Sunday 31 January 2021

மணிமொழி-141

 

§ 141

 

 

But the best provings of the pure effects of simple medicines in altering the human health, and of the artificial diseases and symptoms they are capable of developing in the healthy individual, are those which the healthy, unprejudiced and sensitive physician institutes on himself with all the caution and care here enjoined. He knows with the greatest certainty the things he has experienced in his own person.103

 

 

Foot Note-103: Those trials made by the physician on himself have for him other and inestimable advantages. In the first place, the great truth that the medicinal virtue of all drugs, whereon depends their curative power, lies in the changes of health he has himself undergone from the medicines he has proved, and the morbid states he has himself experienced from them, becomes for him an incontrovertible fact. Again by such noteworthy observations on himself he will be brought to understand his own sensations, his mode of thinking and his disposition (the foundation of all true wisdom), and he will be also trained to be, what every physician ought to be, a good observer. All our observations on others are not nearly so interesting as those made on ourselves. The observer of others must always dread lest the experimenter did not feel exactly what he said, or lest he did not describe his sensations with the most appropriate expressions. He must always remain in doubt whether he has not been deceived, at least to some extent. These obstacles to the knowledge of the truth, which can never be thoroughly surmounted in our investigations of the artificial morbid symptoms that occur in others from the ingestion of medicines, cease entirely when we make the trials on ourselves. He who makes these trials on himself knows for certain what he has felt, and each trial is a new inducement for him to investigate the powers of other medicines. He thus becomes more and more practised in the art of observing, of such importance to the physician, by continuing to observe himself, the one on whom he can most rely and who will never deceive him; and this he will do all the more zealously as these experiments on himself promise to give him a reliable knowledge of the true value and significance of the instruments of cure that are still to a great degree unknown to our art. Let it not be imagined that such slight indispositions caused by taking medicines for the purpose of proving them can be in the main injurious to the health. Experience shows on the contrary, that the organism of the prover becomes, by these frequent attacks on his health, all the more expert in repelling all external influences inimical to his frame and all artificial and natural morbific noxious agents, and becomes more hardened to resist everything of an injurious character, by means of these moderate experiments on his own person with medicines. His health becomes more unalterable; he becomes more robust, as all experience shows.

 

மணிமொழி-141

 

ஆரோக்கியமான மருத்துவர்கள் ஹோமியோபதி மருந்துகளை தாமே எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்து பார்ப்பது தான் சிறந்தது.

 

மனிதர்களின்  ஆரோக்கியத்தில்  மாற்றத்தை ஏற்படுத்தும்  எளிய மருந்துகளின் தூய்மையான விளைவுகள்     , மற்றும் ஆரோக்கியமான மனிதரிடத்தில்  அவை உண்டாக்கக் கூடிய  செயற்கையான  நோய்கள்  மற்றும் அறிகுறிகள்  ஆகியவற்றை  , ஆரோக்கியமான  முன்முடிவற்ற   மற்றும் உணர்ச்சிமிக்கவரான   மருத்துவர்,  வரையறை செய்யப்பட்ட எச்சரிக்கையுடனும் மற்றும் கவனத்துடனும் தமக்குத் தாமே பரிசோதனை செய்து கொள்வது தான் சிறந்த மருந்து நிரூபணம் ஆகும். அவ்வாறு செய்யும் போது அவர் தமது சொந்த பரிசோதனையாளர்களிடம் பட்டறிந்த நிரூபணக்குறிகளை  அவராலும் மிக உறுதியாக அறிந்து கொள்ள முடியும்  -103.

 

 

அடிக்குறிப்பு-103:

 

 

மருத்துவர் தன் மீதே அத்தகைய  சோதனைகளை மேற்க்கொள்வது  அவருக்கு வேறு சில   மற்றும் விலைமதிப்பிட முடியாத நன்மைகளையும்  கொண்டதாக இருக்கிறது . முதலாவதாக, எல்லா மருந்துகளின் மருத்துவ நற்பண்புகளும், அவற்றின் நோய் தீர்க்கும் சக்தியைப் பொறுத்தது ஆகும் , அது அவர் நிரூபித்த மருந்துகளிலிருந்து அவர் அனுபவித்த ஆரோக்கிய நிலையின்  மாற்றங்களையும் , மற்றும் அவற்றிலிருந்து அவர் அனுபவித்த மோசமான நிலைகளையும் அவரே பட்டறிந்தவர் ஆகிறார் , எனவே அது அவருக்கு மறுக்க முடியாத உண்மை ஆகிறது . மேலும் அவர் தன்மீது மேற்கொள்ளும்  இத்தகைய குறிப்பிடத்தக்க கூர்ந்த கவனிப்புகள் மூலம்  அவர் தனது சொந்த உணர்வுகள், அவரது சிந்தனை முறை மற்றும் அவரது மனநிலை (எல்லா  உண்மையான மெய்யறிவுக்கு  அடித்தளமாக இருப்பது  ) ஆகியவற்றைப் புரிந்துகொள்வார், மேலும் ஒவ்வொரு மருத்துவரும் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் , ஒரு நல்ல கூர்ந்து கவனிக்கும் மருத்துவராக இருப்பதற்கும்  தேவையான பயிற்சிகளை அவர் பெறுகிறார் . நம்மை நாமே  பரிசோதனைக்கு உட்படுத்தி  பெரும் கூர்ந்த கவனிப்புகளைப் போல  மற்றவர்கள் மீது மேற்கொள்ளும் கவனிப்புகள் அமைவதும் இல்லை. ஒரு மருத்துவர் அல்லது ஆய்வு செய்பவர் மற்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும் போது , அந்த சோதனையாளர் அவர் உணர்ந்தவற்றைச் சரியாக சொல்லவில்லை , அல்லது அவர் தனது உணர்ச்சிகளை மிகவும் பொருத்தமான வெளிப்பாடுகளுடன் விவரிக்க வில்லை என்று பெரிதும் பயப்படக்கூடும். அவர் ஓரளவுக்கேனும் தாம் ஏமாந்து விட்டோமோ என்ற   சந்தேகத்தில் எப்போதும் இருக்க வேண்டும். மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுத்து செயற்கை நோய் அறிகுறிகளை நாம் ஆராய்ச்சி செய்யும்  போது அங்கு உண்மையான பட்டறிவை பெறுவதற்குத்  தடையாக உள்ளவற்றை அவ்வளவு எளிதாகக் கடந்து விட முடியாது. நாமே மருந்துகளை உட்க்கொண்டு சோதனைகளை செய்யும்  போது அத்தகைய தடைகள் ஏற்படுவதில்லை. இந்த சோதனைகளை தனக்குத்தானே செய்கிறவனுக்கு  அவன்   உணர்ந்ததை உறுதியாக அறிய முடிகிறது , மேலும் இத்தகைய ஒவ்வொரு ஆய்வு முயற்சியும்  மற்ற மருந்துகளின் ஆற்றல்களை அறிந்துகொள்ள  அவருக்கு ஒரு புதிய தூண்டுதலாகவும் அமைகிறது . அவர் மென்மேலும்  கவனிக்கும் கலையில் அதிகம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது , அதாவது  தம் மீதே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கவனிப்பு முறை அவரை ஏமாற்றுவதில்லை ஆதலால் அவர் அதில் உறுதியாக சார்ந்திருக்க முடிகிறது ; மேலும்  இத்தகைய பரிசோதனைகளில்   தன்னைத்தானே  வைராக்கியத்துடன்  ஈடுபடுத்தி கொள்கிறார்கள், ஏனெனில் , நமது மருத்துவக் கலையில்  இன்னும் பேரளவிற்கு தெரியாத,  குணப்படுத்தும் கருவிகளாக இருக்கிற மருந்துகளின்  உண்மையான மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிய நம்பகமான அறிவை அவருக்கு வழங்குவதற்கும் அத்தகைய ஆய்வு பயன்படுகிறது . எனவே அந்த மருத்துவர் இன்னும் மிகுதியாக ஆர்வ உணர்வுடன் அத்தகைய ஆய்வில் ஈடுபடுகின்றார். மருந்துகளை நிரூபிக்கும் நோக்கத்திற்காக  உட்கொள்ளும் போது அம்  மருந்துகளினால்   ஏற்படும் சிறிய உடல்நலப்பாதிப்புகள்  ஆரோக்கியத்திற்கு முக்கிய தீங்கு விளைவிக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை . பட்டறிவு அதற்கு மாறாகவே இருக்கிறது, அதாவது மருந்துகளை நிரூபணம் செய்பவர் மருந்துகளை உட்கொண்டு ஆய்வுகள் செய்யும் போது ,  அவரது உடல் நலத்தில் அடிக்கடி ஏற்படும் தாக்குதல்களால், உடல்நலத்திற்குத் தீங்கான புறத்திலிருந்து வந்து தமது உடல்நலத்தைத் தாக்கும் , அனைத்து செயற்கை மற்றும் இயற்கையான  நச்சுப் பொருள்களையும்  விரட்டுவதில் வல்லமை வாய்ந்ததாகவும் , மற்றும் தீங்கு விளைவிக்கும் தன்மையுடன் வரும் எல்லாவற்றையும் எதிர்க்கும் தன்மையுடைதாகவும் அவரது உறுப்பமைவு மாறுகிறது . அவரது உடல்நலம் மேலும் மாற்றத்திற்கு உள்ளாகாதவாறு இருக்கிறது; அவரது  உடல்நலம் மேலும் பெருகி வலுவானவராக அல்லது ஆரோக்கியமானவராக மாறுகிறார் என்பதையே  எல்லா பட்டறிவும் காட்டுகிறது.

 

மணிமொழி-§ 140

 

§ 140

 

If the person cannot write, the physician must be informed by him every day of what has occurred to him, and how it took place. What is noted down as authentic information on this point, however, must be chiefly the voluntary narration of the person who makes the experiment, nothing conjectural and as little as possible derived from answers to leading questions should be admitted; everything must be ascertained with the same caution as I have counselled above (§§ 84-99) for the investigation of the phenomena and for tracing the picture of natural diseases.

 

 

மணிமொழி-§ 140

 

பரிசோதனையாளரால் எழுத முடியவில்லையென்றால் தினந்தோறும் அவருக்கு என்ன நேர்ந்தது , எப்படி நிகழ்ந்தது என்பதை அவரால் மருத்துவருக்கு  கட்டாயம் தெரிவிக்கப்படவேண்டும் . இருப்பினும், இங்கு எது மிகவும் துல்லிதமான தகவலாகக் குறிக்கப்படுகிறதோ அது முக்கியமாக பரிசோதனையாளரால் தன்னிச்சையாக  இயம்பப்பட்டதாகவும் யூகத்திற்கு அப்பாற்பட்டதாகவும் கட்டாயம்   இருக்க வேண்டும் மற்றும் வினவப்பட்ட வேள்விகளுக்குப் பெறப்பட்ட பதில்கள் குறைந்தபட்சம் முடிந்த அளவிற்கு அனுமதிக்கப்பட வேண்டும்; நோய்குறிகளின் தன்மையை ஆராய்வது  மற்றும் இயற்கை நோய்களின் உருவத்தை கண்டுபிடிப்பதைப்  பற்றியும்  நான் (ஹானிமன்) மேலே உள்ள  மணிமொழிகளில்  (§§ 84-99)ஆலோசனை வழங்கியதைப் போலவே , அதே எச்சரிக்கை  உணர்வுடன் எல்லாவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மணிமொழி-§ 139

 

§ 139

 

When the physician does not make the trial of the medicine on himself, but gives it to another person, the latter must note down distinctly the sensations, sufferings, accidents and changes of health he experiences at the time of their occurrence, mentioning the time after the ingestion of the drug when each symptom arose and, if it lasts long, the period of its duration. The physician looks over the report in the presence of the experimenter immediately after the experiment is concluded, or if the trial lasts several days he does this every day, in order, while everything is still fresh in his memory, to question him about the exact nature of every one of these circumstances, and to write down the more precise details so elicited, or to make such alterations as the experimenter may suggest.102

 

Foot Note-102:  He who makes known to the medical world the results of such experiments becomes thereby responsible for the trustworthiness of the person experimented on and his statements, and justly so, as the weal of suffering humanity is here at stake.

