§ 99
On the whole,
the investigation of acute diseases, or of such as have existed but a short
time, is much the easiest for the physician, because all the phenomena and
deviations from the health that has been put recently lost are still fresh in
the memory of the patient and his friends, still continue to be novel and
striking. The physician certainly requires to know everything in such cases
also; but he has much less to inquire into; they are for the most part
spontaneously detailed to him.
ஆர்கனான் மணிமொழி-99
§ 99
துயரர் ஆய்வு-16
ஒட்டுமொத்தமாக, திடீர் வகை நோய்களையும் , அல்லது தோன்றிச் சில நாட்களே ஆன
நோய்களையும் விசாரணை செய்வது மருத்துவருக்கு மிகவும் எளிதானது . ஏனென்றால்
சமீபத்தில் இழந்த ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நோய்க்குறிகளும்
தோன்றிச்சில நாட்களே ஆவதால் அவை நோயாளி மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர்களின் நினைவில் புதுமை
வாய்ந்ததாகவும் முனைப்பாகத் தெரிவதாகவும் இருக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்
மருத்துவர் நிச்சயமாக நோயின் விவரங்கள் அனைத்தையும் மருத்துவர்
தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான் என்றாலும் அவர் விசாரனை செய்ய வேண்டியது மிகக்
குறைவாய் இருக்கும்; அவை பெரும்பாலும்
அவருக்கு தன்னிச்சையாக விவரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment