இன்று "கொரோனா"
( CORONO VIRUS) என்ற நோய்த்தொற்று உலகம் மக்களை
தன் பிடிக்குள் வளைத்துக் கொண்டுள்ளது . இந்த நோயின் தீவிரத் தாக்குதலினால் அமேரிக்கா,
சீனா, பிரான்ஸ் , இத்தாலி போன்ற வல்லரசு நாடுகள் ஆடி போய்விட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக
ஆயிரக்கணக்கில் செத்துக் கொண்டிருக்கிறார்கள் . இந்நோயைக் கட்டுப்படுத்த சரியான மருந்து
ஆங்கில மருத்துவத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அகில உலகிலும் ரயில் , பேருந்து மற்றும் விமானப்
போக்குவரத்து ( உள்நாடு /வெளிநாடு) அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது
இப்போது, இந்த நோய்த் தொற்று இந்தியாவிலும் தன் கைவரிசையை
காட்டத் துவங்கியுள்ளது. மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இது மனிதர்களின் இருமல்
மற்றும் தும்மல் மூலம் பரவும் நோய் என்பதால் சொல்லவைத்தாற்போல் இந்தியா உள்ளிட்ட உலக
நாடுகள் அனைத்தும் மனிதர்களை தனிமை படுத்தி , நோய் பரவாமல் தடுக்க முயற்சி எடுத்து
வருகிறார்கள். இதற்கு சரியான மருந்து இல்லாததால் , ஏற்கனவே
புழக்கத்தில் இருக்கும் சளி, காய்ச்சல் மருந்துகளும் , ஹைட்ராக்சியச்ளோரோகுய்ன் (Hydroxychloroquine) என்ற மலேரியா தடுப்பு மருந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், மனித உடலில் நிரூபணம் செய்து பெறப்பட்ட , ஏறத்தாழ, 8000 வீரியப்படுத்தப்பட்ட மருந்துகளை உள்ளடக்கிய
ஹானிமனின் ஹோமியோபதி மருத்துவமுறையை உலக நாடுகள் பயன்படுத்த தயங்குகின்றன என்பது தான்
பெரிய நகைமுரண். இப்போது தான் இந்திய அரசு
ஆர்சனிக்கம் ஆல்பம் என்ற ஹோமியோபதி மருந்தினை அதனுடைய 30-வது வீரியத்தில் கொடுத்து
, மக்களின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
விதமாக பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்த கொரோனா நோய்த்தொற்றை
மனித உடலில் இருந்து அடியோடு நீக்கி உலக மக்களை
முழுமையாக நலப்படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு.
இப்போது கொரோனா நோய்தொற்றைப்
பற்றியும் , அதற்குரிய ஹோமியோபதி மருந்துகளைப் பற்றியும் பார்க்கலாம்;
கொரோனா தொற்று எவ்வாறு உருவானது?
கொரோனா , என்ற இந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர்-2019 சீனாவில்
உள்ள வூகான் என்ற நகரில் இருக்கும் விலங்குகள் சந்தையிலிருந்து,
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த
விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் “வெளவால்கள்” மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா
வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள்
மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல்
சார்ஸ் (SARS) வரையில் உண்டாக்கக்கூடியவை. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி
சிண்ட்ரோம் (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனை “COVID19” என்றும் சுருக்கமாக அழைக்கிறார்கள்.
கொரோனா தொற்றின் அறிகுறிகள்:
இந்த COVID19 முதன் முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு
இருமல் ஏற்படும். அதன்பின் ஒரு வாரம்
கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இந்த கொரோனா
வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க
முடியும்.
Ø ஜலதோஷம் (COLD)
Ø காய்ச்சல் (FEVER)
Ø நெஞ்சில், மூக்கில், தொண்டையில் சளி தொல்லை (SORE THROAT)
Ø வறண்ட இருமல், வறண்ட தொண்டை (DRY COUGH)
Ø லேசான நெஞ்சு வலி
Ø உடல் வலி (BODY ACHE).