 

 

மணிமொழி-§ 139

 

 

மருத்துவர் மருந்தின் பரிசோதனையை தன்மீது நிகழ்த்தாமல் , அதை வேறொரு மனிதரின் மீது நிகழ்த்தும் போது, பரிசோதனையாளர் அவரது கூருணர்வுகள் , துன்பங்கள் , விபத்துக்கள் மற்றும் அவைகள் நிகழும்  போது அவர் அனுபவிக்கும் அவருடைய ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள், மருந்து உட்கொண்ட பிறகு ஒவ்வொரு குறியும் தோன்றும் நேரம் , இந்தக் குறிகள் நீடித்திருந்தால் இதனுடைய கால அளவு முதலியவை அவரால் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு  பரிசோதனையாளர் இருக்கும் போதே மருத்துவர் உடனடியாக அந்த  அறிக்கையை  ஆராய வேண்டும் , அல்லது இந்தப் பரிசோதனை பல நாட்களுக்கு நீடித்திருந்தால் , பரிசோதனையாளரின் நினைவில் அனைத்துக்குறிகளும் இன்னும் புதியதாக இருக்கும்போது, இந்த ஒவ்வொரு நிகழ்வுகளின் துல்லிதத்தன்மையை வினவும் பொருட்டு மருத்துவர் இதைத் தினமும் செய்ய வேண்டும்.  மற்றும் மிகவும் துல்லியமான விவரங்களை மிகவும் சிறப்பான முறையிலும் அல்லது பரிசோதனையாளர்  பரிந்துரைக்கும் மாற்றங்களையும் அவர்  எழுதிக் கொள்ள வேண்டும்- 102

 

அடிக்குறிப்பு-102:

 

 

எவரொருவர் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை மருத்துவ உலகுக்குத் தெரியப்படுத்துகிறாரோ , அவர்  பரிசோதனைக்குட்பட்ட   நபரின் நம்பகத்தன்மைக்கும் அவரது கூற்றுகளுக்கும் பொறுப்பானவர் ஆகிறார்.  அவ்வாறு இருக்கும் போது , துன்பப்படும் மனிதகுலத்தின் வாழ்வு நலம்  இங்கே பணயப்பொருளாக  உள்ளது.

மணிமொழி-§ 138

 

 

§ 138

 

All the sufferings, accidents and changes of the health of the experimenter during the action of a medicine (provided the above condition [§§ 124-127] essential to a good and pure experiment are complied with) are solely derived from this medicine, and must be regarded and registered as belonging peculiarly to this medicine, as symptoms of this medicine, even though the experimenter had observed, a considerable time previously, the spontaneous occurrence of similar phenomena in himself. The reappearance of these during the trial of the medicine only shows that this individual is, by virtue of his peculiar constitution, particularly disposed to have such symptoms excited in him. In this case they are the effect of the medicine; the symptoms do not arise spontaneously while the medicine that has been taken is exercising an influence over the health of the whole system, but are produced by the medicine.

 

 

மணிமொழி-§ 138

 

ஒரு மருந்தின் செயல்பாட்டின் போது  அனைத்துத் துன்பங்களும் விபத்துகளும் பரிசோதனையாளரின் ஆரோக்கியத்தில்  ஏற்படும் மாற்றங்களும் முழுமையாக இந்த மருந்திலிருந்தே பெறப்படுகின்றன  (ஒரு நல்ல மற்றும் தூய்மையான பரிசோதனைக்கு அவசியமான மேற்கண்ட நிபந்தனை [§§ 124-127]  இருக்கும் போது ) ,  இதற்குத் தேவையான போதுமான காலஅளவிற்கு முன்பாக பரிசோதனையாளர் தன்னிச்சையாக இந்த அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதை கண்டுபிடித்திருந்தாலும் இந்த மருந்திற்குரிய அறிகுறிகளை அந்த மருந்திற்க்கே உரிய விசித்திரமானவைகளாக கருதி பதிவு செய்யப்பட வேண்டும். இந்த மருந்தின் சோதனையின்போது இந்த அறிகுறிகள் மீண்டும் தோன்றுவது, இந்த நபர் தனது விசித்திரமான உடலமைப்பைக் கொண்டவராகவும்  ,  குறிப்பாக  இந்த அறிகுறிகள் அவரிடம் கிளர்ந்தெழக்கூடிய சார்புநிலை கொண்டவராகவும்  இருப்பார் என்பதைக் காட்டுகிறது. இந்த நிலையில்  அவைகள்  மருந்தின் விளைவுகளாக இருக்கின்றன ; எடுக்கப்பட்ட மருந்து உடலின்  முழு இயக்கத்தின்  ஆரோக்கியத்தில்  தாக்கத்தை  ஏற்படுத்தும் போது அந்த அறிகுறிகள் தன்னிச்சையாக எழுவதில்லை, ஆனால் மருந்தால் தோற்றுவிக்கப்படுகின்றன .

