Sunday 24 February 2013

முதுகுவலியுடன் நரம்பு மண்டலம் பாதிப்பு


முதுகுவலியுடன் நரம்பு மண்டலம் பாதிப்பு
ஆங்கிலம் : மருத்துவர். அமர் டி  நிகாம் ( Dr. AMAR D NIGAM )

மும்பாய் நகரைச் சேர்ந்த 55 வயதுள்ள ஒரு பழ வியாபாரி , 1998 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் நரம்பு மண்டலம் பாதிப்பிற்கு உள்ளாகி முதுகெலும்பு வேக்காட்டுடன் ( Pott’s spine with neuropathy) மிக மோசமான நிலையில் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார்.

என்னைப்பார்க்க வருமுன் மும்பையைச் சேர்ந்த ஒரு முடநீக்கு அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் மருத்துவம் பார்த்து , அவருடன் சண்டை பிடித்து விட்டு வந்திருந்தார். அந்த மருத்துவர் அவருக்கு தவறான சிகிச்சை செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் , சந்தர்ப்பவசமாக ஆங்கில மருந்துகள் ( Streptomycin) அந்தத் துயறருக்கு  எளிதில் தீங்கு தருவதாக   இருந்திருக்கிறது.

அவர் கடுமையான முதுகு வலியினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார் (Back ache). அத்துடன் அவருடைய கெண்டைக்கால் மற்றும் முன்னங்கைகளில் உள்ள சதைகள் கடுமையாக இளைத்து இருந்தன.  நடக்க முடியாமல், நிற்க முடியாமல் முழுவதுமாக செயலிழந்தவராக இருந்தார்.  அவர் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டி வந்தது.

அந்தத் துயரர் நேர்த்தியாக ஆடை அணிந்திருந்ததோடு  மட்டுமல்லாமல் காந்திக் குல்லாயும் அணிந்திருந்தார். சத்தமான குரலில் பேசி தான் ஒரு பிரபலமான அரசியல்வாதி எனக் காட்டிக்கொண்டார். அவருடைய மனைவிடம் கரடுமுரடாக பேசிய விதத்திலிருந்து அவருக்கும் , அவருடைய மனைவிக்குமிடையில் உறவு பாதித்திருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. 

துயரர் குறிப்பிட்ட தொல்லைகள்:

Ø  இடுப்புப் பகுதியில் வலி ; தைக்கும் வலி  ( கூர்மழுங்கிய பொருளில்  இடித்துக் கொண்டதால்  காயம் )
Ø  உட்கார்ந்தால் வலி அதிகமாதல் ( < Sitting)
Ø  சூடான ஒத்தடத்தால் வலிகள் குறைதல் ( > Hot application)
Ø  கால்களில் வலிகள் 
Ø  கால்களில் பலவீனம் . அத்துடன் மரத்துப்போதல் மற்றும் கூறிய கூச்ச உணர்வு.
Ø  உடல் வலியுடன் காய்ச்சல் .
Ø  2-3 ஆண்டுகளாக வயிற்றில் அதிக அமிலத்தன்மை.
Ø  அடிவயிற்றில் உப்பிசம் ஏற்பட்டு வயிற்றுப்  காந்தலான  உணர்வு.
Ø  நெஞ்செறிச்சல்++
Ø  குமட்டல்++
Ø  மற்றும் வாந்தி, இதனால் தொல்லைகள் குறைதல் .
Ø  எப்பொழுதாவது தலைவலி அத்துடன் தலைசுற்றல் .
Ø  எட்டு வயதில் அவருக்கு  டைபாய்டு சுரம் வந்திருந்தது.