Ø மூச்சு விடுவதில் சிரமம் (DIFFICULT BREATHING)
சிலருக்கு
வயிற்றுப்போக்கும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. சாதராண காய்ச்சலுக்கு இதே அறிகுறிதான்
என்பதால், இதை அலட்சியமாக எடுக்காமல் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற
பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.
பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக 2 முதல் 14 நாட்களுக்குள் தெரிய வரும் என்று
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நோய்க்குறிகள் படிப்படியாக அதிகரிக்கும். சிலருக்கு இரண்டு வாரங்களுக்கும், நோயெதிர்ப்பு
ஆற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு 3 முதல் 6 வாரங்களுக்கு நீடிக்கும். சிலருக்கு உடல்
நலக்குறைவு இருப்பது தென்படுவதற்கு முன்னரே அவர்கள் இந்த நோய்த்தொற்றைப் மற்றவர்களுக்கு
பரப்பலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நோய்தொற்று
தீவிரமடைந்தால் இவர்களது நோய்க்குறிகள் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதாவது;
Ø இரைப்பை-நுரையீரல் சார்ந்த நிமோனியா (GASTRIC-PNEUMONIA) ஏற்படுகிறது.
நுரையீரலின் உள்ளும், புறமும் இரத்தக்கசிவு
ஏற்படலாம்.
Ø நோய்த் தாக்குதலின் ஆரம்பத்தில் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் குறைகிறது.
Ø உணவின் ருசி தெரியாது மற்றும்
பசியின்மை உண்டாகும்.
Ø அந்நோயாளிகளின் DNA (deoxyribonucleic acid) /RNA (Ribonucleic acid ) களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
Ø இரத்ததிலிலுள்ள ஹீமோக்ளோபினில் இடைபுகுந்து , அவற்றைப் இரண்டாகப் பிரித்து
கொரோனா வைரஸ் தமது புரதச்சத்தை தோற்றுவிக்கிறது
. அதனால் உடலின் பல உறுப்புகளுக்கு செல்லும்
இரத்தத்தில் ஆக்சிசனின் அளவு குறைந்து விடுகிறது. ஆகவே உடலின் உறுப்புகள் ஒரே நேரத்தில் செயலிழந்து
விடுகிறது. அதனால் அந்த நோயாளியின் மரபணு தொகுதிகளில்
மாற்றம் ஏற்படுகிறது.
இறுதியில் அவர்களுக்கு, நிமோனியா (PNEUMONIA) அதிகரித்து நுரையீரல்
செயல்படாமலும், சிறுநீரகங்கள் பழுதடைந்தும்
(KINDEY FAILURE), தீவிர சுவாசப் பிரச்சனை (SARS) போன்ற
நோய்கள் ஏற்படுவதோடு அந்த நோயாளி நிலைக்குச் சென்று உயிரிழப்பும் ஏற்படலாம்.
கொரோனா ஏற்பட்டால் இறப்பு
நிச்சயமா?
கொரோனா நோய்த்தொற்று குறித்த அச்சம் பரவலாக
இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு
சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை
உறுதியாக கூற முடியவில்லை.
56,000 நோயாளிகளிடம்
உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:
Ø 6% பேரின் உடல்நிலை
மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, அழுகிய நச்சுப்பொருளினால் உள்ளுறுப்புகள்
சீரழிதல் (SEPTIC SHOCK) , உறுப்புகள்
செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
Ø 14% பேருக்கு தீவிர
அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று
செல்லாமை
Ø 80% பேருக்கு மிதமான
அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
வயதானவர்கள், ஆஸ்துமா,
நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம். தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்துகள் இல்லையென்பதால் , கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு
நடவடிக்கையில் ஈடுபடுவது தான் நல்லது. உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழியாக
கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் முகம் மற்றும் கைகளை
நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் :
Ø கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று.. ஏறக்குறைய அது 400-500
மைக்ரான் அளவில் இருப்பதால், அதனை எந்த சாதாரண துணி முகமூடியாலும் தடுக்கவியலும். ஆகவே அதற்கு தனியாக முகமூடி (MASK) கட்டாயமில்லை..
