Wednesday 26 August 2015

ஆர்கனான் மணிமொழி-32

§ 32

But it is quite otherwise with the artificial morbific agents which we term medicines. Every real medicine, namely, acts at all times, under all circumstances, on every living human being, and produces in him its peculiar symptoms (distinctly perceptible, if the dose be large enough), so that evidently every living human organism is liable to be affected, and, as it were, inoculated with the medicinal disease at all times, and absolutely (unconditionally), which, as before said, is by no means the case with the natural diseases.



மருந்துகள் என்று நாம் சொல்லால் குறிப்பிடுவது எதுவென்றால் செயற்கையான நோய் குறிகளை உண்டாக்கும் தன்மையைதான் மருந்து என்கிறோம். ஒவ்வொரு உண்மையான மருந்தும் எல்லா சமயங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் உயிருள்ள எல்லா மனிதர்களிடமும் தவறாமல் வேலை செய்து மனித உடலில் தனக்கே உரியதான வினோதமான நோய்குறிகளைத் தோற்றுவிக்கிறது ( மருந்தின் அளவு அதிகமாக இருக்கும் போது அதன் பாதிப்பு தெளிவாக அறியகூடியதாக இருக்கிறது). அதனால் ஒவ்வொரு மனித உயிரும் இத்தகைய பாதிப்படைந்து மருந்தினால் ஏற்படும் நோய்த்தன்மை உடலில் செலுத்தப்பட்டதைப் போல் எல்லா நேரங்களிலும் (நிபந்தனையற்ற வகையில்) பாதிப்பிற்கு ஆட்படத்தக்க நிலையில் உள்ளதை தெளிவாக அறியமுடிகிறது. ஏற்கனவே கூறியது போல் , இந்த நிலை இயற்கை நோய் பாதிப்புகளுக்கு இல்லை.

No comments:

Post a Comment