தலைமைக் குறிகள் :(GENERALS)

விருப்பம்: பச்சைக் காய்கறிகள், பொரித்த (வறுத்த) உணவுகள்  
வெறுப்பு : தயிர், மீன் 
வியர்வை : நெற்றியில் அளவுக்கு அதிகமான வியர்வை 
சிறுநீர் :  எரிச்சலுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற கோளாறு ; மஞ்சள் நிறம் 
மலம் : மலம் கழிப்பதில் திருப்தியின்மை ; பச்சைநிறம் ; பாதி மிருதுவாக இருக்கும் ;
                    தினமும்  2-3 தடவை 
தூக்கம் : இரவு  11 முதல் காலை 4.00 மணிவரை  
கனவுகள் :  விலங்குகள்; செம்மறிஆடும்  வெள்ளாடும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுதல் ;
                          மனிதர்கள் தங்களுக்குள்  கம்புகலோடும் , இரும்புக் கம்பிகளைக் கொண்டும்
                         சண்டைபோடுதல் 

 துயரருடன் நடைபெற்ற உரையாடல்கள் :

கேள்வி: உங்கள் சுபாவம் எப்படி?

துயரர்:  நான் சிறுவயதில் இருந்து எரிச்சலான சுபாவம்  படைத்தவன் . எனக்கு பொய் பேசுவது பிடிக்காது. அதேபோல் என்னைப் பற்றி பிறர் பேசுவதும் பிடிக்காது. மும்பையில் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இதற்கு முன்னால் புனாவில் என் சகோதரனுடன் வாழ்ந்து வந்தேன். எனது சகோதரன் பெரிய வியாபாரி. நான் வியாபாரத்தில் அவனுக்கு உதவிகரமாக இருந்து வந்தேன் ஆனால் வேலைக்காரர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் , அதனால் எங்களுக்கு ரூ 40000 -50000 இழப்பு ஏற்பட்டது . அதனால் எனது சகோதரன் அதிகமாக வியாபாரம் செய்வதைக் குறைத்துக் கொண்டான். பிறகு எங்களது வருமானம் குறைந்தது அதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதால் நான் அவனைப் பிரிந்து மும்பை வந்தேன்.

மும்பையில் , ஏற்கனவே அங்கீகாரம் பெற்று பழ வியாபாரம் செய்து வந்த எனது நண்பனின் உதவியால் நானும் பழ வியாபாரத்தில் ஈடுபட்டேன், வியாபாரமும் நன்றாக வளர்ந்தது. பின்னர் எனது மனைவியும் நான்கு குழந்தைகளும் வந்து என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் ஒரு குடிசையில் 5-6 ஆண்டுகள் வாழ்ந்தோம். பிறகு , ஒரு அரசியல்வாதியின் தயவால் சிறிய இடம் கிடைத்தது இருந்தாலும் அரசு அதிகாரிகள் மழைக்காலத்தில் வந்து அதை இடித்துவிட்டுப் போய்விடுவார்கள். இப்பொழுதும் எங்களுக்கு நிரந்தரமான ஒரு வீடு இல்லை.  மிகக் கஷ்டத்தில் வாழ்ந்தாலும் சிரமப்பட்டு சேமித்து சிறியதாக வீடு கட்டினேன். பிறகு அதை எனது மகளின் திருமணத்திற்க்காக விற்க வேண்டியதாகிவிட்டது.பின்னர் எனது நண்பனின் உதவியால் இன்னொரு வீடு வாங்கினேன் அத்துடன் சிறிய வடைக்கடை துவங்கினேன் . இப்பொழுது வியாபாரம் நன்றாக இருக்கிறது.

கடந்த இருபது வருடங்களாக சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறேன்.அதனால் எனக்கு நிறைய எதிரிகள் உருவாகிவிட்டார்கள். அவர்கள் எனக்கு தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் . எனது வீட்டையும் வியாபாரத்தையும் கெடுக்க அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் ஏறத்தாழ ரூ.3 லட்சம் இழந்துவிட்டேன்.  இது சம்பந்தமாக காவல் நிலையத்திலும் ஏன் காவல் துறை ஆணையிரிடமும் புகார் செய்துள்ளேன்.

கேள்வி: என்ன மாதிரி சமூகசேவைகள் செய்கிறீர்கள்?
துயரர்: எந்த ஒரு அப்பாவியாவது தண்டிக்கப்பட்டால் அவர்களுக்காகவும் ,அவர்களது உரிமைக்காகவும் போராடுவேன். மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்காகப் போராடுவேன் ( அகிம்சை முறையில்). என்னிடம் 25 உதவியாளர்கள் இருக்கிறார்கள்.

