§ 89
When the patient (for it is on
him we have chiefly to rely for a description of his sensations, except in the
case of feigned diseases) has by these details, given of his own accord and in
answer to inquiries, furnished the requisite information and traced a tolerably
perfect picture of the disease, the physician is at liberty and obliged (if he
feels he has not yet gained all the information he needs) to ask more precise, more special questions.84
Foot
Note-84: For
example, how often are his bowels moved? What is the exact character of the
stools? Did the whitish evacuation consist of mucus or faeces? Had he or had he
not pains during the evacuation? What was their exact character, and where were
they seated? What did the patient vomit? Is the bad taste in the mouth putrid,
or bitter, or sour, or what? before or after eating, or during the repast? At
what period of the day was it worst? What is the taste of what is eructated?
Does the urine only become turbid on standing, or is it turbid when first
discharged? What is its color when first emitted? Of what color is the
sediment? How does he behave during sleep? Does he whine, moan, talk or cry out
in his sleep? Does he start during sleep? Does he snore during inspiration, or
during expiration? Does he lie only on his back, or on which side? Does he
cover himself well up, or can he not bear the clothes on him? Does he easily
awake, or does he sleep too soundly? How often does this or that symptom occur?
What is the cause that produces it each time it occurs? does it come on whilst
sitting, lying, standing, or when in motion? only when fasting, or in the
morning, or only in the evening, or only after a meal, or when does it usually
appear? When did the rigor come on? was it merely a chilly sensation, or was he
actually cold at the same time? if so, in what parts? or while feeling chilly,
was he actually warm to the touch? was it merely a sensation of cold, without
shivering? was he hot without redness of the face? what parts of him were hot
to the touch? or did he complain of heat without being hot to the touch? How
long did the chilliness last? how long the hot stage? When did the thirst come
on - during the cold stage? during the heat? or previous to it? or subsequent to
it? How great was the thirst, and what was the beverage desired? When did the
sweat come on - at the beginning or the end of the heat? or how many hours
after the heat? when asleep or when awake? How great was the sweat? was it warm
or cold? on what parts? how did it smell? What does he complain of before or
during the cold stage? what during the hot stage? what after it? what during or
after the sweating stage?
In women, note the character of
menstruation and other discharges, etc.
ஆர்கனான் மணிமொழி-89
§ 89
துயரர் ஆய்வு-6
நோயாளி (நோய்கள் இருப்பது போன்று நடிக்கும் நிலை தவிர , மற்ற இடங்களில் அவர்
கூறும் நோய்க் குறிப்புகள் மற்றும்
உணர்வுகள் ஆகியவற்றை நாம் பிரதானமாக சார்ந்திருக்க வேண்டியுள்ளது ) தாமாக முன்வந்து அவரது சொந்த விருப்பப்படி கூறிய இக்குறிப்புகளாலும்
மற்றும் விசாரிக்கும் போது அவர் கொடுத்த பதில்கள்
மூலமாகவும் , தேவையான தகவல்களை பெற்று , அவரது நோயைப் பற்றிய படத்தை
முடிந்த அளவுக்கு கண்டுபிடிக்க வேண்டும் , அத்தோடு மருத்துவருக்கு (அவர் தனக்குத்
தேவையான அனைத்து தகவல்களையும் இன்னும் பெறவில்லை என்று அவர் நினைத்தால்) மேலும் சில
துல்லியமான, தனிப்பட்ட பிரத்யேகமான
கேள்விகளைக் கேட்டறியும் உரிமையும் மற்றும் கடமையும் இருக்கிறது-84 .
அடிக்குறிப்பு-84:
உதாரணமாக, நோயாளி எத்தனை முறை மலம்
கழிப்பவராக இருக்கிறார் ? மலத்தின் சரியான
தன்மை என்ன? அவர் வெளியேற்றும் வெண்மையாக
மலத்தில் சளி உள்ளதா அல்லது மலம்
உள்ளதா ? மலத்தை வெளியேற்றும் போது வலி உள்ளதா அல்லது வலி இல்லையா ? அவ்வலிகளின்
சரியான தன்மை என்ன, அவ்வலிகள் எங்கே
காணப்படுகின்றன ? அந்த நோயாளி என்ன வாந்தி எடுத்தார் ? அவரது வாயில்
உள்ள மோசமான சுவை அழுகல் வாடையுள்ளதா அல்லது
கசப்பானதா, அல்லது புளிப்பானதா,
அல்லது வேறு என்ன சுவை ? சாப்பிடுவதற்கு முன் அல்லது பிறகு, அல்லது சாப்பிடும்
போது என்ன சுவை ? ஒரு நாளின் எந்த நேரத்தில் அது மோசமாக இருந்தது? வயிற்றிலிருந்து வெளியேற்றப்படும் ஏப்பத்தின் சுவை என்ன? நின்று
கொண்டு சிறுநீர் கழிக்கும் போது மட்டுமே
கலங்கலாக இருக்கிறதா, அல்லது முதலில்
வெளியேற்றப்படும் போது அது கலங்கலாக
இருக்கிறதா? முதலில் சிறுநீர் கழிக்கும் போது அதன் நிறம் என்ன? சிறுநீரில் வெளிவந்த படிமம்
அல்லது வண்டல் எந்த நிறத்தில் உள்ளது? தூக்கத்தின் போது அவர் எப்படி
நடந்துகொள்வார்? நோயாளி
தூக்கத்தில் சிணுங்குகிறாரா, புலம்புகிறாரா, பேசுவாரா அல்லது அழுகிறாரா ? அல்லது
அவர் தூக்கத்தின் போது திடுக்கிடுகிறாரா ? அந்த நோயாளி
தூக்கத்தில் மூச்சை இழுக்கும் போது குறட்டை விடுகிறாரா அல்லது மூச்சை வெளியே விடும் போது குறட்டை
விடுகிறாரா? அவர் தனது முதுகுப் பக்கமாக படுக்கிறாரா , அல்லது வேறு எந்தப் பக்கமாக படுக்கிறார் ?
