Monday, 20 November 2017

ஹோமியோபதியில் கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி (CLAIRVOYANCE)-2

ஹோமியோபதியில் கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன் அல்லது மனக்கண் தொலைக்காட்சி (CLAIRVOYANCE)

பகுதி- இரண்டு.


மனக்கண் தொலைக்காட்சிக்கு உள்ளாகும் துயரருக்களுக்கான மருந்துகள்:

லாக்கஸிஸ் : மனித சக்திக்கு அப்பாற்படட பலம் வாய்ந்த ஒரு சக்தியின் பிடியில் (கடவுள்) தான் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.  மதம் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு தீர்க்கதரிசனம் சார்ந்த கனவுகள் வரும். தன் நினைவு இழந்த நிலையில் காணப்படுவார் ( சமாதிநிலை). அதிகமாக பேசும் தன்மை உடையவராக இருப்பர். ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் முடிக்க மாட்டார்; அடுத்த பொருளுக்கு தாவி விடுவார். நம்மை பேச விடாமல் அவரே பேசிக் கொண்டிருப்பார். மிகவும் பொறாமைக்குணம் படைத்தவர். தனது கணவருக்கு , பிற பெண்களிடம் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் கொள்பவராக இருப்பார்.  

கிராட்டுலஸ் காஸ்கேவெல்லா: தனக்குப்பின்னே யாரோ இருப்பது போன்ற பிரமை இருக்கும்  அல்லது காலடி சப்தங்கள் கேட்கும். தான் ஒரு அரக்கன் போல் செத்துக்  கிடப்பதாகவும் , கருப்பு எலும்புக்கூடாக கிடப்பதாகவும் இவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படும். தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக இவர்கள் நினைப்பார்கள் .

நாஜா: மனித சக்திக்கு அப்பாற்படட பலம் வாய்ந்த ஒரு சக்தியின் பிடியில் (கடவுள்) தான் இருப்பதாக  நினைத்துக் கொள்வார்கள். பிடிவாதமான மதக் கோட்ப்பாட்டைப் பின்பற்றுவார் . தனது கடமையிலிருந்து  தவறி விட்டோம்  அல்லது தவறு செய்து விட்டோம் என்ற பிரமை இருக்கும். அதே போல் தான் தவறாக தண்டிக்கப்பட்டு விட்டோம் அல்லது தவறான பழியை சுமக்கிறோம் என்ற பிரமையும் இருக்கும்.  

லைசின்: இவர்,  மற்றவர்களுக்கு பயங்கரமான கெடுதலும் அத்தோடு பிரார்த்தனையும் செய்வார். தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம் என்று கருதுவார். நாஜா மருந்து போலவே இவருக்கும் , தனது கடமையிலிருந்து  தவறி விட்டோம்  அல்லது தவறு செய்து விட்டோம் என்ற பிரமை இருக்கும். தன்னை நம்பியவரை பாதுகாக்க முடியாதோ என்ற பயம் தோன்றும். கடும் கோபமும் அதனைத் தொடர்ந்து கழிவிரக்கமும் ( அல்லது சமாதானமும்) ஏற்படும் குணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

அகோனைட்:    பயம் இம்மருந்தின் முக்கியமான குறி ஆகும் . இறந்து விடுவோமோ என்ற பயம், கூட்டங்களைக் கண்டும், வெளியே போகவும், எதைக்கண்டாலும்   பயம்.  இவர்களுக்கு தலை நிரம்பின மாதிரியும், கனமாகவும் , கண் எரிச்சலுடனும்  , குத்துகிற வலியுடன் இருக்கும். அதிக கவலையுடனும் ,   அமைதியின்மையுடனும் இத்  துயரர்கள் இருப்பார்கள். பயமும் , பதட்டமும்   இம்மருந்தின் சாரமாக இருக்கும். தீவிர நோய்த் தாக்குதலின் போது , தான் இந்த நாளில் , இந்த நேரத்தில் இறந்து விடுவேன் என்று கூறுவார்கள்.

