Thursday, 14 May 2020

ஆர்கனான் மணிமொழி-83



This individualizing examination of a case of disease, for which I shall only give in this place general directions, of which the practitioner will bear in mind only what is applicable for each individual case, demands of the physician nothing but freedom from prejudice and sound senses, attention in observing and fidelity in tracing the picture of the disease.


ஆர்கனான் மணிமொழி-83
§ 83

நோயின் தோற்றத்தை தெரிந்து கொள்ள தேவையானது (தனித்துவப்படுத்துதல்).


நோய் தாக்குதலுக்கு உள்ளான ஒவ்வொருவரையும் தனித்துவப்படுத்தி (தனிப்பண்பின் அடிப்படையில்)  பரிசோதனை செய்யும் விஷயமாக நான் (ஹானிமன் ) இங்கு பொதுவான வழிமுறைகளை தருகின்றேன். ஆதலால் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளிடமும்   அவர்களுக்கு பயன்படத்தக்கது எது என்பதைப்பற்றி  மனதிற்குள் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். நோயைப் பற்றி முன்கூட்டியே ஒரு முடிவு கொள்வதை தவிர்த்து பகுத்தறிவைத் தீட்டிக்கூர்மையாக்கி நோயின் விவரங்களை அறிவதில் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே செலுத்தி அதன் உருவை கண்டுபிடிப்பதில்  மருத்துவர் மெய்யான பற்றுக் கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment