Friday 23 November 2012

ரேபீஸ் ( Rabies)-பகுதி 2



ரேபீஸ் ( Rabies)
(வெறி நாய்க்கடி நோய்)
PART-II


Combined Synthesis - Mentals
HYDROPHOBIA (46)*

acet-ac,  agar-em,  agar,  anag,  anan,  ant-c,  arg-n,  ars,  aspar,  bell, calc,  cann-i,  canth,  cedr, chlol,  chlor,  cocci-s, crot-h,  cupr,  cur,  gua,  hydr-achyos,  hyper,  iod,  lach,  laur,  LYSS,  merc,  phel,  phos,  ran-s,  sabad,  scut,  STRAM,  sulph,  tanac,  ter,  verat,  xan,  aconin,  carc,  fagu,  spirae,  strych-g,  trach

Murphy - Emergency
RABIES, hydrophobia (50)*

acet-ac,  aconin,  agar,  agav-a,  anag,  anan,  ant-c,  arg-n,  ars,  aspar,  BELL,  calc, cann-i,  canth,  cedr,  chlol,  chlor,  crot-h,  cupr,  cur,  fagu, gua,  ho,  hydr-ac,  HYOS,  iod,  jatr,  lach,  laur,  LYSS,  merc,  nux-v,  perh,  phel,  phos, plb,  ran-s,  ruta,  sabad,  sant,  scut,  spirae,  STRAM,  sulph,  tanac,  tarent,  ter,  trach,  verat,  xan


Complete - Mentals
HYDROPHOBIA (69)*
acet-ac,  acon,  aconin,  agav-a,  agn,  am-c,  anag,  anan,  ant-c,  anthr,  apis,  aran,  arg-n,  ars,  aspar,  bell, brom, calc,  camph,  camph-br,  cann-i,  canth,  carc,  cedr,  chlol,  cocci-s,  crot-h,  cupr, cur,  fagu, gels, gent-c,  grin,  gua,  ho,  HYDR-AC,  hyos,  hyper,  iod,  jatr,  kali-br,  lach,  laur, lith-br, LYSS, mand,  merc,  naja, nat-m,  nux-v, phel, phos,  phys, plb,  ran-s,  ruta,  sabad,  scut,  spirae,  STRAM,  stry, sulph,  tanac, tann-ac,  tarent,  ter,  trach,  verat,  xanth

வெறி நாய் கடித்தவுடன் தடுப்பு மருந்து:**

மரு.ஹானிமன்: பெல்லடோனா3X (Bell)  ஒவ்வொரு மூன்றாவது நாளும் (6 மாதங்களுக்கு)
மரு.J.H.கிளார்க் : லைசின் 30  ( Lyss) ஒரு வாரத்திற்கு தினமும் மூன்று தடவைகள்.
                            பெல்லடோனா 3X- ஆறு மாதங்களுக்கு:காலை, மாலை இரண்டுவேளை.

ரேபீஸ் நோய்க்குறிகள் தோன்றிய பிறகு:

மரு.J.H.கிளார்க் : பெல்லடோனா 3X அரை மணி நேரத்திற்கு ஒரு முறை.
                         :  முன்னேற்றம் இல்லாவிடில்- ஸ்ட்ராமோனியம் (STRAM) 1X , 12X
                             அரை மணி நேரத்திற்கு ஒரு முறை.
                         :  முன்னேற்றம் இல்லாவிடில் அடுத்து-லாக்கசிஸ் 6X (LACH)
                             அரை மணி நேரத்திற்கு ஒரு முறை.
அடுத்து ஹ்யாசியமஸ் (HYOS) , காந்தாரிஸ் (CANTH), லைசின் (LYSS)  போன்ற மருந்துகளையும் குறிகளுக்குத் தகுந்தவாறு கொடுக்கலாம்.                

மேற்கண்ட மருந்துகளில் ரேபீஸ் நோயை தடுக்கும் ஆற்றல் உள்ள  சில மருந்துகளை இப்போது தனித் தனியாகப் பார்க்கலாம்;

பெல்லடோனா:

·         மூளைப் பகுதியில் குத்துவது போன்ற வலி.
·         தெறிக்கும் தலைவலி உட்புறத்தில் இருந்து வெளிபகுதிக்கு பரவுவது போல் இருக்கும்,
·         தலை மயிரை பிடித்து இழுத்தால் எப்படி இருக்குமோ , அப்படிப்பட்ட வலி உச்சந்தலையில் இருக்கும்,
·         முகம் வெளுத்து தாகம் இருக்கும்.
·         முகத்தில் மட்டும் வியர்வை தோன்றும்.
·         காதுகளில் வினோத சப்தங்கள் விழும்.
·         வாய்பகுதி சீர்கெட்டு இழுத்துகொள்ளும்.
·         தலை பின்புறமாக இழுத்துக்கொள்ளும் மேலும் தலையை தலையணைக்குள் மூடி மறைத்துக் கொள்வார்கள்.
·         தண்ணீரை விழுங்கமுடியாமை
·         மூச்சுவிடுவது பதட்டத்துடன் கடுமையாகவும்  , மெதுவாகவும் மற்றும் தொடர்ந்தும் இருக்கும்.
·         கை, கால் பகுதிகளில் வலிப்புகள்.
·         தன்னைச் சுற்றி நாய்கள் சூழ்ந்து இருப்பது போல் நினைத்துக்கொண்டு நாய்போல் பிதற்றி குழைப்பார்கள்.
·         அருகில் இருப்பவர்களை கடிக்க விரும்புவார்கள்.
·         கடிப்பார்கள், எச்சில் துப்புவார்கள்.

காந்தாரிஸ்:

·         கடுங்கோபமும், வலிப்பும் மாறி மாறித் தோன்றும் .
·         தண்ணீரைப் பார்க்கும் போதும், தொண்டையைத் தொடும் போதும் மற்றும் அடிவயிற்றுப் பகுதியை அழுததும் போதும் கிளர்ச்சிக்கு ஆட்படுவார்கள்.
·         வாய் எரிச்சலுடன் வறண்டிருக்கும்.
·         ஆண்குறி வலியுடன் விரைத்து காமவெறி மிகுதியாகும். மற்றும் உட்புற பாலியியல் உறுப்புகள் அரிப்புடனும், மிகுந்த எரிச்சலுடனும் இருக்கும்.

ஹயாசியமஸ்:

·         தொண்டையின் பின்புறப் பகுதி பாதிக்கப்படும். சளியை வெளியேற்ற தொடர்ந்து செருமிக்கொண்டே இருப்பார்கள். தொண்டையில் வறட்சியுடன் தாகமும் இருக்கும்.
·         தொண்டை இறுகி விழுங்கமுடியாத நிலை உருவாகும்.
·         அடக்கமுடியாத தாகம் இருக்கும்.
·         தண்ணீர் குடித்தவுடன் அதிகம் வியர்க்கும்.
·         மனநிலை பாதிக்கப்பட்டு தெளிவில்லாமல் பேசுவார்கள்.
·         ஆழ்ந்த மனவருத்தமும், பதட்டமும் இருக்கும்.
·         ஒரு இடத்தில இருந்து அடுத்த பகுதிக்கு நடந்து கொண்டிருப்பார்கள்.
·         நடுக்கமும், வலிப்பும் மாறி மாறித் தோன்றும் .
·         மிருகங்களால் கடிக்கப் படுவோம் என்ற வித்தியாசமான பயம் இருக்கும்.


லாக்கசிஸ்:

·         தலை முழுவதும் ஆழமான கொட்டும் வலி இருக்கும்.
·         கண் இமைகளுக்கு மேல் நெற்றிப்பொட்டில் கிழிக்கும் வலி இருக்கும்.
·         முகம் கோரமாகத் தெரியும்.
·         தலை வலியுடன், பேச்சு அவசரமாக இருக்கும்.
·         முகம் சிவந்து, மனநிலை பாதிக்கப்பட்டு, தொண்டை இறுக்கமாக தோன்றும்.
·         உணவு, தண்ணீர் மற்றும் எச்சில் ஆகியவற்றை விழுங்க இயலாது,
·         குரல்வளை இறுகி உணவுக்குழல் அடைத்துக்கொள்ளும்.
·         வலிப்புகள் தோன்றும். வலிப்பின் போது கத்தி கூக்குரலிடுவார்கள்.

லைசின் :

·         இலேசான தலைசுற்றலும் , குமட்டலும் இருக்கும்.
·         தாடைப் பகுதியை அசைக்க முடியாமலும், கை,கால் மரத்துப்போய் , கடுமையான தலைவலியால் கஷ்டப்படுவார்கள்.
·         முகம், கை,கால்கள் திருகிக்கொள்ளும் ; முகம் வெளிறி , மஞ்சள் அல்லது இளஞ்சிவப்புடன் காணப்படும்.
·         வாய் முழுவதும் உமிழ்நீர் நிறைந்து இருக்கும்; ஓட்டும் தன்மையில் இருக்கும்; துப்பிக் கொண்டிருப்பார்கள்.
·         தண்ணீர் குடிக்க  முடியாது, விழுங்க முடியாது. ஆனால் படுத்திருக்கும் போது தண்ணீர் குடிக்க இயலும்.
·         தொண்டையில் கடுமையான இசிவும், மூச்சுத் திணறலும் இருக்கும்.
·         தண்ணீர் விழுங்க முயலும்போது தொண்டை அடித்துக் கொண்ட உணர்வு இருக்கும்.