 

மணிமொழி-§ 137

 

§ 137

 

The more moderate, within certain limits, the doses of the medicine used for such experiments are - provided we endeavor to facilitate the observation by the selection of a person who is a lover of truth, temperate in all respects, of delicate feelings, and who can direct the most minute attention to his sensation - so much the more distinctly are the primary effects developed, and only these, which are most worth knowing, occur without any admixture of secondary effects or reactions of the vital force. When, however, excessively large doses are used there occur at the same time not only a number of secondary effects among the symptoms, but the primary effects developed, and only these, which are most worth knowing, occur without any admixture of secondary effects or reactions of the vital force. When, however, excessively large doses are used there occur at the same time not only a number of secondary effects among the symptoms, but the primary effects also come on in such hurried confusion and with such impetuosity that nothing can be accurately observed; let alone the danger attending them, which no one who has any regard for his fellow-creatures, and who looks on the meanest of mankind as his brother, will deem an indifferent manner.

 

 

மணிமொழி-§ 137

 

சில வரம்புகளுக்கு உட்பட்டு மிகவும் மிதமான மருந்தின் அளவுகளை , இத்தகைய பரிசோதனைகளுக்கு பயன்படுத்தும் போது , அந்த பரிசோதகர்  உண்மையை விரும்புபவராகவும் , அனைத்து வகையிலும் தன்னடக்கமுள்ள  , மென்மையான உணர்வுடைய , மிகவும் நுட்பமான கவனிப்புகளை அவருடைய உணர்வுகளாக மாற்றத்  தெரிந்த  ,  அதாவது  அவருடைய முதன்மை  விளைவுகள் மிகவும் தெளிவாக தெரியும் அளவிற்கும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த ஒருவரை பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இவைகள், இரண்டாம் நிலை விளைவுகள் அல்லது உயிராற்றலின்  எதிர்விளைவுகளின்  கலப்புகள் எதுவுமில்லாமல் நிகழ்கின்றன. எவ்வாறாயினும், அதே நேரத்தில் , மருந்துகளை அதிகப்படியான அளவுகளில் பயன்படுத்தப்படும்போது, ​​அறிகுறிகளிடையே எண்ணற்ற  இரண்டாம் நிலை விளைவுகள் தென்படுவது மட்டுமல்லாமல், முதன்மை விளைவுகளும் அவசரகதியில் குழப்பநிலையில் கட்டுக்கடங்காமல் தென்படுவதால் எதையும் துல்லியமாக கவனிக்க முடியாது; இந்த மாதிரியான அபாயங்கள் அவைகளில் இருந்த போதும் , சக உயிரினங்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், மனிதகுலத்தை அவனது சகோதரனாகக் கருதாமல் அற்பமாகக் கருதும் எவரும்  இதை ஒரு பொருட்டாக  கருதுவதில்லை.

மணிமொழி-§ 136

 

§ 136

 

Although, as has been said, a medicine, on being proved on healthy subjects, cannot develop in one person all the alterations of health it is capable of causing, but can only do this when given to many different individuals, varying in their corporeal and mental constitution, yet the tendency to excite all these symptoms in every human being exists in it (§ 117), according to an eternal and immutable law of nature, by virtue of which all its effects, even those that are but rarely developed in the healthy person, are brought into operation in the case of every individual if administered to him when he is in a morbid state presenting similar symptoms; it then, even in the smallest dose, being homoeopathically selected, silently produces in the patient an artificial state closely resembling the natural disease, which rapidly and permanently (homoeopathically) frees and cures him of his original malady.

 

மணிமொழி-§ 136

 

ஏற்கனவே கூறியபடி , ஒரு மருந்து, ஆரோக்கியமான மனிதர்களிடம்  நிரூபிக்கப் படும்போது , ஒரு மனிதனின்  ஆரோக்கியத்தில்  அனைத்து மாற்றங்களையும் உருவாக்க முடியாவிட்டாலும் கூட  , வேறுபட்ட மனம் மற்றும் உடலமைப்பு கொண்ட பல  மாறுபட்ட நபர்களுக்கு கொடுக்கும் போது,  அனைத்து மாற்றங்களையும் உருவாக்க   முடியும், ஆனாலும் ஒவ்வொரு மனிதரிடமும் இந்த அனைத்து  அறிகுறிகளையும் கிளர்ந்தெழச் செய்யும் போக்கு  உள்ளது (§ 117), இயற்கையின் ஒரு தொடக்கவும் முடிவுமற்ற   மற்றும் மாறாத விதியின் படி,  ஆரோக்கியமான மனிதரிடம் அரிதாகவே தென்படக்கூடிய இந்த விளைவுகள்  கூட , ஒவ்வொரு மனிதருக்கும் அந்த மருந்தை இதே அறிகுறிகளுடன் இருக்கக்கூடிய நோயுற்ற நிலையில் கொடுக்கும் போது அந்த விளைவுகள்  செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன ; பின்னர், ஹோமியோபதி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தை  மிகச் சிறிய அளவிலும் கூட கொடுக்கும் போது  , நோயாளிக்கு இயற்கையான நோயை ஒத்த ஒரு செயற்கை நிலையை  மறைவாக  உருவாக்குகிறது, இது விரைவாகவும் நிரந்தரமாகவும் (ஹோமியோபதி முறைப்படி) அவரை விடுவித்து,   அவரது இயற்கையான  நோயை குணப்படுத்துகிறது.

மணிமொழி-§ 135

 

§ 135

 

The whole of the elements of disease a medicine is capable of producing can only be brought to anything like completeness by numerous observations on suitable persons of both sexes and of various constitutions. We can only be assured that a medicine has been thoroughly proved in regard to the morbid states it can produce - that is to say, in regard to its pure powers of altering the health of man - when subsequent experimenters can notice little of a novel character from its action, and almost always only the same symptoms as had been already observed by others.

