Tuesday, 12 May 2020

ஆர்கனான் மணிமொழி-81


§ 81

The fact that this extremely ancient infecting agent has gradually passed, in some hundreds of generations, through many millions of human organisms and has thus attained an incredible development, renders it in some measure conceivable how it can now display such innumerable morbid forms in the great family of mankind, particularly when we consider what a number of circumstances-78 contribute to the production of these great varieties of chronic diseases (secondary symptoms of psora), besides the indescribable diversity of men in respect of their congenital corporeal constitutions, so that it is no wonder if such a variety of injurious agencies, acting from within and from without and sometimes continually, on such a variety of organisms permeated with the psoric miasm, should produce an innumerable variety of defects, injuries, derangements and sufferings, which have hitherto been treated of in the old pathological works-79, under a number of special names, as diseases of an independent character.


Foot Note-78:   Some of these causes that exercise a modifying influence on the transformation of psora into chronic diseases manifestly depend sometimes on the climate and the peculiar physical character of the place of abode, sometimes on the very great varieties in the physical and mental training of youth, both of which may have been neglected, delayed or carried to excess, or on their abuse in the business or conditions of life, in the matter of diet and regimen, passions, manners, habits and customs of various kinds.

Foot Note-79:  How many improper ambiguous names do not these works contain, under each of which are included excessively different morbid conditions, which often resemble each other in one single symptom only, as ague, jaundice, dropsy, consumption, leucorrhoea, haemorrhoids, rheumatism, apoplexy, convulsions, hysteria, hypochondriasis, melancholia, mania, quinsy, palsy, etc., which are represented as diseases of a fixed and unvarying character, and are treated, on account of their name, according to a determinate plan! How can the bestowal of such a name justify an identical medical treatment? And if the treatment is not always to be the same, why make use of an identical name which postulates an identity of treatment?

Nihil sane in artem medicam pestiferum magis unquam irrepsit malum, quam generalia quaedam medicinam, ( Indeed , no more deadly evil has ever stolen into the art of science than the imposition of certain  general names on diseases as well as the wish to adapt a certain general medicine to them ) says Huxham, a man as clear-sighted as he was estimable on account of his conscientiousness (Op. phys. med., tom. I.). And in like manner Frittze laments (Annalen, I, p.80) that essentially different diseases are designated by the same name.

Even those epidemic diseases, which undoubtedly may be propagated in every separate epidemic by a peculiar contagious principle which remains unknown to us, are designated, in the old school of medicine by particular names, just as if they were well-known fixed diseases that invariably recurred under the same form, as hospital fever, gaol fever, camp fever, putrid fever, bilious fever, nervous fever, mucous fever, although each epidemic of such roving fevers exhibits itself at every occurrence as another, a new disease, such as it has never before appeared in exactly the same form, differing very much, in every instance, in its course, as well as in many of its most striking symptoms and its whole appearance. Each is so for dissimilar to all previous epidemics, whatever names they may bear, that it would be dereliction of all logical accuracy in our ideas of things were we to give to these maladies, that differ so much among themselves, one of those names we meet with in pathological writings, and treat them all medicinally in conformity with this misused name. The candid Sydenham alone perceived this, when he (Obs. med., cap. ii, De morb, epid p-43.) insists upon the necessity of not considering any epidemic disease as having occurred before and treating it in the same way as another, since all that occur successively, be they ever so numerous, differ from one another:

Nihil quicquam (opinor,) animum universae qua patet medicinae pomoeria perlustrantem, tanta admiratione percellet, quam discolor illa et sui plane dissimilis morborum Epidemicorum facies; non tam qua varias ejusdem anni tempestates, quam qua discrepantes divewrsorum ab invicem annorum constitutiones referunt, ab iisque dependent. Quae tam aperta praedictorum morborum diversitas tum propriis ac sibi peculiaribus symptomatis, tum etiam medendi ratione, quam hi ab illis disparem prorsus sibi vendicant, satis illucescit. Ex quibus constat morbus hosce, ut ut externa quadantenus specie, er symptomatis aliquot utrisque pariter super venientibus, convenire paulo incautioribus videantur, re tamen ipsa (si bene adverteris animum), alienae admondum esse indolis, et distare ut aera lupinis.