ஸ்ட்ராமோனியம் :

  • தனியாக இருக்கப் பயம். கண்ணுக்குத் தெரியாத பொருள்களால் பயம்.
  • கடிக்கவும், பற்களால் தம்மை கிழித்துக் கொள்ளவும் தணியாத ஆவல்.
  • தன் அருகில் இருப்பவர்களை கடிக்கத் தோன்றும். அத்துடன் கடுங்கோபத்துடன் கத்தவும் செய்வார்கள்.
  • அதிகமான பயத்தால் கண்கள் மின்னி, கருவிழிகள் பெருத்து விடும்.
  • வாயில் தோன்றும் நுரையில் இரத்தம் கலந்திருக்கும்.
  • மன அமைதியின்மை மேலோங்கி இருகும்.
  • தண்ணீர் மற்றும் திரவப் பொருள்கள் மேல் வெறுப்பு.
  • தொடர்ந்து துப்பிக் கொண்டு இருப்பார்கள் .
  • பயங்கரமான வலிப்புகள். உடம்பு முழுவதும் விரைத்துக்கொள்ளும்.

இவைகளைத் தவிர மற்ற மருந்துகளையும் குறிகளுக்குத் தகுந்தவாறு கொடுக்கலாம். அத்துடன்  ரேபீஸ் தாக்கிய நோயாளியை தனியாக ஒதுக்கி வைக்காமல் , அவர்களிடம் கனிவுடன் நடந்து கொண்டால் அவர்கள் பதட்டப்படாமல்  மன அமைதியுடன் சிகிச்சைக்கு நமக்கு ஒத்துழைப்பார்கள் என்று மரு. போல்லிங்கேர் (BOLLINGER)  குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சிறப்பான மருந்துகளை உள்ளடக்கிய ஹோமியோபதி மருத்துவத்திற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாதது பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.  அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு   தமிழ்நாட்டை உலுக்கிய சிக்கன்குனியா மற்றும் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பரவிய டெங்கு காய்ச்சல் போன்றவற்றை கட்டுபடுத்துவதில் ஹோமியோபதி மருத்துவம் சிறப்பான பங்கினை ஆற்றியுள்ளது என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது . ஆகவே , ரேபீஸ் போன்ற உயிர்கொல்லி நோயிற்கு அலோபதி மருத்துவம் பயனளிக்காத போது , ஹோமியோபதி என்ற எளிய மருத்துவம் மக்களை காக்க தயாராக உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.


இக்கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்:

  1. Special pathology and Diagnostics- Dr.C.G.RAUE
  2. Homoeooathic Theraoeutics          - Dr. Samuel Lilienthal
3.    Synthesis Repertory                    - Dr. Frederik Schroyens
4.    Complete Repertory                     - Dr. Roger Zandvoor
5.    Murphy Repertory                        - Dr.Rabin Murphy
6.    Materia Medica of Homoeopathic Medicines   - Dr.S.R.Phatak
7.    A Dictionary of Practical Materia Medica        - Dr. J.K.Clarke
8.    மற்றும் ரேபீஸ் பற்றிய வலைத்தளப் பதிவுகள்.


*Capital and Bold  : முதல் தரமான மருந்து -மிக நன்றாக வேலை செய்யக்கூடியது.
  Italic and Bold     : இரண்டாவது தரமான மருந்து - நன்றாக வேலை செய்யக்கூடியது.
  Roman               : நலபடுத்தும் ஆற்றல் உள்ளது.

**குறிப்பு: இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளை  நல்ல ஹோமியோபதி  
              மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் தான் உட்கொள்ளவேண்டும்.

(இக்கட்டுரை "உங்கள் ஹோமியோ தோழன் " November-2012 இதழில் வெளிவந்துள்ளது)