Ø இந்தக் கிருமி காற்றில் பரவாது. ஆனால் நிலப்பரப்பின் மூலம் பரவும்.
Ø கொரானா வைரஸ் உலோகங்களின் மேல்பரப்பில் 12 மணிநேரம் வரை வாழும்.
எனவே உலோகப் பொருட்களை கையால் தொடுபவர்கள் உடனே கைகளை சோப்பினால் நன்கு கழுவுவதே
போதுமானதாகும்.
Ø இந்த கிருமி துணிகளின் மீது 9 மணி நேரம் வரை வாழும். எனவே துணிகளை
நன்கு துவைத்து 2மணி நேரம் வரை வெயிலில் உலர்த்தவும்.
Ø மனிதர்கள் தங்களுக்குள் சமூக விலகலை (SOCIAL DISTANCE) கடைபிடிக்க வேண்டும்
. அதாவது, போதிய இடைவெளி விட்டு குறைந்தது
ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு தொடர்பு கொள்ள வேண்டும்.
Ø இந்த வைரஸ் 26-27° டிகிரி வெப்பத்தில் வாழும் தன்மையற்றது.. எனவே
இந்தியா போன்ற வெப்பமண்டல தேசங்களில் இக் கிருமிகள் பரவும் வாய்ப்பு மிக குறைவே..
ஒருவேளை இவற்றின் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள விரும்பினால், சூரிய
ஒளியில் சிறிதுநேரம் நடக்கவும், சூடான தண்ணீரை அருந்தினாலும் போதும்.
Ø எக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணாதீர்கள்..
ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை தவிர்க்கவும்.
Ø தொண்டை வறட்சியும், அதன் தொடர்ச்சியுமே இந் நோயின் அறிகுறி.. எனவே
தொண்டை வறண்டு விடாமல், சூடான உப்பு கலந்த தண்ணீரால் கொப்பளிப்பதும், அதனால்
கல்லீரலுக்கு இந்த வைரஸ் பரவாமலும் தவிர்க்க முடியும்.
மேற்கண்ட தற்காப்பு முறைகள் மூலம் கொரோனா வைரஸில் இருந்து நம்மை
தற்காத்து கொள்ளலாம் என்று UNICEF ஆலோசனை வழங்கியுள்ளது
.
கடந்த காலங்களில் உலகத்தை தாக்கிய
கொள்ளை மற்றும் பெருவாரி நோய்களை நலமாக்குவதில்
அலோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்களிப்பு !
ஹோமியோபதி மருத்துவத்தில் , எந்த மருத்துவரும் நோயிற்கு மருந்தளிப்பதில்லை;
நோய்த் தாக்குதலுக்குள்ளான மனிதனுக்கு உரிய ஒத்த மருந்தை கொடுத்து அவனை நலப்படுத்துகிறார்கள்
. இதை ஹோமியோபதியின் தந்தை மாமேதை ஹானிமன் தமது ஆர்க்கனான் நூலில் மணிமொழி
3- இல் கீழ்வருமாறு மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்;
“ஒவ்வொரு நோயிலும் என்னென்ன கோளாறுகளுக்கு மருத்துவம் செய்ய
வேண்டும்?
(நோய் பற்றிய அறிவு, அது
சுட்டிகாட்டும் குறிகள்
) ஒவ்வொரு மருந்திலும் என்னென்ன கோளாறுகளை நீக்கும் சக்தி
இருக்கிறது?
(மருந்துகளின் ஆற்றல் பற்றிய அறிவு) இவற்றை பற்றிய அறிவு
ஒரு மருத்துவரிடம் இருந்தால் நோயாளியின், உடலில்
மறைந்திருக்கும் நோயை தெளிவாக தெரிந்து கொண்டு வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், சந்தேகத்திருக்கு இடம் இல்லாமல் மருந்து தேர்ந்தெடுக்க இயலும்.”