அன்ஹோலோனியம்: அனைத்து உயிர்களிலும் தான் இணைந்துவிட்டது போன்று அல்லது ஒன்றாகி விட்டது போன்ற உணர்வு இவர்களிடத்தில் இருக்கும். மனிதர்களின்  பழகும் தன்மையையும் எல்லையையும் வேறுபடுத்திக் கொள்ளமுடியாமல் தவிப்பார். மக்களை ஐக்கியப்படுத்துவதிலும்    அல்லது ஒற்றுமைப்படுத்துவதிலும் ஈடுபடும் இவருக்கு விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கும்.   அத்துடன் தான் தனியாகிவிட்டது போன்ற உணர்வும் , னது அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற பயமும் இருக்கும்.

கன்னாபிஸ் இண்டிகா:  இவர் மனதில்  மாய உலகத்தில் வாழ்பவர் . கூடவே பயங்களும் இருக்கும்.  மற்றவர்களின் கடுமையான செயல்களும் அல்லது   ஆபத்தும் இவரை மிகவும் பாதிக்கும். எப்போதும் பரவச நிலையிலேயே இருப்பர். இவருக்கு நிறைய மாயத்தோற்றங்கள்  ஏற்படும். குறிப்பாக  கஞ்சாப்புகைக்கும் பழக்கமுள்ள பல இந்தியத் துறவிகளுக்கு இது பொருத்தமான மருந்து. எப்போதும் மேன்மையான உணர்வோடும் , சந்தோச மனநிலையோடும் இருப்பார்கள்.   


ஸ்ட்ராமோனியம்:  இவர்களுக்கு இருட்டைக்   கண்டால் மிகவும் பயம் ( குழந்தைகளுக்கு முதன்மையன் மருந்து) . தனியாக இருக்க பயம்;  மற்றும் காட்டு விலங்களுக்கு பயம். யாராவது அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புவார். இம்மருந்தை பயங்களின் அரசன் என்றே குறிப்பிடலாம். ஆன்மீகக் கோட்பாட்டாளர். இரவெல்லாம் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வார். அதுமட்டுமல்லாமல் ஆன்மீகம்/ வேதப் புத்தகங்களை படிக்க விரும்புவார்.  பேய்கள் , ஆவிகள் இவர்களது கண்களுக்குத் தெரிவதாக கூறுவார்கள். இரவில் படுத்தவுடன் தான் இறந்துவிட்டோம் அல்லது தனது உடம்பை பிணம் என்று விசித்திரமான உணர்வு தோன்றும். அதனால் இரவில் விளக்கை போட்டுக்கொண்டு தான் தூங்குவார். யாருடனாவது சேர்ந்து இருக்கவே (பாதுகாப்பாக) இவர்களுக்கு பிடிக்கும்.

ஹயாசியாமஸ்   :  இவர்கள் முட்டாள்தனமாக சிரிப்பவர்களாகவும்  மற்றும் அத்தகைய செயல்களை செய்ப்பவர்களாகவும்  இருப்பார்கள். பொது இடங்களில் தங்களது பிறப்புறுப்பை காட்டுவதில் இவர்களுக்கு எந்த வெட்கமும் இருக்காது. வீட்டிற்குள் அல்லது தங்களது அறையில் ஆடையை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நடமாடுவார்கள். நிர்வாணமாக இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். குழந்தைகள் , வயதிற்கு மிஞ்சிய புத்தியுள்ளவர்களாகவும் , காம உணர்வு மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். கணவன்/மனைவி தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்ற பிரமை இருக்கும் ( ஸ்ட்ராமோனியம் )

அனகார்டியம் :  இவர்கள் இரண்டு விதமான மனநிலை படைத்தவர்கள். ஒரு தோளில் தேவதையும் , மற்றொரு தோளில் பிசாசும் அமர்ந்து கொண்டு தன்னை வழி நடத்துவதாகக் கூறுவர். மிகவும் குரூரமான மனநிலை படைத்தவர்கள். மனித சக்திக்கு அப்பாற்படட பலம் வாய்ந்த ஒரு சக்தியின் பிடியில் (கடவுள்) தான் இருப்பதக்க நினைத்துக் கொள்வார்கள். தான் இறந்து விட்டது போன்றும்; சொர்க்கத்தில் இருப்பதுபோன்றும், பேய், பிசாசுகள் கண்ணுக்குத் தெரிவதாகவும் ; தனக்குள் இன்னொருவன் இருப்பது ( SPILIT PERSONALITY) போன்றும் பல மாயத்தோற்றங்கள் இவர்களுக்கு ஏற்படும்.  