ரேபீஸ் ( Rabies)-பகுதி 1


ரேபீஸ் ( Rabies)
(வெறி நாய்க்கடி நோய்)
PART-I

மனித குலத்தைத் தாக்கும் பல்வேறு நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் , இந்த ரேபீஸ் நோய்க்கு  இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுக்கிறது. வெறி நாய் கடித்து , கடிபட்டவர்களுக்கு ரேபீஸ் நோய்க் குறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டால் மரணம் நிச்சயம் என்பது அதிர்ச்சியான உண்மை. அவர்களை காப்பற்றுவதற்க்கான எந்த மருந்தும் ஆங்கில மருத்துவத்தில் இல்லை என்பது சாபக்கேடு..  உயிருக்கு ஆபத்தான  இருதய நோய், புற்று நோய் ஏன்   எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கெல்லாம் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளை நலப்படுத்தியோ அல்லது நோயின் கடுமையைத் தனித்து ஆயுளை நீடித்தோ சிகிச்சை செய்கிறார்கள்.  ஆனால் ரேபீஸ் நோயாளியை மரணக்கூண்டு போன்ற ஒரு அறையில் அடைத்து மரணத்தைத் தழுவவே அனுமதிக்கப்படுகிறார்கள்.  தமது இரத்த உறவுகளை மரணத்தருவாயில் கூண்டுக்குள்ளே தவிக்கவிட்டு அவர்கள் தவிப்பதையும், கெஞ்சுவதையும், சாவின் விளிம்பில் மன்றாடுவதைப் பார்க்கும் போது அவர்களது உறவினர்கள் மட்டுமல்லாது,  இதயம்  உள்ள அனைவரும் இரத்தக் கண்ணீரே வடிப்பார்கள்.   வாயில் எச்சில் ஒழுக ஒரு நாயைப் போல் இரைத்து, குரைத்து, தண்ணீரைக் கண்டால் பயந்து நாயாகவே மாறி இறக்கும் கொடுமை எந்த மனிதனுக்கும் நேரக்கூடாது. இந்த நோய் பற்றி மனிதகுலம் விரிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டதே இக்கட்டுரை.

ரேபீஸ் என்றால் என்ன?

நமது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள் மற்றும் தெரு நாய்கள் மூலமாகவே இந்த ரேபீஸ் நோய் ஏற்படுகிறது. குறிப்பாக பராமரிப்பின்றி தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடும் வெயிலினாலும், கெட்டுப்போன மாமிசக் கழிவுகளைத் உண்பதாலும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வெறித்தன்மை ஏற்படுகிறது. அந்த நாய்களின் உடலுக்குள் சென்ற இவ்வைரஸ்கள் பல்கிப் பெருகுகிறது. அதன் பிறகு அந்த நாயிற்கு உமிழ்நீர் அதிகம் சுரக்க ஆரம்பிக்கிறது. இந்த ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட நாய் மனிதனைக் கடிக்கும் போதோ அல்லது காயம் உள்ள இடத்தில அதன் உமிழ்நீர் படும் போதோ ரேபீஸ் என்ற அந்த கொடும் வியாதி மனிதனைத் தாக்குகிறது. அதனால் அவனது மூளைப்பகுதி வீங்கி , நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பையும், சுவாசகோசங்கள்  செயல் இழப்பையும் ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது.  இந்த ரேபீஸ் நோய் ஒரு விலங்கிடமிருந்து   மற்றொரு விலங்கிற்கும் பின்னர்  மனிதனிடமும் பரவுவதால் இதை " தாவுநோய்" என்றும் (ZOONOSIS) அழைக்கிறார்கள்.

ரேபீஸ் பற்றிய உண்மைகள் 

·         ரேபீஸ் வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கி மூளையை பாதிப்பதால் , இந்த நோய்க்கு விரைவாகவும், பொருத்தமான சிகிச்சையும்  பெற வேண்டும். தவறினால் மரணம் உறுதி .

·         ரேபீஸ் வைரஸ் உள்ள மிருகங்கள் மனிதர்களை கடித்த உடன் , அந்த வைரஸ்  (LYSSAVIRUS) மனித உடலுக்குள் நுழைந்து நரம்பு மண்டலம் மூலமாக மூளைக்கும் மற்ற இதர பகுதிகளுக்கும் பரவுகிறது.

·         ரேபீஸ் நோய் தாக்கியுள்ளதை பின்வரும் குறிகளின் மூலமாக நாம் புரிந்து கொள்ளமுடியும். அவையாவன: விசித்திரமான நடத்தைகள் , பிதற்றல், எதிர்ப்புச்  செய்தல் , தசைகள்செயல்இழப்பு, தசைகள் முறுக்கி கொள்ளுதல் , கோமாளித்தனம் , வலிப்பு மற்றும் வலிகள் முதலியவைகள். 

·         ரேபீஸ் நோய்க்குறிகள் வெளிப்படத் துவங்கிய 12 மணி நேரத்திற்குள் கட்டாயமாக சிகிச்சை கொடுக்கப்படவேண்டும். அடுத்த 48 மணிநேரத்திற்குள் நல்ல பலன் ஏற்படவேண்டும்.


·         ரேபீஸ் தாக்கும் அபாயம் இருக்கும் போது முதலில் ரேபீஸ் தொற்று நோய் தாக்குதலை தடுத்து பாதுகாக்கும்  புரதசத்துள்ள மருந்தும் , அதனைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பு மருந்தும்  எடுத்துக் கொள்ளவேண்டும். ரேபீஸ் தடுப்பு மருந்து, முதல் நாள், வது நாள், 7  வது  நாள் மற்றும் 14  வது நாளும், தேவைப்பட்டால் 28  வது நாளும்  எடுத்துக்கொள்ளவேண்டும்.

