Monday 31 August 2015

ஆர்கனான் மணிமொழி-33

§ 33

In accordance with this fact, it is undeniably shown by all experience1 that the living organism is much more disposed and has a greater liability to be acted on, and to have its health deranged by medicinal powers, than by morbific noxious agents and infectious miasms, or, in order words, that the morbific noxious agents possess a power of morbidly deranging man's health that is subordinate and conditional, often very conditional; whilst medicinal agents have an absolute unconditional power, greatly superior to the former.

Foot Note-1:  A striking fact in corroboration of this is, that whilst previously to the year 1801, when the smooth scarlatina of Sydenham still occasionally prevailed epidemically among children, it attacked without exception all children who had escaped it in a former epidemic; in a similar epidemic which I witnessed in Konigslutter, on the contrary, all the children who took in time a very small dose of belladonna remained unaffected by this highly infectious infantile disease. If medicines can protect from a disease that is raging around, they must possess a vastly superior power of affecting our vital force.


இந்த உண்மையைப் பின்பற்றியும், மறுக்க முடியாத எல்லா  பட்டறிவின்  வாயிலாகவும் தெரிந்து கொண்டது என்னவென்றால் மனிதஉடல் இயற்கையாக நோயை உண்டாக்குகிற நச்சுப் பொருள்களாலும் மற்றும் தொற்று நோய் மூலங்களாலும் பாதிக்கப்படுவதைக்காட்டிலும் மருந்துப் பொருள்களின் ஆற்றலால்  தான் அதிகமான அளவிலும் மிக எளிதிலும் தாக்கப்படுகிறது. வேறு விதமாக கூற வேண்டுமென்றால் இயற்கையான நோயாற்றல் , ஆற்றல் குறைந்ததாகவும் , ஒருவித நிபந்தனைக்கு உட்பட்டும், ஏன் மிகவும் நிபந்தனையுடன்  நடந்து கொண்டு மனிதர்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கிறது . ஆனால்  மருந்து பொருள்களின் ஆற்றலோ முற்றிலும் எந்தவிதமான நிபந்தனைக்கும் உட்படாத வகையில் எல்லா சமயங்களிலும் சூழ்நிலைகளிலும் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தன்மையில், இயற்கையான நோயாற்றலை விட அதிக வல்லமையுடையதாக இருக்கின்றன.

அடிக்குறிப்பு -1 

இதை உறுதிபடுத்துவதற்கு கருத்தைக்கவருகிற உண்மை சான்று உள்ளது. 1801 ஆம் ஆண்டு சைடன்காம் நகரில் ( இங்கிலாந்தில்-வடக்கு அயர்லாந்தில்  உள்ள நகரம் ) செங்காய்ச்சல் (அல்லது சிகப்புசுரம் ) அல்லது செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் நோய் சிறுவர்களை அவ்வப்போது தாக்குவதாக இருந்தது. அதுவே தொற்று நோயாகப் பரவிய போது ஏற்கனவே அதிலிருந்து தப்பிய சிறுவர்கள் யாரையும் விட்டு வைக்காமல் அந்நோய் தாக்கியது. அதற்கு மாறாக கோனிக்சுலட்டர் என்ற நகரில் ( ஜெர்மனியில் உள்ள நகரம் ) அந்நோய் , தொற்றுநோயாகப் பரவியபோது சரியான நேரத்தில் பெல்லடோன்னா மருந்தை மிகச் சிறிதளவே உட்கொண்ட சிறுவர்கள் யாரையுமே குழந்தைகளைத் தாக்கும் அந்தத் தொற்று நோய்  தாக்கவில்லை என்பதற்கு நானே ( ஹானிமன் ) சாட்சியாக உள்ளேன். சுற்றுப்புறப்பகுதிகளில் எல்லாம் சீறிப்பாய்ந்து தாக்குகிற ஒரு நோயிடமிருந்து மருந்துகள் பாதுகாக்கின்றன என்றால் அது நமது உயிராற்றலை  மிகப் பெரிய அளவில் தாக்கும் மேம்பட்ட ஆற்றலைக் கொண்டதாகவே இருக்கும்.   


No comments:

Post a Comment