நக்ஸ் மாசட்டா: இவர்கள்,  தங்களுக்கு  தீர்க்கதரிசனம் ஏற்படுவதாகக் கூறுவார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் கணித்துக் கூறுவார்கள். ஆனால், அப்படிச் சொன்னதையே  மறந்தும் விடுவார்கள்.  இவர்களுக்கு தூக்கநிலையும், கனவில் இருப்பது போன்றும் மற்றும் மயங்கி விழும் தன்மையுடையவர்களாகவும் இருப்பார்கள். தனக்கு இரண்டு தலை இருப்பது போன்ற பிரமை இருக்கும்; குறிப்பாக தலைவலி ஏற்படும் போது இந்த உணர்வு தோன்றும்.


பாஸ்பரஸ்: இவர்கள் மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர்கள். மற்றவர்களின் துன்பம் இவர்களை மிகவும் பாதிக்கும் . தனது உறவினர்களுக்கோ அல்லது தனக்கோ ஏதாவது  விபத்து நடந்து விடும் என்ற பிரமை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர்களது காதுகளில் பல்வேறு சப்தங்கள் கேட்க்கும். மற்றவர்களின் மனதை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். அதனால் ஆவிஉலகத்துடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும் (MEDIUM). மருத்துவர் M.L. டெய்லர்  துயரர் ஆய்வின் போது, நோயாளிகளின்  உணர்வை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மைபடைத்தவராக இருந்திருக்கிறார். அதனால் , அந்தத் துயரருக்கு என்ன மருந்து கொடுக்கிறாரோ அம்மருந்தை அவரும் சிலசமயம் எடுத்துக் கொள்வார் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.  

சிலிகா : இவர் மிகவும் பண்பட்டமனிதராகவும் அதேசமயத்தில் தன்னம்பிக்கை குறைந்தவராகவும் இருப்பர். இரக்கச் சுபாவமும் , வெட்கமும் இருக்கும். மிகவும் பிடிவாதக்குணம் படைத்தவர்கள். திருடர்கள், பேய்-பிசாசுகள் மற்றும் புழு,பூச்சிகளைப் பார்ப்பதாக பிரமை இருக்கும். அதேபோல் தனக்குப் பின்னே யாரோ இருப்பது போன்றும் , தன்னைத் துரத்துவதாகவும் மாயத்தோற்றம் இவர்களுக்கு ஏற்படும்.

மெடோரினம்: இவருக்கு வாழ்க்கை  கனவில் மிதப்பது போல் தோன்றும். கனவுகளில் நிறைய மனக்கண் தொலைக்காட்சிப் பதிவுகள் தெரியும். பேய் பிசாசுகளின் மேல் பயம் இருக்கும். தனக்குப்பின்னால் யாரோ இருப்பது போலவும் தோன்றும். தனக்கும் , மற்றவர்களுக்கும்  ஏதாவது கெடுதல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லுவார். அதேபோல் சிலசமயம் நடந்துவிடும் பொழுது அவர்களுக்கு பயமும் ஏற்படும்.  எதிர்காலத்தை  அல்லது வேறெங்கோ நடக்கப்போவதை சரியாக, காட்சிப்படுத்தி  கணித்துக்கூறும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்;  அது  மிகச் சரியாகவும் நடக்கும். அதனால் மனக்கண் தொலைக்காட்சி பாதிப்புத் துயரர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.    

மேற்கண்ட மருந்துகளைத் தவிர மற்ற மருந்துகளையும் , அதன் விசித்திரமான தனிப்பண்பு குறிகளின் மூலம்  வேறுபடுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.


பொதுவாக மனக்கண் தொலைக்காட்சி உணர்விற்கு ஆட்படுபவர்களுக்கு கீழ்க்காணும் துணைக்கூறுகளும் இருக்கும்.

