Saturday, 2 May 2020

ஆர்கனான் மணிமொழி-80


§ 80



Incalculably greater and more important than the two chronic miasms just named, however, is the chronic miasm of psora, which, while those two reveal their specific internal dyscrasia, the one by the venereal chancre, the other by the cauliflower-like growths, does also, after the completion of the internal infection of the whole organism, announce by a peculiar cutaneous eruption, sometimes consisting only of a few vesicles accompanied by intolerable voluptuous tickling itching (and a peculiar odor), the monstrous internal chronic miasm - the psora, the only real fundamental cause and producer of all the other numerous, I may say innumerable, forms of disease-77, which, under the names of nervous debility, hysteria, hypochondriasis, mania, melancholia, imbecility, madness, epilepsy and convulsions of all sorts, softening of the bones (rachitis), scoliosis and cyphosis, caries, cancer, fungus nematodes, neoplasms, gout, haemorrhoids, jaundice, cyanosis, dropsy, amenorrhoea, haemorrhage from the stomach, nose, lungs, bladder and womb, of asthma and ulceration of the lungs, of impotence and barrenness, of megrim, deafness, cataract, amaurosis, urinary calculus, paralysis, defects of the senses and pains of thousands of kinds, etc., figure in systematic works on pathology as peculiar, independent diseases.


Foot Note-77: I spent twelve years in investigating the source of this incredibly large number of chronic affections, in ascertaining and collecting certain proofs of this great truth, which had remained unknown to all former or contemporary observers, and in discovering at the same time the principal (antipsoric) remedies, which collectively are nearly a match for this thousand-headed monster of disease in all its different developments and forms. I have published my observations on this subject in the book entitled The Chronic Diseases (4 vols., Dresden, Arnold. [2nd edit., Dusseldorf, Schaub.]) before I had obtained this knowledge I could only treat the whole number of chronic diseases as isolated, individual maladies, with those medicinal substances whose pure effects had been tested on healthy persons up to that period, so that every case of chronic disease was treated by my disciples according to the group of symptoms it presented, just like an idiopathic disease, and it was often so for cured that sick mankind rejoiced at the extensive remedial treasures already amassed by the new healing art. How much greater cause is there now for rejoicing that the desired goal has been so much more nearly attained, inasmuch as the recently discovered and far more specific homoeopathic remedies for chronic affections arising from psora (properly termed antipsoric remedies) and the special instructions for their preparation and employment have been published; and from among them the true physician can now select for his curative agents those whose medicinal symptoms correspond in the most similar (homoeopathic) manner to the chronic disease he has to cure; and thus, by the employment of (antipsoric) medicines more suitable for this miasm, he is enabled to render more essential service and almost invariably to effect a perfect cure.



ஆர்கனான் மணிமொழி-80

§ 80


மேகப்புண்கள் ( SYPHILITIC) மற்றும் மேகவெட்டை (SYCOTIC) நீங்கலாக மற்ற எல்லா நாட்பட்ட நோய்களுக்கும் சொறி , சிரங்கு நோய்மூலமே  (PSORA ) அடிப்படை மூல காரணமாக (தாய் போல்)  இருக்கிறது .