அவர் தம்மை முழுமையாகப் போர்த்திக் கொள்கிறாரா , அல்லது அவர் தன் மீது துணிபடுவதை அவரால் தாங்க முடியவில்லையா? அவர் தூக்கத்திலிருந்து எளிதில் விழித்துக் கொள்கிறாரா , அல்லது அவர்
மிகவும் நன்றாக தூங்குகிறாரா? தூங்கி எழுந்த பிறகு அவர்
எப்படி உணருகிறார் ? இந்த குறிப்பிட்ட அறிகுறி அல்லது அந்த அறிகுறி
எப்போதெல்லாம் ஏற்படுகிறது? ஒவ்வொரு
முறையும் அக்குறிகள் உருவாக காரணமாக இருப்பது
என்ன? அந்த அறிகுறி
உட்கார்ந்திருக்கும் போது ,
படுத்திருக்கும் போது, நிற்கும்போது அல்லது இயக்கத்தில் இருக்கும்போது வருகிறதா ? அல்லது பசியோடு இருக்கும்போது, அல்லது காலையில், அல்லது
மாலையில் மட்டுமே, அல்லது உணவுக்குப் பிறகு மட்டுமே, அல்லது பொதுவாக எப்போது அந்த
குறிகள் தோன்றுகிறது ? அந்த குளிர் நடுக்கம்
எப்போது வந்தது? இது வெறுமனே ஒரு குளிர்ச்சியான உணர்வாக இருந்ததா, அல்லது அதே நேரத்தில் அவர்
உண்மையில் குளிராக இருந்தாரா? அப்படியானால், உடம்பின் எந்த பகுதிகளில் அது
உண்டானது ? அல்லது அவர் குளிர்ச்சியாக உணரும் போது ,
உண்மையில் தொடுவதற்கு சூடாக (காய்ச்சல்) இருந்தாரா? அது குளிர்நடுக்கம்
இல்லாமல் , வெறும் குளிர்ச்சியான உணர்வு
மட்டும் இருந்ததா? அவர் முகம் சிவக்காமலேயே உடம்பு
சூடாக (காய்ச்சல்) இருந்ததா ? அவரின் எந்த பகுதிகள் தொடுவதற்கு
சூடாக இருந்தன? அல்லது அவரது உடல் தொடுவதற்கு சூடாக இல்லாமல் சூடாக இருப்பதாக அவர் புகார் செய்தாரா? அவரது உடலில் குளிர்ச்சியானது எவ்வளவு காலம் நீடித்தது? சூடான நிலை (காய்ச்சல்)
எவ்வளவு காலம் இருந்தது ? அவருக்கு தாகம் எப்போது வந்தது - குளிர் நிலையின் போதா
? உடல் சூடாக (காய்ச்சல்) இருந்த போதா ? அல்லது அதற்கு முன்பாகவா ? அல்லது அதைத் தொடர்ந்து வந்ததா ? அவருக்கு தாகம் எவ்வளவு அதிகமாக இருந்தது , மற்றும் குடிப்பதற்கு எவ்வளவு
அளவுத் தண்ணீரை விரும்பினார் ? வியர்வை எப்போது
தோன்றியது - சூடான நிலையின் (காய்ச்சல்) தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ? அல்லது உடல் சூடான பிறகு எத்தனை மணி
நேரத்திற்கு பிறகு வியர்வை ஏற்பட்டது ? தூங்கும்போது ஏற்பட்டதா அல்லது விழித்திருக்கும் போது ஏற்பட்டதா ?
வியர்வை எந்த அளவிற்கு அதிகமாக
இருந்தது ? அது சூடாக இருந்ததா அல்லது குளிர்ந்து
இருந்ததா? உடம்பின் எந்த பகுதிகளில் வியர்த்தது ? அதன் வாசனை (நாற்றம்) எப்படி இருந்தது ? குளிர் நிலைக்கு முன்பாகவோ அல்லது குளிர்நிலையின் போதோ என்ன தொல்லைகள் பற்றி
புகார் கூறுகிறார்? சூடான நிலையின் போது என்ன
நடக்கிறது ? அதன் பிறகு என்ன? வியர்வை ஏற்படும் போதும் அல்லது அதற்குப் பிறகும் என்ன நடக்கிறது ?
பெண்களில், மாதவிடாய்ப் போக்கு மற்றும் பிற வெளிப்பாடுகள் போன்றவற்றின் (வெள்ளைப்பாடு முதலிய ) தன்மைகளையும்
குறித்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment