Saturday, 13 June 2020

ஆர்கனான் மணிமொழி-92



§ 92

But if it be a disease of a rapid course, and if its serious character admit of no delay, the physician must content himself with observing the morbid condition, altered though it may be by medicines, if he cannot ascertain what symptoms were present before the employment of the medicines, - in order that he may at least form a just apprehension of the complete picture of the disease in its actual condition, that is to say, of the conjoint malady formed by the medicinal and original diseases, which from the use of inappropriate drugs is generally more serious and dangerous than was the original disease, and hence demands prompt and efficient aid; and by thus tracing out the complete picture of the disease he will be enabled to combat it with a suitable homoeopathic remedy, so that the patient shall not fall a sacrifice to the injurious drugs he was swallowed.

ஆர்கனான் மணிமொழி-92
§ 92

துயரர் ஆய்வு-9


ஆனால் அந்த நோய் மிக விரைவாக  பாதிப்பை உண்டாக்குவதாகவும் , அதன் ஆபத்தான தன்மை சிறிதளவும் தாமதத்துக்கும் இடம் தராத நிலையில் இருக்கும் போது,  நோயாளி மற்ற மருந்துகளை உட்கொள்வதற்கு  முன் அவரிடம் காணப்பட்ட  நோய்க்குறிகளைத் மருத்துவர் உறுதி செய்து கொள்ள முடியாத நிலையில் ,  நோயாளியிடம் தென்படும் நோய்க்குறிகளை அவை மற்ற மருந்துகளால் மாற்றப்பட்டிருந்தாலும் உன்னிப்பாக கவனித்து அறிந்து  கொண்டு மருத்துவர் திருப்தியடைய வேண்டும். அது எவ்வாறு என்றால் ,  மருந்துகளாலும் முதலில் வந்த நோயினாலும் உண்டாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டு நோயின் முழு உருவத்தையும்  அதன் தன்மையையும் அவரால்  அறிந்து கொள்ள முடியும் . இத்தகைய நோய்நிலை பொருத்தமற்ற மருந்துகளினால் உருவாகியதாகவும், உண்மையான நோயைக்காட்டிலும், பொதுவாக தீவிரமானதாகவும் மற்றும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. இவ்வாறு நோயின் முழு உருவத்தையும் மருத்துவர் அறிந்து கொள்வதால் , அதை எதிர்த்து போராடுவதற்குப் பொருத்தமான ஹோமியோபதி மருந்தை அவரால் பயன்படுத்தவும் முடியும், அதனால் நோயாளி தான் உட்கொண்ட தீங்கிழைக்கின்ற  மருந்துகளின் விளைவால் உயிர் பலியாவதிலிருந்து   அவரைத் தடுக்கவும் முடியும்.



No comments:

Post a Comment