துயரின் உறவினர்: இவர் வீட்டில் இருப்பதில்லை , எப்பொழுதும் வெளியில் தான். அவரைப் புகழ்ந்தால் அதை விரும்புவார்.

கேள்வி: இந்த வேலைகளை ஏன் விரும்புகிறீர்கள்?
துயரர்: சமுகத்தில் உள்ள ஒவ்வொருவரும் என்னை மதிக்கிறார்கள்.

கேள்வி:  நீங்கள் மருந்து எடுத்துக்கொண்ட பொழுது ஏற்பட்ட விளைவினால் எப்படி நடந்து கொண்டீர்கள்?
துயரர்:  மருத்துவரிடம் சென்று இதுபற்றி கேட்குமாறு  எனது உறவினர்களிடம் நான் கூறினேன். எனது முதுகு தண்டுவடத்தில் எலும்புருக்கிநோய் இல்லையென்பது எனக்குத்தெரியும். அவர்கள் தவறான மருந்தினை  கொடுத்துவிட்டார்கள் ஆகையால் எனக்கு கோபம் வந்தது. அவர்கள் என்னை பரிசோதித்து இருக்கவேண்டும். என்னுடைய ஒளிப்படத்தைப் பார்த்ததும் மருந்து கொடுத்தார்கள் அதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது.

கேள்வி: வேறு ஏதாவது  சொல்ல வேண்டியது இருக்கிறதா?
துயரர்:   என்னுடைய மனைவி அதிக சிற்றின்ப ஆசை கொண்டவள். அவள், எங்களது பக்கத்துக்கு வீட்டுக்காரனுடன் காம உறவு வைத்திருக்கிறாள் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. பொதுவாக, நான் சந்தேகக்குணம் கொண்டவன் இல்லை , அதனால் அவளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என விரும்பினேன்.  அதனால் எனது வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தேன். சில சமயம் மாறுவேடம் அணிந்து   மறைந்து கவனித்து வந்ததால் , ஒரு நாள் நேரிடையாக பிடித்து விட்டேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  

ஒட்டுமொத்தக்குறிகள்  (TOTALITY):

குளிர்ச்சியான உடல்வாகு (CHILLY PATIENT)
ஆங்கில மருந்தினால்  புறத் தூண்டுதலுக்கு உட்படுதல் (SENSITIVE TO ALLOPATHIC MEDICINES)
சுலபத்தில் திருப்தி அடையாதவர் (FASTIDIOUS)
அநீதியை பொறுத்துக் கொள்ளாதவர் ( INJUSTICE CANNOT SUPPORT)
திட்டுபவர் (ABUSIVE)
எதிர்த்துப் பேசுவதை பொறுத்துக் கொள்ளாதவர் ( INDOLERANT ABOUT CONTRADICTION)
பழிவாங்கும் குணம் படைத்தவர் ( REVENGEFUL)
வியாபாரம் பற்றிய கவலைகள் ( WORRIED ABOUT BUSINESS)
அதிகம் பேசுபவர் ( LOQUACIOUS)
மற்றவர்களுடன் சேர்ந்திருக்க விருப்பம் ( DESIRES COMPANY)
இரக்ககுணம் (SYMPATHETIC)
மலம் கழிப்பதில் திருப்தியின்மை/ பச்சை நிறத்தில் மலம் (UNSATISFATORY STOOL/ STOOL GREEN)
சூட்டினால் தொல்லைகள் குறைதல் (WARM >)
காற்று வெளியேறுவதால்  தொல்லைகள் குறைதல் (FLATUS PASSING >)
இடுப்பு பகுதியில் வலி உட்காரும் போது அதிகரித்தல் ( PAIN LUMBAR REGION < SITTING WHILE)
கால்கள் (உணர்ச்சியற்ற ) மரத்துபோதல் ( NUMBNESS LEGS)
பொரித்த(வறுத்த) உணவில் விருப்பம் ( DESIRES FRIED FOOD)

விளக்கம்:

