Thursday, 8 October 2020

ஆர்கனான் மணிமொழி-§ 110

 

§ 110

 

I saw, moreover, that the morbid lesions which previous authors had observed to result from medicinal substances when taken into the stomach of healthy persons, either in large doses given by mistake or in order to produce death in themselves or others, or under other circumstances, accorded very much with my own observations when experimenting with the same substances on myself and other healthy individuals. These authors give details of what occurred as histories of poisoning and as proofs of the pernicious effects of these powerful substances, chiefly in order to warn others from their use; partly also for the sake of exalting their own skill, when, under the use of the remedies they employed to combat these dangerous accidents, health gradually returned; but partly also, when the persons so affected died under their treatment, in order to seek their own justification in the dangerous character of these substances, which they then termed poisons. None of these observers ever dreamed that the symptoms they recorded merely as proofs of the noxious and poisonous character of these substances were sure revelations of the power of these drugs to extinguish curatively similar symptoms occurring in natural disease, that these their pathogenetic phenomena were intimations of their homoeopathic curative action, and that the only possible way to ascertain their medicinal powers is to observe those changes of health medicines are capable of producing in the healthy organism; for the pure, peculiar powers of medicines available for the cure of disease are to be learned neither by any ingenious a priori speculations, nor by the smell, taste or appearance of the drugs, nor by their chemical analysis, nor yet by the employment of several of them at one time in a mixture (prescription) in diseases; it was never suspected that these histories of medicinal diseases would one day furnish the first rudiments of the true, pure materia medica, which from the earliest times until now has consisted solely of false conjectures and fictions of the imagination - that is to say, did not exist at all-94

 

 

Foot Note-94: See what I have said on this subject in the Examination of the Sources of the Ordinary Materia Medica, prefixed to the third part of my Reine Arzneimittellebre (translated in the Materia Medica Pura, vol. II ).

 

 

ஆர்கனான் மணிமொழி-§ 110

 

 

