Friday, 15 May 2020

ஆர்கனான் மணிமொழி-84




The patient details the history of his sufferings; those about him tell what they heard him complain of, how he has behaved and what they have noticed in him; the physician sees, hears, and remarks by his other senses what there is of an altered or unusual character about him. He writes down accurately all that the patient and his friends have told him in the very expressions used by them. Keeping silence himself he allows them to say all they have to say, and refrains from interrupting them-81  unless they wander off to other matters. The physician advises them at the beginning of the examination to speak slowly, in order that he may take down in writing the important parts of what the speakers say.

Foot Note-81:  Every interruption breaks the train of thought of the narrators, and all they would have said at first does not again occur to them in precisely the same manner after that.


ஆர்கனான் மணிமொழி-84
§ 84

நோயின் உருவப்படத்தை கண்டறிவதற்கும்  மற்றும்  நோயாளியை விசாரணை செய்வதற்கும் மருத்துவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள்:-
 துயரர் ஆய்வு-1


நோயாளி தான் படும் துன்பங்களின் வரலாற்றை விவரிக்கிறார்; அவரை சுற்றியிருக்கும் நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் அவர்கள் கேள்விப்பட்டதையும்,  நோயாளியை அவர்கள் பார்த்த போது எப்படி நடந்து கொண்டார்கள், அவரிடம் அவர்கள் எவற்றையெல்லாம் கவனித்தார்கள் ஆகியவற்றை விவரிக்கிறார்கள் ; மருத்துவர்  அந்த நோயாளியிடம் தான் பார்த்தது, கேட்டது,  அவர்கள் கூறியது மற்றும் நோயாளியிடம் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது அசாதாரணமான தன்மை என்ன என்பதை தனது மற்ற புலன்களால் அறிந்து கொள்கிறார்.  நோயாளியும் அவரது நண்பர்களும் அவரிடம் கூறிய அனைத்தையும் அவர்கள்  வெளிப்படுத்திய நோக்கிலேயே துல்லியமாக எழுதிக் கொள்ளவேண்டும்  . மௌனமாக இருந்து, அவர்கள் சொல்வதை எல்லாம் சொல்ல அனுமதிக்கிறார், மேலும் அவர்கள் மற்ற விஷயங்களுக்கு அலைந்து திரிந்தாலொழிய அவர்களுக்கு இடையூறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்-81. நோயாளிகள் கூறும் செய்திகளில் உள்ள முக்கியமான பகுதிகளை எழுதிக் கொள்வதற்கு வசதியாக, அவர்களை மெதுவாக பேசும்படி மருத்துவர் பரிசோதனையின் ஆரம்பத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் .



அடிக்குறிப்பு-81:

ஒவ்வொரு முறை குறுக்கிட்டுப் பேசும் போதெல்லாம் நோய்குறிகளை விளக்கிக்  கொண்டிருக்கும் நோயாளியின் எண்ண ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது, மற்றும் அவர்கள் முதலில் கூற இருந்தவைகள் எல்லாம் அதற்குப் பின்னர் அதே போன்ற துல்லியமான முறையில் மீண்டும் தொடர்ந்து வெளிவராது .

No comments:

Post a Comment