Saturday, 11 November 2017

ஹோமியோபதியில் கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி (CLAIRVOYANCE)

கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி என்பது , தனது இயல்பான புலனுணர்வுக்கு அப்பாற்பட்டு .   மனக்கண் ( மூன்றாவது என்று எடுத்துக் கொள்ளலாம்) தொலையுணர்வு மூலமாக  ஒரு பொருளை, காட்சியை, நபரை அல்லது நடக்கப்போகும் நிகழ்வை தெரிவிப்பதாகும். இதை மிகைப்படியான (அல்லது கூடுதல்) புலன்கள் சார்ந்த அறிவு (கருத்து) என்றும் ,  ஆங்கிலத்தில் ESP ( EXTRA SENSORIAL PERCEPTION ) என்றும் கூறுவார்கள்.


இந்த ஆற்றல் ஒரு சிலருக்கு பிறவியிலிருந்து இயல்பாகவே அமைந்திருக்கும், மற்றும் சிலர் பலவிதமான மனப்பயிற்சி மூலமாகவும், தியானங்கள் மற்றும் யோகப்பயிற்சியின் மூலமாக   இதை வளர்த்துக் கொள்கிறர்கள். இத்தகைய  ஆற்றல் உள்ளவர்கள் ஒருவரின் வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது , எதிர் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை மனக்கண் தொலைக்காட்சி மூலமாகக் கூறுவார்கள். இவர்களை இந்திய கிராமப்பகுதிகளில் மருளாடிகள் என்று அழைக்கிறார்கள்.


இன்றும் கூட பல இந்தியக் கிராமங்களில் , நகரங்களில் இத்தகைய மனக்கண் தொலைக்காட்சி மூலம் அருள்வாக்கு கூறும் துறவிகள், குருக்கள், மருளாடிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களும் கூட்டம் கூட்டமாக அவர்களை நம்பி நாடிச் செல்கிறார்கள். அதில் சில ஏமாற்றுப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்; அவர்கள் பணம் பண்ணுவதே !. 

ஏறத்தாழ 19,20 ஆம் நூற்றாண்டு முதல் மனக்கண் தொலைக்காட்சி பற்றி பேசப்பட்டாலும்  இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கங்கள் இது வரை எட்டப்படவில்லை என்பதே உண்மை.  1970- 1990 ஆம் ஆண்டுகளில் , வில்லியம்  கிரிகோரி [William Gregory (chemist)] ,   குஸ்டாவ்  பஜன்ஸ்டெசேர் (Gustav Pagenstecher) மற்றும் ருடால்ப்  டிஸ்சனீர் (Rudolf Tischner)  போன்ற ஆராய்ச்சியாளர் நிறைய பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். அவர்கள்  ஒரு பொருளை மறைத்து வைத்துக் கொண்டு , அது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று மனக்கண் தொலைக்காட்சி நிபுணர்களிடம் பரிசோதித்த போது , எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்கள்.

அதே போல் குறிசொல்வதை பற்றி ஆராயும் நிபுணர்கள் (PARAPSYCHOLOGISTS) , மனக்கண் தொலைக்காட்சி ( CLAIRVOYANCE), நுண்ணுணர்வு ( TELEPATHY), முன்னுணர்வு (PRECOGNITION) ஆகியவற்றை   இணைத்து ஒரே செயல்பிரிவின் கீழ் இயங்குமாறு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் , அதுவும் நடைமுறையில் இன்றளவும் சாத்தியப்படவில்லை.