·         ரேபீஸ் தடுப்பு மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளதாவர்களுக்கும்  அல்லது அரைகுறையாக எடுத்து கொண்டவர்களுக்கும்ரேபீஸ் குறிகள் தோன்றிவிட்டால் அவர்களை காப்பாற்ற இயலாது.

·         அரசாங்கத்தின் கொள்கையின்படி வீடு மற்றும் வன விலங்குகளுக்கு தடுப்பு மருந்துகள் கொடுத்தோ அல்லது ரேபீஸ் வைரஸ் தொற்று உள்ள விலங்குகளிடம் ஒதுங்கி வாழ்ந்தால்  மட்டுமே ரேபீஸ் நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் அல்லது தவிர்க்க இயலும்.


வெறி நாய்களை எப்படி அடையாளம் காண்பது?

நாய்க்கு வெறிபிடித்தால் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கும். அதன் நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தொங்கிக்   கொண்டிருக்கும், அதிலிருந்து உமிழ்நீர் ஒழுகும் . அந்த நாய் தன் எதிரில் தென்படும் மனிதன், ஆடு, மாடு எதையும் விட்டுவைக்காமல் கடிக்கும். ஆனால் அந்த நாயை , இதர நாய்கள் கடிக்காது.

அடுத்து தெருநாய்கள் நம்மைக் கடித்துவிட்டால், அதைக் அடித்துக் கொன்றுவிடாமல் நமது நேரடிப் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். கடித்த நாயிற்கு வெறி பிடித்திருந்தால் அதனால் உணவு, தண்ணீர் முதலியவைகளை சாப்பிட முடியாது. சில தினங்களில் அந்த  நாய்  இறந்து விடும்.  ரேபீஸ் தோற்று இல்லாத சாதாரண நாய்களாக இருந்தால் அது வழக்கம்போல் செயல்படும். அதனால் நமக்கு தேவையில்லாத பயம், பதட்டம் போன்றவைகள் ஏற்படாது. கடித்த நாய் இறந்துவிட்டால், கடிபட்டவர்  பதட்டப்படாமல் ரேபீஸ் தடிப்பு சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வர வேண்டும்.

வெறிநாய் கடித்தவுடன் நாம் செய்யவேண்டியது என்ன


நாய் கடித்த இடத்தில் இரத்தக்கசிவு இருந்தால் அந்த இடத்தை சூடான  தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்பு ஆல்கஹால் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி திரும்பவும் சுத்தம் செய்யவேண்டும். காயம்பட்ட இடத்திலுள்ள நரம்புகள் மற்றும் தசை நார்களில் சிதைவு ஏற்பட்டுள்ளதா என கவனமாகப் பார்க்கவேண்டும். வெறி நாய் கடித்த இடத்தைப் பொறுத்து நாம் செயல்பட வேண்டும். முகத்தில் நாய்  கடித்து விட்டால் மிகவும் ஆபத்தானது. உடனே ரேபீஸ் தடுப்பு சிகிச்சையை தொடங்கி விட வேண்டும். ஏனென்றால் ரேபீஸ் வைரஸ் விரைவாக மூளையை சென்றடைந்து விடும். அடுத்து  முக்கியத்துவம் வாய்ந்த பகுதி உடம்பு மற்றும் கைகள். கால் பகுதிகளில் கடித்திருந்தால் ஆபத்துக் குறைவாக இருக்கும். நாய் கடித்த இடத்தில் காயம் பெரியதாக இருந்து இரத்தம் அதிகம் வெளியேறி விட்டால் ரேபீஸ் வைரஸ் இரத்தத்தின் மூலமாக வெளி வந்து விடும், சிறிய காயமாக இருந்தால் ரேபீஸ் வைரஸ் இரத்தத்தின் மூலம் வெளியேற வாய்ப்பிலாமல் உடம்பில் கலந்து விடும் என்று ஹோமியோபதி மருத்துவர். சி.ஜி.ரே ( C.G.RAUE) குறிப்பிட்டுள்ளார்.   


ரேபீஸ் வராமல் தடுப்பது எப்படி.

