§ 117
To the latter category belong
the so-called idiosyncrasies, by which are meant peculiar corporeal
constitutions which, although otherwise healthy, possess a disposition to be
brought into a more or less morbid state by certain things which seem to
produce no impression and no change in many other individuals-95. But this inability to make an impression on every
one is only apparent. For as two things are required for the production of
these as well as all other morbid alterations in the health of man - to wit.,
the inherent power of the influencing substance, and the capability of the
vital force that animates the organism to be influenced by it - the obvious
derangements of health in the so-called idiosyncrasies cannot be laid to the
account of these peculiar constitutions alone, but they must also be ascribed
to these things that produce them, in which must lie the power of making the
same impressions on all human bodies, yet in such a manner that but a small
number of healthy constitutions have a tendency to allow themselves to be
brought into such an obvious morbid condition by them. That these agents do
actually make this impression on every healthy body is shown by this, that when
employed as remedies they render effectual homoeopathic
service-96 to all sick persons for morbid symptoms similar to those they
seem to be only capable of producing in so-called idiosyncratic individuals.
Foot Note-95: Some few persons are apt to faint from the
smell of roses and to fall into many other morbid, and sometimes dangerous
states from partaking of mussels, crabs or the roe of the barbel, from touching
the leaves of some kinds of sumach, etc.
Foot Note-96: Thus
the Princess Maria Porphyroghnita restored her brother, the Emperor Alexius,
who suffered from faintings, by sprinkling him with rose water in the presence
of his aunt Eudoxia (Hist. byz. Alexias, lib. xv, p. 503, ed. Posser); and
Horstius (Oper., iii, p.59) saw great benefit from rose vinegar in cases of
syncope.
ஆர்கனான் மணிமொழி-§ 117
கடைசியாக
குறிப்பிட்ட வகைக்கு ( மணிமொழி -116 இல்
) தனித்தன்மை (அல்லது தனிஇயல்பு) வாய்ந்தவை என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் அவர்களின்
தனித்தன்மை வாய்ந்த உடலமைப்பினையுடைய
உடல்வாகு கொண்டவர்கள் என்ற
பொருளாகிறது , மற்றபடி அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதிலும் , சில பொருள்களைக் (மருந்து) கொடுக்கும் போது அதிகமான அளவில் அல்லது குறைவான அளவில் அவர்கள்
நோயுற்ற நிலைக்கு
கொண்டு வரப்படுகிறார்கள் , ஆனால் அதே பொருளை மற்றவர்களிடம் கொடுக்கும் போது அந்த மனிதர்களிடத்தில் அப்பொருள்
எவ்வகையான தோற்றத்தையோ
மற்றும் மாற்றத்தையோ ஏற்படுத்துவது இல்லை -95. ஆனால்
ஒவ்வொருவரிடமும் இது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இயலாது என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றுதான் . இத்தகைய நோய்ப்பாதிப்பும் அவ்வாறே மற்றும் பல நோய் மாறுபாடுகளும் நலநிலையில் உள்ள மனிதர்களிடத்தில் ஏற்படுத்துவதற்கு இரண்டு கூறுகள்
தேவைப்படுகிறது - அவை நோய்ப்பாதிப்பை உண்டாக்கும் மருந்துப் பொருளின் உள்ளார்ந்த ஆற்றலை புரிந்து கொள்ளும் அறிவு மற்றும் இது போன்ற பொருளினால் தாக்குதலுக்கு உள்ளாகும் உறுப்பமைவு அல்லது உயிரியில் உள்ள உயிராற்றல் திறன் ஆகியவற்றை
அறிந்து கொள்ளும் அறிவும் ஆகும். தனித்தன்மை
வாய்ந்த கூறுபாடுகள் என்று
அழைக்கப்படுபவற்றில் வெளிப்படையாக
காணப்படும் கோளாறுகள் உண்டாக்குவதற்கு
இந்த விசித்திரமான உடல்வாகு மட்டுமே காரணம் என்று கூறிவிடமுடியாது , ஆனால் அவற்றை
உருவாக்குவதற்கு இந்த இரண்டு நிலைகளே காரணமாக இருக்க வேண்டும் என்பதையும் , நோய்ப்பாதிப்பை
ஏற்படுத்தும் பொருள்களில் எல்லா மனித
உடல்களிலும் ஒரே மாதிரியான நோய்ப்பாதிப்பை
ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது
என்பதையும் அறிதல் வேண்டும், ஆனால் இதுபோன்ற வகையில், குறைந்த எண்ணிக்கையிலான
ஆரோக்கியமான உடல்வாகு கொண்டவர்கள் மட்டுமே தெளிவான நோய்ப்பாதிப்புகளை ஏற்கும் உடல்
தன்மையைப் பெற்றிருப்பதால் இது போன்ற
நோய்க்குறிகள் தோன்றுகின்றன. தனித்தன்மை
வாய்ந்த உடல்வாகு கொண்டவரிடத்தில் தோற்றுவிக்கப்படும் நோய் அறிகுறிகளுக்கு ஒத்த
நோய்குறிகளைக் கொண்ட எல்லா நோயாளிகளுக்கும் அம்மருந்துப்பொருளையே ஹோமியோபதி
முறையில் கொடுக்கும் போது- 96, அம்மருந்து
விரும்பிய பலனைத் தருகின்றன. இது அந்த மருந்துப்பொருள்கள் ஆரோக்கியமான
ஒவ்வொரு மனிதர்கள் உடலிலும் உண்மையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையே
காட்டுகிறது.
அடிக்குறிப்பு-95:
சில மனிதர்கள் ரோஜா பூக்களின் வாசனையை நுகர்ந்ததால் மயக்கம் அடைந்தும் மற்றும் பலவகையான நோயநிலையை அடைகிறார்கள் ,
மற்றும் சில நேரங்களில் சிப்பிகள் , நண்டுகள் அல்லது மீனின் உணரிழைகளில் உள்ள சினைத்திரள் போன்றவற்றை உண்பதாலும் , சில வகையான தோல் பதனீடு-சாயம்
ஆகியவற்றிற்குப் பயன்படும் உலர்த்திய இலைகளைத் தொடுவதாலும் ஆபத்தான நிலைக்கு
உள்ளாகிறார்கள் .
அடிக்குறிப்பு-96:
இவ்வாறு இளவரசி மரியா போர்பிரோக்னிடா (Maria
Porphyroghnita) தனது சகோதரர் பேரரசர் அலெக்ஸியஸ்
(Alexius-Byzantine
Empire)
மயக்கத்தால் அவதிப்பட்ட
போது , அவரது அத்தை யூடோக்ஸியா (Eudoxia)
முன்னிலையில் ரோஜா நீரை (பன்னீரை ) அவர் மீது தெளிப்பதன் மூலம் அவரை மீட்டெடுத்தார் ( Hist.
byz. Alexias, lib. xv, p. 503, ed. Posser)
; மற்றும் ஹார்ஸ்டியஸ்
(Horstius,1578-1636-
Germany Doctor- Oper., iii, p.59)
என்பவர் உணர்விழந்த நிலைக்கு ரோஜா
(பன்னீர்) புளிக்காடி (Rose
vinegar) பெரும் நன்மை தருவதாக இருப்பதை கண்டுள்ளார் .
No comments:
Post a Comment