இருப்பினும், இதற்கு  முன் கூறப்பட்ட  இரண்டு நாள்பட்ட நோய்மூலங்களைக்  காட்டிலும் (SYPHILITIC& SYCOTIC) கணக்கிடமுடியாத அளவிற்கு பெரியதாகவும்  மற்றும் முக்கியமானதாகவும் இருப்பது  , இந்த  சொறி-சிரங்கு (PSORA) என்ற  நாள்பட்ட நோய்மூலம்  ஆகும்.  அவை இரண்டும் உடலின் உள்ளே அவற்றிற்குரிய குறிப்பிட்ட  இரத்தக் கூறு அளவு மாறுபாட்டை அல்லது நோய்க்கூறுகளை   வெளிப்படுத்துகின்றன, ஒன்று பால்வினை நோய் சார்ந்த கிரந்த புண்களையும் , மற்றொன்று காலிஃபிளவர் அல்லது பூக்கோசு  போன்ற துர்சதை வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது , ஆனால் சொறி-சிரங்கு நோய்மூலமானது , முழு உறுப்பமைவின்  உட்புறத்தில்  தொற்றிப் பரவி  தாக்கிய பின், ஒரு விசித்திரமான தோல் சினைப்புகளை ஏற்படுத்துவதுடன்  மூலம் தன்னைப் புலப்படுத்துகிறது   , அத்தோல் சினைப்புகள் , சில நேரங்களில் தாங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு மிகுந்த காமத்தைத் தூண்டும் மெய்க்கூச்ச உணர்ச்சியையும், அரிப்பையும்  (மற்றும் ஒரு விசித்திரமான வாசனையுடன்),   ஏற்படுத்தும் தன்மையுடன்  ,  அச்சமூட்டும் கொடிய அரக்கப் பேருருவத்துடன் உடலின் உள்ளே நீடித்திருக்கும்  நாள்பட்ட நோய்மூலமாக இருக்கிறது. இந்த சொறி, சிரங்கு  நோய்மூலம் (PSORA) தான் , ஏராளமான நோய்கள் உருவாவதற்கான ஒரே உண்மையான அடிப்படைக்காரணியாக இருக்கிறது, நான் கூறுகிறேன் (ஹானிமன்) , கணக்கிட்டுக் கூறமுடியாத, எல்லா வகையான நோய்களுக்கும் இதுவே காரணமாகும்  -77 ,   அதாவது, நோய் ஆய்வியல் நூலில் முறையாக பட்டியலிடப்பட்டு  தனித்தன்மை உடையதாகவும் , தனிதத்தனி நோயாகவும் குறிக்கப்பட்டுள்ள நோய்களான   நரம்புத் தளர்ச்சி ( nervous debility) ,  இசிவு நோய் அல்லது வெறி (hysteria) , தன் உடல்நிலையை எண்ணிக் கவலைப்படும் பெரும் மனவாட்டநோய் (hypochondriasis) , பித்து (mania), மனச்சோர்வு (melancholia) , அறிவின்மை (imbecility), , பைத்தியம் (madness ) , கால்-கை வலிப்பு மற்றும் எல்லாவகையான வலிப்புகள் (epilepsy and convulsions of all sorts) , எலும்புகள் மென்மையாகி குழந்தைகளுக்கு ஏற்படும் கணைநோய் [(rachitis) (குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்புருக்கி நோய்)] , முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு  மற்றும் முதுகு உயர்ந்த வளைவு  நிலை (scoliosis and cyphosis) , பற்சொத்தை (caries), புற்றுநோய் (cancer), பூஞ்சை நூற்புழுக்கள் அல்லது குருதிப்பூஞ்சைக் கட்டிகள் (fungus nematodes) , திசுக்  கட்டிகள் (neoplasms) , கீல்வாதம் அல்லது மூட்டுவீக்கம் (gout), மூல நோய் (haemorrhoids) , மஞ்சள் காமாலை (jaundice),  உடல் நீல நிறமாகும் நோய் (cyanosis), நீர்க்கோவை அல்லது மகோதரம் (dropsy), மாதவிலக்கின்மை அல்லது மாதவிலக்கு உள்ளமுக்கம் (amenorrhoea),  வயிறு, மூக்கு, நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் கருப்பையில் இருந்து இரத்தப்போக்கு (haemorrhage from the stomach, nose, lungs, bladder and womb, of asthma and ulceration of the lungs), ஈழைநோய் அல்லது ஆஸ்துமா மற்றும் நுரையீரலில்  புண்கள் , ஆண்தன்மை குறைவு மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை (impotence and barrenness) , ஒற்றைத்தலைவலி (megrim) , காது கேளாமை (deafness) , கண்புரை (cataract) , நரம்பு பாதிப்புக் குருட்டுத்தன்மை (amaurosis) , சிறுநீரக , சிறுநீர்ப்பை கற்கள் ( urinary calculus) , பக்கவாதம் (paralysis), புலன்களின் குறைபாடுகள் (defects of the senses)  மற்றும் ஆயிரக்கணக்கான வகையான வலிகள் போன்ற நோய்கள் அனைத்தும் சொறி-சிரங்கு நோய்மூலத்தினால் ( PSORA) ஏற்படும் நோய்ப்பாதிப்புகள் ஆகும்.


