Monday 12 October 2015

ஆர்கனான் மணிமொழி-45


No! Two diseases, differing, it is true, in kind1 but very similar in their phenomena and effects and in the sufferings and symptoms they severally produce, invariably annihilate one another whenever they meet together in the organism; the stronger disease namely, annihilates the weaker, and that for this simple reason, because the stronger morbific power when it invades the system, by reason of its similarity of action involves precisely the same part of the organism that were previously affected by the weaker morbid irritation, which, consequently, can no longer act on these parts, but is extinguished2, or (in other words), the new similar but stronger morbific potency controls the feelings of the patient and hence the life principle on account of its peculiarity, can no longer feel the weaker similar which becomes extinguished - exists no longer - for it was never anything material, but a dynamic - spirit-like - (conceptual) affection. The life principle henceforth is affected only and this but temporarily by the new, similar but stronger morbific potency.

1 Vide, supra, § 26, note.
2 Just as the image of a lamp's flame is rapidly overpowered and effaced from our retina by the stronger sunbeam impinging on the eye.


இல்லை. இரண்டு நோய்களும் , உண்மையில், நோய்த்தன்மையிலே1 மாறுபட்டதாக இருந்தாலும் , புலன்களால் உணரத்தக்கவையும் மற்றும் நோய்பாதிப்பினால் ஏற்படும் விளைவுகளும் மற்றும் துன்பங்களும் மற்றும் அவைகள்  உருவாக்கும் கடுமையான குறிகளும் மிகவும் ஒத்ததன்மையில் இருந்தாலும் , இரண்டும் ஒரே உடலில் ஒன்றோடொன்று இணைந்து சந்திக்கும் போது , தவறாமல் ஒன்றை மற்றொன்று அழித்தொழித்து விடுகிறது. அதாவது அவ்விரண்டில் அதிக வலிமையான நோய் , பலவீனமான பழைய நோயைத் தவறாமல் அழித்தொழித்து விடுகிறது.  அதற்க்கான காரணம் மிக எளிமையானது. ஏனென்றால் வலிமை குறைந்த பழைய நோயுடன் ஒத்தசெயல்பாடு உள்ளதும் அதைவிட வலிமைமிக்கதாகவும் உள்ள புதியநோய் நோயாளியின் உடலில் எந்தந்த உறுப்புகளையும் , உறுப்பு மண்டலங்களையும் பாதித்திருந்ததோ அந்தந்த உறுப்புகளுக்குள்ளும்,   உறுப்பு மண்டலங்களுக்குள்ளும் புகுந்து தாக்குகிறது. அதன் பின் விளைவாக பலவீனமான பழைய நோய் அவ்விடங்களைத் துன்புறுத்த இயலாமல் துடைத்தழிக்கப்படுகிறது 2 . அல்லது ( வேறு வகையில் கூறுவதென்றால் )  ஒத்ததும், வலிமையானதுமான புதிய நோய், தன்னுடைய நோய்க்குறிகளை உருவாக்கும் ஆற்றலினால் நோயாளியின் உணர்வுகளைத் கட்டுப்படுத்திக் கொள்கிறது. அதன்பிறகு உயிர் முதலாற்றலையும் தன்னுடைய தனித்துவமான பண்புகளின் மூலம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.   அதனால்  ஒத்ததும் , பலவீனமானதும் , துடைத்தழிக்கப்பட்டதுமான அந்த பழைய நோயின் பாதிப்பு ஒருபோதும் பருப்பொருள் வடிவத்தில் இல்லாமல்  இயக்க ஆற்றலுடன் , ஆவி வடிவத்தில் ( கருத்துருவத்தில் ) இருந்துள்ளது. அதனால் தான், ஒத்ததும், வலிமையானதுமான புதிய நோயின் ஆற்றலினால் தற்காலிகமாக பாதிக்கக்கூடியவகையில் உயிர்முதலாற்றல் இருக்கிறது.

அடிக்குறிப்பு -1   : மணிமொழி 26 மூலம் விளக்கப்பட்டுள்ளது.


அடிக்குறிப்பு -2 

இது , சூரியனின் ஒளிக்கதிர் நம் கண்களின் மீது விரைவாக மோதித் தாக்குவதால் , ஒரு விளக்கினுடைய சுடரொளி வடிவம் விரைவாக மறைக்கப்பட்டு , அது நமது விழித்திரையில் இருந்து மறையச் செய்வதைப் போன்றதாகும்.   

Saturday 10 October 2015

துயரர் வரலாறு -நேட்ரம் மூரியாடிக்கம்


நான் கடவுளா?

அந்த பெண்ணிற்கு வயது 29. எனது நெருங்கிய உறவினரும் கூட. மிகவும் அமைதியான பெண். யாருடனும் அதிகம் பேசுவதில்லை. ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு பதக் மருந்துகாண் ஏட்டில் மண்டையை உடைத்து கொண்டிருந்தேன் . அப்பெண் என்னருகில் நிற்பதைப் பார்த்து என்னம்மா? என்று கேட்டேன். ஒரு நிமிடம் மௌனம். பின்னர் மெதுவாக வந்தது அந்த வார்த்தை ,அண்ணே! நான் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், எனக்கு மருந்து கொடுங்கள்!.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்   , அவர்களிடமிருந்து குறிகள் ஒற்றை வார்த்தையில் தான் வரும்.  பல சந்தர்ப்பங்களில் சரியான மருந்தை தேர்வு செய்வதற்கு திணறி விடுவதும் உண்டு.

அந்தப் பெண்ணிற்குத் (இரண்டாவது)  திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தன. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருந்தது. அவரிடமிருந்து கிடைத்த தகவல் இதுதான்; இரண்டாவது கணவன் சந்தோசமாக வைத்திருந்தாலும் அடி , உதை மற்றும் வசைகள் தான். எல்லாவற்றையும் மனதிற்குள் வைத்து புழுங்கும் சுபாவம். கணவனை எதிர்த்துப் பேசுவதில்லை. தனியாக வீட்டிற்குள் அழுது கொள்வதுண்டு.  எனக்கு சிந்ததிஸ் ரெபெர்டரியில் படித்த இந்த குறிமொழி தான் ஞாபகத்திற்கு வந்தது.

