§ 119
As certainly as every species
of plant differs in its external form, mode of life and growth, in its taste
and smell from every other species and genus of plant, as certainly as every
mineral and salt differs from all others, in its external as well as its
internal physical and chemical properties (which alone should have sufficed to
prevent any confounding of one with another), so certainly do they all differ
and diverge among themselves in their
pathogenetic - consequently also in their therapeutic – effects-98. Each of
these substances produces alterations in the health of human beings in a
peculiar, different, yet determinate manner, so as to preclude the possibility of confounding one with another-99.
Foot Note-98: Anyone who has a thorough knowledge of, and
can appreciate the remarkable difference of, effects on the health of man of
every single substance from those of every other, will readily perceive that
among them there can be, in a medical point of view, no equivalent remedies
whatever, no surrogates. Only those who do not know the pure, positive effects
of the different medicines can be so foolish as to try to persuade us that one
can serve in the stead of the other, and can in the same disease prove just as
serviceable as the other. Thus do ignorant children confound the most essential
different things, because they scarcely know their external appearances, far
less their real value, their true importance and their very dissimilar inherent
properties.
Foot Note-99: If
this be pure truth, as it undoubtedly is, then no physician who would not be
regarded as devoid of reason, and who would not act contrary to the dictates of
his conscience, the sole arbiter of real worth, can employ in the treatment of
diseases any medicinal substance but one with whose real significance he is
thoroughly and perfectly conversant, i.e., whose positive action on the health
of healthy individuals he has so accurately tested that he knows for certain
that it is capable of producing a very similar morbid state, more similar than
any other medicine with which he is perfectly acquainted, to that presented by
the case of disease he intends to cure by means of it; for, as has been shown
above, neither man, nor mighty Nature herself, can effect a perfect, rapid and
permanent cure otherwise than with a homoeopathic remedy. Henceforth no true
physician can abstain from making such experiment, in order to obtain this most
necessary and only knowledge of the medicines that are essential to cure, this
knowledge which has hitherto been neglected by the physicians in all ages. In
all former ages - posterity will scarcely believe it - physicians have hitherto
contented themselves with blindly prescribing for diseases medicines whose
value was unknown, and which had never been tested relative to their highly
important, very various, pure dynamic action on the health of man; and,
moreover, they mingled several of these unknown medicines that differed so
vastly among each other in one formula, and left it to chance to determine what
effects should thereby be produced on the patient. This is just as if a madman
should force his way into the workshop of an artisan, seize upon handfuls of
very different tools, with the uses of all of which he is quite unacquainted,
in order, as he imagines, to work at the objects of art he sees around him. I
need hardly remark that these would be destroyed, I may say utterly ruined, by
his senseless operations.
ஆர்கனான் மணிமொழி-§ 119
ஒவ்வொரு தாவர
(PLANTS) இனமும் அதன் வெளிப்புற வடிவம், வாழ்க்கை முறை மற்றும் வளர்ச்சியில் ,
மற்ற உயிரினங்களிலிருந்தும், மற்ற தாவர இனங்களிலிருந்தும் அதன் சுவை மற்றும்
வாசனையில் நிச்சயமாக வேறுபடுவதைப்
போல, ஒவ்வொரு கனிமமும் (MINERALS) உப்பும்
(SALTS) , அதன் வெளிப்புறத்திலும் அதன் உள் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள்
( ஒன்றிலிருந்து வேறொன்றை வேறுபடுத்துவதில்
குழப்பமடைவதைத் தடுக்க இது மட்டுமே போதுமானதாக இருக்க வேண்டும்)
மற்றவற்றுடன் நிச்சயமாக வேறுபடுவதைப் போல
, அவற்றின் நோய் உண்டுபண்ணுகிற தன்மையிலும் அதன் விளைவாக அவற்றின் நலப்படுத்தும் இயல்புகளிலும் -
98 , அவை நிச்சயமாக அவைகளுக்குள்ளே
வேறுபட்டும் விலகியும் இருக்கின்றன . இந்த
பொருட்கள் ஒவ்வொன்றும் மனிதனின் ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஒரு விசித்திரமான,
வித்தியாசமான, இன்னும் உறுதியான முறையில் உருவாக்குகிறது, இதனால் ஒன்றிற்கு உரிய
இடத்தில் இன்னொன்றை வைத்துக் குழப்பிக் கொள்ளும் வாய்ப்பைத் தடுக்கிறது-99 .
அடிக்குறிப்பு-98:
ஒவ்வொரு தனி மருந்துப்பொருளும்
மனிதனின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும்
பாதிப்புகள் வேறொரு பொருளில் வேறு விதமாக இருப்பதைப் பற்றியும் , அப்பொருள்களின் மருத்துவ இயல்புகளால் , அவை
ஒன்றிற்கொன்று சமமான மருந்துகளாக இல்லை
என்பதையும் , எந்த வகையிலும் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்று ஆவதில்லை என்ற
மாறுபாட்டையும் முழுமையான அறிவைப் பெற்ற எவரும் மனமார உணர்ந்து கொள்வார் . வெவ்வேறு மருந்துகளின் தூய்மையான, நேர்மறையான விளைவுகளை அறியாதவர்கள்
மட்டுமே , அந்த மருந்துப்பொருள்களில் ஒன்றிற்கு
மாற்றாக இன்னொன்று சேவை செய்ய முடியும் என்றும் , ஒரே நோயின் போது ஒன்றுக்கு மாற்றாக இன்னொரு மருந்தும் பயன்படும் என்றும் நம்மை நம்ப வைக்கும்
முட்டாள்தனமான முயற்சியில் இறங்குவார்கள்
. இவ்வாறு அறியாத குழந்தைகள் போல் மிகவும்
அத்தியாவசியமான வேறுபட்ட விஷயங்களை குழப்பிக் கொள்கிறார்கள், ஏனென்றால்
அவர்கள் அம்மருந்துகளின் வெளிப்புற தோற்றங்களையும் , அவற்றின் மெய்யான மதிப்பை குறைத்து மதிப்பீடு
செய்பவர்களாகவும் , அதன் உண்மையான முக்கியத்துவத்தையும் மற்றும் அவற்றின் மிகவும் ஒத்ததன்மையற்ற இயல்பான பண்புகளையும் அரிதாகவே அறிந்தவர்களாக
இருக்கிறார்கள் .
