§ 90
When
the physician has finished writing down these particulars, he then makes a note
of what he himself observes in the
patient-85, and ascertains how much of that was peculiar to the patient in
his healthy state.
Foot
Note-85: For example, how the patient behaved during
the visit - whether he was morose, quarrelsome, hasty, lachrymose, anxious,
despairing or sad, or hopeful, calm etc. Whether he was in a drowsy state or in
any way dull of comprehension; whether he spoke hoarsely, or in a low tone, or
incoherently, or how other wise did he talk? what was the color of his face and
eyes, and of his skin generally? what degree of liveliness and power was there
in his expression and eyes? what was the state of his tongue, his breathing,
the smell from his mouth, and his hearing? were his pupils dilated or
contracted? how rapidly and to what extent did they alter in the dark and in
the light? what was the character of the pulse? what was the condition of the
abdomen? how moist or hot, how cold or dry to the touch, was the skin of this
or that part or generally? whether he lay with head thrown back, with mouth
half or wholly open, with the arms placed above the head, on his back, or in
what other position? what effort did he make to raise himself? and anything
else in him that may strike the physician as being remarkable.
ஆர்கனான் மணிமொழி-90
§ 90
துயரர் ஆய்வு-7
மருத்துவர் இந்த விவரங்களை எழுதி முடித்த பிறகு , நோயாளியிடம் அவர் தாமே
கவனித்தவற்றையும் குறித்துக் கொண்டு-85 , மேலும் அவை நோயாளியின் ஆரோக்கியமான
நிலையில் எந்த அளவிற்கு விசித்திரமான (
அசாதாரண) குறியாக இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அடிக்குறிப்பு-85:
உதாரணமாக, தன்னைப் பார்க்க வந்த போது நோயாளி எவ்வாறு நடந்துகொண்டார் - அவர்
சிடுசிடுப்புடன் நடந்து கொண்டாரா , சண்டை பிடிக்கிற மனநிலையில் இருந்தாரா , அவசரப்பட்டாரா , கண்ணீர் வடித்தாரா ,
பதட்டமாக இருந்தாரா , முழுதும் நம்பிக்கையற்ற நிலையில் அல்லது சோகமாக இருந்தாரா , அல்லது
நம்பிக்கைமிக்கவரா , அமைதியானவரா போன்றவற்றை கவனிக்க வேண்டும் . அவர் மிகவும் களைத்துப்போய்
சோர்வுற்ற நிலையில் (தூக்கக் கலக்கத்தில்) இருந்தாரா அல்லது
ஊக்கமில்லாமலும் எதையும் புரிந்து
கொள்ளும் மனநிலையில் இல்லாமலும் இருந்தாரா
, அல்லது கரகரப்பான குரலில் , அல்லது
மெதுவான குரலில் , அல்லது முற்றிலும் பொருத்தமற்ற
முறையில் பேசினாரா அல்லது வேறு எவ்வாறு
பேசினார்? பொதுவாக அவரது முகம் மற்றும் கண்கள் மற்றும் அவரது தோலின் ஆகியவை என்ன நிறத்தில் இருந்தன ?
அவர் பேசிய போது எந்த அளவு
உயிர்ப்போடும் மற்றும் கண்களில்
ஒளி (சக்தி) இருந்தது? அவரது நாவின் நிலை, சுவாசம், வாயிலிருந்து வரும் வாசனை மற்றும் செவிப்புலன்
எவ்வாறு இருந்தன ? அவரது கண்விழிகள் விரிந்து பெரியதாகியதா அல்லது சுருங்கியதா ? அவை இருட்டிலும்
வெளிச்சத்திலும் எந்த அளவுக்கு
விரைவாகவும் சூழலுக்கு தகுந்தவாறு செயல் புரிந்தன அல்லது மாறியது ? நாடித் துடிப்பின் தன்மை என்ன? அடிவயிற்றின் நிலை என்ன? அவரது உடலை
தொட்டபோது அது ஈரப்பதமாக அல்லது சூடாக
இருந்ததா? , குளிர்ந்த அல்லது உலர்ந்த
நிலையில் இருந்ததா? , தோலின் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது பாதிக்கப்படாத பகுதி பொதுவாக எப்படி இருந்தது? அவர் தூங்கும்
போது தலையை பின்புறமாக கீழே வைத்து
தூங்கினாரா? , வாய் பாதி
திறந்திருந்ததா அல்லது முழுவதுமாக திறந்திருந்ததா? , கைகளை தலைக்கு மேலே, அல்லது
முதுகில், அல்லது வேறு எந்த நிலையில் வைத்துக் கொள்வார் ? படுத்த நிலையிலிருந்து எழுந்த அவர்
என்ன முயற்சி செய்வார் ? மற்றும் அவரிடத்தில்
தென்பட்ட மற்ற குறிப்பிடத்தக்க குறிகளையும் மருத்துவர் குறித்துக் கொள்ளவேண்டும் .
No comments:
Post a Comment