Children , beget and to have children ; desire to : nat-m, ox-ac, podo ( Synthesis 8.1 page 37)

அடுத்து , அப்பெண்; Taciturn ; Reserved.
மருந்து : நேட்ரம் மூர்-30*

பிறகு ஒரு மாதத்திற்கு இரண்டாவது சரியான மருந்து கொடுக்கப்பட்டது (SL ) . அடுத்த பத்து மாதங்களில் அந்தப்பெண்ணிற்கு பிறந்த அந்தப்பையன் இப்போது UKG படித்துக் கொண்டு வருகிறான். ஒருமுறை எனது இல்லவிழாவிற்கு வந்த பொழுது, அந்தச்சகோதரி அச்சிறுவனின் இரு கரங்களையும் பிடித்து வைத்து , உனக்கு கடவுள் இவர் தான் என்று என்னை வணங்க வைத்தது எனது வாழ்நாளில் மிகவும் நெகிழ வைத்த நிகழ்வு. ஆனால் நான் கடவுள் இல்லை . இது மாமேதை ஹானிமன் இவ்வுலகிற்கு கொடுத்துச் சென்றுள்ள ஹோமியோபதி  மருத்துவத்தினால் விளைந்த கொடை!.


* இந்த மாதியான தருணத்தில் 200 வது வீரியம் தவிர்க்கப்படவேண்டும். ஏனென்றால் அந்த வீரியம் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் என்று படித்ததாக ஞாபகம்.

Friday 9 October 2015

ஆர்கனான் மணிமொழி-44

§ 44


Similar diseases can neither (as is asserted of dissimilar disease in I) repel one another, nor (as has been shown of dissimilar disease in II) suspend on another, so that the old one shall return after the new one has run its course; and just as little can two similar disease (as has been demonstrated in III respecting dissimilar affections) exist beside each other in the same organism, or together form a double complex disease.



ஒத்ததன்மையுள்ள இரண்டு இயற்கை நோய்கள் ஒரே உடலில் சந்திக்கும் போது ஒன்று மற்றொன்றை பின்னால் தள்ளுவதோ (ஒத்ததன்மையில்லாத நோய்கள் பற்றிய பிரிவு I -மணிமொழி 36) மாறாக  தள்ளி வைப்பதோ (ஒத்ததன்மையில்லாத நோய்கள் பற்றிய பிரிவு II -மணிமொழி 38) கிடையாது. புதிய நோயின் ஆட்டம் முழுவீச்சில் ஆடி அடங்கியவுடன் பழைய நோயின் பாதிப்பு தலை தூக்குகிறது; மற்றும் அந்த இரண்டு ஓததன்மையுள்ள நோய்களும் (ஒத்ததன்மையில்லாத நோய்களின் பாதிப்பு பற்றிய கவனம் தேவை என்று விளக்கியிருந்த பிரிவு-III –மணிமொழி-40) சிறிது காலத்திற்கு ஒரே உடலில் ஒன்றோடொன்று விலகி இருந்து கொள்கிறது, அல்லது இரண்டும் சேர்ந்து இரட்டிப்பாவதோ , கலப்புநோயைத் தோற்றுவிப்பதோ இல்லை.

ஆர்கனான் மணிமொழி-43

§ 43


Totally different, however, is the result when two similar disease meet together in the organism, that is to say, when to the disease already present a stronger similar one is added. In such cases we see how a cure can be effected by the operations of nature, and we get a lesson as to how man ought to cure.


ஒத்ததன்மையுள்ள இரண்டு நோய்கள் ஒருவர் உடலில் இணைந்து சந்திக்கும்போது , அதாவது ஏற்கனவே உள்ள பழைய நோயை விட வலிமைவாய்ந்த புதிய நோயொன்று தோன்றும் போது ஏற்படும் விளைவு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.அத்தகைய நிலையில் இயற்கையின் இயங்குமுறையால்(இயக்கத்தால்) நோயை எவ்வாறு குணம் செய்கிறது என்பதைப் பார்ப்பதுடன், அதன் மூலம் நாமும்  எவ்வாறு மனிதர்களைக் குணப்படுத்தலாம் என்ற பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம்

Thursday 8 October 2015

ஆர்கனான் மணிமொழி-42


Nature herself permits, as has been stated, in some cases, the simultaneous occurrence of two (indeed, of three) natural disease in one and the same body. This complication, however, it must be remarked, happens only in the case of two dissimilar disease, which according to the eternal laws of nature do not remove, do not annihilate and cannot cure one another, but, as it seems, both (or all three) remain, as it were, separate in the organism, and each takes possession of the parts and systems peculiarly appropriate to it, which, on account of the want of resemblance of these maladies to each other, can very well happen without disparagement to the unity of life.


சில சமயங்களில் , ஒருவர் உடலில் இரண்டு இயற்கை நோய்களை ( உண்மையிலேயே  , மூன்று  ) ஒரே நேரத்தில் தோன்றுவதற்கு இயற்கை அன்னையே அனுமதிப்பதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தபோதிலும்கீழ்காணும் இந்தச் சிக்கல்களையும் , கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, இந்த இரண்டு இயற்கை நோய்களும் ஓததன்மையில்லாதவையாகவும் , என்றும் நிலைத்திருக்கிற விதிகளின்படி ஒன்றையொன்று நீக்க முடியாததாகவும் , முற்றிலும் அழித்தொழிக்க முடியாததாகவும், ஒன்றையொன்று குணமாக்க முடியாததாகவும் , உடலில் அவை இரண்டும் ( அல்லது மூன்று நோய்களும்) தனக்குரிய வசதியான உறுப்புகளையும் மற்றும் உறுப்பு மண்டலத்தையும்தமது பிடியில் வைத்துகொண்டு , ஒன்றோடொன்று பொருந்தாதவையாகவும் இருப்பதால் மட்டுமே உயிரியக்கத்தின் தன்னிறைவான வாழ்க்கைக்கு எந்த மதிப்புக் குறைவும் இல்லாமல் அந்தநோய்கள் அங்கே ஒன்றாக இருக்க முடிகிறது.  