அடிக்குறிப்பு-99:
இது சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி, தெளிவான உண்மையாக இருந்தால், நியாயமான அறிவைப் புறக்கணிக்கணித்து விட்டதாக
கருத்தப்படாதவரும் , உண்மையான மதிப்பு
வாய்ந்த நீதிபதியாக இருக்கும் தனது
மனசாட்சியின் ஆணைக்கு எதிராக செயல்படாதவருமான
எந்த மருத்துவரும், முழுமையாகவும்
, மிகச் சரியாகவும் நன்கு பழக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட ஒரு மருந்துப் பொருளையே தமது நோய் நீக்கும்
மருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும், அதாவது, ஆரோக்கியமாக
இருக்கும் மனிதர்களின் மீது மிகவும்
துல்லியமாக பரிசோதனை செய்த போது கிடைத்த அந்த மருந்தின் சரியான செயல்பாடுகளால்
உண்டாகிய நோய்நிலை , மருத்துவர்
நலப்படுத்த விரும்பும் நோயிற்கு
ஒத்துள்ளதாக இருந்தது என்பதையும் , வேறு எந்த மருந்தைக் காட்டிலும்
குறிப்பிட்ட அம்மருந்தே அத்தகைய நோய் நிலையை உண்டாக்கியது என்பதையும் நன்றாக
அறிந்தவராக , நலமாக்க விரும்பும் அந்த
நோய் நிலைக்கு அம்மருந்தைப் பயன்படுத்த
வேண்டும்; ஏனெனில், மேலே காட்டப்பட்டுள்ளபடி, ஒரு ஹோமியோபதி மருந்தைக் காட்டிலும் மனிதனோ, வலிமைமிக்க இயற்கை
அன்னையோ ஒரு சரியான, விரைவான மற்றும் நிரந்தர
சிகிச்சையை ஏற்படுத்த முடியாது. இனிமேல் எந்தவொரு உண்மையான மருத்துவரும் இத்தகைய
பரிசோதனைகளைச் செய்யாமல் விலகி இருக்க
முடியாது , நலப்படுத்துவதற்கு அவசியமான
மருந்துகளின் தன்மையையும் மற்றும் அதன்
ஆற்றலைப் பற்றிய அறிவையும் பெறுவதற்காக மேற்கண்ட அனுபங்களை அவர்கள் பெற்றாக வேண்டும் , இந்த மருத்துவ அறிவு இதுவரையில் எல்லா காலங்களிலும் வாழ்ந்த
மருத்துவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய எல்லா காலங்களிலும் - பின்வந்த சந்ததியினர் அதை அரிதாகவே
நம்பினார்கள் - மருத்துவர்கள் இதுவரை
நோய்களுக்கான மருந்துகளை , அதன் மதிப்பு தெரியவில்லை என்றாலும், கண்மூடித்தனமாக
பரிந்துரைத்து வந்தார்கள் , மற்றும்
அம்மருந்துகளின் உயர்ந்த பயன்பாட்டு மதிப்பினையும் ,
பலவகையான மாறுபட்ட ஆற்றல்களையும் ,
மனித உடலில் அதன் செயல்படும் ஆற்றலையும் இதுவரை அவர்கள் சோதித்துப் பார்த்ததும்
இல்லை; மேலும், அவர்கள் அறியப்படாத, ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டதாக
உள்ள பல மருந்துகளை ஒரு குறிப்பிட்ட கணக்கு முறைப்படி ஒன்றாக கலந்து
கொடுத்து , அதன் மூலம் அந்த நோயாளிக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பாக அப்படியே
விட்டுவிட்டனர். இது
ஒரு பைத்தியக்காரர் ஒரு கைவினைஞரின் கலைக்கூடத்திற்குள் முரட்டுத்தனமாக
புகுந்து அங்குள்ள கருவிகள் பலவற்றையும் , அவற்றை பயன்படுத்தத் தெரியாமலேயே கைகளில் எடுத்துக்
கொண்டு , சுற்றிலும் காணப்படும் கலைத்திறன் படைப்புகளை பயன்படுத்துவது போலவே
தானும் செய்வதாகக் அவர் கற்பனை
செய்துகொண்டு வேலை செய்வதைப் போன்றதாகும் . அதனால் அங்குள்ள பொருள்கள்
அழிக்கப்படும் என்று சொல்லவேண்டிய தேவை எனக்கில்லை , அவரது புத்தியில்லாத செயல்களால் அவை
முற்றிலும் சிதைக்கப்படும் என்றும் நான் (ஹானிமன்) சொல்ல வேண்டியதில்லை.
No comments:
Post a Comment