§
88
If in these
voluntary details nothing has been mentioned respecting several parts or
functions of the body or his metal state, the physician asks what more can be
told in regard to these parts and these functions, or the state of his
disposition or mind-83, but in doing this he only makes use of general
expressions, in order that his informants may be obliged to enter into special
details concerning them.
Foot
Note-83: For example what was the character of his
stools? How does he pass his water? How is it with his day and night sleep?
What is the state of his disposition, his humor, his memory? How about the
thirst? What sort of taste has he in his mouth? What kinds of food and drink
are most relished? What are most repugnant to him? Has each its full natural
taste, or some other unusual taste? How does he feel after eating or drinking?
Has he anything to tell about the head, the limbs or the abdomen?
ஆர்கனான் மணிமொழி-88
§ 88
துயரர் ஆய்வு-5
நோயாளி
தாமாக கூறிய இந்த விவரங்களில் , அவரது உடல்நலம் சம்பந்தமான பல
உண்மைகள் அல்லது உடலின் செயல்பாடுகள் அல்லது அவரது மன நிலை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை
எனில், பாதிப்பிற்குள்ளான அவரது
உடலின் பாகங்கள் பற்றியும் மற்றும்
அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அல்லது அவருடைய மனதின் ஒழுங்கமைதி நிலை-83 ( அப்போதைய மனநிலை ) பற்றி மேலும் என்ன சொல்ல முடியும் என்று மருத்துவர்
கேட்க வேண்டும் ; ஆனால் இதைச் செய்யும்
போது நோயாளி தமது நோய் சம்பந்தமான தகவல்களையும் அவருக்குத்
தொல்லை தரும் சிறப்பு விவரங்களையும்
வெளிப்படுத்தும் நிலைக்கு தகுந்தவாறு பொதுவான வகையில் மருத்துவர் தமது சொற்களைப் பயன்படுத்த
வேண்டும் .
அடிக்குறிப்பு-83:
உதாரணமாக
, அவரது மலத்தின் தன்மை அல்லது மலம் கழித்தல் எப்படி இருக்கிறது ? , அவருடைய
சிறுநீர்க் கழிப்பு எவ்வாறு உள்ளது ?,
அவருடைய பகல் மற்றும் இரவு
தூக்கம் எப்படி இருக்கிறது?, அவரது மனதின்
ஒழுங்கமைதி நிலை, நகைச்சுவை, நினைவாற்றல் ஆகியவைகள் எப்படி உள்ளன ? , தாகம் எப்படி உள்ளது ?, அவரது வாயில் என்ன மாதிரியான சுவை இருக்கிறது? எந்த
வகையான உணவு மற்றும் பானங்களை அவர்
மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார் ? அவருக்கு மிகவும் பொருந்தாத அல்லது
விரும்பத்தகாதது என்ன?, ஒவ்வொன்றும் அதன்
முழு இயற்கையான சுவையுடன் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் அசாதாரண சுவை கொண்டதா? ,
சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு அவருக்கு எப்படி இருக்கும்? , தலை,
கை-கால்கள் அல்லது அடிவயிறு பற்றி அவர்
ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கிறதா ?.
No comments:
Post a Comment