Wednesday 2 September 2015

ஆர்கனான் மணிமொழி-35

§ 35

In order to illustrate this, we shall consider in three different cases, as well what happens in nature when two dissimilar natural diseases meet to in one person, as also the result of the ordinary medical treatment of diseases with unsuitable allopathic drugs, which are incapable of producing an artificial morbid condition similar to the disease to be cured, whereby it will appear that even Nature herself is unable to remove a dissimilar disease already present by one that is un-homoeopathic, even though it be stronger, and just as little is the un-homoeopathic employment of even the strongest medicines ever capable of curing any disease whatsoever.


இதை தெளிவாக்குவதற்கும் , மாறுபட்ட இரண்டு இயற்கை நோய்கள் ஒருவரிடத்தில்  ஒரே நேரத்தில் ஒன்றாகத் தோன்றும் போது அங்கு இயற்கையாகவே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கும் மூன்று வேறுபட்ட நோய் வரலாறுகளை ஆழ்ந்து ஆராயலாம் . அதில் , நலமாக்கப்படவேண்டிய நோயிற்கு தேவையான  ஒத்ததன்மையை உடைய செயற்கை நோயைத் தோற்றுவிக்காத தன்மையையும் , அதற்குப் பொருத்தமில்லாத ஆங்கில மருந்துகளைக் கொடுத்து மருத்துவம் செய்வதால் ஏற்பட்ட முடிவினையும் காண முடியும். அத்தோடு ஒத்ததன்மையற்ற நோயாகவும் அதனால் ஹோமியோபதி முறையற்றதாகவும் இருக்கும் நோயை வலிமைமிக்க இயற்கை அன்னையாலும் கூட நீக்க முடியாமல் இருப்பதையும் பார்க்கலாம். மேலும் ஹோமியோபதி முறைக்கு பொருந்தாத மருந்துகள் ( ஆங்கில மருந்துகள்) அவைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவையாக இருந்த போதும் கூட அவற்றால் எந்த நோயையும் நலப்படுத்த முடியாத நிலையைக் காணலாம்.


No comments:

Post a Comment