணிமொழி-96


§ 96


Besides this, patients themselves differ so much in their dispositions, that some, especially the so-called hypochondriacs and other persons of great sensitiveness and impatient of suffering, portray their symptoms in too vivid colors and, in order to induce the physician to give them relief, describe their ailments in exaggerated expression.88


Foot Note- 88 :  A pure fabrication of symptoms and sufferings will never be met with in hypochondriacs, even in the most impatient of them - a comparison of the sufferings they complain of at various times when the physician gives them nothing at all, or something quite unmedical, proves this plainly; - but we must deduct something from their exaggeration, at all events ascribe the strong character of their expressions to their expressions when talking of their ailments becomes of itself an important symptom in the list of features of which the portrait of the disease is composed. The case is different with insane persons and rascally feigners of disease.


ஆர்கனான் மணிமொழி-96

§ 96

துயரர் ஆய்வு-13


இது தவிர, நோயாளிகள் தங்களது மனநிலையில் மிகவும் வேறுபடுகிறவர்களாக இருக்கிறார்கள் , அதிலும் சிலர், குறிப்பாக மனவாட்ட நோயிற்குள்ளானவர்கள்   என்று அழைக்கப்படுபவர்களும், மிகுந்த உணர்திறன் உள்ளவர்களும்  மற்றும் நோய்த் துன்பத்தினால் பொறுமையற்றவர்களும், அவர்களின் அறிகுறிகளுக்கு  மிகவும் தெளிவான வண்ணங்கள்  பூசி  சித்தரிக்கிறார்கள், ,  மேலும் மருத்துவர் தங்களுக்கு உடனே நிவாரணம்  கொடுக்க அவர்களைத் தூண்டுவதற்காக , அவர்களின் வியாதிகளை மிகைப்படுத்திக் கூறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.88


அடிக்குறிப்பு-88:


தங்கள் நோய் பற்றியே எப்போதும் எண்ணிக் கவலைப்படுகிற அல்லது மனவாட்ட நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள் , அவர்கள்  மிகவும் பொறுமையிழந்தவர்களாக இருந்த போதும்   கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளையும் மற்றும் தொல்லைகளையும் சரியாக விலக்கிக் கூறும் நிலை காணப்படாது , பலவேறு காலகட்டத்தில் அவர்கள் தங்களது தொல்லைகளைக் கூறும் போது,  மருத்துவர் அவர்களுக்கு மருந்து எதுவும் கொடுக்காதபோதும் , அல்லது மருந்தியல்பு இல்லாத   ஒன்றைக் கொடுக்கும் போதும்  கூட,   அவர்கள் தங்களுடைய துன்பங்களைப்  பற்றிக் கூறுபவைகளை  ஒப்பீடு செய்து பார்க்கும் போது இது வெளிப்படையாகத் தெரியும் உண்மையாக இருக்கிறது ;  ஆனால் அவர்கள்  மிகைப்படுத்திக் கூறுவதிலிருந்து சிலவற்றை  நாம் கட்டாயமாக  கழித்து விட   வேண்டும், அவர்கள் அவ்வாறு எல்லா நிகழ்வுகளையும் உறுதி வாய்ந்த  தன்மையுடன் விளக்கிக் கூறுவதற்கு அவர்களுடைய மிகையான உணர்வு நிலையே காரணம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் தொல்லைகளை பற்றி கூறும் போது அவ்வாறு மிகைப்படுத்திக் கூறுவதும் அவர்களுடைய நோயின் உருவப்படத்தை உருவாக்கும் அறிகுறிகளில்  ஒரு முக்கிய அறிகுறியாக ஆகிவிடுகிறது  . ஆனால்  பைத்தியம் பிடித்த மனிதர்களுக்கும்  மற்றும் நோயுற்றவர்கள் போல் போக்கிரித்தனமாக பாசாங்கு செய்து நடிப்பவர்களுக்கும்   வேறுபாடு உள்ளது.