Saturday, 13 June 2020

ஆர்கனான் மணிமொழி-93


§ 93

If the disease has been brought on a short time or, in the case of a chronic affection, a considerable time previously, by some obvious cause, then the patient - or his friends when questioned privately - will mention it either spontaneously or when carefully interrogated-86



Foot Note-86:  Any causes of a disgraceful character, which the patient or his friends do not like to confess, at least not voluntarily, the physician must endeavor to elicit by skilfully framing his questions, or by private information. To these belong poisoning or attempted suicide, onanism, indulgence in ordinary or unnatural debauchery, excess in wine, cordials, punch and other ardent beverages, or coffee, - over-indulgence in eating generally, or in some particular food of a hurtful character, - infection with venereal disease or itch, unfortunate love, jealousy, domestic infelicity, worry, grief on account of some family misfortune, ill-usage, balked revenge, injured pride, embarrassment of a pecuniary nature, superstitious fear, - hunger, - or an imperfection in the private parts, a rupture, a prolapse, and so forth.


ஆர்கனான் மணிமொழி-93
§ 93

துயரர் ஆய்வு-10


ஒரு நோய், அது  குறுகிய காலத்தில் தோன்றியிருந்தாலும் அல்லது , நாட்பட்ட நோய் வகையைச் சேர்ந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே , அல்லது ஒரு குறிப்பிட்ட காரணத்தால் அந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது, அந்த நோயாளியையோ அல்லது அவரது நண்பர்களையோ ( உறவினர்களையும்)  தனிமையான முறையில் அழைத்துக் கேட்டால் அவர்கள் தாமாகவே சொல்லிவிடுவார்கள் அல்லது சாமார்த்தியமாகக் குறுக்குக் கேள்விகளைக் கேட்டும் அறியலாம்-86.


அடிக்குறிப்பு-86:


நோயாளியோ   அல்லது அவரது நண்பர்களோ  கூற விரும்பாத அல்லது  குறைந்தபட்சம் தானாக முன்வந்து கூற முடியாத அவகாரமான காரணங்கள் இருக்கக் கூடும்  , அப்போது மருத்துவர் தனது கேள்விகளை திறமையாக வடிவமைப்பதன் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட தகவல்களாலோ அவற்றை  வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக ; விஷம் அருந்துதல் அல்லது தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல்,  இயற்கைக்கு மாறான முறைகளில் சிற்றின்பம் பெறுதல் அளவு மீறி சிற்றின்பத்தில் ஈடுபடுதல். அளவுக்கு அதிகமான முந்திரி சாராயம், ஊக்கம் தரும் உணவு வகை, மது கலந்த ஒருவகை பானம் மற்றும்   உற்சாகம் தரும் குளிர்பானங்கள் ஆகியவைகளை உட்கொள்ளுதல், அல்லது காபி , எப்போதும்  தேவைக்கு அதிகமாக சாப்பிடுதல் அல்லது உடல் நலத்தைக் கெடுக்கும் சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் ,   துன்மார்க்க நோய்களைச் சம்பாதித்துக் கொண்டிருத்தல், அல்லது சொறி-சிரங்கு ,  நிறைவேறாத காதல், பொறாமை, குடும்பத்தொல்லைகள், கவலை, குடும்பத்தில் நேர்ந்த நஷ்டத்தினால் வருத்தம், கௌரவமாக நடத்தப்படாமை, மதிப்பை இழத்தல், வஞ்சம் தீர்க்க முடியாமல் போகுதல், குடும்ப உறவுகளால் அவமானப்படுதல்,   பண இழப்புகளால் சங்கடமான நிலைமை,  மூட நம்பிக்கை காரணமாய் ஏற்படும் பயம், பசி, பிறப்பு உறுப்புகள் சரிவர அமைந்திராமை, ஏதோ ஓர் உறுப்பு பிதுங்கி இருத்தல், இடம் நழுவி இருத்தல் முதலிய பல அந்தரங்கமான விவரங்களை மருத்துவர் சாமார்த்தியமாய்க் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment