§ 95
In chronic
disease the investigation of the signs of disease above mentioned, and of all
others, must be pursued as carefully and circumstantially as possible, and the
most minute peculiarities must be attended to, partly because in these diseases
they are the most characteristic and least resemble those of acute diseases,
and if a cure is to be affected they cannot be too accurately noted; partly
because the patients become so used to their long sufferings that they pay
little or no heed to the lesser accessory symptoms, which are often very
pregnant with meaning (characteristic) - often very useful in determining the
choice of the remedy - and regard them almost as a necessary part of their
condition, almost as health, the real feeling of which they have well-nigh
forgotten in the sometimes fifteen or twenty years of suffering, and they can
scarcely bring themselves to believe that these accessory symptoms, these
greater or less deviations from the healthy state, can have any connection with
their principal malady.
ஆர்கனான் மணிமொழி-95
§ 95
துயரர் ஆய்வு-12
நீண்டகால அல்லது நாட்பட்ட நோயில், மேலே குறிப்பிட்டுள்ள நோயின்
அறிகுறிகளையும் , மற்றும் ஏனைய பிறவற்றையும் , முடிந்தவரை கவனமாகவும் நுணுக்கமான
விளக்கத்துடனும் ஆய்வை மேற்கொள்வதுடன் , மேலும் மிக மிக நுட்பமாக இருக்கும்
தன்மைகளையும் கவனிக்கப்பட வேண்டும், ஏனென்றால்
இத்தகைய நோய்களில் அவையே மிகவும் தனிச்சிறப்புப் பண்புகளுடனும் மற்றும் தீவிர நோய்களுடன் மிக்க குறைந்த அளவிலேயே ஓத்திருப்பவையாகவும் , மேலும் அங்கு ஒரு
நலப்படுத்துதல் நிகழ வேண்டுமானால் அவற்றை மிகத் துல்லியமாகக் கண்டறியப்பட வேண்டும்
என்பது ஒரு புறமாகவும் ; நோயாளிகள் தங்களது நீண்ட கால நோய்த் துன்பங்களுக்கு மிகவும்
பழக்கமாகிவிட்டதால், அவர்கள் தங்களது குறைந்த அளவிலான துணை அறிகுறிகளில் சிறிதும்
கவனம் கொள்வதில்லை அல்லது மிக சிறிதளவே கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர் என்பது இன்னொரு
புறமாகவும் காணப்படுகின்றன, இத்தகைய ஆழ்ந்த கருத்துக்களையும் விளக்கத்தையும் (
தனிச்சிறப்பு பண்புகள்) தெரிந்து கொண்டால் தான் சரியான மருந்தைத் தேர்வு செய்வதற்கு பெரும்பாலும்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது- ஆனால் நாட்பட்ட நோயில் தாக்குண்டவர்கள் அவற்றை தங்களுடைய அந்த நோய் நிலைகளில் இருக்க வேண்டிய
ஒரு பகுதியாகவும் , அதுவே பெரும்பாலும்
ஆரோக்கியம் எனவும் கருதிக் கொள்கிறார்கள்,
அவற்றால் ஏற்பட்ட உண்மையான உணர்வுகளை கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது ஆண்டுகால நோய்த்துன்பத்தால்
அவர்கள் மறந்திருக்கக்கூடும் , மேலும் இந்த துணை அறிகுறிகள் , அதாவது
ஆரோக்கியமான நிலையிலிருந்து அதிகமாகவோ
அல்லது குறைவாகவோ ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களுடைய முதன்மையான
நோயுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கலாம் என்பதை அவர்கள் நம்ப
முடியாதவர்களாக இருப்பார்கள்.
No comments:
Post a Comment