Sunday, 19 April 2020

ஆர்கனான் மணிமொழி-78




The true natural chronic diseases are those that arise from a chronic miasm, which when left to themselves, and unchecked by the employment of those remedies that are specific for them, always go on increasing and growing worse, notwithstanding the best mental and corporeal regimen, and torment the patient to the end of his life with ever aggravated sufferings. These, excepting those produced by medical malpractice (§ 74), are the most numerous and greatest scourges of the human race; for the most robust constitution, the best regulated mode of living and the most vigorous energy of the vital force are insufficient for their eradication.76


Foot note-76: During the flourishing years of youth and with the commencement of regular menstruation joined to a mode of life beneficial to soul, heart and body, they remain unrecognized for years. Those afflicted appeal in perfect health to their relatives and acquaintances and the disease that was received by infection or inheritance seems to have wholly disappeared. But in later years, after adverse events and conditions of life, they are sure to appear anew and develop the more rapidly and assume a more serious character in proportion as the vital principle has become disturbed by debilitating passions, worry and care, but especially when disordered by inappropriate medicinal treatment.


ஆர்கனான் மணிமொழி-78


இயற்கையான நாள்பட்ட நோய்கள் யாவும் நீடிக்கும் குணமுள்ள நோய்மூலக்கூறுகளில் இருந்து தோன்றுகின்றன


உண்மையான இயற்கையான நாள்பட்ட நோய்கள் நீடிக்கும் குணமுள்ள நோய் மூலக் கூறுகளின் ஏதோ ஒன்றினால் தான் தோன்றுகின்றன , அவற்றை அப்படியே விட்டுவிடும் போதும்   , அவற்றிற்கு உரிய திட்டவட்டமான   மருந்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுக்காவிட்டாலும்   , மனம் மற்றும் உடல் சார்ந்த ஆகார நியமமும் எத்தகைய சிறப்பான நிலையிலேயே இருந்தபோதிலும், எப்போதும் அதிகரித்து மற்றும் மோசமாகி வருகின்றன, நோயாளியை அவரது   வாழ்க்கையின் இறுதி வரை வதைத்துத் துன்பத்தை அதிகப்படுத்துவதாக உள்ளன. இந்த நிலை,  தவறான மருத்துவச்  சிகிச்சை முறையினால் தோன்றிய ( மணிமொழி-74 ) சிலவற்றைத் தவிர , எண்ணிக்கையில் அதிகமாக உள்ள இந்த நாட்பட்ட நோய்கள் மனித இனத்தை மிகவும் துன்புறுத்துபவையாக உள்ளன;  மிகவும் வலிமையான உடலமைப்பு ,  சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் மிகவும் வலிமையான உயிராற்றல் ஆகியவை அவர்களுக்கு இருந்த போதிலும்,  அவையாவும் இந்த நாட்பட்ட நோய்களை முற்றிலும் அழித்தொழிப்பதற்கு போதுமானதாக இல்லை-76.



அடிக்குறிப்பு-76:

செழிப்பான இளமைப்பருவத்தின் போதும்  மற்றும் வழக்கமான மாதவிடாய் (பெண்களுக்கு) தொடங்கியவுடன் அவர்களுடைய ஆன்மா, இதயம் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் வாழ்க்கை முறையுடன் இணைந்த பிறகும் , அவை ( நாட்பட்ட நோய்கள்)  பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் அங்கு  இருக்கின்றன. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் சரியான ஆரோக்கியத்துடன் இருப்பவர்களைப் போன்று காட்சியளிக்கிறார்கள்    மற்றும் தொற்று அல்லது பரம்பரை மூலம் பெறப்பட்ட நோய்கள் முற்றிலும் மறைந்துவிட்டவை போன்றும் காணப்படுகின்றன . ஆனால் பிற்காலத்தில், பாதகமான நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குப்  பிறகு, அவை (நாட்பட்டநோய்கள்) புதிதாகத் தோன்றுவது போன்றும்  மற்றும் மிக விரைவாக வளர்ச்சியடைவதாகவும் ஆகி விடுகின்றன மற்றும் அவர்களுடைய தீவிரமான உணர்ச்சிப் பாதிப்புகளுக்கு ஏற்றவாறும் , துக்கம் மற்றும் ஆழ்ந்த கவலை ஆகியவற்றாலும்,  இன்னும் குறிப்பாகக் கூறுவதென்றால் பொருத்தமில்லாத கேடு விளைவிக்கும் மருத்துவ  (அலோபதி) சிகிச்சையினால் அவர்களுடைய உயிரின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூறு (VITAL PRINCIPLE) தளர்ச்சியடைந்து அவர்களது இடர்பாடு மேலும் மோசமடைகிறது.

No comments:

Post a Comment