1.          கவனக்குறைவு (ABSENTMINDED)
2.          உளப் பொருள்களிலிருந்து மனம் விலகியிருத்தல்.
             ( ABSTRACTION OF MIND).
3.          ஒன்றை நினைத்து ஏங்குதல் (BROODING)
4.          தன்னுள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல் ( INTROSEPTION)
5.          இறப்பைப்பற்றி முன்னறிவித்தல் அல்லது வரும்தீங்குணர்தல்.
             ( PRESENTIMENT OF DEATH)
6.          பொருள்கள் வித்தியாசமாகத் தெரியும்  (THINGS SEEM STRANGE).

இக்குறிகள் அனைத்தும் ஒரே துயரரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலகூறுகள் கட்டாயம்  இருக்கும். இவற்றையும் நாம் நுணுக்கமாகக் கவனித்து அவர்களுக்குரிய மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும்.  இத்தகைய மனக்கண் தொலைக்காட்சிக்கு உட்ப்படும் துயரர்களை நலப்படுத்த   நாம் உளஆற்றல்வசியத்தை  ( MESMERISM) பயன்படுத்தலாம் என்று    மாமேதை ஹானிமன்  தமது ஆர்கனான் நூலில் ,  மணிமொழிகள்  288-289 களில் குறிப்பிடுகிறார்.  

மருத்துவர்கள் ஜாஹ்ர், (DR.JAHR) ஹார்ட்மென் (DR.HARTMANN), ஹெம்பெல் (DR.HEMPEL) மற்றும் எல்லிக்ட்ஸோன் ( DR. ELLICSTON) போன்றவர்கள் இந்த மனக்கண் தொலைக்காட்சி பற்றியும் , உளஆற்றல்வசியம் பற்றியும் ஆய்வு  செய்து “ஹோமியோபதி  நேரங்கள்” (விவாதங்கள்) என்ற நூலில், பகுதி – I இல் பதிவு செய்து இருக்கிறர்கள் ( HOMEOPTHIC TIMES , VOLUME-1 PAGES 758-761).   

மரு.  எல்லிக்ட்ஸோன், உளஆற்றல் வசியம் ( MESMERISM) மூலம் மனக்கண் தொலைக்காட்சிக்கு உள்ளாகும் பல துயரர்களை தூக்கத்தில் ஆழ்த்தி நலப்படுத்தியதாக பதிவு செய்திருக்கிறார் . உளஆற்றல்வசியத்தை ஒரு மருந்தாகவே கருதலாம் என்று மரு.ஹெம்பெல் அவர்களும்  தமது “HOMEOPATHIC PHARMACOPOEIA”  நூலில் தெரிவித்திருக்கிறார். ஆகவே, மனக்கண் தொலைகாட்சிக்கு ( CLAIROVOYANCE) ஆட்படும் துயரர்களை , அவர்களின் குறிகளுக்குத் தகுந்தவாறு ஒத்த ஹோமியோபதி மருந்துகளின்  மூலமாகவோ அல்லது  உளஆற்றல்வசியம் மூலமாகவோ ஹோமியோபதியர்களால் நலப்படுத்த முடியும்.

இக் கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்:

1.   Homeopathic Medical repertory III Edition- Dr.Robin Murphy
2.   Repertory of the Homeopathic Materia Medica- Dr. J.T.Kent.
3.   A concise Repertory of the Homeopathic Medicines- Dr.S.R.Phatak
4.   Decoding the Rubrics of Mind- Dr. Amulya Ratna Sahoo & Dr. Samaresh Chandra Mishra.
5.   Complete Dynamics –Online Repertory.
6.    Information on websites.(இக்கட்டுரையில் ஏதாவது தவறு அல்லது பிழை இருந்தால் அதைத் தவறாமல் சுட்டிக்காட்டவும் . அத்துடன் புதிதாக இணைக்க வேண்டிய பிற குறிப்புகள் இருந்தாலும் அதையும் பதிவிடவும். ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு அது உதவி புரியும்.  அத்துடன்இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தானாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது; தகுந்த ஹோமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரிலே எடுத்துக் கொள்ளவேண்டும்)