[It strikes the mind with wonder how varied and clearly dissimilar are the presentations of epidemic diseases. The obvious diversity of these diseases is made sufficiently clear , both by their own characterstic and peculiar symptoms and by the methods of curing them , which in their difference from one another demonstrate the disparity. From which it follows that , however much more epidemic diseases may seem to the slightly incautious to agree in their outward forms and symptoms, in reality- if you pay careful attention – they are quite different in nature and stand apart from each other as real money does from play money.]

From all this it is clear that these useless and misused names of diseases ought to have no influence on the practice of the true physician, who knows that he has to judge of and to cure diseases, not according to the similarity of the name of a single one of their symptoms, but according to the totality of the signs of the individual state of each particular patient, whose affection it is his duty carefully to investigate, but never to give a hypothetical guess at it.

If, however, it is deemed necessary sometimes to make use of names of diseases, in order, when talking about a patient to ordinary persons, to render ourselves intelligible in few words, we ought only to employ them as collective names, and tell them, eg., the patient has a kind of St. Vitus's dance, a kind of dropsy, a kind of typhus, a kind of ague; but (in order to do away once and for all with the mistaken notions these names give rise to) we should never say he has the St. Vitus's dance, the typhus, the dropsy, the ague, as there are certainly no disease of these and similar names of fixed unvarying character.

  
ஆர்கனான் மணிமொழி-81

§ 81

மேகப்புண்கள் ( SYPHILITIC) மற்றும் மேகவெட்டை (SYCOTIC) நீங்கலாக மற்ற எல்லா நாட்பட்ட நோய்களுக்கும் சொறி , சிரங்கு நோய்மூலமே  (PSORA ) அடிப்படை மூல காரணமாக (தாய் போல்)  இருக்கிறது .



இந்த மிகப் பழமையான நோய்த்தொற்று பொருள் (சொறி-சிரங்கு நோய்மூலம்)  , சில நூற்றுக்கணக்கான தலைமுறையாகவும்  , பல மில்லியன் மனித உறுப்பமைவுகள் (உயிரி) வழியாகவும் படிப்படியாக கடந்து வந்து ,  நம்பமுடியாத அளவிற்கு மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது, இந்த நோய்மூலமானது மாபெரும் மனித இனத்தில்  கணக்கில் அடங்காத நோய் வடிவங்களாக உருப்பெற்று மனித குலத்தைத் தாக்குவதற்கு எப்படி  ஓரளவிற்கு காரணமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும் , குறிப்பாக , எண்ணற்ற சூழ்நிலைக் காரணங்கள்-78  தூண்டும் காரணங்களாக இருக்கின்றன, இத்தூண்டும் காரணங்கள் தான் மிகப்பெரிய அளவிலான வகைவகையான நாட்பட்ட அல்லது நீண்டகால நோய்கள்  ( சொறி-சிரங்கு நோய்மூலத்தின் இரண்டாம் நிலை நோய்க்குறிகள்) உருவாவதற்கு காரணங்களாக அமைகின்றன. அப்படியிராவிடில் பிறவிலிருந்தே உடல்சார்ந்த கட்டமைப்பிலும், மனிதர்களிடத்தில் வரையறுத்துக் கூறமுடியாத பன்முகத்தன்மையையும் இந்த சொறி -சிரங்கு நோய்மூலம் தோற்றுவிக்கிறது, உடலின் உள்ளேயும் , வெளியிலும் பலவகையான தீங்கிழைக்கின்ற நோய்க்கூறுகள் தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருப்பதால் , இந்த சொறி-சிரங்கு நோய்க்கூறு பல வகை உயிரினங்களில் வியாபித்து (பரவி) , எண்ணிக்கையிலடங்காத பல்வகை வேறுபாடுகள் கொண்ட குறைபாடுகளையும் ,காயங்களையும் , ஒழுங்குகுழைவையும் மற்றும் வேதனைகளையும் உருவாக்கிவிடுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஆனால் இந்த பாதிப்புகள் அனைத்தும் பழைய நோய் ஆய்வியல் நூல்களில் -79 வெவ்வேறு வகையான சிறப்புப் பெயர்களாலும் , தற்சார்பான பண்புகளைக் கொண்ட நோய்களாகவும் இதுவரை  பட்டியலிடப்பட்டுள்ளது.