அதனால் எந்தவொரு நோயாளியையும், அவர்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த நோய்க்குறிகளின்
அடைப்படையில் தனித்துவப்படுத்தி அவர்களின் குறிகளுக்கு ஒத்த ஹோமியோபதி மருந்தின் மூலம் குணப்படுத்தமுடியும்.
இருந்தபோதிலும் மத்திய , மாநில அரசுகள் ஆரம்பத்தில்
ஹோமியோபதி மருத்துவ முறையினை சந்தேகத்திற்குள் அடக்கி அது மக்களுக்கு பயன்படாமல் செய்து
விட்டன. தற்போது, அதன் மகத்துவத்தை புரிந்து கொண்டு கொரோனா நோய்த்தொற்றினை தடுக்கும்
விதமாக " ஆர்சனிக்கம் ஆல்பம் " மருந்தை வது 30- வீரியத்தில் கொடுத்து மக்களின்
நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் , கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு , அந்த நோயாளிகளுக்கு ஹோமியோபதி
மருந்துகள் கொடுத்து நலமாக்குவது பற்றி மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ எந்த உத்தரவாதமும்
கொடுக்கவில்லை!. இருந்தாலும் , ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையின் மூலம் கொரோனா நோய்த்தொற்றை
முழுமையாக அழித்தொழித்து மக்களை ஆரோக்கியத்திற்கு அழைத்துவரும் ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு உண்டு என்பதை கடந்த காலங்களில் உலகத்தில் ஏற்பட்ட தொற்று மற்றும்
பெருவாரியான நோய்களை நலமாக்கிய விபரங்களை கீழ்வரும் ஒப்பீட்டு அட்டவணை மூலம் நாம் அறிந்து
கொள்ளலாம்.
ஆண்டு
|
நாடு/நகரம்
|
தொற்று நோய்/பெருவாரியாகப் பரவும் நோய்
|
ஹோமியோபதி மருத்துவத்தில் இறப்பு விகிதம்
|
அலோபதி மருத்துவத்தில் இறப்பு விகிதம்
|
1799
|
ஜெர்மனி
|
செங்காய்ச்சல்
|
11%
|
63%
|
1853-1855
|
அமெரிக்கா
|
மஞ்சள் காய்ச்சல்
|
5.4%
|
தகவல் இல்லை
|
1854
|
லண்டன்
|
காலரா
|
9%
|
59.2%
|
1862-1864
|
நியூயார்க்
|
டிப்தீரியா
|
16.4%
|
83.6%
|
1874-1877
|
அமெரிக்கா
|
காலரா
நிமோனியா
நச்சுக்காய்ச்சல்
|
27%
6%
10%
|
54%
14%
21%
|
1878
|
அமெரிக்கா
|
மஞ்சள் காய்ச்சல்
|
5.6%
|
17%
|
1892
|
ஆசிய நாடுகள்
|
காலரா
|
15.5%
|
42%
|
1918
|
அமெரிக்கா
|
ஸ்பானிஷ் சளிக்காய்ச்சல்
|
1.05%
|
30%
|
2005
|
அமெரிக்கா
|
நிமோனியா
|
3.4%
|
24.3%
|
மேற்கண்ட அட்டணவனை மூலம் பல்வேறு காலகட்டத்தில் உலகை பீடித்த
பல்வேறு தொற்று மற்றும் பெருவாரியான நோய்களை ஹோமியோபதி மருந்துகள் எவ்வாறு
சிறப்பாக நலமாக்கியுள்ளது என்பதை நோயாளிகளின் இறப்பு விகிதத்தில் இருந்து நாம் தெளிவாக
அறிந்து கொள்ள இயலும்.