ரேபீஸ் நோய் தோன்றி விட்டால் அதைக் குணப்படுத்த இயலாது என்பதால் , அந்த நோய் ஏற்படாமல் இருக்க வேண்டிய வழிமுறைகளை நாம் அவசியம் கடைப்பிடிக்கவேண்டும் . வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு தவறாமல் தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும். அது மட்டுமல்லாமல் அதை மற்றத் தெரு நாய்களுடன் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டில் வளரும் நாய் சோர்வுடனும் , வீட்டில் உள்ளவர்களை கடித்துக் கொண்டும், உணவு சாப்பிடாமலும் இருந்தால் அதனை கட்டிப்போட்டுவிடவேண்டும். பின்னர் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் அந்த நாய் இறந்து விட்டால், ரேபீஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை வீட்டில் உள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டும். அதே போல் வேறு எந்த தெருநாய் கடித்தாலும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளவேண்டும். ஏனென்றால் தெரு நாய் கடித்தால் அதற்கு ரேபீஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம்.  அதனால், வெறிநாய் கடியிலிருந்து தப்பிக்க தெருநாய்களை ஒழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. மனித உயிர்கள் வெறிநாய் கடித்து ரேபீஸ் நோயால் சாவதை விட தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை ஒழிப்பதே மேலானது.

ரேபீஸ் எவ்வாறு பரவுகிறது.

ரேபீஸ் வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் ( நாய், பூனை, நரி, ஓநாய் மற்றும் வௌவால் போன்றவைகள்) ஒருவரை கடித்து விட்டாலோ அல்லது நாக்கினால் நக்குவதாலோ கடிபட்டவர்களுக்கு ரேபீஸ் பரவுகிறது. ஆனால் ஒரு மனிதன் மூலமாக மற்றொரு மனிதனுக்கு ரேபீஸ் பரவுவது என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.  சில சமயம் வீட்டில் வளர்க்கப்படும் பசுக்களை வெறிநாய் கடித்து , அதன் பாலை சாப்பிட்ட சிலருக்கு ரேபீஸ் குறிகள் வெளிப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இதேபோல் , மெக்சிகோ நாட்டில் வௌவால் மூலமாக பசுக்களுக்கு ரேபீஸ் பரவிய செய்திகளும் உண்டு. ஆகவே, உலக நாடுகள் அனைத்தும் ரேபீஸ் நோயை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

ரேபீஸ் பற்றிய புள்ளிவிபரங்கள்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 55000  பேர்  இந்த ரேபீஸ் நோயிற்கு பலியாகிறார்கள் என்றும் அதில் குறிப்பாக  இந்தியாவில் மட்டும் சுமார் 20000 பேர் பலியாவதாகவும் அதில் பெரும்பாலோர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் குறிப்பு தெரிவிக்கிறது. சீனாவில், இந்த எண்ணிக்கை 2400 ஆக உள்ளது. பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள பல நாடுகள் இந்த நோயை ஒழிக்க தடுப்பு மருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நாய், குதிரை, பூனை போன்ற  வீட்டு விலங்குகள் மட்டுமன்றி ஓநாய் ,நரி,  வௌவால் போன்ற வன விலங்குகள்  மூலமாகவும்  பரவும்  ரேபீஸ் நோயைக் கட்டுபடுத்தி உள்ளது .ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நோயை ஒழிக்கத் திணறுகின்றன.

ரேபீஸ் பற்றிய வரலாற்று உண்மைகள்

ரேபீஸ் என்ற வார்த்தை லத்தின் மொழியில் இருந்து தழுவி வந்தது , ரேபீஸ் என்பதற்கு பொருள் பைத்தியம் அல்லது கடுங்கோபம் என்பதாகும். கி.மு.2300  ஆம் ஆண்டிலே ரேபீஸ் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக்காலத்தில் வெறிபிடித்த நாயின் உரிமையாளர்கள், நாயிற்கு வெறி பிடித்தால் அது மனிதர்களை கடிக்கும் என்பதை பதிவு செய்து உள்ளார்கள். அதுமட்டுமல்ல ரேபீஸ் பாதிப்புக்கு உள்ளான விலங்கு மற்றும் மனிதர்களால் தான் ரேபீஸ் நோய் பரவுகிறது என்பதையும் அறிந்து கொண்ட மக்கள் , பல நூற்றாண்டுகளாக அத்தகைய விலங்குகளையும் அல்லது மனிதர்களையும் கொன்று ஒழித்து வந்துள்ளார்கள். கி.பி. 15 ஆம் வாழ்ந்த இத்தாலிய மருத்துவர் கிரோலமோ பிராகாச்டோரோ (GIROLAMO FRACASTORO) தான், நோய் தாக்குதலுக்கு உள்ளான விலங்குகளின் உமிழ்நீர் மூலமாக தான் இந்த ரேபீஸ் நோய் பரவுகிறது என்றும், அதற்கு "ரேபீஸ்" என்றும் பெயரிட்டார். அதன் பின்னர் கி.பி.1895  இல்  மருத்துவர் லூயிஸ் பாஸ்டர் (LOUIS PASTEUR) மற்றும் எமிலி ரெக்ஸ் (EMILE ROUX) இருவரும், மருத்துவர் கிரோலமோ பிராகாச்டோரோ அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் ரேபீஸ் வைரஸை தடுக்கும் ஆற்றலுள்ள தடுப்பு மருந்தை கண்டுபிடித்தனர் .

