Thursday, 8 October 2020

ஆர்கனான் மணிமொழி-§ 109

 

§ 109

 

 

I was the first that opened up this path, which I have pursued with a perseverance that could only arise and be kept up by a perfect conviction of the great truth, fraught with such blessings to humanity, that it is only by the homoeopathic employment of medicines-92  that the certain cure of human maladies is possible-93.

 

 

Foot Note-92:  It is impossible that there can be another true, best method of curing dynamic diseases (i.e., all diseases not strictly surgical) besides homoeopathy, just as it is impossible to draw more than one straight line betwixt two given points. He who imagines that there are other modes of curing diseases besides it could not have appreciated homoeopathy fundamentally nor practised it with sufficient care, nor could he ever have seen or read cases of properly performed homoeopathic cures; nor, on the other hand, could he have discerned the baselessness of all allopathic modes of treating diseases and their bad or even dreadful effects, if, with such lax indifference, he places the only true healing art on an equality with those hurtful methods of treatment, or alleges the latter to be auxiliaries to homoeopathy which it could not do without! My true, conscientious followers, the pure homoeopathists, with their successful, almost never-failing treatment, might teach these persons better.

 

 

Foot Note-93:  The first fruits of these labors, as perfect as they could be at that time, I recorded in the Fragmenta de viribus medicamentorum positivis, sive in sano corpore humano observatis,[ Fragments on the positive forces of medicines; that is observed in the healthy human body] [Lipsiae, 8, 1805, pts I, II ap. J. A. Barth].  The more mature fruits in the Reine Arzneimittellebre (materia medica pura) , ( Volume I , 3-rd edition;Volume II 3-rd edition, 1833; Volume III 2-rd edition, 1825; Volume IV 2-nd edition, 1827).  (English translation, Materia Medica Pura, volumes I and II ); These riper fruits were also presented in the second, third, and fourth parts of Die chronischen Krankheiten (The Chronic diseases) , Dresden bei Arnold , 1828, 1830 (2nd edit., with a fifth part, Dusseldorf bei Schaub, 1835, 1839).[ These appear in Part-II of the english translation].

 

 

ஆர்கனான் மணிமொழி-§ 109

 

 

இந்த வழியை (ஹோமியோபதி மருத்துவத்தை)   நானே (ஹானிமன்)  முதலில் திறந்தேன், இவ்வழியை    விடாமுயற்சியுடன் நான் பின்பற்றி சென்றதால் , ஹோமியோபதி முறைப்படியான மருந்துகளை பயன்படுத்துவதால் மட்டுமே  -92 மனித குலத்தை தாக்கும் சில குறிப்பிட்ட சீர்கேடுகளை (அல்லது குறைபாடுகளை) நலமாக்க முடியும்  -93. என்னும் மனித குலத்திற்கு ஆசிர்வாதமான  மாபெரும் உண்மையை மிகச்சரியாக பற்றிக்கொள்ள முடிந்தது.

 

 

அடிக்குறிப்பு-92:

 

 

கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட நேர் கோட்டை வரைய இயலாது என்பது போலவே, ஹோமியோபதியைத் தவிர, ஆற்றல் மிகுந்த  நோய்களைக் நலப்படுத்தும்  மற்றொரு உண்மையான, சிறந்த மருத்துவ முறை (அதாவது,  கண்டிப்பாக அறுவை சிகிச்சை தேவைப்படும் நோய்களைத்தவிர மற்ற எல்லா நோய்களையும்) தவிர வேறு  இருக்க முடியாது. நோய்களை நலப்படுத்தும் பிற மருத்துவ முறைகள் உள்ளன என்று கற்பனை செய்பவர் ஹோமியோபதியை அடிப்படையிலேயே  அறியாதவரும் அல்லது போதுமான அளவு கவனத்துடன் அதைப் பயிற்சி செய்யாதவரும் , அல்லது  ஹோமியோபதி முறையினால் மிக நன்றாக நலப்படுத்தப்படும் நோய் வரலாறுகளைப் பற்றி பார்த்திருக்காதவராகவும்  அல்லது படிக்காதவராகவும் இருப்பார்  ; அல்லது, மறுபுறம், நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து அலோபதி முறைகள் மற்றும் அவற்றின் மோசமான அல்லது பயங்கரமான விளைவுகளின் அடிப்படையற்ற தன்மையை அறியாதவர் ஆவார் , அத்தகைய உறுதியில்லாத  அலட்சியத்துடன்,  உண்மையாக  நலப்படுத்தும் மருத்துவக் கலையை அவர் ஒரு தீங்கு விளைவிக்கும் பிற மருத்துவ முறைகளுடன் சமத்துவத்தில் வைப்பவராகவும் , அல்லது அந்த மருத்துவமுறைகளுக்கு  ஹோமியோபதி மருத்துவம்  துணையான மருத்துவமாகவே  இருக்கிறது என்றும்  அது இல்லாமல் ஹோமியோபதி மருத்துவம் செய்ய முடியாது! என்றும்  குற்றம் சாட்டுகிறார்கள்.  எனது உண்மையான, மனசாட்சியைப்  பின்பற்றுபவர்களான , தூய ஹோமியோபதியர்கள் , தங்களுடைய  வெற்றிகரமான, கிட்டத்தட்ட ஒருபோதும் தோல்வியுறாத  மருத்துவத்தின் மூலம் , இந்த நபர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கக்கூடும்.

 

 

 

அடிக்குறிப்பு-93:

 

 

இந்த கடின உழைப்பின்  பயனாக விளைந்த முதல் பழங்கள் (பலன்கள்) , அந்த நேரத்தில் நான் கண்டறிந்தவாறு, "மருந்துகளின் நேர்மறையான சக்திகளின் சில பண்புகள் ; இது ஆரோக்கியமான மனித உடலில் கண்டறியப்பட்டது” என்ற நூலில் பதிவு செய்திருந்தேன் [லிப்சியா, 8, 1805, புள்ளிகள் I, II  ஜே. . பார்த்] . மேலும் எனது அனுபவங்களின் அடிப்படையில்  " மெட்டீரியா மெடிகா புரா, தொகுதிகள் I மற்றும் II  என்ற நூலும்  1825, 1826, 1827 & 1833 ஆம் ஆண்டுகளில் பல்வேறு பதிப்புகளாக வெளி வந்தன (MATERIA MEDICA PURA). இந்த பழுத்த பழங்கள் (அனுபவங்கள்),   நாட்பட்ட நோய்கள் (CHRONIC DISEASES)” என்ற பெயரில் 1828, 1830 ஆம் ஆண்டில் வெளிவந்தன பெயரில்  ( Dresden bei Arnold , 1828, 1830 ) . (2 வது பதிப்பு, ஐந்தாவது பகுதியுடன் 1835, 1839  (Dusseldorf bei Schaub, 1835, 1839)  ஆம் ஆண்டில் வெளிவந்தன.

 

No comments:

Post a Comment