§ 98
Now, as
certainly as we should listen particularly to the patient's description of his
sufferings and sensations, and attach credence especially to his own
expressions wherewith he endeavors to make us understand his ailments - because
in the mouths of his friends and attendants they are usually altered and
erroneously stated, - so certainly, on the other hand, in all diseases, but
especially in the chronic ones, the investigation of the true, complete picture
and its peculiarities demands especial circumspection, tact, knowledge of human
nature, caution in conducting the inquiry and patience in an eminent degree.
ஆர்கனான் மணிமொழி-98
§ 98
துயரர் ஆய்வு-15
இப்போது ,நோயாளி தனது துன்பங்கள் மற்றும் உணர்வுகள் பற்றித்
தாமே விளக்கி கூறுபவைகளுக்கும், அவரது நோய்களைப்பற்றி நாம் புரிந்து கொள்வதற்காக அவர் தாமே தனது சொந்த உணர்வுடன் எடுத்துரைத்தவற்றிற்கும் நாம் கட்டாயமாக முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க
வேண்டும் , ஏனென்றால் , நோயாளியின் நண்பர்களும் அவரை உடனிருந்து
கவனிப்போரும் சொல்லக்கூடிய நோய்க்குறிகளில் பொதுவாக சில உண்மைக்கு மாறாகவும் மற்றும் தவறாகவும் கூறப்படலாம்- அதற்கு மாறாக , எல்லா நோய்களிலும் , குறிப்பாக நாட்பட்ட அல்லது நீண்டகால
நோய்களில் அவைகளின் உண்மையான, நோயின் முழு உருவத்தையும் மற்றும் அதனுடைய விசித்திரமான குறிகள்
ஆகியவைகளை ஆய்வய் செய்யும் பொழுது , சிறப்பான விழிப்புணர்வு , சாமர்த்தியம் , மனிதர்களின் இயல்பு பற்றிய அறிவு , நோயாளியை விசாரிக்கும் போது மிகுந்த எச்சரிக்கை மற்றும் மிகவும் கூடுதலான அளவில் பொறுமையுணர்வு ஆகியவற்றைக்
கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
No comments:
Post a Comment