 

 

மணிமொழி-§ 135

 

 

எண்ணற்ற பரிசோதனைகளை,  இரு பாலினத்தில் உள்ள சரியான மனிதர்கள் மீதும்  மற்றும் பல்வேறு உடலமைப்பிற்கு  தகுந்தவாறும் செய்யும் போது  , ஒரு மருந்தில் உள்ள நோய்களின் முழுமையான கூறுகளை , குறிப்பாக, அதன் முழுமை தன்மையுடன் வெளிக்கொணர முடியும். ஒரு மருந்து அது உருவாக்கக்கூடிய நோயுற்ற நிலைகள் குறித்து முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே நாம் உறுதியாக நம்ப முடியும் - அதாவது, மனிதனின் ஆரோக்கியத்தை மாற்றுவதற்கான அதன் தூய்மையான ஆற்றலைப் பொறுத்தவரை - அடுத்தடுத்த பரிசோதகர்கள் அதன் செயலிலிருந்து ஒரு புதுமையான தன்மையைக் கவனிப்பார்கள், அது பிறரால் ஏற்கனவே  உணரப்பட்ட அதே அறிகுறிகளாகத் தான் எப்போதும் இருக்கும்.

 

 

மணிமொழி-§ 134

 

 

§ 134

 

All external influences, and more especially medicines, possess the property of producing in the health of the living organism a particular kind of alteration peculiar to themselves; but all the symptoms peculiar to a medicine do not appear in one person, nor all at once, nor in the same experiment, but some occur in one person chiefly at one time, others again during a second or third trail; in another person some other symptoms appear, but in such a manner that probably some of the phenomena are observed in the fourth, eighth or tenth person which had already appeared in the second, sixth or ninth person, and so forth; moreover, they may not recur at the same hour.

 

மணிமொழி-§ 134

 

 

அனைத்து வெளிப்புற தாக்கங்கள், குறிப்பாக மருந்துகள் , உயிரினத்தின் ஆரோக்கியத்தில்  ஒரு குறிப்பிட்ட வகையான , அவைகளுக்கே உரிய  விசித்திரமான மாற்றத்தை உருவாக்கும் இயல்பை தன்னகத்தே  கொண்டுள்ளன; ஆனால் ஒரு மருந்துக்குரிய  விசித்திரமான அனைத்து அறிகுறிகளும் ஒரு மனிதரிடமோ  , அனைவரிடமோ , அதே நேரத்தில்,  அதே பரிசோதனையிலோ தோன்றாது, ஆனால் ஒரு மனிதரிடம்  முக்கியமாக முதல் தடவையிலேயே   சில அறிகுறிகள் ஏற்படுகின்றன, மற்றவர்களுக்கு  இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசோதனையின் போது  அக்குறிகள் நிகழ்கின்றன; மற்றொரு மனிதரிடத்தில்  வேறு சில அறிகுறிகள் தோன்றும், ஆனால் நான்காவது, எட்டாவது அல்லது பத்தாவது மனிதர்களிடத்தில்  இரண்டாவது, ஆறாவது அல்லது ஒன்பதாவது மனிதரிடத்தில் ஏற்கனவே தோன்றிய சில அறிகுறிகள்  காணப்படுகின்றன; மேலும், அவை ஒரே குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் நிகழ்வதில்லை.

 

மணிமொழி-§ 133

 

§ 133

 

On experiencing any particular sensation from the medicine, it is useful, indeed necessary, in order to determine the exact character of the symptom, to assume various positions while it lasts, and to observe whether, by moving the part affected, by walking in the room or the open air, by standing, sitting or lying the symptom is increased, diminished or removed, and whether it returns on again assuming the position in which it was first observed, - whether it is altered by eating or drinking, or by any other condition, or by speaking, coughing, sneezing or any other action of the body, and at the same time to note at what time of the day or night it usually occurs in the most marked manner, whereby what is peculiar to and characteristic of each symptom will become apparent.

 

மணிமொழி-§ 133

 

 

மருந்திலிருந்து ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உணர்வை அனுபவிக்கும் போது, அறிகுறியின் சரியான தன்மையை தீர்மானிக்கவும், அக்குறிகள்  நீடிக்கும் போது அதன் பல்வேறு நிலைகளை அறிந்து கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட பகுதியை நகர்த்துவதால் , அறையிலோ , திறந்த வெளியில்  நடப்பதால், நிற்பதால், அமர்வதால்   அல்லது படுப்பதால் அறிகுறிகள் அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா அல்லது நீங்கியுள்ளதா , முதலில் கண்டறியப்பட்ட நிலையிலேயே மீண்டும் குறிகள் வருகிறதா, உண்பதின் மூலமாகவோ , குடிப்பதின் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ , பேசுவதின் மூலமோ, இருமுவதாலோ ,தும்முவதின் மூலமோ அல்லது உடம்பின் வேறு செயல்களின் மூலமோ , அதே நேரத்தில் மிக குறிப்பிடத்தக்க வகையில் சாதாரணமாக பகல் மற்றும் இரவில் எந்த நேரத்தில் குறிகள் தென்படுகின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்  , இதன் மூலமாக விசித்திரமான மற்றும் ஒவ்வொரு குறிகளின் சிறப்பியல்புகள் வெளிப்படையாகத் தெரியவரும். இது மிகவும் பயனுள்ளதாகவும் அவசியமானதாகவும்  இருக்கும்.

 

 

Tuesday 5 January 2021

மணிமொழி-§ 132

 

§ 132

 

But when the object is, without reference to the sequential order of the phenomena and the duration of the action of the drug, only to ascertain the symptoms themselves, especially those of a weak medicinal substance, in that case the preferable course to pursue is to give it for several successive days, increasing the dose every day. In this manner the action of an unknown medicine, even of the mildest nature, will be revealed, especially if tested on sensitive persons.

