§ 94
While
inquiring into the state of chronic disease, the particular circumstances of
the patient with regard to his ordinary occupations, his usual mode of living
and diet, his domestic situation, and so forth, must be well considered and
scrutinized, to ascertain what there is in them that may tend to produce or to
maintain disease, in order that by their removal the recovery may by prompted.87
Foot Note-87: In chronic diseases of females it is specially
necessary to pay attention to pregnancy, sterility, sexual desire,
accouchements, miscarriages, suckling, and the state of the menstrual
discharge. With respect to the last-named more particularly, we should not
neglect to ascertain if it recurs at too short intervals, or is delayed beyond
the proper time, how many days it lasts, whether its flow is continuous or
interrupted, what is its general quality, how dark is its color, whether there
is leucorrhoea before its appearance or after its termination, but especially
by what bodily or mental ailments, what sensations and pains, it is preceded,
accompanied or followed; if there is leucorrhoea, what is its nature, what
sensations attend its flow, in what quantity it is, and what are the conditions
and occasions under which it occurs?
ஆர்கனான் மணிமொழி-94
§ 94
துயரர் ஆய்வு-11
நீண்ட கால அல்லது நாட்பட்ட நோயின் நிலமையைப் பற்றி விசாரிக்கும் போது, நோயாளியின் வழக்கமான
தொழில்கள் , அவரது வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை, அவரது குடும்பச் சூழ்நிலை, மற்றும்
இது போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஏதாவது இருந்தால் அவற்றையும் கவனத்தில்
எடுத்துக் கொண்டு நன்கு ஆராய
வேண்டும் , அவற்றில் நோயாளியிடம் நோயை உண்டாக்கும் தன்மையுள்ள அல்லது நோயைப் பராமரிக்கின்ற காரணங்கள் ஏதாவது இருந்தால் அதை உறுதி செய்து கொண்டு அவற்றை அகற்றுவதன் மூலம் அவர் நோயிலிருந்து மீள்வதற்கான
நிலை தூண்டப்படலாம்- 87.
அடிக்குறிப்பு-87:
பெண்களுக்கான நீண்டகால சிகிச்சையின் போது , அவர்களின் கர்ப்பம், மலட்டுத்தன்மை, பாலியல் ஆசை, அவர்களது பிள்ளைப்பேறு ( பிரசவம்) , கருச்சிதைவுகள், பாலூட்டுதல் மற்றும் மாதவிடாய் வெளியேற்றத்தின் நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மிக முக்கியமாக கடைசியாக கூறப்பட்டதைப் பொறுத்தவரை , மாதவிடாய்ப் போக்கு மிகக் குறுகியகால இடைவெளியில் மீண்டும் நிகழ்கிறதா, அல்லது சரியான நேரத்திற்கு அப்பால் தாமதமாகிவிட்டதா, மாதவிடாய்ப் போக்கு எத்தனை நாட்கள் நீடிக்கிறது, தொடர்ந்து காணப்படுகிறதா அல்லது தடைபட்டுப் போகிறதா , அதன் பொதுவான அளவு என்ன, அதன் நிறம் எவ்வளவு கருப்பாக இருக்கிறது,
மாதவிடாய் தோன்றுவதற்கு முன்பாகவோ அல்லது
முடிவடைந்த பின்னரோ வெள்ளைப்பாடு இருக்கிறதா, இன்னும் குறிப்பாக மாதவிடாய்
போக்கின் போதும் , அதற்க்கு முன்பும்,
பின்பும் அவருக்கு எத்தகைய உடல்
சம்பந்தமான அல்லது மனம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன , என்ன உணர்வுகள் மற்றும் வலிகள்
காணப்படுகின்றன ; அவருக்கு வெள்ளைப்பாடு
இருந்தால், அதன் இயல்பு என்ன, அதன் ஓட்டத்தில் என்ன உணர்வுகள்
கலந்துகொள்கின்றன, வெள்ளைப்பாடு போகும்
அளவு என்ன , மற்றும் அது எததகைய சூழ்நிலையில் மற்றும் சந்தர்ப்பங்களில் வெள்ளைப்பாடு உண்டாகிறது ? போன்றவற்றை
புறக்கணித்து விடாமல் நாம் கவனம் செலுத்த
வேண்டும்.
No comments:
Post a Comment