Wednesday 7 October 2015

ஆர்கனான் மணிமொழி-41


Much more frequent than the natural diseases associating with and complicating one another in the same body are the morbid complication resulting from the art of the ordinary practitioner, which the inappropriate medical treatment (the allopathic method) is apt to produce by the long-continued employment of unsuitable drugs. To the natural disease, which it is proposed to cure, there are then added, by the constant repetition of the unsuitable medical agent, the new, often very tedious, morbid conditions corresponding to the nature of this agent; these gradually coalesce with and complicate the chronic malady which is dissimilar to them (which they were unable to cure by similarity of action, that is, homoeopathically), adding to the old disease a new, dissimilar, artificial malady of a chronic nature, and thus give the patient a double in place of a single disease, that is to say, render him much worse and more difficult to cure, often quite incurable. Many of the cases for which advice is asked in medical journals, as also the records of other cases in medical writings, attest the truth of this. Of a similar character are the frequent cases in which the venereal chancrous disease, complicated especially with psora or with the venereal chancrous disease, complicated especially with psora or with dyscrasia of condylomatous gonorrhoea, is not cured by long-continued or frequently repeated treatment with large doses of unsuitable mercurial preparations, but assumes its place in the organism beside the chronic mercurial affection1 that has been in the meantime gradually developed, and thus along with it often forms a hideous monster of complicated disease (under the general name of masked venereal disease), which then, when not quite incurable, can only be transformed into health with the greatest difficulty.

1 For mercury, besides the morbid symptoms which by virtue of similarity can cure the venereal disease homoeopathically, has among its effects many others unlike those of syphilis, for instance, swelling and ulceration of bones, which, if it be employed in large doses, causes new maladies and commit great ravages in the body, especially when complicated with psora, as is so frequently the case.

ஒரே உடம்பில் இயற்கையாக ஏற்படும் நோய்கள் இன்னொரு நோயுடன் இணைந்து சிக்கலைத் தருவதைக்காட்டிலும் , சாதாரண மருத்துவர்கள் தரும் பொருத்தமற்ற மருத்துவச் சிகிச்சையாலும் ( அலோபதி முறையில்) , அவர்கள் தரும் மருந்துகளை நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவதாலும் அங்கே நோயின் பாதிப்புகள் சிக்கலாகிவிடுகின்ற நிலையை அடிக்கடி காணமுடிகிறது, இயற்கை நோயைக் குணபடுத்தும் எண்ணத்துடன் ஒவ்வாத (அல்லது பொருந்தாத)  மருந்துகளை தொடர்ந்தும், திரும்பத் திரும்பவும் கொடுப்பதால் அம்மருந்துப் பொருள்களின் தன்மைக்கு இணங்க பழைய இயற்கை நோயுடன் , ஒரு புதிய, மனச்சோர்வூட்டுகின்ற வகையில் நீடிக்கிற நோய்த்தன்மைகள் கூடுதலாக உண்டாகுகின்றன. இந்த நோய்த்தன்மைகள் படிப்படியாக ஓததன்மையில்லாத நீண்டகால நோயுடன் ஒன்றிணைந்து கொண்டு (ஒத்ததன்மையுடைய ஹோமியோபதி மருத்துவ முறையினால் குனமாக்கப்படாதவரை) ஒத்ததன்மையில்லாததும், செயற்கையானதும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் இயல்புகளைக் கொண்டதுமான ஒரு புதிய நோயையும்  சேர்த்துக்கொண்டு , அந்த நோயாளிக்கு ஒரு நோயிற்குப் பதிலாக இரண்டு மடங்கு நோயைக் கொடுத்து , அதனால் அவருடைய உடல்நிலையை மேலும் மோசமடையச் செய்து அவரது நோயைக் குணமாக்குவதற்கு சிரமத்தைக் கொடுக்கிறது, அவ்வப்போது குணப்படுத்தவும் இயலாதவாறு ஆகி விடுகிறது. மருத்துவப் பத்திரிக்கைகளில் கேட்கப்படும் பல நோயாளிக்களுக்கான அறிவுரைகளும் , வெளியிடப்படும் பிற மருத்துவக்கட்டுரைகளும் இந்த உண்மையைத்தான் உறுதிப்படுத்துகின்றன . இதற்குச் சான்றாக , பால்வினை நோயைக் குணப்படுத்தும் பல நோய் வரலாறுகளில் , மேகநோயும் ( சிற்றின்பத்துக்குரிய கலவியினால் தோன்றுகின்ற ) , சொறி,சிரங்கு போன்ற (சோரா) தோல் நோய்களும் இணைந்து சிக்கலாகியோ , அல்லது மேகவெட்டை நோயினால் பிறப்புறுப்பைச் சுற்றி வளரும் துர்சதை வளர்ச்சி போன்ற நோயுடன் இணைந்த நிலையிலோ அந்த நோயாளிக்கு நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தும் , அடிக்கடியும்,திரும்பத் திரும்பவும் அதிக அளவில் கொடுக்கப்படும் ஒவ்வாத பாதரச மருந்துத்தயாரிப்புகளால் அந்நோய்கள் குனமாக்கப்படுவதில்லை.  ஆனால் அம்மருந்துகளால் அந்த நோய்கள் குணமடையாமல் நோயாளியின் உடலில் தங்கி தங்களுக்கு உரிய இடத்தைப் பிடித்துக் கொள்வதோடு படிப்படியாக அங்கே நீண்டகால பாதரசபாதிப்பு நோயை உருவாக்கி , அத்துடன் மறைந்திருந்து செயல்படும் கொடிய பூதகரமான பெரும் சிக்கலையுடைய ஒரு நோயாக மாறி விடுகிறது( மூடிமறைக்கப்பட்ட பால்வினைநோய் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது) . அதன் பிறகு அதைக் குணமாக்க முடியாத நிலை ஏற்பட்டு , மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகே குணப்படுத்த இயலும். 

