Tuesday, 12 May 2020

ஒரு மருத்துவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய பயனற்ற- அதிசய செய்தித்தாள்



ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்யலா நாயுடு( Dr. Muthyala Naidu), அவரது மனைவி, சிறந்த கவிஞரும் இந்தியாவின் வானம்பாடியான கவிக்குயில் திருமதி சரோஜினி நாயுடு(Mrs Sarojini Naidu) அம்மையார். அவர்கள் முக்கியமான பொது நபர்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாளர்களாகவும் இருந்தவர்கள் .


அத்தகைய புகழ்பெற்ற பெற்றோர்களுக்கு பிறந்தவர் தான் மருத்துவர் ஜெய்சூர்யா (Dr. Jaisoorya), பெற்றோர் இருவரின் அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்  அவர் ஜெர்மனியில் மருத்துவம் பயின்று , எம்.டி ( நோய் ஆய்வியல் ) பட்டம் பெற்று , தனது தந்தை பணி செய்த  அதே மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக தனது தாய்நாடான இந்தியாவிற்கு திரும்பினார்.

ஒரு நாள் காலில் தசை அழுகிப்போன புண்களுடன் (gangrene) கூடிய ஒரு நீரிழிவு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த டாக்டர் நாயுடு, அவரை பரிசோதித்த பின்னர்,  அவரது காலை வெட்டி எடுத்து விடுவது தான் ஒரே சிகிச்சையாக பரிந்துரைத்தார். அதற்கு அந்த நோயாளி தான் முடங்கிப்போன வாழ்க்கையை நடத்துவதை விட, இறந்து விடுவதே மேல் என்று அப்பட்டமாக மறுத்துவிட்டார்.  மூன்று நாட்கள் கடந்துவிட்டன ..... எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.


மூன்றாம் நாள் ஜூனியர் மருத்துவர்  ஜெய்சூர்யா நாயுடு, தனது வழக்கமான வெற்றிலை அனுப்புமாறு கடைக்காரரிடம் கேட்டார்.  இயற்கையின் அருட்கோடை கிடைத்தது ! ஆம்! வெற்றிலை போர்த்திய அந்த பயனற்ற செய்தித்தாளை பிரித்தவுடன்   அங்கே அந்த நோயாளியின் தலைவிதியை மாற்றக்கூடிய ஒரு செய்தி இருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியது,  அதில் தசை அழுகிப்போன புண்கள் பற்றிய ஒரு மருத்துவ குறிப்பைக் கண்டார்! அது அவரது ஆர்வத்தைத் தூண்டியது, அந்தப் பேப்பரை அவர் கவனமாக படித்த போது,   தசை அழுகிப்போன புண்ணுக்கு  சீகேல் (SECALE CORNUTUM ) என்ற ஹோமியோபதி மருந்து நலப்படுத்தும் என்று செய்தியை அறிந்து கொண்டார்.

அவர் ஒரு ஹோமியோ கடைக்கு விரைந்து சென்று சீகேல் மருந்து பற்றிய குறிப்புகளை ஆர்வமாக கற்றுக்கொண்டார். பின்பு அவர் ஒரு பாட்டிலை வாங்கி அந்த தசை அழுகிப்போன புண்ணுள்ள நோயாளிக்குக் கொடுத்து வந்தார். . ஒரு அதிசயம் நிகழ்ந்தது! சில நாட்களில் நோயாளி முற்றிலும் நலமடைந்தார்.

ஜெய்சூர்யா என்ற ஒரு ஹோமியோபதியர்,  ஒரு நோயியல் நிபுணரிடமிருந்து பிறந்தார். அவரது நினைவாக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டது, இது ஹைதராபாத்தில் ஒரு ஹோமியோபதி கல்லூரியைத் தொடங்கியது, இப்போது அது, “ஜெய்சூரியா பொட்டி ஸ்ரீராமுலு அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது”.


அந்த பயனற்ற காகிதம் … ஹோமியோபதிக்கு ஒரு  மருத்துவக்கல்லூரியைத் தந்துள்ளது .


SOURCE:
NATIONAL JOURNAL OF HOMOEOPATHY 1993 Jan / Feb Vol II No 1. Dr Sastry K G K.


No comments:

Post a Comment