அடிக்குறிப்பு-78:


சொறி-சிரங்கு நோய்மூலத்தை  நாள்பட்ட நோய்களாக மாற்றியமைப்பதற்கும் , உருமாற்றம் செய்வதற்கும்  உரியவையாகச்  சில நேரங்களில் கீழ்காணும் சில காரணங்கள் காணப்படுகின்றன, அவை, ஒருவர் வாழும்  இடத்தின் தட்பவெப்பநிலை  மற்றும் அந்த தங்கும் இடத்துக்கே  உரிய விசித்திரமான இயற்கை சூழல்கள்  , சில சமயங்களில் இளைஞர்களின் உடல் மற்றும் மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட பலவகையான இளமைக்கால  பயிற்சிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம், தாமதப்படுத்தப்படலாம் அல்லது அதிகமாக எடுத்திருக்கலாம்   , அல்லது தொழில் அல்லது வாழ்க்கைநிலை ஆகியவற்றை அவர் தவறாக பயன்படுத்தியிருக்கலாம், உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஆகார நியமம்  , கூர் உணர்வுகள், நடத்தைகள் , பழக்க வழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான பழக்க வழக்கங்கள் ,மரபுகள் ஆகிய வாழ்க்கை நிலைமைகளில் அவர்கள் துஷ்பிரயோகம் செய்திருக்கலாம்.


அடிக்குறிப்பு-79:


இந்த பழைய நோய் ஆய்வியல் நூலில்  எத்தனை முறையற்ற தெளிவற்ற நோயின் பெயர்கள் தான்  இல்லை, அவை ஒவ்வொன்றின் கீழும் வேறுபட்ட நோயுற்ற நிலைமைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை பெரும்பாலும் ஒன்றிற்கொன்று  ஒரே ஒரு அறிகுறியில்  மட்டுமே ஒத்திருக்கின்றன, அத்தகைய நோய்களாவது  குளிர் காய்ச்சல் (AGUE) , மஞ்சள் காமாலை (JAUNDICE), நீர்வீக்கம் அல்லது மகோதரம் (DROPSY) , காச நோய் (CONSUMPTION) ,வெள்ளைப்பாடு( LEUCORRHOEA) , மூலக்கட்டிகள் (HEMORRHOIDS)  , வாத நோய் (RHEUMATISM) , மூளை இரத்தக்குழாய் வெடிப்பு (APOPLEXY) ,வலிப்புகள் (CONVULSIONS), இசிவு நோய் அல்லது வெறி (hysteria) , தன் உடல்நிலையை எண்ணிக் கவலைப்படும் பெரும் மனவாட்டநோய் (hypochondriasis) , மனச்சோர்வு (melancholia) , பித்து (mania), தொண்டைவீக்கம் (QUINSY) , முடக்குவாதம் (PALSY) போன்றவை  ஆகும். அவை  ஒரு நிலையான மற்றும் மாறாத தன்மையின் நோய்களாகக் குறிப்பிடப்படுகின்றன, மேலும் அவற்றின் பெயரின் அடிப்படையில், ஒரு தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் படி சிகிச்சையளிக்கப்படுகின்றன!. அத்தகைய பெயரை வழங்குவது ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சையை கொடுப்பது என்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? அந்த மருத்துவச்  சிகிச்சையானது எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்கவில்லை என்றால், சிகிச்சையின் அடையாளத்தை முன்வைக்கும் ஒரே பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும்?


இது பற்றி மனசாட்சி உள்ளவரும் , அதனால் நன்றாக மதிக்கப்படக் கூடியவரும் , தெளிவான பார்வையுடையவருமான மருத்துவர் ஹஸ்ஹாம் (HUXHAM) என்பவர்  ,"உண்மையாகவே, நோய்களில் பொதுவான பெயர்களை சூட்டுவதிலும் , அவ்வாறு பெயர்  சூட்டிய வழியிலேயே , அவைகளுக்கு  சில  பொதுவான மருந்துகளைத் தருவது  போன்ற  தீங்கான , கொடுமையான செயல்  மருத்துவக்கலையில் வேறெதுவும் இல்லை" என்று தமது நூலில் (Op. phys. med., tom. I.)   கூறுகிறார்.  அதேபோல், மிகவும் மாறுபட்டுள்ள வெவ்வேறு நோய்கள் ஒரே பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன என்று தமது நூலில் (Annalen, I, p.80) மருத்துவர்   ஃபிரிட்ஜ் புலம்புகிறார் .


சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தொற்றிப் பரவுகிற ஒவ்வொரு தொற்றுநோய் நிலையின் போது  , நமக்குத் தெரியாத ஒரு விசித்திரமான தொற்றும் தன்மையுடைய பண்புக்கூறுகளைக் கொண்ட, சற்றும் மாறுபடாதவையாகவும் , நன்றாக அறியப்பட்டவையாகவும் , நிலைப்பட்டவையாகவும் , அதே வடிவத்தில் மீண்டும் தோன்றுபவையாகவும்  உள்ள தொற்றுநோய்களைக்  கூட  பழைய மருத்துவப் பள்ளி மருத்துவர்கள் ஒரு  குறிப்பிட்ட பெயரிட்டு அழைத்து வருகிறார்கள் , அவை மருத்துவமனை காய்ச்சல் (HOSPITAL FEVER),  சிறைச்சாலைக் குடற்க்காய்ச்சல் (GAOL FEVER), தற்காலிகமாக தங்கியிருக்கும் இடத்தில் வரும் காய்ச்சல் (CAMP FEVER) , அழுகும் தன்மையுள்ள (கடுமையான) காய்ச்சல் (PUTRID FEVER), பித்த காய்ச்சல் (BILIOUS FEVER) , நரம்பு காய்ச்சல் (NERVOUS FEVER) , சளி காய்ச்சல்  (MUCOUS FEVER) போன்றவை ஆகும்.  இருப்பினும்  ,  ஒவ்வொரு தொற்று நிலையின் போது சுற்றித் திரியும் இக்காய்ச்சல்கள்  ஒவ்வொரு முறையும் முன்பு தாக்கியது போன்ற அதே தன்மையில் இல்லாமல் , ஒரு புது வகை நோய் போன்று , முன்பு எப்போதுமே தாக்காத புதுத்தன்மையிலும் , ஒவ்வொரு தடவையும்  முழுவதும் மாறுபட்ட நோய்க்குறிகளுடனும் , தன்னுடைய நோயுறு பாதையில்,  பல்வேறு  அடித்துக்கூறும் முக்கியமான குறிகளுடனும் மற்றும் முழு நோய்த்தோற்றத்துடன் பரிணமிக்கிறது.   அவைகள்  என்ன பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றும் முந்தைய  பெருவாரியாக பரவுகின்ற  எல்லா நோய்களிலிருந்து ஒன்றேயொன்று ஒத்திராத தன்மையிலேயே உள்ளது, அவற்றை நோய் ஆய்வியியல் நூல்களில் கூறப்பட்டவாறு ஒரே நோயாகக் கொள்வதும் , அதனால் அவ்வாறு தவறாகக்  கூறப்பட்ட  அந்த நோயின் பெயருக்கு ஏற்றவாறு கூறப்படும் மருந்தினால் அவற்றிற்கு மருத்துவம் செய்வதும் , நமது கருத்திற்கு புலப்படும் வகையில் எல்லா வகையான தர்க்கரீதியாக மிக சரியாக இருத்தலை  கைவிட்டுவிட்டு விலகுகின்ற செயலேயாகும். இதை மிக  நேர்மையான  மருத்துவர் சைடன்ஹாம் மட்டுமே  மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார் , அதனாலேயே அவர், " எந்தத் தொற்றுநோயும்  இதற்கு முன்னர் நிகழ்ந்ததாகக் கருதக்கூடாது  மற்றும் அந்த  முந்தைய நோயிற்கு சிகிச்சை செய்தது போலவே இப்போது தோன்றிய நோயிற்கும் சிகிச்சை செய்யக்கூடாது , ஏனென்றால் அடுத்தடுத்துத் தோன்றுகின்ற பெருவாரியாக பரவுகின்ற நோய்கள்  , அவை எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தாலும் , அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபாடுபவையாகவே உள்ளன" என்று தமது நூலில்  (Obs. Med., Cap. Ii, De morb, epid p-43.) வலியுறுத்திக் கூறியுள்ளார்: இந்தப் பெருவாரியாக தோன்றுகிற நோய்கள்   எவ்வாறு மாறுபட்டது மற்றும் தெளிவாகத் தோற்றமளிக்கிறது என்பதை வியக்க வைக்கும் வகையில் மனதைத் தாக்குகிறது  , இந்த நோய்களின் வெளிப்படையான பன்முகத்தன்மை , அந்த நோய்களுக்கே உரிய சொந்தமான  தனிப்பண்புக்குறிகள் மற்றும் வினோதமான குறிகள் ஆகிய இரண்டையும் மற்றும் எந்த வகையில் அவற்றை நலப்படுத்த வேண்டும் என்பதையும் போதுமான அளவிற்குத் தெளிவாக காட்டுகிறது, அதுமட்டுமல்லாமல் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்ட அந்நோய்களின் பன்முகத்தன்மையையும் தெளிவுபடுத்திக்காட்டுகிறது. அவற்றைக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும் , இருந்த போதிலும் மிக அதிகமான பெருவாரியாகத் தோன்றுகின்ற நோய்களின்  தோற்றத்தையும் மற்றும் குறிகளையும் வைத்து சற்று கவனக்குறைவாக புரிந்து கொள்ள இயலும், உண்மையில் - நீங்கள் எச்சரிக்கையாக கவனம் செலுத்திப் பார்க்கும் போது , அந்நோய்கள்  முற்றிலும் மாறுபட்ட குணம் படைத்தவை மற்றும் உண்மையாக பணம் எப்படி விளையாட்டுப் பணத்திலிருந்து மாறுபட்டு இருக்கிறதோ அவ்வாறே  ஒன்றிலிருந்து மற்றொன்று வேறாக இருக்கிறது என்பதை அறிய முடியும்.

மேலே கூறியவற்றிலிருந்து இத்தகைய பயனற்ற மற்றும் தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் நோய்களின் பெயர்கள் ஒரு உண்மையான மருத்துவருக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம், அந்த மருத்துவருக்கு,  நோய்களை  நன்கு திறனாய்வு செய்து  நலமாக்க வேண்டும் என்பதும் , அவ்வியாதிக்குறிகளில் காணப்படுகின்ற நோயின் பெயருக்கு ஒத்த ஒரு குறியை மட்டுமே எடுத்துக் கொண்டு சிகிச்சையளிக்கக் கூடாது என்பதும்  , ஆனால் அந்த குறிப்பிட்ட நோயாளியின் ஒட்டுமொத்தக்குறிகளின் தொகுப்பையே கணக்கில் எடுத்துக் கொண்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதும் ,  மேலும் , பாதிக்கப்பட்ட நோயாளியின் நோய்குறிகளை மிகக்கவனமாக ஆராய்ந்து சிகிச்சை தரவேண்டும் என்பதும், ஆனால் , யுகங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்குத் நன்றாகத் தெரியும்.

எவ்வாறாயினும், சில சமயங்களில் ஒரு நோயாளியைப் பற்றி சாதாரண மனிதர்களிடம் பேசும்போது, அவர்களின் நோய்களின் பெயர்களைப் பயன்படுத்துவது அவசியமானதாகக் கருதப்பட்டால், சில வார்த்தைகளில் நமக்குள் புரிந்து கொள்வதற்காகவும்  , நாம் நோயின் பெயரை கூட்டுப் பெயர்களாக மட்டுமே பயன்படுத்த வேண்டும், அவற்றைச் சொல்ல வேண்டும் , எடுத்துக்காட்டாக  நோயாளிக்கு ஒரு வகையான தசை தன்னிச்சையாக துள்ளுவதும் , துடிப்பதுமான வியாதி (St. Vitus's dance) , ஒரு வகையான நீர்வீக்கம் (dropsy) , ஒரு வகையான நச்சுக்காய்ச்சல் (typhus) , ஒரு வகையான குளிர்காய்ச்சல் (AGUE); ஆனால் (இந்த நோயின் பெயர்களால் ஏற்படும்  தவறான கருத்துக்களைக் கொண்டு ஒருமுறை மற்றும் முற்றிலும் நீக்குவதற்காக ) இவர் தசை தன்னிச்சையாக துள்ளுவதும் , துடிப்பதுமான வியாதி உடையவர்  ,  நீர்வீக்கம் உடையவர் ,  நச்சுக்காய்ச்சல் உடையவர்  , குளிர்காய்ச்சல் உடையவர் என்று நாம் ஒருபோதும் சொல்லக்கூடாது, ஏனெனில் நிச்சயமாக இது போன்ற ஒத்தபெயர் கொண்ட , நிலையான , என்றுமே மாறாத தன்மை கொண்டுள்ள நோய்கள் உலகில் இல்லவே இல்லை.


No comments:

Post a Comment