மேலும், ஆரோக்கியமான நிலையில் உள்ள மனிதர்கள் தவறுதலாக மிக அதிக அளவில் மருந்துப்பொருளை வயிற்றுக்குள் எடுத்துக் கொண்டாலோ  அல்லது அவர்களே தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பொருட்டு  எடுத்துக் கொண்டாலோ ,  அல்லது வேறு ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக பிறரால்  கொடுக்கப்பட்டாலோ, அவர்களது ஆரோக்கியநிலையில்  ஏற்பட்ட நோய்ப்பாதிப்பு சிதைவுகளை  எனக்கு முன்னிருந்த ஆசிரியர்கள் பலர் கவனித்துக் கூறியுள்ளதையும், அதே  மருந்துப்பொருள்களை  என் உடலிலும் ஆரோக்கியநிலையில் இருந்த  வேறு சிலர் உடலிலும்  செலுத்திச் சோதனை செய்தபோது தோன்றிய அறிகுறிகள் அவ்விளைவுகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையாய் இருந்ததை நான் (ஹானிமன்) கவனித்தேன்.  இந்த ஆசிரியர்கள் கூறும் விளக்கக் குறிப்புகள் , விஷம் அருந்துவதால் ஏற்படும் தீங்கான வரலாற்று  நிகழ்வுகளையும்  மற்றும் இந்த ஆற்றல்மிக்க  அம்மருந்துப் பொருள்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படும்  தீங்கு விளைவிக்கின்ற கொடூரமான பாதிப்புகளைக் கூறும் சான்றுகளாகவும் உள்ளன. முக்கியமாக,  மற்றவர்கள் அம்மருந்துப் பொருள்களை  பயன்படுத்துவது பற்றி  எச்சரிக்கும் நோக்கமாகவும்  இருக்கிறது ; இத்தகைய  ஆபத்தான விபத்துக்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய மருந்துகளின் மூலம் அங்கே  உடல்நலம் எவ்வாறு படிப்படியாகத் திரும்பியது என்று கூறித் தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொள்வதை ஒரு பகுதியாகவும் , அவர்களுடைய மருத்துவம் பயனளிக்காமல்  பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் சிகிச்சையின் கீழ் இறந்தபோது, அவர்கள் எடுத்துக்கொண்ட மருந்துப்பொருட்களின் ஆபத்தான விளைவுகளினால்  நோயாளியை காப்பாற்றமுடியவில்லை என்று தங்களுடைய செயலை நியாயப்படுத்துகிறார்கள், பின்னர் அவற்றை அவர்கள்  விஷத்தன்மை கொண்டது  என்று அழைப்பது இன்னொரு பகுதியாகவும் இருக்கிறது . இந்த பொருட்களின் நச்சுத்தன்மையுள்ள மற்றும் தீங்கு உண்டாக்குகிற குணங்கள் எல்லாம் ,  இயற்கையான நோய்களில் ஏற்படும்  ஒத்த அறிகுறிகளை நலப்படுத்தக்கூடிய  இந்த மருந்துகளுக்குரிய ஆற்றலின் வெளிப்பாடுகள் என்றும், இவ்வாறு அமைந்துள்ள அம்மருந்துகளின் நோய் உண்டுபண்ணுகிற  நிகழ்வுகள்  அவற்றின் ஹோமியோபதி முறைப்பட்ட நோய் தீர்க்கும் நடவடிக்கைகள் என்பதையும்  , மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்  உயிரினத்தின்  நலநிலையில் அம்மருந்துகள் உண்டாக்கும் மாற்றங்களைக் கவனிப்பது ஒன்றே,  அம்மருந்துகளின் ஆற்றலை உறுதி செய்யத்தக்க வழி என்பதை பற்றியோ அந்த நூலாசிரியர்கள் கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்கமாட்டார்கள் ; நோயை நலப்படுத்துவதற்கான   அம்மருந்துகளின் தூய்மையான, விசித்திரமான ஆற்றல்களை  எந்தவொரு தனித்துவமான முன்னறிந்த  ஊகங்களினாலும், அல்லது அம்மருந்துகளின் வாசனை, சுவை அல்லது தோற்றம் மூலமாகவோ அல்லது அவற்றின் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ அல்லது நோய்களுக்கு  அம்மருந்துகள்  பலவற்றையும்  ஒரு நேரத்தில் ஒன்றாகக் கலந்து  ஒரே கலவையில் மருந்தாக்கி  (மருத்துவக்குறிப்பு) தருவதன்  மூலமாகவோ ஒருபோதும் கற்றுக்கொள்ள முடியாது  ; இது போன்று  மருந்துகளால் ஏற்படும்  நோய்களின் இந்த வரலாறுகளே  ஒரு நாள் உண்மையான, தூய்மையான மருந்தியல் களஞ்சியமாக  முதல் மூலஅடிப்படை அறிவைத் தரும்  என்று ஒருவரால் கூட  சந்தேகிக்கப்படவில்லை, இது ஆரம்ப காலத்திலிருந்து இப்போது வரை பொய்யான யூகங்களின் அடிப்படையில் கட்டமைந்த  கற்பனைப்  புனைவாகவும் மற்றும் கட்டுக்கதையாகவும்  மட்டுமே அமைந்துள்ளது  - அதாவது, எப்போதும் அவை மருந்தியல் களஞ்சிய நூல்களாக இருக்கமுடியாது-94.

 

 

அடிக்குறிப்பு-94:

 

 

இந்த தலைப்பை பற்றி  மெட்டீரியா மெடிகா புராவின் -தொகுதி II  , இல் முன்னிணைப்பின்  மூன்றாம் பகுதியில்  " சாதாரண மருந்தியல் களஞ்சியத்தின் ஆதாரங்களின் கூறாய்வு " [ Examination of the Sources of the Ordinary Materia Medica ] என்ற பகுதியில் நான் கூறியுள்ளேன்  [ மெட்டீரியா மெட்டிகா புரா, தொகுதி II இல் (MATERIA MEDICA PURA-Volume II ) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது] .

No comments:

Post a Comment