அடிக்குறிப்பு -1 


பாதரசமானது , நோய்சார்ந்த குறிகளைத் தவிர, ஒத்ததன்மையோடு இருக்கிறது என்ற காரணத்தால் ஹோமியோபதி முறைப்படி மேககிரந்தி நோயினை குணமாக்குவதுடன், அது மேகப்புண்கள் ( சிபிலிஸ்) போல்  இல்லாத வேறு பல பாதிப்புகளையும் , உதாரணத்திற்கு எலும்புகளில் வீக்கத்தையும் மற்றும் புண்களையும் உருவாக்குவதுடன் , அதை அதிக அளவிலான மருந்தாகப் பயன்படுத்தும்போது, குறிப்பாக சோரா நச்சுத்தன்மையுடன் சேர்ந்து சிக்கலாகும்போது , வேறு சில நோய்களும் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பதோடு உடலில் பல அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

Monday 5 October 2015

துயரர் வரலாறு -சாமோமில்லா

துயரர் : ஒன்று.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகாலை 03.00 மணிக்கு அந்த கைபேசி அழைப்பு வந்தது . மறுமுனையில் வெளியூரில் பணிபுரியும் எனது நண்பர். குரலில் மிகவும் பதட்டமும்  கூடவே என்னை தொந்தரவு செய்து விட்ட வருத்தமும் தெரிந்தது. அவரது 8 மாத மகனுக்கு இரண்டு நாட்களாக நல்ல சுரம் . பல் முளைக்கும் பருவம் தான் . பால் கூட சாப்பிட முடியவில்லை , வாந்தி எடுத்து விடுகிறான்.  அவரது வீடு எனது வீட்டிலிருந்து கொஞ்ச தூரமும் கூட . என்னால் உடனடியாக  அந்த நேரத்தில் போகவும் முடியவில்லை. கவலைப்படாதீர்கள் ! காலையில் சென்று பார்த்து விடுகிறேன் என்றேன்.


காலை 09.00 மணி. குழந்தை கட்டிலில் படுத்திருந்தான். இலேசான காய்ச்சல் தான் இருந்தது. இரண்டு நாட்களாக சரியான  உணவு இல்லாதால் சோர்ந்து காணப்பட்டான். நான் தொட்டவுடன் , சத்தத்துடன் ஒரே அழுகை. அருகில் இருந்த அவனது பாட்டியை நோக்கித் தாவிவிட்டான். இப்படித் தான் தம்பி தூக்கி வைத்துக்கொண்டே இருக்கச் சொல்கிறான். வேறென்ன ! சாமோமில்லா  தான்!! . முப்பது வீரியத்தில்  மூன்று உருண்டைகளை அவனது நாக்கில் போட்டேன். மேலும் ஒரு மூன்று உருண்டைகளை மடித்து அவர்கள் கையில் கொடுத்து , முன்னேன்றம் தோன்றாவிடில் மாலை மூன்று மணிக்கு கொடுக்குமாறு கூறினேன்.  மாலை இரண்டு மணிக்கு நண்பர் மீண்டும்  அழைத்தார். சார்!  பையன் பரவாயில்லை ஆனால்,  அவனால்  இன்னும் சாப்பிட இயலவில்லை . இரண்டாவது தடவையும் கொடுக்கச் சொன்னேன்.


மாலை 08.30 மணிக்கு நண்பரின் வீட்டுத் தொலைபேசியை அழைத்தேன். சார்! தம்பி நல்லா இருக்கிறான்! காய்ச்சல் இல்லை. பாலும் சாப்பிட்டான் , வாந்தியுமில்லை!. நண்பரின் துணைவியாரின் மகிழ்ச்சியை அந்தக் குரலிலே தெரிந்து கொண்டேன்.


துயரர்: இரண்டு.
சாமோமில்லாவா நீ ?

அந்த மூன்று வயது குழந்தைக்கு  கடுமையான காய்ச்சல். அவருடைய அம்மா சிறந்த அலோபதி மருத்துவர். எனது நெருங்கிய நண்பரின் மகளும் கூட. ஹோமியோபதியை படிக்க விரும்பிய அவரை அலோபதி  மருத்துவம் படிக்க வைத்த குடுபத்தினர் மீது அவருக்கு இன்னும் வருத்தம் இருக்கிறது. ஆனால் இப்போது அதற்கு பழி வாங்கி விட்டார். ஆம்!  குழந்தைக்கு ஹோமியோபதி மருத்துவம் தான். 


சில நாட்களுக்கு முன்னர் சளிப்பிடித்திருந்த குழந்தையை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். சளித்தொல்லை முற்றி கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. குழந்தை அங்கே இரண்டு நாள் கஷ்டப்பட்டுவிட்டது . அவரிடம் ஹோமியோபதி மருந்துகள் கைவசம் இல்லாதாதால் , பாராசிட்டமால் கொடுத்து வந்திருக்கிறார். குழந்தைக்கு இளைப்பு ஏற்பட ஆரம்பிக்கவே கொடைக்கானலில் இருந்து அவசரமாக திரும்ப வேண்டிய நிலை.  காரில் இருந்து திரும்பும் போதே , மிகச்சிறந்த அந்த ஹோமியோபதி  மருத்துவரிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையின் குறிகளை கூறி விபரங்கள் கேட்டு உள்ளார். அவர் , குறிகளின் அடிப்படையில் "ஸ்ட்ராமோனியம்-30"   கொடுக்குமாறு தெரிவித்திருக்கிறார். அப்போது இரவு 09.30 மணி . அவர்கள் வீடு திரும்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதனால் எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது. நான் ஆறுதல் கூறி , நீங்கள் இறங்கியவுடன் உங்கள் கையில்   "ஸ்ட்ராமோனியம்-30"   ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தேன். இரவு 10.45 மணிக்கு"ஸ்ட்ராமோனியம்-30" கொடுக்கப்பட்டது.


அக்குழந்தைக்கு காலை 09.00 மணிவரை காய்ச்சல் குறையவில்லை. காய்ச்சல் 104 டிகிரி. அந்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பெல்லடோன்னா-30 முயற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார். என்னிடம் மறுபடியும் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , மருந்து சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த நேரத்திலும் காய்ச்சல் குறையலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றும், வேறு மருந்து தேவைபட்டால் என்னை அழையுங்கள் என்றும் நம்பிக்கை ஊட்டினேன்.  மிக்கியமான வேலைப்பளு  காரணமாக மூன்று நாள் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை . 


அந்த மூன்று நாட்களிலும் மற்ற இரண்டு ஹோமியோபதி மருத்துவர்களைப் பார்த்து கல்கேரியா கார்ப்-30 ஒரு மருத்துவரிடமும் , பிரையோனியா உட்பட மற்றும் இரண்டு மருந்துகள்??? (கொடுக்கப்படவில்லை) மற்றொருவரிடமும் முயற்சி செய்துள்ளார். இறுதியாக நம்பிக்கை இழந்து 11/09/2015 ந் தேதி மாலை குழந்தைகள் நல மருத்துவரை (அலோபதி) அணுகி  ஆலோசைக்காக அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது எனது ஞாபகம் வரவே என்னை அழைத்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். ஹோமியோபதி மருத்துவர்களைத் தேடித் தேடித் களைத்துப் போன அவரின் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். ஹோமியோபதியின் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பவில்லை. அவருக்கும் இருமல் வேறு இருந்தது அதனால் என் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன்!


குழந்தை இப்போதும் காய்ச்சலுடன் அவர் மடியில் தான் படுத்திருந்தது.. இரண்டு நிமிடத்தில் அவரது தோளில் ஏறிப்படுத்துகொண்டது, ஒரே சினுங்கல் . நான் தொட்டவுடன் கோபத்துடன் ஒரு பார்வை. அவ்வளவு  தான்.  கடந்த இரண்டு நாளும் இப்படிதான் அங்கிள் ! என் தோளை விட்டு இறங்கவில்லை! ஆகா! நீ சாமோமில்லாவா? இந்தா பிடி சாமோமில்லா -200 ;  நான்கு உருண்டைகள் அவர் வாயில்  போட்டேன். குழந்தை ஆசையாகச் சுவைத்தது. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சாமோமில்லா தான் மருந்து என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும்  என் ஆலோசனை அப்போது அங்கே தேவைப்படவில்லை என்பது தான் என் நிலைப்பாடு.

அடுத்த நாள் காலை 10.00 மணிக்கு குறுஞ்செய்தி வந்தது  .  அங்கிள்! குழந்தைக்கு காய்ச்சல் இல்லை. நலம். எனக்கு நிம்மதி, நன்றி.

இதில் எனக்கு கிடைத்த பட்டறிவு :

முதல் மருத்துவர்:1. Violent Fever, 2. Child clings to those near him. :- STARM-30
இரண்டாவது மருத்துவர்: Anemic, Pale;Aversion, Milk;Bed Wetting:- CALC-30

ஆனால் சரியானது!
Irritable
Cross and Uncivil
Children Want to be CARRIED

Rx.CHAM-200;


இது தான் அக்குழந்தையை நலப்படுத்தியது மருந்து. எனக்கு ஹோமியோதியின் சிறப்பை நிருபித்த மகிழ்ச்சி கிடைத்தது உண்மையே.

ஆர்கனான் மணிமொழி-40

§ 40

III. Or the new disease, after having long acted on the organism, at length joins the old one that is dissimilar to it, and forms with it a complex disease, so that each of them occupies a particular locality in the organism, namely, the organs peculiarly adapted for it, and, as it were, only the place specially belonging to it, while it leaves the rest to the other disease that is dissimilar to it. Thus a syphilitic patient may become psoric, and vice versa. As two disease dissimilar to each other, they cannot remove, cannot cure one another. At first the venereal symptoms are kept in abeyance and suspended when the psoric eruption begins to appear; in course of time, however (as the syphilis is at least as strong as the psora), the two join together 1 that is, each involves those parts of the organism only which are most adapted for it, and the patient is thereby rendered more diseased and more difficult to cure.

When two dissimilar acute infectious diseases meet, as, for example, smallpox and measles, the one usually suspends the other, as has been before observed; yet there have also been severe epidemics of this kind, where, in rare cases, two dissimilar acute diseases occurred simultaneously in one and the same body, and for a short time combined, as it were, with each other. During an epidemic, in which smallpox and measles were prevalent at the same time, among three hundred cases (in which these diseases avoided or suspended one another, and measles attacked patients twenty days after the smallpox broke out, the smallpox, however, from seventeen to eighteen days after the appearance of the measles, so that the first disease had previously completed its regular course) there was yet one single case in which P. Russell2 met with both these dissimilar diseases in one person at the same time. Rainey3 witnessed the simultaneous occurrence of smallpox and measles in two girls. J. Maurice4, in his whole practice, only observed two such cases. Similar cases are to be found in Ettmuller's 5 works, and in the writings of a few others. Zencker6 saw cow-pox run its regular course along with measles and along with purpura.

The cow-pox went on its course undisturbed during a mercurial treatment for syphilis, as Jenner saw.

Foot notes:
1 From careful experiments and cures of complex diseases of this kind, I am now firmly convinced that no real amalgamation of the two takes place, but that in such cases the one exists in the organism besides the other only, each in pairs that are adapted for it, and their cure will be completely effected by a judicious alternation of the best mercurial preparation, with the remedies specific for the psora, each given in the most suitable dose and form.

