§ 86
When
the narrators have finished what they would say of their own accord, the
physician then reverts to each particular symptom and elicits more precise
information respecting it in the following manner; he reads over the symptoms
as they were related to him one by one, and about each of them he inquires for
further particulars, e.g., at what period did this symptom occur? Was it
previous to taking the medicine he had hitherto been using? While taking the
medicine? Or only some days after leaving off the medicine? What kind of pain,
what sensation exactly, was it that occurred on this spot? Where was the
precise spot? Did the pain occur in fits and by itself, at various times? Or
was it continued, without intermission? How long did it last? At what time of
the day or night, and in what position of the body was it worst, or ceased
entirely? What was the exact nature of this or that event or circumstance
mentioned - described in plain words?
ஆர்கனான் மணிமொழி-86
§ 86
துயரர் ஆய்வு-3
நோய்க்குறிகளை
எடுத்துரைப்பவர் தங்கள் சொந்த விருப்பப்படி அவர்கள் சொல்வதை விவரித்து முடித்தவுடன், மருத்துவர் தாம் குறித்து
வைத்துள்ள ஒவ்வொரு அறிகுறியையும் மீண்டும் பார்வையிட்டு அவர்
மதிக்கும் துல்லியமான தகவல்களை பின்வரும் முறையில் பதிவு செய்து கொள்கிறார்;
தன்னிடம்
கூறப்பட்ட அறிகுறிகள் ஒவ்வொன்றாக படித்துப்பார்த்து நோயாளருக்கு பொருத்தமான அறிகுறிகளை குறித்து கொள்ள வேண்டும், மற்றும் அவை ஒவ்வொன்றையும் பற்றிய மேற்கண்ட விவரங்களுக்கு
அவர் நோயாளரிடம் விசாரிக்க வேண்டும்; எடுத்துக்காட்டாக, இந்த அறிகுறி எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது?
அவர் இதுவரை பயன்படுத்தி வந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பே அந்த
அறிகுறிகள் தோன்றியதா ? மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போது தோன்றியதா ?
அல்லது எடுத்துக் கொண்டிருந்த
மருந்தை நிறுத்திய பின்பு சில நாட்கள்
கழித்து ஏற்பட்டதா ? , அந்த இடத்தில் என்ன வகையான வலி, சரியாக உணர்வு என்ன,
வலி காணப்படும் துல்லியமான இடம் எங்கே? வலி விட்டுவிட்டு தானாக ஏற்படுகிறதா ? அல்லது அது இடைவெளியில்லாமல் தொடர்ந்து காணப்படுகிறதா? எவ்வளவு காலம் வலி நீடிக்கிறது ? பகலில் அல்லது இரவின் எந்த
நேரத்தில், உடலின் எந்த நிலையில் அந்த வலி அதிகரிக்கிறது , அல்லது முற்றிலும் நின்று விடுகிறது ?
குறிப்பிடப்பட்ட அந்த நிகழ்வின் அல்லது
சூழ்நிலையின் சரியான தன்மை என்ன - எளிய வார்த்தைகளில் விவரித்துக் கூறமுடியுமா ?
போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டும் .
No comments:
Post a Comment