அந்த பெருவாரியான நோய்த்தாக்குதலின் போது நோயாளியிடம்
தென்பட்ட குறிகளுக்கு ஒத்த ஹோமியோபதி மருந்துகளை கொடுத்து லட்சக்கணக்கான நோயாளிகளை
நலப்படுத்தியுள்ளார்கள் . உதாரணமாக செங்காய்ச்சலுக்கு பெல்லடோன்னா (BELLADONNA)
மற்றும் ரஸ்டாக்ஸ் (RHUS TOX) மருந்துகளும் , மஞ்சள் காய்ச்சலுக்கு
கிரோடேல்ஸ் ஹோரரிடஸ் ( CROTALUS CORRIDUS)
மருந்தும். சளிக்காய்ச்சலுக்கு (INFLENZA)
ஜெல்ஜிமியம் (GELSEMIUM) ,
பிரையோனியா (BRYONIA) மற்றும் இபோடோரியம்
பெர்பாலோட்டம் (EUPATORIUM PERFOLIATUM) மருந்துகளும் தடுப்பு மருந்தாகவும் , நோய்த்தாக்குதலுக்குப்
பின்னர் நலப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் உலகத்தை உலுக்கிய வயிற்றுப்போக்கு ( CHOLERA) நோயிற்கு காம்போரா (CAMPHORA) , ஆரசனிக்கம் ஆல்பம் (ARSENICUM
ALBUM) மற்றும் வெராட்ரம் ஆல்பம் (VERATRUM ALBUM) போன்ற மருந்துகள் நோயாளியின்
தனித்துவத்திற்குத் தகுந்தவாறு பயன்படுத்தப்பட்டன. 1918 இல் அமெரிக்காவை கடுமையாக தாக்கிய
உடல் உளைச்சலைத் தந்த காய்ச்சலுக்கு (SPANISH FLU) , அலோபதி மருந்தான ஆஸ்பரினை (ASPRIN) விட , ஜெல்ஜிமியம் (GELSEMIUM) ,
பிரையோனியா (BRYONIA) போன்ற ஹோமியோபதி
மருந்துகள் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளை நலமாக்கியது. அதேபோல் 1957 இல் அர்ஜெண்டினா நாட்டில் குழந்தைகளைத்
தாக்கிய போலியோ நோயிற்கு லாதிரஸ் சாட்டிவா (Lathyrus sativa-30C) நோய்த்தடுப்பு மருந்தாகவும் , ஜெல்ஜிமியம் (GELSEMIUM) நலப்படுத்தும் மருந்தாகவும் இருந்திருக்கிறது.
ஹோமியோபதி கொரோனாவை
நலப்படுத்துமா? .
மேற்கண்ட குறிப்புகளிலிருந்து , தற்போதைய தொற்று நோயான “கொரோனோ”வை முற்றிலும்
நலப்படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு என்பதை நம்மால் உணரமுடியும்.
இருந்தாலும் , அலோபதி மருத்துவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஆட்சியாளர்களுக்கும்
மக்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தின் முழுமையான நம்பிக்கை இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாக இருக்கிறது.
ஆனாலும்
உலகிலேயே அதிக ஹோமியோபதி மருத்துவர்களும் , அதிக பயனாளரும் உள்ள இந்தியாவில் , கொரோனா தொற்று பற்றி இந்திய மருத்துவர்கள் எத்தகைய புரிதல் வைத்திருக்கிறார்கள்
என்பதை இப்போது பார்க்கலாம்.
மும்பையை
சேர்ந்த மருத்துவர் ராஜன் சங்கரன், ஹோமியோபதி
மருந்தான “ஆர்சனிக்கம் ஆல்பத்தை ” (ARSENICUM
ALBUM) நோய் எதிர்ப்பு மருந்தாக கொடுக்கலாம் என்றும் , தொற்று அதிகரித்த நிலையில் காம்போரா (CAMPHORA)
மருந்தை
1-M வீரியத்திலும் , நுரையீரல் பாதித்துள்ள நிலைமையில் 10-M வீரியத்திலும் கொடுத்து
நலப்படுத்தலாம் என்று தமது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.
இன்னொரு
இந்திய மருத்துவரான மனிஷ் பாட்டியா, கொரோனா தொற்றுக் குறிகளைத் தெளிவாக
ஆராய்ந்து பாஸ்பரஸ் (PHOSPHORUS) , பிரையோனியா(BRYONIA) , லைகோபோடியம்
(LYCOPODIUM) , சல்பர்(SULPHUR) , பெல்லடோன்னா (BELLADONNA) , காலி கார்பானிக்கம்
(KALI CARBONICUM) , அகோனைட் (ACONITE) , ஆர்சனிக்கம் ஆல்பம் (ARSENICUM ALBUM), கல்கேரியா கார்பானிக்கம் (CALCAREA CARBONICUM)
, மெர்கூரியஸ் (MERCURIUS) , சைனா(CHINA) , லாக்கஸிஸ் (LACHESIS) மற்றும் சில மருந்துகளுக்கு கொரோனாவை நலப்படுத்தும் ஆற்றல் உண்டு
என்று தெரிவித்துள்ளார். நோயாளிகளின் குறிகளுக்கு ஒத்த மருந்தினை மேற்கண்ட மருந்துகளிலிருந்து
தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம் என்கிறார் மரு. மனிஷ் பாட்டியா.
மற்றுமொரு
மும்பை மருத்துவரான பிரபுல் விஜயகர், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு , அதாவது கொரோனா
பாதிப்பு ஏற்படுத்தும் DNA/RNA விளைவுகளுக்குத் தகுந்தவாறு , செபியா-200
(SEPIA) மற்றும் விராட்ரம் ஆல்பம்-50M (VERATRUM
ALBUM) மருந்துகள் உள்ளன; அதனால் அவற்றிற்கு கொரோனா நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல்
இருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.
மற்றுமொரு இந்திய மருத்துவரான வி. கிருஷ்ணமூர்த்தி, பெர்ரம் மெட்டாலிக்கம்-10M மருந்திற்கு
(FERRUM METALLICUM) கொரோனோவை நலப்படுத்தும்
ஆற்றல் இருக்கிறது என்று கண்டறிந்து கூறியுள்ளார்.
ஆனால்
, புனாவை சேர்ந்த மருத்துவர் அமர்சின்கா நிகாம் , கொரோனாவின் குறிகளையும் ஹோமியோபதி
மருந்துகளின் தனிச்சிறப்புக் குறிகளையும் ஒப்பிட்டு பின் வருமாறு ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார்;
1. குளிச்சியான
உடல்வாகு உள்ளவர்களுக்கு:
தாகம் உள்ளவர்கள்
|
தாகம் இல்லாதவர்கள்
|
ஆர்சனிக்கம் ஆல்பம் (ARS)
|
ஆண்டிமோனியம் தார்தாரிக்கம் (ANT-T)
|
பெல்லடோன்னா(BELL)
|
காம்போரா(CAMPH)
|
காம்போரா(CAMPH)
|
ஹீபர் சல்பர்(HEP)
|
நக்ஸ் வாமிக்கா (NUX-V)
|
காலி கார்பானிக்கம்(KALI-C)
|
பாஸ்பரஸ்(PHOS)
|
பாஸ்பரஸ்(PHOS)
|
ஆண்டிமோனியம் தார்தாரிக்கம் (ANT-T)
|
ஸ்டான்னம் மெட்டாலிக்கம் (STANN)
|
பாஸ்பாரிக் ஆசிட் (PH-AC)
|
|
சம்புகஸ் (SAMB)
|
|
ரூமெக்ஸ் (RUMEX)
|
|
காலி பைக் (KALI-BI)
|
|
இஸ்குயில்லா(SQUIL)
|
|
கார்ப்போ வெஜ் (CARB-V)
|
2. வெப்பமான உடல்வாகு உள்ளவர்களுக்கு:
தாகம் உள்ளவர்கள்
|
தாகம் இல்லாதவர்கள்
|
பிரையோனியா(BRY)
|
கார்ப்போ வெஜ் (CARB-V)
|
காகுலஸ் (COCC)
|
ட்ரொசேரா (DROS)
|