அடிக்குறிப்பு-77:

இந்த நம்பமுடியாத பெரிய எண்ணிக்கையிலான நாள்பட்ட நோய்ப்பதிப்புகளின்  மூலத்தை ஆராய்வதிலும், முன்னாள் அல்லது சமகால மருத்துவர்கள் அனைவருக்கும் தெரியாத இந்த மாபெரும் உண்மையின்   சில ஆதாரங்களை அறிந்து கொள்வதிலும் சேகரிப்பதிலும் நான் பனிரெண்டு ஆண்டுகளைக் கழித்தேன். அதே நேரத்தில் , இந்த  ஆயிரம் தலை கொண்ட  அரக்கப் பேருருவான நாட்பட்ட நோயின்  எல்லா வடிவங்களுக்கும் , வளர்ச்சி நிலைகளுக்கும்  ஒட்டுமொத்தமாக பொருந்தும் முதன்மை (சொறி-சிரங்கு எதிர்ப்பு மருந்துகள்  ) மருந்துகளைக் கண்டறிவதிலும் ஈடுபட்டேன். இந்த விஷயத்தில் எனது அவதானிப்புகளை நாள்பட்ட நோய்கள் (4 தொகுதிகள், டிரெஸ்டன், அர்னால்ட். [2 வது திருத்தம்., டசெல்டோர்ஃப், ஸ்காப்.]) என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன். இந்த அறிவைப் பெறுவதற்கு முன்பு, அந்தக் காலகட்டம் வரையிலும் மருந்துகளின் தூய விளைவுகள் பற்றி ஆரோக்கியமான நபர்கள் மீது பரிசோதிக்கப்பட்ட அந்த மருந்துப் பொருள்களைக் கொண்டே  எல்லா  நாள்பட்ட நோய்களையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமலும் , தனித்தனி நோயாகவும் எடுத்துக் கொண்டு மருத்துவச் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்பட்ட நோயும் , அது வெளிப்படுத்தும் பல குறிகளுக்கு ஏற்றவாறு , அதே நோயைப் போன்ற குறிகளை உள்ளடக்கிய மருந்தினைக் கொண்டு  என்னுடைய  சீடர்களால் மருத்துவச்  சிகிச்சையளிக்கப்பட்டன. அதனால் , காரணம் அறியப்படாத இந்த நோய்களை ,   குணமாக்கும் நன்மைகளைக் கண்ட  நோயுற்ற மனிதகுலம்,   இந்தப் புதிய குணப்படுத்தும் மருத்துவக் கலையின்  வியப்பூட்டும் அதிக ஆற்றலான மருந்துப்  புதையல்களைக் கண்டு  மகிழ்ச்சி அடைந்தனர்.  அவர்கள்  விரும்பிய குறிக்கோள்  கிட்டத்தட்ட எட்டப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைவதற்கு இப்போது எவ்வளவு பெரிய காரணம் இருக்கிறது, ஏனென்றால்,  அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த  ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையின் மூலம் சொறி-சிரங்கு நோய்மூலத்திலிருந்து உருவாகும்  நாள்பட்ட நோய்களை குணமாக்கும்  ( சொறி-சிரங்கு நோய்மூலம் சார்ந்த நோய்களுக்கு எதிரான மருந்துகள் என்று சரியாக  அழைக்கப்படுகிறது) சிறந்த மருத்துவமாக இருக்கிறது , மற்றும் மருந்துகளை செய்யும் முறை, அவற்றை பயன்படுத்தும் முறை பற்றிய  சிறப்பு வழிகாட்டுதல்கள் அல்லது அறிவுறுத்தல்கள்  வெளியிடப்பட்டுள்ளன; அந்த சொறி-சிரங்கு நோய் எதிர்ப்பு மருந்துகளிலிருந்து  குணப்படுத்த வேண்டிய நாட்பட்ட  நோயிற்கு ஏற்ற மிகப் பொருத்தமான  (ஹோமியோபதி முறைப்படட ) குறிகளைக் கொண்ட ஒரு மருந்தை ஒரு உண்மையான மருத்துவரால்  இப்போது தேர்ந்தெடுக்க முடியும்; இவ்வாறு,  இந்த நோய்மூலத்திற்கு  மிகவும் பொருத்தமான (சொறி-சிரங்கு நோயெதிர்ப்பு மருந்துகள் ) மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் இன்னும் நல்லமுறையில்  சேவையை வழங்குவதற்கும், எப்போதும் நோயாளிக்கு சரியான சிகிச்சையளித்து    முழுமையாக நலப்படுத்தும்  வாய்ப்பு இப்போது அவருக்கு சாத்தியமாகிறது .

No comments:

Post a Comment