Saturday 13 June 2020

ஆர்கனான் மணிமொழி-87


§ 87

And thus the physician obtains more precise information respecting each particular detail, but without ever framing his questions so as to suggest the answer to the patient-82, so that he shall only have to answer yes or no; else he will be misled to answer in the affirmative or negative something untrue, half true, or not strictly correct, either from indolence or in order to please his interrogator, from which a false picture of the disease and an unsuitable mode of treatment must result.

Foot Note-82:   For instance the physician should not ask, Was not this or that circumstance present? He should never be guilty of making such suggestions, which tend to seduce the patient into giving a false answer and a false account of his symptoms.

ஆர்கனான் மணிமொழி-87
§ 87

துயரர் ஆய்வு-4


இவ்வாறு ஒவ்வொரு நோய்க் குறிப்பிற்கும்  தேவையான முக்கியமான தகவல்களை அந்த மருத்துவர் கேட்டறிதல் வேண்டும் , ஆனால் நோயாளி விடை தருவதற்கு -82  எதுவாக,  அதாவது தான் விரும்பும் பதிலை சொல்லும் விதமாக , அதாவது அவர் “ஆம்” அல்லது “இல்லை”  என்று கூறும் விதமாக மருத்துவர் அவருடைய கேள்விகளை அமைத்துக் கொள்ளக் கூடாது;  இல்லையெனில் நோயாளி , மருத்துவரின் கருத்திற்கு உடன்படும் விதமாகவோ அல்லது உண்மைக்கு மாறான எதிர்மறையான  செய்திகளையே , பாதி உண்மையாகவும் அல்லது முற்றிலும் சரியான பதிலாக இல்லாமலும், அல்லது விசாரணையாளரை (மருத்துவரை ) திருப்திப்படுத்தும் விதமாகவோ பதில் சொல்ல நேரிடும், அதன் வழியாக நோயைப்பற்றிய தவறான வடிவம் வெளிப்பட்டு பொருத்தமில்லாத மருத்துவச் சிகிச்சை முறையாக முடிந்து விடும். 


அடிக்குறிப்பு-82:
உதாரணமாக,   அப்போது இந்தச் சூழ்நிலை  அல்லது அந்த சூழ்நிலை இல்லையா? என்று மருத்துவர் கேட்கக்கூடாது, அவர் நோயாளிக்கு இதுபோன்ற ஆலோசனைகளை எடுத்துரைக்கும் குற்றத்திற்கு ஒரு போதும் ஆளாகக்கூடாது,  அப்படி செய்தால் அந்த   நோயாளி  தவறான விடையை தருபவராகவும்   மற்றும்  தமது  அறிகுறிகளைப் பற்றி  தவறான கணக்கையும் அளிக்க நேரிடும் .


No comments:

Post a Comment