Tuesday 12 May 2020

ஆர்கனான் மணிமொழி-82


(TAKING THE CASE § 82-§ 104)

Although, by the discovery of that great source of chronic diseases, as also by the discovery of the specific homoeopathic remedies for the psora, medicine has advanced some steps nearer to a knowledge of the nature of the majority of diseases it has to cure, yet, for settling the indication in each case of chronic (psoric) disease he is called on to cure, the duty of a careful apprehension of its ascertainable symptoms and characteristics is as indispensable for the homoeopathic physician as it was before that discovery, as no real cure of this or of other diseases can take place without a strict particular treatment (individualization) of each case of disease - only that in this investigation some difference is to be made when the affection is an acute and rapidly developed disease, and when it is a chronic one; seeing that, in acute disease, the chief symptoms strike us and become evident to the senses more quickly, and hence much less time is requisite for tracing the picture of the disease and much fewer questions are required to be asked-80, as almost everything is self-evident, than in a chronic disease which has been gradually progressing for several years, in which the symptoms are much more difficult to be ascertained.

Foot Note-80:  Hence the following directions for investigating the symptoms are only partially applicable for acute diseases.

ஆர்கனான் மணிமொழி-82

§ 82

இத்தகைய எல்லா நாட்பட்ட நோய்மூலத்திற்கும்  , குறிப்பாக சொறி-சிரங்கு நோய்மூலத்திற்கு , பொருத்தமான குறிப்பிட்ட மருந்தை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் நலப்படுத்தக்  கூடிய மருந்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை.


இருப்பினும், நாள்பட்ட நோய்களுக்கான முக்கியமான  மூலகாரணம்  சொறி- சிரங்கு நோய்மூலமே என்ற கண்டுபிடிப்பைத் தொடர்ந்து , அந்த மூலகாரணம்  சொறி- சிரங்கு நோய்மூலத்தை நீக்க பொருத்தமான குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்துகளைக் கண்டுபிடித்த பிறகு , இந்த மருந்துகள் (மருத்துவமுறை) தான் நலப்படுத்த வேண்டிய பெரும்பான்மையான நோய்களின் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் திறத்தை நோக்கி சில எட்டுகள் முன்னேறிச் சென்றுள்ளது , ஆயினும்.  ஒவ்வொரு நாட்பட்ட நோய் வரலாற்றிலும் (சொறி- சிரங்கு நோய்மூலம்) , அங்கே நலப்படுத்துவதற்காக அழைக்கப்படும் ஹோமியோபதி மருத்துவரின் கடமையாக இருப்பது , நோய்குறிகளை நன்கு ஆராய்ந்து , உறுதிப்படுத்திக் கொள்ளத் தக்கவாறு உள்ள குறிகளையும் மற்றும் தனிச் சிறப்பு பண்பு குறிகளையும் மிகுந்த கவனத்துடன் மனதில் உள்வாங்கிக் கொள்வதும் அக்கண்டுபிடிப்பை போன்று இன்றியமையாததாகும். மிகக் கண்டிப்பான முறையில் நோய்ப் பாதிப்பிற்குள்ளான ஒவ்வொரு நோயாளரையும் தனித்தனியாக (தனித்துவப்படுத்துதல்) சிகிச்சை செய்தாலன்றி இந்த நோயையும் அல்லது பிற நோய்களையும் உண்மையாக நலப்படுத்த முடியாது- இது போன்று நோய்களை ஆய்வு செய்யும் போது திடீரென்று தாக்கி  தோன்றி மறையும் தீவிர நோய்களையும் , நீண்ட காலமாக தொடர்ந்து தாக்கி வரும் நாட்பட்ட நோய்களையும் வேறுபடுத்திப் பார்த்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக தோன்றி மறையும் தீவிர நோயில் முதன்மையான குறிகள் வேகமாக தாக்கும் தன்மையிலும் , அடித்துக்கூறும் விதமாகவும்,   புலன்களால் விரைவாக உணர்கிற தன்மையிலும் இருக்கும். அதனால் இத்தகைய தீவிர நோயின் தன்மையைப் புரிந்து கொள்ள குறைந்த கால அவகாசமே போதுமானது ஆகும் மற்றும், மிகக் குறைந்த கேள்விகளே கேட்க வேண்டிய அவசியம் இருக்கும்  -80, பெரும்பாலான தீவிர வியாதிகள் தெள்ளத் தெளிவாக தெரியும்படி தன்னைக் காட்டிக் கொள்வதால் ,  பல ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறி வரும் ஒரு நாள்பட்ட நோயைக் காட்டிலும், இது தெளிவாகத் தெரிகிறது,  ஆனால் நாட்பட்ட வியாதிகளின் குறிகளை ஆராய்ந்து அறிந்து கொள்வது மிகவும் கடினம்.


அடிக்குறிப்பு-80:

எனவே தீவிர நோய்களில் குறிகளைப் பற்றி ஆராய்வதற்கான கீழ்காணும் வழிமுறைகள் ஓரளவிற்கு மட்டுமே பொருந்தும்.


No comments:

Post a Comment