Monday, 31 August 2015

ஆர்கனான் மணிமொழி-34

§ 34

The greater strength of the artificial diseases producible by medicines is, however, not the sole cause of their power to cure natural disease. In order that they may effect a cure, it is before all things requisite that they should be capable of producing in the human body an artificial disease as similar as possible to the disease to be cured, which, with somewhat increased power, transforms to a very similar morbid state the instinctive life principle, which in itself is incapable of any reflection or act of memory. It not only obscures, but extinguishes and thereby annihilates the derangement caused by the natural disease. This is so true, that no previously existing disease can be cured, even by Nature herself, by the accession of a new dissimilar disease, be it ever so strong, and just as little can it be cured by medical treatment with drugs which are incapable of producing a similar morbid condition in the healthy body.


மிகுந்த பலம் வாய்ந்த செயற்கையான நோய்களை தோற்றுவிக்கிற ஆற்றல் பெற்றுள்ளன என்ற தனித்த காரணத்தால் தான், மருந்துகள் இயற்கையான நோயை நீக்குகிறது என்று எண்ண கூடாது. அவை  மனித உடலில் நலமாக்கும் ஆற்றலைச் செய்யவேண்டுமென்றால், நலபடுத்தவேண்டிய நோயிற்குக் கூடுமானவரை ஒத்த செயற்கையான நோயை அவை உண்டாக்குவதே மற்றவற்றைக் காட்டிலும் இன்றியமையாதவையாக இருக்கிறது. அம்மருந்துகள் தானாகவே அதிகரித்த சக்தியுடன் செயல்பட முடியாததும் , நினைவாற்றலைப் பயன்படுத்தி செயல்புரிய இயலாததும், தூண்டுணர்வின் பாற்பட்டதும் ஆகிய உயிர் முதலாற்றலை சற்று அதிகரித்த மருந்தாற்றலைச் செலுத்தி மிகவும் ஒத்த  தன்மையுடைய செயற்கை நோய்ப்பாதிப்பை உண்டாக்குகின்றன. அதனால் இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒழுங்குலைவு மாற்றப்பட்டு,மங்கச்செய்வது மட்டுமன்றி முற்றிலும் ஒழித்துக்கட்டப்படுகிறது. இயற்கை அன்னையின் ஆற்றல் எவ்வளவு தான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும், ஒத்ததன்மை இல்லாது போனால் அதனால் ஏற்கனவே உறைந்திருக்கும் நோயை நீக்க முடியாது. அதைப்போலவே இயற்கை நோய் குறிகளுடன் ஒத்த செயற்கையான நோய்குறிகளை ஆரோக்கியமான மனித உடலில் உண்டாக்க முடியாத பிற மருத்துவத்தாலும், மருந்துகளாலும் அது எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் ஓரளவே நலப்படுத்த முடியுமே தவிர முற்றிலுமாக இயற்கையான நோயை நீக்குவது இல்லை என்பது தெளிவான உண்மையாகும்.



No comments:

Post a Comment