2 Vide Transactions of a Society for the Improvement of Med. and Chir. Knowledge, ii.
3 In Edinb. Med and Phys. Journ., 1805.
4 In Med. and Phys. Journ., 1805.
5 Opera, ii, p.i, cap. 10.
6 In hufeland's Journal, xvii.

அல்லது , அந்த புதிய நோய் ( அலோபதி மருந்தினால் உருவானது) , பல காலங்களுக்கு உடலில் வேலை செய்த பிறகு , ஒத்ததன்மையில்லாத பழைய நோயுடன் அதுவும் சேர்ந்து கொண்டு மேலும் நீடித்து கலப்புநோய் ஒன்றை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக பழைய , புதிய நோய்கள் இரண்டும் நோயாளியின் உடலில் தனது தகுதிக்கேற்ப , குறிப்பிட்ட அந்த நோயிற்குரிய தனிப்பட்ட உறுப்புகளை அடைந்து , அதை தன்வயப்படுத்திக் கொண்டு இதரப் பகுதிகளை மற்ற ஒத்ததன்மையில்லாத நோய்களுக்கு விட்டு வைக்கிறது.  இவ்வாறு ஒரு  சிபிலிஸ் (மேககிராந்தி) நோயுள்ளவருக்கு சோரா நச்சுத்தன்மை கொண்ட நோய் தாக்குவதும் , அதே போல் சோரா நச்சுத்தன்மை உள்ளவருக்கு சிபிலிஸ் நோய் தாக்குவதும் நிகழ்கிறது. அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்ததன்மையில்லாத வையாக இருப்பதால் ஒன்றை மற்றொன்று நீக்கமுடியாது, குணப்படுத்தவும் முடியாது. முதலில் சிபிலிஸ் நோயுள்ள ஒருவரின் உடலில் சோரா நச்சுத்தன்மை (சொறி,சிரங்கு) வெளிப்படத் துவங்கியபோது, சிபிலிஸ் குறிகள் தள்ளி வைக்கப்பட்டு, ஒதுக்கிவைக்கப்படுகிறது ; ஆனால் சில காலங்களுக்குப் பிறகு , எவ்வகையிலாயினும் (சிபிலிஸ் நோயும் ஏறக்குறைய சோரா நோயிற்கு இணையாக பலமடைகிறது) இரண்டு நோய்களும் ஒன்றாக இணைந்து விடுகின்றன. அதாவது ஒவ்வொன்றும் தனக்கு வசதியான இடத்தைப் பிடித்துக்கொண்டு , தனித்தனியே உடலில் குடியிருந்து கொள்கிறது. அதனால் அந்த நோயாளிக்கு நோயின் அளவு அதிகமாகிறது மற்றும் குணமாக்குவது மிகவும் சிரமமாகி விடுகிறது. 


திடீர் வகை தொற்று நோய்களில் ஒத்ததன்மையில்லாத இரண்டு நோய்கள் சந்திக்கும் போது, உதாரணத்திற்கு பெரியம்மையும் , தட்டம்மையும்  ( சின்னம்மை)  ஒரே நேரத்தில் சந்திக்கும்போது ஒன்றை மற்றொன்று அடக்கிச் செயலற்றதாக செய்து விடுகிறது என்று முன்பே கவனித்துக் கூறியிருக்கிறேன். ஆயினும், அவை கடுமையாகவும் , பெருவாரியாகவும் தோன்றும் காலங்களில் ஒன்றையொன்று  அடக்குவதுபோய் , மிகவும் அபூர்வமாகவே , ஓத்ததன்மையில்லாத அவ்விரண்டு நோய்களும் ஒரே நேரத்தில் தோன்றி குறுகிய காலத்திற்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று  ஒருங்கிணைந்து ( கலப்பு நோயாக) செயலாற்றுகிறது. பெருவாரிநோய் ஏற்பட்ட காலத்தில் பெரியம்மையும் , தட்டம்மையும் ஒரே நேரத்தில் தோன்றியபோது , அவற்றால் பாதிக்கப்பட்ட முன்னூறு நோயாளிகளில் ஒருவர் மட்டுமே ஒத்ததன்மையில்லாத இவ்விரு நோய்களாலும் பாதிக்கப்பட்டார். (இந்த இரண்டு நோய்களும் ஒன்றேயொன்று அடக்குவதும் , தள்ளிவைப்பதுமாக காணப்பட்டன. மற்றும் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை இருபது நாட்கள் கழிந்த பின்னரே தட்டம்மை தாக்கியது. ஆயினும் தட்டம்மையால் தாக்கப்பட்டவரை அந்நோய் தாக்கி வெளியேறிய பிறகு அதாவது  பதினேழு முதல் பதினெட்டு நாட்களுக்குப் பிறகே பெரியம்மை தாக்கியது). ஒத்ததன்மையில்லாத இந்த இரண்டு நோய்களும் ஒரே நேரத்தில் தாக்கிய ஒரேயொரு நோயாளியின் வரலாற்றை மருத்துவர்.P.இரசல் கண்டுள்ளார். அதேபோல் மருத்துவர்.ரெயினி என்பவர் , பெரியம்மையும் , தட்டம்மையும் சேர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளைத் தாக்கியதை கண்டுள்ளார். மருத்துவர்.J.மௌரிஸ் தமது முழுமையான மருத்துவப்பயிற்சி காலங்கள் முழுவதிலும் இரண்டு நோயாளிகளிடம் மட்டுமே இவ்விரு நோய்களின் பாதிப்பு இருந்ததை கவனித்துள்ளார். இத்தகைய மருத்துவக்குறிப்புகளை மருத்துவர்.எட்டிமில்லரின் ஐந்து நூல்களிலும் மற்றும் சிலரின் எழுத்துகளிலும் காணமுடிகிறது.