இந்தத் துயரர் சுலபத்தில் திருப்தியடையாதவராக ( FASTIDIOUS) இருந்தார்.  மேலும் அவர் எளிதாக சண்டைபிடிக்கும் குணம் படைத்தவராக ( QUARRELSOME) இருப்பதைக் கவனித்தேன். அவருடைய மனைவியுடன் இணக்கமான உறவு  இருப்பதாக தெரியவில்லை.  அவர் நன்றாக பேசக்கூடியவராக (GOOD SPEAKER) இருந்தார் அத்துடன் அவருடைய பேச்சின் நம்பகத்தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் அவரது செயலில் தற்காப்பு (DEFENSIVE) இருந்தது.  இந்தத் துயரர் என்னுடன் உரையாடிய பிறகு, அவர் ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளராக இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் சில அரசியல் அமைப்புகளிலும் அவர் வேலை செய்துள்ளார்.

அவர் சமூகத்தில் நிலவும் அநீதிகளை பொறுத்துக் கொள்ளாதவராகவும் , சமூகத்திற்கு நல்லது செய்ய விருப்பம் உள்ளவராக இருந்தார். அத்துடன்  சுபாவத்தில் எச்சரிக்கை உணர்வு (CAUTIOUS) உள்ளவராகவும் , வலிய சண்டைபோடும் ( AGGRESSIVE) குணம் படைத்தவராகவும், எளிதில் குறை காணுபவராகவும் ( FAULT FINDER) மற்றும் சந்தேகக்குணம் ( SUSPICIOUS) படைத்தவராகவும் இருந்தார். மேலும் அவர் ஆங்கில ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளும்போது  மிகவும் கூருணர்ச்சி கொண்டவராக இருந்தார். என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது இடைவிடாமல் தமது மனைவியைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டேயிருந்தார். மேலே குறிப்பிட்ட  ஒட்டுமொத்தக் குறிகளையும் கருத்தில் கொண்டு  அந்த துயரருக்கு நக்ஸ்வாமிக்கா மருந்து கொடுக்க முடிவு செய்தேன்.

மருந்துத் தேர்வு:   நக்ஸ்வாமிக்கா-30  - ஒரு முறை மட்டும்.

மருந்திற்குப் பிறகு விளைவு (REACTION ):

மருந்து கொடுத்த மூன்றாம் நாள் அவருடைய தொல்லைகள் சிறிது   குறைந்து முன்னேற்றம் தெரிந்தது. கால்களில் இருந்த கூச்ச உணர்ச்சி படிப்படியாக குறைந்தது. ஐந்தாவது நாள் , அவரது கால்களில் பலம் ஏற்பட்டு தெம்பாக இருப்பதாக கூறினார்.  நன்றாகத் தூங்க ஆரம்பித்தார். அத்துடன் அவருக்கு காய்ச்சலும் ஏற்படவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய சாப்பாடு கூடியது, எடையும் கூட ஆரம்பித்தது.

ஆறாவது நாள், அவருடைய பக்கத்தில் இருந்த மற்றொரு துயரர் தானாக சத்தமிட்டு என்னை அழைத்தார். ஓடிப்போய் பார்த்தேன்!  அங்கே எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது , ஆம்! இந்தத்துயரர், அவரைப்பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தார்.  அவருடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மனம் நிறைந்த சந்தோசத்தில் கண்ணீரை காற்றில் அலைகளாக எனக்கு பரிசளித்து விட்டுச் சென்றார். 

மருந்துகளில் வேறுபாடு:

 மருந்துத் தேர்வின் போது ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்தும் நக்ஸ்வாமிகா மருந்திற்கு அருகில் வந்தது. ஆனால் ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்தில் குறைகாணும் சுபாவம் அதிகமாகவும் (FASTIDIOUS) , மன அமைதியின்மையும் ( RESTLESS)  இருக்கும். ஆனால், இந்தத் துயரர் மந்தத்தன்மை( SLUGGISH)  உடையவராக இருந்தார், அதனால் நக்ஸ்வாமிகா கொடுக்க முடிவு செய்தேன்.

(இக்கட்டுரை "உங்கள் ஹோமியோ தோழன் " Feburay-2013 இதழில் வெளிவந்துள்ளது)