§ 79
Hitherto syphilis alone has
been to some extent known as such a chronic miasmatic disease, which when
uncured ceases only with the termination of life. Sycosis (the condylomatous
disease), equally ineradicable by the vital force without proper medicinal
treatment, was not recognized as a chronic miasmatic disease of a peculiar
character, which it nevertheless undoubtedly is, and physicians imagined they
had cured it when they had destroyed the growths upon the skin, but the persisting
dyscrasia occasioned by it escaped their observation.
ஆர்கனான் மணிமொழி-79
§ 79
மேகப்புண்கள்
மற்றும் மேகவெட்டை நோய்கள்
இதுவரை மேகப்புண்கள் ( SYPHILIS) மட்டுமே
நாள்பட்ட நச்சாவி சார்ந்த
(நோய்மூலம்) நோய்த்தன்மை கொண்டதாகவும், அதைக் குணப்படுத்தவில்லை என்றால் நோயாளி
இறக்கும் வரை அது நீங்காமல் நிலைத்திருப்பதாக உள்ளது என்று ஓரளவிற்கு அறியப்பட்டுள்ளது. மேகவெட்டை நோயும் (மரு அல்லது தசை வளர்ச்சி நோய்= SYCOSIS), அதற்குச் சமமாக , சரியான மருந்துகளால் அன்றி
உயிராற்றலினால் அழிக்க முடியாத ஒரு விசித்திரமான பண்புக்கூறுகள் கொண்ட ஒரு நாள்பட்ட நச்சாவி சார்ந்த நோயாக அங்கீகரிக்கப்படவில்லை, இருப்பினும் இதுவும் நாட்பட்ட வகை
நோய் சார்ந்ததே என்பதில்
சந்தேகமேயில்லை , மற்றும் தோலின் மீது வளர்ந்த அந்த தசை வளர்ச்சியை மருத்துவர்கள் அழித்தபோது அதை குணப்படுத்தியதாக அவர்கள்
கற்பனை செய்து கொண்டனர், ஆனால் அது
இரத்தக்கூறுகள் மூலம் தொடர்ந்து வரும்
நோய் என்பது அவர்களின் கவனிப்பிலிருந்து தப்பிவிட்டது
.
No comments:
Post a Comment