 

மணிமொழி-§ 132

 

ஆனால் நமது  குறிக்கோள் ஆனது  , மருந்து நிரூபணத்தின் போது  தொடர்ச்சியான வரிசை மற்றும் மருந்தின் செயல்பாட்டின் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , குறிப்பாக பலவீனமான ஆற்றல் உடைய மருந்து பொருள்களின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளவது மட்டுமே .  இந்த மாதிரியான தருணத்தில்   பல தொடர்ச்சியான நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் மருந்தின் அளவை அதிகரித்து கொடுப்பது தான் சரியான நடைமுறையாகும் . இந்த முறையில், அறியப்படாத மருந்தின் செயல், குறிப்பாக கூருணர்வு  வாய்ந்த மனிதர்கள்  மீது பரிசோதனை செய்யும் போது . மருந்தின் மிதமான தன்மை கூட வெளிப்படும்.

 

மணிமொழி-§ 131

 

§ 131

 

If, however, in order to ascertain anything at all, the same medicine must be given to the same person to test for several successive days in ever increasing doses, we thereby learn, no doubt, the various morbid states this medicine is capable of producing in a general manner, but we do not ascertain their order of succession; and the subsequent dose often removes, curatively, some one or other of the symptoms caused by the previous dose, or develops in its stead an opposite state; such symptoms should be enclosed in brackets, to mark their ambiguity, until subsequent purer experiments show whether they are the reaction of the organism and secondary action or an alternating action of this medicine.

 

மணிமொழி-§ 131

 

 

இருப்பினும் , எதையும் கண்டறிவதற்கு, ஒரே மருந்தை ஒரே நபருக்கு தொடர்ச்சியாக பல நாட்கள் தொடர்ந்து அதிகரிக்கும் அளவுகளில் கொடுத்து சோதிக்க வேண்டும் , இதன் மூலம் இந்த மருந்தின் பல்வேறு நோய்க்குறிகளை  வெளிப்படுத்தும் ஆற்றலை பொதுவான முறையில்  சந்தேகத்திற்கு இடமின்றி நாம் தெரிந்து கொள்ளலாம் ,  ஆனால் அவைகளுடைய  அடுத்தடுத்த வரிசையை நம்மால் கண்டறிய முடியாது ; முந்தைய மருந்தின் காரணமாக ஏற்பட்ட ஒரு சில அறிகுறிகளை , அடுத்தடுத்து கொடுக்கும் மருந்து,  நோயைத் தணிக்கும் முறையில் நீக்குகிறது , அல்லது,  அதற்கு பதிலாக ஒரு எதிர்நிலை உருவாகிறது; அந்த மருந்துகளின்  தெளிவின்மையைக் குறிக்க,  அந்தக்குறிகள் உயிரினத்தின் எதிர்வினை மற்றும் இரண்டாம் நிலை செயல்பாடா  அல்லது இந்த மருந்தின் மாற்று நடவடிக்கையா என்பதைக் காட்டும் வரை , அடுத்தடுத்த தூய்மையான பரிசோதனைகள் மேற்கொள்ளும் வரை . அத்தகைய அறிகுறிகள் அடைப்புக்குறிக்குள் இணைக்கப்பட வேண்டும்,

 

மணிமொழி-§ 130

 

 

§ 130

 

If, at the very commencement, the first dose administered shall have been sufficiently strong, this advantage is gained, that the experimenter learns the order of succession of the symptoms and can note down accurately the period at which each occurs, which is very useful in leading to a knowledge of the genius of the medicine, for then the order of the primary actions, as also that of the alternating actions, is observed in the most unambiguous manner. A very moderate dose, even, often suffices for the experiment, provided only the experimenter is endowed with sufficiently delicate sensitiveness, and is very attentive to his sensations. The duration of the action of a drug can only be ascertained by a comparison of several experiments.

 

 

மணிமொழி-§ 130

 

மிகத் தொடக்கத்திலேயே , முதலாவதாகத் தரப்பட்ட மருந்தின் அளவு  போதுமானதாக இருந்திருந்தால், பரிசோதனைக்கு உட்பட்டவர் , அறிகுறிகளின் அடுத்தடுத்த வரிசையை அறிந்து கொள்ளும் நன்மை பெறப்படுகிறது , மேலும் ஒவ்வொன்றும் நிகழும் காலத்தை துல்லியமாகக் குறிப்பிடலாம், இது மருந்தின் தனித்துவமான ஆற்றல் பற்றிய அறிவை அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , அதன்பிறகு முதன்மை செயல்களின் வரிசையும்,  மாறுபட்ட செயல்களின் வரிசையும் மிகவும் குழப்பமற்ற  முறையில் காணப்படுகின்றன. பரிசோதனைக்கு உட்பட்டவர் போதுமான அளவு மென்மையான கூருணர்ச்சியும் , அவருடைய உணர்வுகளுக்கு ஆட்பட்டவராக இருக்கும் போது மிகவும் மிதமான மருந்தளவு,  பெரும்பாலும், அந்த பரிசோதனைக்கு போதுமானது,  ஒரு மருந்தின் செயல்பாட்டின் காலத்தை பல பரிசோதனைகளின் ஒப்பீட்டால் மட்டுமே கண்டறிய முடியும்.

 

மணிமொழி-§ 129

 

§ 129

 

If the effects that result from such a dose are but slight, a few more globules may be taken daily, until they become more distinct and stronger and the alterations of the health more conspicuous; for all persons are not effected by a medicine in an equally great degree; on the contrary, there is a vast variety in this respect, so that sometimes an apparently weak individual may by scarcely at all affected by moderate doses of a medicine known to be of a powerful character, while he is strongly enough acted on by others of a much weaker kind. And, on the other hand, there are very robust persons who experience very considerable morbid symptoms from an apparently mild medicine, and only slighter symptoms from stronger drugs. Now, as this cannot be known beforehand, it is advisable to commence in every instance with a small dose of the drug and, where suitable and requisite, to increase the dose more and more from day to day.