மனிதர்களிடம் தோன்றும் ரேபீஸ் குறிகளும், அடையாளங்களும்.

வெறி நாய் கடித்தவர்களுக்கு முதலில் கடிபட்ட இடத்தில் அரிப்பு அல்லது ஊசியால் குத்துவது போன்ற வலி ஏற்படும். அத்துடன் அவர்களுக்கு காய்ச்சலும் தலைவலியும் இருக்கும். இந்த நிலை இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இருக்கும். இதுதான் ரேபீஸ் நோய் உருவாவதற்கான ஆரம்பநிலை. பொதுவாக  ரேபீஸ் வைரஸ் மனித உடலில் மூன்று வாரங்கள் முதல் ஏழு வாரங்கள் தங்கி இருக்கும். இதைத்தான் அடைகாப்புக்காலம் (Incubation period)  என்று அழைக்கிறார்கள். அதன் பின்னர் தான் ரேபீஸ் நோய்க்குறிகள் வெளிப்படத் துவங்கும் என தேசிய சுகாதார நிறுவனமும்(NIH) , அமெரிக்க நோய் தடுப்பு மையமும் (CDC)  தெரிவித்துள்ளன. சில மனிதர்களுக்கு இந்த அடைகாப்புக்காலம் அரிதாக ஏழு நாட்கள் முதல் பத்து வருடம் வரை கூட இருக்கலாம் எனவும் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளார்கள்.
   
 மனித உடலில்  ரேபீஸ் குறிகள்  தோன்றுவதை  கீழ் வரும் மூன்று நிலைகளாக தொகுத்துக் கொடுத்துள்ளார் மருத்துவர்.சி.ஜி.ரே(C.G.RAUE);

முதல் நிலை:
·         காயம் பட்ட இடத்தில கிழிப்பது போன்ற வலியும், எரிச்சலுடன் குடைவது போன்ற உணர்வும் இருக்கும்.
·         நாக்கிற்குக் கீழே சிறிய அளவில் வெடிப்புகள் தோன்றும்.
·         தலைவலியுடன் பசியின்மை இருக்கும்.அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.
·         நாய்க் கடித்ததை நினைத்து அவர்களுக்கு தேவையில்லாத பயமும் பதட்டமும் ஏற்படும்.
·         தூக்கமின்மை( SLEEPLESS)
·         மன அமைதியின்மை( RESTLESS)
·         அதன் பிறகு தண்ணீர் குடிக்க பயம், வெறுப்பு.
·         மூச்சு விடுவதற்குச் சிரமம்.
·         வெளிச்சத்தைப் பார்க்க இயலாமை- இதன் பிறகு இரண்டாவது நிலை தொடக்கி விடும்.

இரண்டாவது நிலை:
·         வெறித்தனத்துடன் இசிப்பு ( திடீர் வலி துடிப்பு )
·         திடிரென்று தண்ணீர் அருந்த  முடியாத நிலை உருவாகும். இதனைத் தொடர்ந்து   தண்ணீர் அருந்த முயற்சிக்கும்போதெல்லாம் தொண்டை  அடைத்துக்கொள்ளும்.
·         சுவாச கோசங்களில் உள்ள தசைகள் இறுகி  அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நோயாளிகள் காற்றிற்காக ஏங்குவார்கள்.
·         குரல்வளை இறுகி கரகரப்பாகவும், சத்தம் வெளியே வரும் போது நாய் குறைக்கும் தொனியில் இருக்கும்.
·         பலவிதமான  தன்மையில்  வலிப்புகள் தொடர்ந்து ஏற்படும். கை கால்களில் தொடர்ந்து நடுக்கம் இருந்து கொண்டிருக்கும். வலிப்பிற்குப் பிறகு கடுங்கோபமும், மனப்பிரமையும் ஏற்படும்.
·         இந்த நிலை ஏற்பட்டபிறகு பலருக்கு திரவ, திடப் பொருட்களை விழுங்க முடியாத நிலை உருவாகும். ஆனால் , சிலரால் சூடான பால், வடிசாறு, மற்றும் ஒயின் சாப்பிட முடியும்.
·         பிறகு அறிவுக் கூர்மை மழுங்க ஆரம்பிக்கும். அத்துடன் நிறைய பேச ஆரம்பித்துவிடுவார்கள்( பிதற்றல்). தூக்கம் இருக்காது.
·         நோயாளியின் கண்களுக்கு கற்பனையான உருவங்களும், பொருட்களும் தெரியும். அதனால் அருகில் இருப்பவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி மிகவும் கோபம் கொள்வார்கள்.
·         முகம் சிவந்து மனமும், உடலும் களைத்துப்போய் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.  
·         கண்கள் வெறித்த பார்வையுடன் அங்கும் இங்குமாக அலை பாயும். கருவிழிகள் வீங்கி வெளிச்சத்தையே பார்க்க முடியாத நிலை ஏற்படும். சில நோயாளிகளுக்கு முகம் நீலம் பூத்து பார்பதற்கு விகாரமாகத் தென்படுவார்கள்.
·         வாயிலிருந்து ஓட்டும் தன்மையிலான உமிழ்நீர் ஏராளமாக வெளியாகும். நாக்கில் கெட்டியான மாசு படிந்து வறண்டிருக்கும்.
·         தொண்டையில் எரிச்சலுடன் அளவுக்கு அதிகமான தாகம் இருக்கும் ஆனால் பயத்தினால் தண்ணீர் அருந்த முடியாது.
·         மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் மிகவும்  குறைவாகவும் , அடர்த்தியாகவும் போகும். அத்துடன் சக்கரை சேர்ந்து வெளியாகும்.
·         காய்ச்சல்   இருக்கும். சில சமயம்   முதல்  வரை போகும் .
·         இந்த நிலை நாட்கள் முதல் நாட்கள் நீடிக்கும்- அதன் பிறகு மூன்றாவது நிலை உருவாகும்.  

மூன்றாவது நிலை:
·         நோயாளிக்கு பக்கவாதம் ஏற்பட்டு சிறுகச் சிறுக நடவடிக்கை குறையும்.
·         கண்விழிகள் சுருங்கி பார்வை நிலைகுத்தி விடும். மாறுகண் உள்ளவர்கள் போல் தோற்றமளிப்பார்கள்.
·         வாயின் எல்லாப் பகுதியிலும் உமிழ்நீர் தானாக வழியும். குரல் பலவீனமாகி பேச இயலாது. மூச்சுவிட மிகவும் சிரமப்படுவார்கள். நாடி மெதுவாகவும் , விட்டுவிட்டுத் துடிக்கும்.
·         இதனைத்  தொடர்ந்து சிலரால் முன்பு போல் சிரமம் இல்லாமல் தண்ணீர் அருந்த முடியும். இந்த நிலை வந்தபிறகு அவர்களுக்கு மரணம் உறுதிப்படும். 
·         இறுதிக்கட்டம்- வலிப்பு ஏற்பட்டோ அல்லது மூச்சு அடைத்தோ மரணம் ஏற்படும். 

ரேபீஸ் தடுப்பு மருத்துவம்:

அலோபதி மருத்துவத்தைத் பொறுத்தவரை ரேபீஸ் நோய் வராமல் தடுக்க நாம் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி ரேபீஸ் தடுப்பு மருந்து (ARV) முதல் நாள், வது நாள், 7  வது  நாள் மற்றும் 14  வது நாளும், தேவைப்பட்டால் 28  வது நாளும்  ரேபீஸ் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதையும் மீறி ரேபீஸ் குறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டால் அலோபதி மருத்துவம் பயனளிக்காது. அந்த நபர் மரணத்தை தழுவது உறுதி. இதே போல் ஹோமியோபதி மருத்துவத்திலும்  ரேபீஸ் நோயை தடுக்கும் ஆற்றல் உள்ள பல மருந்துகள் உள்ளன.    குறிப்பாக பெல்லடோனா, காந்தாரிஸ், ஹயாசியமஸ் , லைசின் மற்றும்  ஸ்ட்ராமோனியம் போன்ற மருந்துகள் சிறப்பாக வேலை செய்து ரேபீஸ் நோய் வர விடாமல் தடுப்பதாக மரு.ஹானீமன், ஹெர்ரிங், போனிங்ஹாசன் மற்றும்  கிளார்க் போன்றவர்கள் பதிவு செய்துள்ளார்கள்


ஹோமியோபதியில்  ரேபீஸ்  நோயை  குணமாக்க  முடியுமா?

ஹோமியோபதி மருத்துவத்தில்,   நோயாளியிடம் காணப்படும் ஒட்டுமொத்த குறிகளின் அடிப்படையில்  மருந்து தேர்வு செய்து கொடுப்பதால் நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்கு அவர்களிடம் தென்படும் ரேபீஸ் நோய் குறிகளின் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து கொடுக்கும் பொழுது  அவர்கள் குணமடைய பிரகாசமான வாய்ப்புள்ளது. இந்த ரேபீஸ் நோய்குறிக்கு சிந்தசிஸ் மருந்து கைவசத்தொகுதியில் (Repertory) 46 மருந்துகளும் , மர்பி மருந்து கைவசத்தொகுதியில் 50 மருந்துகளும் , கம்பிளிட் மருந்து கைவசத்தொகுதியில் மொத்தம் 69 மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகளின் பட்டியல் (குறியீடுகள்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.