ஆண்டிமோனியம் குருடம் (ANT-C)
|
ஜெல்ஜிமியம் (GELS)
|
காக்கஸ் காக்டி (COCC-C)
|
பல்ஸாட்டில்லா (PULS)
|
அகோனைட் (ACON)
|
ஸ்பாஞ்சியா (SPONG)
|
அல்லியம் சீபா (ALL-C)
|
டல்கமரா ( DULC)
|
மெபிடிஸ் (MEPH)
|
|
செலிடோனியம் (CHEL)
|
3. குளிர்ச்சி
மற்றும் வெப்பம் இரண்டும் மாறிமாறித் தோன்றும் உடல்வாகு உள்ளவர்களுக்கு;
தாகம் உள்ளவர்கள்
|
தாகம் இல்லாதவர்கள்
|
மெர்கூரியஸ் அயோடெட்டம் ருப்ரம் (MERC-I-R)
|
லைகோபோடியம் (LYC)
|
மெர்கூரியஸ் கொரோஸிவ்ஸ்
(MERC-C)
|
|
மெர்கூரியஸ் அயோடெட்டம் பிலவோட்டம் (MERC-I-F)
|
|
மெர்கூரியஸ் (MERC)
|
|
ரஸ் டாக்ஸ் (RHUS-T)
|
ஆனால்,
இத்தாலிய மருத்துவர் மாசிமோ , தமது நாட்டில் கொரோனோ தொற்று பரவிய ஏறத்தாழ பல நோயாளிகளை சின்னினம் மூரியாடிக்கம்
(CHINNINAM MURIATICUM) , கிரேன்டீலியா (GRINDELIA) மற்றும் காம்போரா (CAMPHORA) போன்ற மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார். கொரோனோ தொற்று
வீரியத்துடன் தாக்குதல் நடத்தியுள்ள இத்தாலியில் நோயாளிகளுக்கு நேரிடையாக சிகிச்சை
அளித்ததால் இவரது குறிப்புகள் நம்பத் தகுந்த
வகையில் உள்ளது.
மேலும்
மதுரையை சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர்
B. அம்பிகா, கொரோனா தொற்று என்று சந்தேகம்
உள்ள “காம்போரா” மருந்து 200- வது வீரியத்தில் கொடுத்து நலப்படுத்திய ஒரு துயரரைப்
பற்றிய ஆய்வுகளை பகிர்ந்து கொண்டார். அந்த சிறுவன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு , வெளியுலகம் ஆபத்து
நிறைந்தது என்ற பயத்துடன் இருந்ததால் “காம்போரா” மருந்து வேலை செய்து நலப்படுத்தியது
என்று கூறினார்.
எப்படி
இருப்பினும் ஹோமியோபதி மருத்துவம் ஒத்தவை விதிப்படி செயல் புரிவதால் , ஒவ்வொரு
நோயாளியையும் தனித்துவப்படுத்தி அவருக்குரிய குறிகளின் அடிப்படையில் தான்
மருந்து பரிந்துரை செய்யப்படும். ஹானிமன் தமது
மணிமொழி 83 -இல் கீழ்வருமாறு கூறியுள்ளார்;
"ஒவ்வொரு
நோயையும் தனித்துவப்படுத்தி ( தனிப்பண்பின் அடிப்படையில்) பரிசோதனை செய்யும் விஷயமாக நான் இங்கு பொதுவான
வழிமுறைகளை தருகின்றேன். ஆதலால் தன்னிடம் சிகிச்சைக்கு வரும்
ஒவ்வொரு நோயாளிகளிடமும் அவர்களுக்கு பயன்படத்தக்கது எது என்பதைப்பற்றி
மனதிற்குள் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். நோயைப் பற்றி முன்கூட்டியே ஒரு முடிவு கொள்வதை
தவிர்த்து பகுத்தறிவைத் தீட்டிக்கூர்மையாக்கி நோயின் விவரங்களை அறிவதில் கண்ணையும்
கருத்தையும் ஒருங்கே செலுத்தி அதன் உருவை கண்டுபிடிப்பதில் மெய்யான பற்றுக் கொள்ள
வேண்டும்".
