Sunday, 20 May 2012

ஆர்கனான் மணிமொழி-1


மரு.ஹானிமன் எழுதிய ஆர்கனான் என்ற தத்துவ நூலில் 294 மணிமொழிகள் உள்ளன. அதன் ஆங்கில மூலத்தையும், தமிழ் வடிவத்தையும் இப்பொழுது பார்க்கலாம்.

The physician's high and only mission is to restore the sick to health, to cure, as it is termed-1.


Foot Note:1-His mission is not, however, to construct so-called systems, by interweaving empty speculations and hypotheses concerning the internal essential nature of the vital processes and the mode in which diseases originate in the interior of the organism, (whereon so many physicians have hitherto ambitiously wasted their talents and their time); nor is it to attempt to give countless explanations regarding the phenomena in diseases and their proximate cause (which must ever remain concealed), wrapped in unintelligible words and an inflated abstract mode of expression, which should sound very learned in order to astonish the ignorant - whilst sick humanity sighs in vain for aid. Of such learned reveries (to which the name of theoretic medicine is given, and for which special professorships are instituted) we have had quite enough, and it is now high time that all who call themselves physicians should at length cease to deceive suffering mankind with mere talk, and begin now, instead, for once to act, that is, really to help and to cure.

தன்னிடம் சிகிச்சை பெற வருகிறவர்களின் நோய்களை வேருடன் களைந்து , இது தான் நலமென்று சொல்லாற் குறிப்பீட்டுக் கூறியது போல் மீண்டும் அவர்கள் நோயற்ற வாழ்வு வாழ வழி செய்வது ஒன்றே மருத்துவரின் உயர்ந்த பணி ; கடமையுமாகும்.

அடிக்குறிப்பு-1: ஒரு மருத்துவரின் மேற்கொண்ட பணி (Mission) எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் ஓர் உயிரியின் கண்ணுக்கு புலப்படாத உள்ளார்ந்த உயிர் இயக்கத்தில் நோய் எவ்வாறு தோண்டுகிறது, உயிர் இயக்கம் பற்றிய சாராம்சமான இயற்கைதன்மை என்ன எனபது பற்றிய வெற்றுக் கருத்துகளையும் ஊகங்களையும் புனைந்து பழையமாதுரியான மருத்துவமுறைகளை கட்டி அமைப்பதாக  இருக்ககூடாது .( அவ்வாறான ஊகங்களின் மேல் நிறைய மருத்துவர்கள் தங்களது திறமையையும் நேரத்தையும் ஆர்வமுடன் வீனடிதுள்ளர்கள்). நோய், அதற்கான உத்தேசமான காரணம் (காரணம் என்பது எப்போதும் மூடுமந்திரமாகவே உள்ளது) மற்றும் நிலைமைகள் பற்றி ஏராளமான விளக்கங்களைச் சொல்லவும் , ஆறிவுக் கூர்மையற்ற சொற்களால் பொதிந்து விஸ்தாரமான அனால் புரியாத பூடகமான வழிமுறையில் வெளிபடுத்தவும் முயற்சிப்பதுதானா ஒரு மருத்துவரின் இயக்கம்?. உதவிக்காக வெறுமனே பெருமூச்சு விட்டு ஏங்கிக்  கொண்டிருக்கும்  உடல் நலிந்த அப்பாவி மனிதகுலத்தை வியப்படையச் செய்ய மேதாவித்தனமாக முயற்சி செய்வதாகும்.அப்படிப்பட்ட பகர்கனவுக்காரர்களின்  (அவர்களுக்காக புத்தகத்திலுள்ள மருத்துவ பெயர்களும் தனிச்சிறப்பான பேராசிரியர் பட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன ) நம்மிடையே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களை மருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லலுறும் மனித குலத்தை வெறும் பேச்சால் மட்டும் ஏய்க்கும் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள இது நல்ல சிறந்த தருணமாகும். உண்மையாகவே உதவி செய்யவும் நலபடுத்தவும் இப்பொழுதே தொடங்கவேண்டும் ; நலமாக்குவதுபோல் நடிப்பதை விட்டுவிட வேண்டும்.