§
91
The
symptoms and feelings of the patient during a previous course of medicine do
not furnish the pure picture of the disease; but on the other hand, those
symptoms and ailments which he suffered from before the use of the medicines,
or after they had been discontinued for several days, give the true fundamental
idea of the original form of the disease, and these especially the physician
must take note of. When the disease is of a chronic character, and the patient
has been taking medicine up to the time he is seen, the physician may with
advantage leave him some days quite without medicine, or in the meantime
administer something of an unmedicinal nature and defer to a subsequent period
the more precise scrutiny of the morbid symptoms, in order to be able to grasp
in their purity the permanent uncontaminated symptoms of the old affection and
to form a faithful picture of the disease.
ஆர்கனான் மணிமொழி-91
§ 91
துயரர் ஆய்வு-8
நோயாளி இதற்கு முந்தைய மருத்துவத்தின் போது சில காலமாக மருந்துகளை உட்கொண்டு
வருபவராக இருந்தால் , அவருடைய அறிகுறிகள்
மற்றும் உணர்வுகள் ஆகியவைகள் நோயின் தூய்மையான வடிவத்தை அளிக்காது; ஆனால்
மறுபுறம், அம் மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பும் அல்லது பல நாட்கள் நிறுத்தப்பட்ட
பின்னரும் அவர் அனுபவித்த வந்த அறிகுறிகள்
மற்றும் தொல்லைகள் , நோயின் மூலமுதலான
வடிவம் குறித்த உண்மையான அடிப்படை யோசனையைத் தருகின்றன, இவற்றை மருத்துவர்
குறிப்பாக கவனத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும் . நோய் ஒரு நாட்பட்ட
தன்மையைக் கொண்டிருக்கும்போது, அந்த நோயாளியை அவர் பார்க்கும் அப்போது
வரை அவர் மருந்து எடுத்துக்
கொண்டு வந்தால் , மருத்துவர் அவரை
சில நாட்கள் மருந்து இல்லாமல் விட்டு வைப்பது
நன்மை தரும் , அல்லது இதற்கிடையில் ஒரு மருந்தில்லா மருந்து ( வெற்றுண்டைகள்) ஒன்றைக் கொடுத்துவிட்டு அந்நோயின் அறிகுறிகளை துல்லியமாக ஆராய்வதற்காக சில காலத்திற்கு
தள்ளிப் போடுவதால் , அந்த பழைய நோய்ப்பாதிப்பின் கலப்பு இல்லாத நிரந்தரமாக மாற்றப்படாத
அறிகுறிகளை அறிந்து கொள்ளவும் மற்றும் நோயின் உண்மையான வடிவத்தை கருத்துருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
No comments:
Post a Comment