கோமாரிநோய் ( அல்லது மாட்டம்மை ) தாக்கியிருந்த காலம் முழுவதும் தட்டம்மையும், தோலின் மேல் ஊதா நிறப்புள்ளிகள் காணப்படும் நோயுடனும் ஒருங்கே காணப்பட்டதை மருத்துவர்.செனேக்கர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சிபிலிஸ் நோய்த்தாக்குதலின் போது பாதரச மருத்துவச்சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு கோமாரிநோய் எவ்வித தடையிமின்றி ஆடி முடிந்து வெளியேறியதை மருத்துவர்.ஜென்னர் கண்டுள்ளார். 


அடிக்குறிப்பு -1 

மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளாலும் , மற்றும் கலப்பு நோய்களின் குணமாக்குதல் மூலமாகவும் , அவ்விரண்டு நோய்களும் உண்மையாகவே இணைந்து கொள்வதில்லை என்றும், அந்த நோய் வரலாறுகளில் அவை இரண்டும் மனிதஉடலில் தமக்கு ஏற்புடைய உடற்பகுதியில் வேறு வேறாகத் தங்கிக் கொள்கின்றன என்றும் நான் (ஹானிமன்) இப்பொழுது உறுதிபடத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கூர்ந்த மதி நுட்பத்துடன் மிகக் கவனத்துடன் தயாரிக்கப்பட்ட பாதரச மருந்தையும் , சோரா நோயிற்கு ( சொறி,சிரங்கு)  திட்டவட்டமாகப் பொருந்தும் மருந்தையும் மிகப் பொருத்தமான மருந்தளவிலும், வடிவத்திலும் கொடுப்பதால் அவை முழுமையாகக் குணமடைகின்றன. 

ஆர்கனான் மணிமொழி-39

§ 39

Now the adherents of the ordinary school of medicine saw all this for so many centuries; they saw that Nature herself cannot cure any disease by the accession of another, be it ever so strong, if the new disease be dissimilar to that already present in the body. What shall we think of them, that they nevertheless went on treating chronic disease with allopathic remedies, namely, with medicines and prescriptions capable of producing God knows what morbid state - almost invariably, however, one dissimilar to the disease to be cured? And even though physicians did not hitherto observe nature attentively, the miserable results of their treatment should have taught them that they were pursuing an inappropriate, a false path. Did they not perceive when they employed, as was their custom, and aggressive allopathic treatment in a chronic disease, that thereby they only created an artificial disease dissimilar to the original one, which, as long as it was kept up, merely held in abeyance, merely suppressed, merely suspended the original disease, which latter, however, always returned, and must return, as soon as the diminished strength of the patient no longer admitted of a continuance of the allopathic attacks on the life? Thus the itch exanthema certainly disappears very soon from the skin under the employment of violent purgatives, frequently repeated; but when the patient can no longer stand the factitious (dissimilar) disease of the bowels, and can take no more purgatives, then either the cutaneous eruption breaks out as before, or the internal psora displays itself in some bad symptom, and the patient, in addition to his undiminished original disease, has to endure the misery of a painful ruined digestion and impaired strength to boot. So, also, when the ordinary physicians keep up artificial ulcerations of the skin and issues on the exterior of the body, with the view of thereby eradicating a chronic disease, they can NEVER cure them by that means, as such artificial cutaneous ulcers are quite alien and allopathic to the internal affection; but inasmuch as the irritation produced by several tissues is at least sometimes a stronger (dissimilar) disease than the indwelling malady, the latter is thereby sometimes silenced and suspended for a week or two. But it is only suspended, and that for a very short time, while the patient's powers are gradually worn out. Epilepsy, suppressed for many years by means of issues, invariably recurred, and in an aggravated form, when they were allowed to heal up, as Pechlin1 and others testify. But purgatives for itch, and issues for epilepsy, cannot be more heterogeneous, more dissimilar deranging agents - cannot be more allopathic, more exhausting modes of treatment - than are the customary prescriptions, composed of unknown ingredients, used in ordinary practice for the other nameless, innumerable forms of disease. These likewise do nothing but debilitate, and only suppress or suspend the malady for a short time without being able to cure it, and when used for a long time always add a new morbid state to the old disease.


1 Obs. phys. med., lib. ii, obs, 30.




இப்போதும் , இந்த விசயங்கள் தெரிந்தும் பல நூற்றாண்டுகளாக அலோபதி முறையின் ஆதரவாளராக இருந்து கொண்டு வருகிறார்கள். மேலும் ஏற்கனவே உடலில் தங்கியுள்ள ஒரு இயற்கையான நோயை புதியதாகத் தோன்றும் மாறுபட்ட அல்லது ஒத்ததன்மையில்லாத மற்றொரு புதிய நோய் அது எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் இயற்கையான வகையில் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இருந்த போதிலும் நீடித்த வகை நோய்களுக்கு அலோபதி மருந்துகளையே எழுதிக் கொடுத்து அம்மருந்துகளைக் கொண்டே மருத்துவமும் செய்து வருகின்றனர். அம்மருந்துகள்  , அங்கு குணப்படுத்த வேண்டிய நோயிற்கு ஒத்ததன்மை இல்லாதவையாகவும் எந்தவிதமான செயற்கை நோயை உண்டாக்க முடியும்  என்பதும் அந்த இயற்கை அன்னைக்குத் தான் தெரியும். இத்தகைய மருத்துவர்களைப் பற்றி நாம் வேறென்ன நினைப்பது? அவர்களால் இயற்கையாக நடைபெறும் காரியங்களை கூர்ந்து கவனிக்க முடியாமல் போனாலும், அவர்களது மருத்துவத்தினால் உண்டான கொடிய விளைவுகளைப் பார்த்த பிறகாவது , தாங்கள் சற்றும் பொருத்தமில்லாதமுறையைப் பின்பற்றித் தவறான வழியில் செல்கிறோம் என்பதை அலோபதி மருத்துவர்கள் கற்றுணர்ந்திருக்க வேண்டுமல்லவா?

நீடித்த வகை நோயிற்கு நெருக்கடி தருகிற அலோபதி மருந்தைக்கொண்டு மருத்துவம் செய்யும்பொழுது முதலாவதாக உள்ள  இயற்கை நோயிற்கு , மாறுபட்ட  அல்லது ஓததன்மையில்லாத செயற்கை நோயொன்று உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் , அம்மருந்து கொடுக்கப்படும் காலங்களில் முதலில் தோன்றிய இயற்கையான நோய் உள்ளமுக்கப்பட்டும் , தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டும் இருக்கிறது என்பதையும் , மருந்தின் கொடுமையினால் நோயாளியின் உடல்வலிமை குறைந்து இனி மருந்து கொடுக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டுஅதை  நிறுத்திய பின்பு  உள்ளமுக்கப்பட்ட இயற்கைநோய் திரும்பி வருகிறது என்பதையும் , கட்டாயம் வரும் என்பதையும் அலோபதி மருத்துவர்களால் அறிய முடியவில்லையா?

இவ்வாறு, அரிப்புடன் கூடிய தோல் எழுச்சிநோய் ( சின்னம்மை போன்ற) இருக்கும் போது கடுமையான பேதி மருந்துகளை ( குடல் இளக்கமருந்துகள்) அடிக்கடி திரும்பத் திரும்ப கொடுத்து வரும் பொழுத மிக விரைவில் அந்த தோல் எழுச்சிநோய்  தோல் பகுதியிலிருந்து  மறைந்து விடுகின்றன. ஆனால் , இயற்கைக்கு மாறான ஓததன்மையில்லாத மருந்துகளினால் குடல்களின் நோயை இனி தாங்க முடியாது என்ற நிலை உருவாகி  , இனி பேதி மருந்துகளை  உட்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்படும் பொழுது நோயாளியிடம் முன்பு தோன்றிய தோல் எழுச்சிநோய் முன்பிருந்தது போல் திரும்பவும் ஏற்படும் அல்லது உடலினுள்ளே இருக்கும் சோரா நச்சுத்தன்மை சில மோசமான குறிகளை தோற்றுவிக்கும்.

நீடித்தவகை நோயை வேருடன் அழித்தொழித்து குணமாக்கும் நோக்கத்துடன் சாதாரணமான (அலோபதி ) மருத்துவர்கள் உடலின் வெளிப்புறத்தில் ( தோலில்) செயற்கையான புண்களையும் , புறக்கசிவுகளையும் உண்டாக்கி அவற்றைத் தக்கவைத்துக் கொண்டு வருவதால் அந்த நீடித்த நோயை குணமாக்கவேண்டும் என்ற நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. எப்படியென்றால் உடலினுள்ளே இருக்கும் நோயின் பாதிப்புகளுக்கு இது புறம்பாகவும் மற்றும்  ஒத்ததன்மையில்லாததாகவும் , பொருந்தாதவாகவும் ( அலோபதி மருத்துவம் ) இருப்பதால் அவர்களால் ஒருபோதும் குணப்படுத்த முடியாது. ஆனால் உடலின் புறத்தே தோன்றியுள்ள உறுத்தல்கள் (அல்லது நமைச்சல்) , உடலினுள்ளே காணும் நோயைக் காட்டிலும் ஒத்ததன்மை இல்லாதவையாகவும் , சில சமயத்தில் வலிமையானவையாகவும் இருந்தால் உடலினுள்ளே  இருக்கும் அந்தநோயை அப்போதைக்கு செயலற்றநிலை ஏற்படுத்தப்பட்டும், ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போடவுமே இது உதவும். இவ்வாறு நோயை மிகக்குறைந்த காலத்திற்குத் தள்ளிப்போடச் செய்யும்போது நோயாளியின் ஆற்றல் அல்லது உடல்வலிமை படிப்படியாக சோர்வடைந்து ( நைவுற்று ) விடுகிறது.   உடலில் புறக்கசிவுகளை ஏற்படுத்துவதின் மூலம் பல ஆண்டுகளுக்கு உள்ளமுக்கப்பட்டிருந்த வலிப்புநோய் , புறக்கசிவை நிறுத்திப் புண்களை ஆற்றியபோது வலிப்புநோயின் தாக்கம் முன்பைவிட அதிகரித்த நிலையில் தவறாமல் வெளிப்பட்டதை மரு. பெச்லின் ( Pechlin) என்பவரும் மற்றும் சிலரும் உறுதிப்படுத்தி உள்ளனர். 



பெயரறியப்படாத , எண்ணிக்கையிலடங்காத பல நோய்களுக்கு கொடுக்கப்படுகின்ற அறிந்துகொள்ளமுடியாத பல ஆக்கக்கூறுகளையுடைய கொண்டதும் , பொதுவான மருத்துவப்பயிற்சியில் பயன்படுத்தப்படும் வழக்கமான மருத்துவக்குறிப்புகளைக்  காட்டிலும்- சொறி சிரங்குகளை அடக்க பேதி மருந்துகளை பயன்படுத்துவதும் , வலிப்பு நோயிற்கு புறக்கசிவு மருந்துகளைக் கொடுப்பதும்  இயற்கைக்கு எதிரானதாக இருக்கின்றன.இத்தகைய மருத்துவம், மேலும் பல்வேறான முரண்கூறுகொண்ட மருந்துகளையும், மேலும் ஒத்ததன்மையில்லாத வகையில் சீர்கேட்டை எற்படுத்துவதுமாகவும் , மேலும் பொருந்தாத (அலோபதி) முறையினாலும் நோயாளிக்கு சோர்வைத்தருகின்ற வகையில் இருப்பதால் நோயாளியை குணப்படுத்தமாட்டாது. இப்படிப்பட்ட அலோபதி மருத்துவமானது , நோயாளியை சோர்வுறச் செய்கிறதேயன்றி வேறெந்த நன்மையையும் செய்யாது. மற்றும் நோயைக் குணமாக்க இயலாமல் அதை உள்ளமுக்கியோ அல்லது குறைந்த காலத்திற்கு அடக்கி, தள்ளிவைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய மருத்துவத்தை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது , பழைய நோயுடன் ஒரு புதிய நோய் நிலையும் சேர்ந்து கொள்கிறது.