 

மணிமொழி-§ 129

 

மேற்க்கூறியவாறு மருந்துகளை எடுத்துக் கொண்டதின் காரணமாக ஏற்பட்ட   விளைவுகள் சிறிதளவாக  இருந்தால், அவை மிகவும் தனித்துவமானதாகவும் வலுவானதாகவும்  மாறும் வரை,  மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட  மாற்றங்கள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் வரை  மேலும்  சில மருந்து ருண்டைகள்    தினமும்  எடுத்துக்கொள்ளப்படலாம் ; எல்லா மனிதர்களும் ஒரு மருந்தால் சமமாக பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை; மாறாக, இந்த விஷயத்தில்  பல்வேறு  வகையான பாதிப்பு  உள்ளது, இதனால்,  சில நேரங்களில் வெளிப்படையாக தெரியும் பலவீனமான ஒரு மனிதர்  ஆற்றல் வாய்ந்த தன்மையைக் கொண்ட ஒரு மருந்தின் மிதமான அளவுகளால் பாதிக்கப்படுவதில்லை, அதே நேரத்தில்  அம்மனிதரிடம்  ஆற்றல் குறைந்த மற்ற மருந்துகள் வலுவாகவும்  போதுமான அளவிற்கும் செயல்படுகிறது  . மறுபுறம், வெளிப்படையான மிதமான  மருந்தினை மிகவும் வலிமைமிக்க மனிதருக்கு கொடுக்கும் போது  மிகவும் கணிசமான நோயுற்ற அறிகுறிகளையும் ,  வலுவான மருந்துகளிலிருந்து மெல்லிய அறிகுறிகளையும் அவர் உணருகிறார் . இப்போது, மருந்தின் இந்த ஆற்றல்களை முன்பே அறியமுடியாததால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு சிறிய அளவிலான மருந்தைக் கொண்டு தொடங்குவது நல்லதென பரிந்துரைக்கப்படுகிறது  , மேலும், பொருத்தமான மற்றும் அவசியமான தருணங்களில் மருந்தின் அளவை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும்.

 

மணிமொழி-§ 128

 

§ 128

The most recent observations have shown that medicinal substances, when taken in their crude state by the experimenter for the purpose of testing their peculiar effects, do not exhibit nearly the full amount of the powers that lie hidden in them which they do when they are taken for the same object in high dilutions potentized by proper trituration and succussion, by which simple operations the powers which in their crude state lay hidden, and, as it were, dormant, are developed and roused into activity to an incredible extent. In this manner we now find it best to investigate the medicinal powers even of such substances as are deemed weak, and the plan we adopt is to give to the experimenter, on an empty stomach, daily from four to six very small globules of the thirtieth potency of such a substance, moistened with a little water or dissolved in more or less water and thoroughly mixed, and let him continue this for several days.

 

மணிமொழி-§ 128

 

 

பரிசோதனையாளரால் மருந்துகளின்  விசித்திரமான விளைவுகளைச் சோதிக்கும் நோக்கத்திற்காக, அவற்றின் கச்சா நிலையில் எடுக்கப்படும் போது, அவைகளில் மறைந்திருக்கும்  ஆற்றல்களின்  முழு அளவையும் வெளிப்படுத்தாது என்பதை  மிகச் சமீபத்திய கூர்ந்த கவனிப்புகள்  காட்டுகின்றன. ஆனால் அதே மருந்துப்பொருள் , அதே மனிதருக்கு ஆற்றல் வாய்ந்த வகையில்,  எளிய செயல்களான  நுண்ணிய பொடியாக்குதல் அல்லது குலுக்குதல் மூலமாகவோ உயர் நீர்த்தங்களில் வீரியப்படுத்தப்பட்டு கொடுக்கும் பொழுது,  அவற்றின் கச்சா நிலையில் இருந்த போது மறைந்திருந்தும் மற்றும் செயலற்றும் இருந்த  ஆற்றலானது வளர்ச்சியடைந்து நம்பமுடியாத அளவிற்கு  மிகப்பெரிய செயலை எழுப்புகிறது , பலவீனமான ஆற்றல் உள்ளதாகக்  கருதப்படும் மருந்துப்பொருள்களைக் கூட இதே முறையில் ஆராய்ச்சி செய்வது மிகவும் சிறந்தது என்றும் நாம் கருதுகிறோம். மேலும் பரிசோதனையாளருக்கு மருந்துகளை வெறும் வயிற்றில், தினமும் நான்கு முதல் ஆறு வரையிலான மிகவும்  சிறிய உருண்டைகளில் முப்பதாவது வீரியத்தில் , சிறிதளவு  தண்ணீரில் ஈரப்படுத்தப்பட்டோ அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீரில் கரைக்கப்பட்டு, நன்கு கலக்கப்பட்டு, இதை அவர் பல நாட்கள் தொடரட்டும் என்று நாங்கள் (ஹோமியோபதியர்கள்) கடைபிடிப்பதற்குத் திட்டமிடுகிறோம்.

 

மணிமொழி-§ 127

 

§ 127

The medicines must be tested on both males and females, in order also to reveal the alterations of the health they produce in the sexual sphere.

 

 

மணிமொழி-§ 127

 

 

ஹோமியோபதி மருந்துகள், ஆண், பெண் ஆகிய இருபாலரின் பாலியல் சம்பந்தமான ஆரோக்கியத்தில் ஏற்படும்  மாற்றங்களை வெளிப்படுத்த,  இருபாலருக்கும்  கொடுத்து பரிசோதிக்கப்பட வேண்டும்.