அதேபோல்
நோயாளிகளிடம் காணப்படும் குறிகளில் எத்தகைய குறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
என்பது
பற்றி மணிமொழி 153 இல் “குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்தை தேடுகிற
அதாவது நீக்கப்படவேண்டிய இயற்கை நோயுடன் ஒற்றுமையுள்ள செயற்கை நோயைத் தோற்றுவித்த
மருந்ததை கண்டு பிடிப்பதற்காக,
இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் நமக்குத் தெரிந்த மருந்துகளின்
குறிப்பட்டியல்களை ஒப்பிட்டு பார்க்கும் இவ்வேலையில், மிகத்
தெளிவாய், தனிப்பட்டதாய், அபூர்வமாகவும்,
வினோதமாகவும் உள்ளதாய் (விசேஷத் தன்மை) இருக்கும் நோய்க்குறிகள்
முக்கியமானதாக கருதப்பட வேண்டும் ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின்
குறிப்பட்டியலில் காணப்படும் விசேஷக்குறிகளுடன் நோயின் விசேஷக் குறிகள்
ஒற்றுமையாய் இருக்கவேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட மணிமொழிகளின் அடிப்படையில் தான் கொரோனோ தொற்று உள்ள நோயாளிகளை
ஆய்வு செய்து நலப்படுத்த வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் சரவணக்குமார்
தெளிவாக குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், கொரோனோ தொற்றினால் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை
செய்து பார்த்த பொழுது அவருடைய
நுரையீரல் , இதயம் மற்றும் சிறுநீரகங்களில் இரத்தம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே , கொரோனோ தொற்று மிக குறுகிய காலத்தில் சோரா மியாசத்திலிருந்து சிபிலிட்டிக் மியாசத்திற்கு
தாவி , நோயாளியை விரைந்து மரணிக்கச்செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆகவே ஹோமியோபதி
மருந்துகளில் நாடி நாளங்களில் இரத்தத்தை உறையச் செய்யும் (THROMBOSIS) மருந்துகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்துகிறார். அப்படிப்
பார்க்கும் போது , காம்போரா மருந்துடன் பெர்ரம் மெட்டாலிக்கம் (FERR), காலி குளோரம்
(KALI-CHOL) , காலி மூர் (KALI-M), மெர்கூரியஸ் (MERC) மற்றும்
சீகேல் (SEC) போன்ற மருந்துகளும் வேலை
செய்யும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஆகவே கொரோனோ தோற்று
நோயை பரவாமல்
தடுக்கவும் அல்லது நலப்படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி
மருந்துகளுக்கு முழுமையாக உண்டு. மக்கள் நம்பிக்கையுடன் ஹோமியோபதி மருத்துவர்களை
நாடி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
முடிவுரை :
தற்போதைய சூழ்நிலையில்
கொரோனோ தொற்று நோயிற்கான தடுப்பு மருந்தாக மட்டுமே ஆர்சனிக்கம் ஆல்பத்தை பயன்படுத்த மத்திய , மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் , கொரோனோ
தொற்று உறுதி செய்யப்பட பிறகு , அந்த நோயாளிகளை நலப்படுத்தும் பொறுப்பு ஹோமியோபதி
மருத்துவர்களுக்கு
வழங்கப்படவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டம். இது ஹோமியோபதியர்களுக்கு புதிதல்ல. மாமேதை
ஹானிமன் கண்டெடுத்த ஹோமியோபதியை முதலாளித்துவ அரசுகள் காலங்காலமாக புறக்கணித்து வந்தாலும்
, மக்கள் ஹோமியோபதியை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் காலம் கனிந்து வருகிறது.
சு.கருப்பையா
மதுரை
+919486102431
www.manithanalam@gmail.com
Bibliography/References
:
4. Online
Homeopathy repertory Complete Dynamics: www.completedynamics.com
5. Organon
of Medicine- By Dr.Samuel Hahnemann
No comments:
Post a Comment