ஆனாலும் ஏராளமான ஆன்மீகத் தத்துவ ஞானிகள் ஒவ்வொருவருக்கும்     மூன்றாவது கண் இருப்பதாகவும் , அதை யோக சக்தியின் மூலம் (குண்டலினி ) எழுப்பி நுண்ணுணர்வு ஆற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறாரக்ள். மனித மூளையின் ஆழத்தில் அமைந்துள்ள  பைனியல் சுரப்பி (PINEAL GLAND)   இத்தகைய ஆற்றலைப்  பெருக்க உதவுவதாகவும்  குறிப்பிடுகிறார்கள் . பண்டையகால துறவிகளும் , யோகிகளும்  மற்றும்  சமயவாதிகளும் இந்த பைனியல் சுரப்பியே ஞானத்தைப் பெருக்க பெரிதும் உதவுகிறது என்று பதிவு செய்துள்ளார்கள். அதே     போல் நுண்ணியல் கோட்பாட்டு ஆய்வாளர்களும் இந்த பைனியல் சுரப்பியின்  செயல்பாடு இன்றளவும்  விசித்திரமாக இருப்பதாகவும் , முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள். அதனால் , இந்த கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி ( CLAIRVOYANCE) என்பது விசித்திரமாகவும் , புரிந்துகொள்ளப்படாதாகவும் இருக்கிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த மனக்கண் தொலைக்காட்சி ( CLAIRVOYNCE),  மாயை அல்லது மாயத்தோற்றம் (DELUSION ,ILLUSION) ,  மற்றும் பிரம்மை ( HALLUCINATION) போன்றவைகள் குறிப்பிடத்தக்க வகையில் அங்கம் வகிக்கிறது. அதிலும் பல துயரர்களின் குறிகள் மிகவும் ஆச்சரியம் தருவதாக  இருக்கும். உதாரணமாககீழ்காணும் உணர்வுகளையும் , கனவுகளையும் வெகு இயல்பாகக் கூறுவார்கள். 

1.       என் உறவினர் விரைவில் இறந்து போவார் என்று நினைத்தேன் ; அதே போல் இரண்டு நாளில் இறந்து விட்டார்.
2.       ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று நினைத்தேன் ; அதே போல் நடந்து விட்டது.
3.       நான் வணங்கும் கடவுள் என் கனவில் வந்து , இது நடக்கப்போகிறது என்று கூறினார். அதே  போல் நடந்தது.
4.       நான் கடவுளின் நேரடி பாதுகாப்பில் இருக்கிறேன் ; என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
5.       கடவுள் என்னுடன் நேரிடையாகப் பேசுவார்.
6.       என்னால் அடுத்தவர் மனதில் நினைப்பதைக்கூற முடியும்.
7.       என்னை யார் தொலைபேசியில் அழைக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்து விடும்.
8.       உங்கள் வீட்டில் யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் ; அதனால் தான் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள்
9.       நான் நினைத்தவாறே நடந்து விட்டது.
10.     இறந்து போன என் கணவர்  கனவில் வந்து இது நடக்கப் போகிறது என்று எச்சரித்தார். அவ்வாறே நடந்து விட்டது. 
ஏறத்தாழ 89 ஹோமியோபதி மருந்துகளில் இந்த மனக்கண் தொலைக்காட்சி நிலை பற்றிய குறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம்மருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன;

Mind; clairvoyance: acher-a ACON(4) agar amet(2) ANAC(3) androc anh ant-c ARG-N(3) arn bani-c benz betul bos-s(2) bry bufo caj calc calop-s camph CANN-I(3) carc cath-a chir-f COFF(3) con corv-c(2) CROT-C(3) cygn-c cypra-e dat-a emer(2) enal-c falco-p gall geoc-c GRAN(3) guin haem-i-b haliae-lc(2) heli helod-c herin hura hydro-c HYOS(3) iod kola lac-del LACH(4) lamp-c lap-laz lat-h latex lsd(2) LYSS(3) m-arct m-art MAND(3) med(2) nabal naja neod neon NUX-M(3) olea onc-t OP(3) PHOS(3) pras-c PYRUS(3) ros-d ros-g salx-f SIL(3) sol-n spect stann STRAM(3) succ taosc TARENT(3) tax thea thul-m turq-l uro-h VALER(3) VERAT-V(3)

மேற்கூறிய மருந்துகளில் குறிப்பிடத்தக்க வகையில் செயலாற்றும் முக்கியமான சில மருந்துகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தொடரும்...