 

மணிமொழி-§ 126

 

§ 126

 

The person who is proving the medicine must be pre-eminently trustworthy and conscientious and during the whole time of the experiment avoid all over-exertion of mind and body, all sorts of dissipation and disturbing passions; he should have no urgent business to distract his attention; he must devote himself to careful self-observation and not be disturbed while so engaged; his body must be in what is for him a good state of health, and he must possess a sufficient amount of intelligence to be able to express and describe his sensations in accurate terms.

 

மணிமொழி-§ 126

 

 

ஹோமியோபதி மருந்தை நிரூபிக்கும் மனிதர் , மிக சிறந்த நம்பகதன்மை உடையவராகவும் , மனசாட்சி உள்ளவராகவும்  இருக்க வேண்டும், மேலும் பரிசோதனையின் முழு நேரத்திலும் மனம் மற்றும் உடலின் அதிகப்படியான உழைப்பைத் தவிர்க்க வேண்டும் , அனைத்து வகையான சிதறல்கள் மற்றும் குழப்பமான அதிக விருப்ப உணர்வுகள் இருக்கக்கூடாது ; அவரது கவனத்தை திசை திருப்ப கூடிய  வேறு எந்த  அவசர வேலைகளும்  அவருக்கு இருக்கக்கூடாது; அவர் கவனமான சுய கவனிப்புக்கு தன்னை அவர் அர்ப்பணிக்க வேண்டும், அதனால் மருந்து நிரூபணத்திற்காக தன்னை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் போது,  அவர் எந்த தொந்தரவிற்கும் இலக்காகக்  கூடாது ; அவருடைய  உடல் அவருக்கு தேவையான வகையில்  ஒரு நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்க வேண்டும், மேலும் அவர் தமது   உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்தவும் , விவரிக்கவும் போதுமான அளவு புத்திசாலித்தனம் கொண்டவராக இருக்க வேண்டும்.

மணிமொழி-§ 125

 § 125

 

During all the time the experiment lasts the diet must be strictly regulated; it should be as much as possible destitute of spices, of a purely nutritious and simple character, green vegetables-100 roots and all salads and herb soups (which, even when most carefully prepared, possess some disturbing medicinal qualities) should be avoided. The drinks are to be those usually partaken of, as little stimulating as possible-101

Foot Note-101:  Young green peas, green French beans ,boiled potatoes  and in all cases carrots are allowable, as the least medicinal vegetables.

 

Foot Note-102:  The subject of experiment must either be not in the habit of taking pure wine, brandy, coffee or tea, or he must have totally abstained for a considerable time previously from the use of these injurious beverages, some of which are stimulating, others medicinal.

 

மணிமொழி-§ 125

 

 

இந்த பரிசோதனை நீடிக்கும் எல்லா நேரங்களிலும் உணவு  முறையை  கண்டிப்பாக ஒழுங்குபடுத்த வேண்டும்; மற்றும் எந்த அளவிற்கு முடியுமோ  மசாலாப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும், முற்றிலும் சத்தான மற்றும் எளிமையான தன்மைகொண்ட , பச்சை காய்கறிகள் -100 , வேர்கள் மற்றும் அனைத்து பச்சை காய்கறிகள் , பழங்கள் ஆகியவற்றின் கலவைகள்  மற்றும் மூலிகை வடிசாறு  (அவை மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டாலும் கூட, சில தீங்கிழைக்கும்  மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன) தவிர்க்கப்பட வேண்டும்.மேலும் வழக்கமாக எடுத்துக் கொள்ளப்படும்  பானங்கள் , முடிந்தவரை குறைந்த   தூண்டுசக்தி உடையதாக இருக்க வேண்டும் -101 .

 

 

அடிக்குறிப்பு-100:

 

குறைந்த அளவு மருத்துவ குணங்களையுடைய  காய்கறிகளான , இளம் பச்சை பட்டாணி, பச்சை பிரஞ்சு பீன்ஸ், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கேரட் அனுமதிக்கப்படுகின்றன.

 

அடிக்குறிப்பு-101:

 

பரிசோதனைக்கு உட்படும் மனிதர்  தூய ஒயின், பிராந்தி, காபி அல்லது தேநீர் எடுக்கும் பழக்கத்தில் இருக்கக்கூடாது, அல்லது இந்த தீங்கு விளைவிக்கும் பானங்களைப் பயன்படுத்துவதிலிருந்து அவர் கணிசமான காலத்திற்கு முன்பே முற்றிலும் விலகியிருக்க வேண்டும், ஏனென்றால் அவற்றில் சில கிளர்ச்சியூட்டுகிற தன்மை உடையதாகவும்  மற்றவை மருத்துவ குணங்கள் கொண்டவைகளாகவும்  இருக்கும்

மணிமொழி-§ 124

 

§ 124

For these experiments every medicinal substance must be employed quite alone and perfectly pure, without the admixture of any foreign substance, and without taking anything else of a medicinal nature the same day, nor yet on the subsequent days, nor during all the time we wish to observe the effects of the medicine.

மணிமொழி-§ 124

 

இந்த பரிசோதனைகளுக்கு, ஒவ்வொரு மருத்துவப் பொருளும் மற்றும் எந்தவொரு அந்நிய  பொருளின் கலவை இல்லாமல் , அதே நாளில் எந்தவொரு  மருத்துவ இயல்புடைய வேறு எந்தப் பொருளையும்  எடுத்துக் கொள்ளாமல், அதே நாளிலோ  , தொடர்ந்து வரும் நாட்களிலோ ,  இந்த மருந்தின் விளைவுகளை நாம் ஆராய்வதற்கு எடுத்துக் கொள்ளவிரும்பும் காலங்களிலும்  தனியாகவும், முற்றிலும் தூய்மையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.