In
the course of writing down the symptoms of several cases of this kind the
sketch of the disease picture becomes ever more and more complete, not more
spun out and verbose, but more significant (more characteristic), and including
more of the peculiarities of this collective disease; on the one hand, the
general symptoms (e.g., loss of appetite, sleeplessness, etc.) become precisely
defined as to their peculiarities; and on the other, the more marked and
special symptoms which are peculiar to but few diseases and of rarer
occurrence, at least in the same combination, become prominent and constitute
what is characteristic of this malady-89. All those affected with the disease
prevailing at a given time have certainly contracted it from one and the same
source and hence are suffering from the same disease; but the whole extent of
such an epidemic disease and the totality of its symptoms (the knowledge
whereof, which is essential for enabling us to choose the most suitable
homoeopathic remedy for this array of symptoms, is obtained by a complete
survey of the morbid picture) cannot be learned from one single patient, but is
only to be perfectly deduced (abstracted) and ascertained from the sufferings
of several patients of different constitutions.
Foot
Note-89 : The physician who has already,
in the first cases, been able to choose a remedy approximating to the
homoeopathic specific, will, from the subsequence cases, be enabled either to
verify the suitableness of the medicine chosen, or to discover a more appropriate,
the most appropriate homoeopathic remedy.
ஆர்கனான் மணிமொழி-102
§ 102
பெருவாரியாக
தொற்றிப்பரவுகிற நோய்கள் பற்றிய பரிசோதனை அல்லது புலனாய்வு-3
இந்த
வகையான நோய்ப்பாதிப்புடைய பல நோயாளிகளின் அறிகுறிகளை பற்றிய குறிப்புகளை எழுதும் போது, நோயின் வடிவம் மென்மேலும் முழுமையடைகிறது, இது அதிகமாக நீட்டிவிடப்பட்ட மற்றும் தேவைக்கு
மேற்பட்ட சொற்களைக் கொண்டதாக இல்லாமல் , அக்கொள்ளைநோயின்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குறிகளையும்
(அதிக சிறப்பியல்பு), மற்றும் அந்த முழுமொத்தமான நோயின் விசித்திரமான
அல்லது தனித்தன்மையான குறிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒருவகையில் , பொதுவான அறிகுறிகள் (எ.கா.,
பசியின்மை, தூக்கமின்மை போன்றவை) அவற்றின் தனித்தன்மையைப் பொறுத்தவரை துல்லியமாக
வரையறுக்கப்படுகின்றன; மறுபுறம், மிகவும் குறிப்பிடத்தக்க சில நோய்களில்
மட்டுமே தோன்றும் விசித்திரமான சிறப்பு
அறிகுறிகளும் மற்றும் அரிதான குறிகளும் , குறைந்தபட்சம் அந்த நோயின் ஒரே தன்மையில்
இணைந்து , முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றன
, மற்றும் அந்த நோயின்
தனிசிறப்புப் பண்புகள் (
சிறப்பியல்பு) என்ன என்பதற்கு உருக்கொடுக்கிறது-89
. ஒரு
குறிப்பிட்ட நேரத்தில் நிலவும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரே
மூலத்தோற்றத்தில் இருந்து தான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் ; ஆனால் இது போன்று
பெருவாரியாக பரவுகின்ற நோயையையும் மற்றும் அதன் ஒட்டுமொத்தக் குறிகளையும் ( இதே
அறிகுறிகளின் வரிசைக்கு மிகவும் பொருத்தமான ஹோமியோபதி மருந்தை தேர்வு செய்ய நமக்கு
உதவும் அறிவானது , உடல் நலம் குன்றியவரின் வடிவத்தை முழுமையாக மதிப்பீடு செய்வதன்
மூலம் பெறப்படுகிறது) ஒரே ஒரு
நோயாளியிடமிருந்து கற்றறிந்து கொள்ள முடியாது , ஆனால் பல்வேறு வகையான
உடல்வாகுகளைக் கொண்ட பல நோயாளிகளிடமிருந்து தான் துல்லியமாக கண்டறியக் (
பிரித்தெடுக்கப்பட) கூடியதாக இருக்கிறது.
அடிக்குறிப்பு-89:
ஏற்கனவே
முதலில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு ,
தோராயமாக ஒரு குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுக்க முடிந்த
மருத்துவர், பின்னர் அடுத்தடுத்து வந்த நோயாளிகளிடமிருந்து , அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் பொருத்தத்தை சரிபார்க்கவோ அல்லது மிகவும்
தகுதியுள்ள ( பொருத்தமான) மருந்தைக் கண்டறியும் நிலையோ ஏற்படுகிறது , அதுவே
மிகவும் பொருத்தமான ஹோமியோபதி மருந்தாகவும்
இருக்கிறது.