Tuesday, 18 August 2015

ஆர்கனான் மணிமொழி-25

§ 25


Now, however, in all careful trials, pure experience,1 the sole and infallible oracle of the healing art, teaches us that actually that medicine which, in its action on the healthy human body, has demonstrated its power of producing the greatest number of symptoms similar to those observable in the case of disease under treatment, does also, in doses of suitable potency and attenuation, rapidly, radically and permanently remove the totality of the symptoms of this morbid state, that is to say (§ 6 - 16), the whole disease present, and change it into health; and that all medicines cure, without exception, those diseases whose symptoms most nearly resemble their own, and leave none of them uncured.


Foot Note-1: I do not mean that sort of experience of which the ordinary practitioners of the old school boast, after they have for years worked away with a lot of complex prescriptions on a number of diseases which they never carefully investigate, but which, faithful to their school, they consider as already described in works of systematic pathology, and dreamed that they could detect in them some imaginary morbific matter, or ascribe to them some other hypothetical internal abnormality. They always saw something in them, but knew not what it was they saw, and they got results, from the complex forces acting on an unknown object, that no human being but only a God could have unraveled - results from which nothing can be learned, no experience gained. Fifty years' experience of this sort is like fifty years of looking into a kaleidoscope filled with unknown colored objects, and perpetually turning round; thousands of ever changing figures and no accounting for them!


இந்நேரத்தில் , எவ்வகையிலேனும, விழிப்புணர்வுடைய ஆய்வினாலும் , தூய பட்டறிவினாலும் 1 நலமாக்கல் கலையின் தனித்த  மற்றும் தவறிழைக்காத மதிப்பு வாய்ந்த அறிவுரை நமக்கு உண்மையாக அறிவுறுத்துவது என்னவென்றால்,  நலமாக உள்ள மனித உடலில் எந்த மருந்துப்பொருள் தலைசிறந்த எண்ணிக்கையிலான குறிகளை உண்டாக்குகிறதோ அம்மருந்தை , நம்மிடம்  சிகிச்சை எடுத்துக் கொள்பவரை கவனமாக ஆராய்ந்தபொழுது காணப்பட்ட அந்த நோய்நிலைக்குப்  பொருத்தமான வீரியத்திலும் , நுண்மையான அளவிலும்  கொடுக்கும் பொழுது அந்நோயின் மொத்தக்குறிகளையும் அதாவது அங்கு காணப்படும் முழுநோயையும்( மணிமொழி 6 முதல் 16 வரை) விரைவாகவும் , அடியோடும், நிரந்தரமாகவும் நீக்கி நலமான நிலைக்கு மாற்றுகிறது. அம்மருந்துகள் , விதிவிலக்கு இல்லாமல் அவற்றிற்கு இணையான குறிகளைக் கொண்ட அந்தநோயில் எதையும் விட்டு வைக்காமல் நலமாக்குகின்றன.


அடிக்குறிப்பு -1
அலோபதி துறையைச் சேர்ந்த சாதாரண மருத்துவப் பயிற்சியாளர்கள்   பல ஆண்டுகள் மருத்துவம் செய்தும் நோய்களைப்பற்றிய போதுமான அனுபவமில்லாமலும் , பல்வேறு நோய்களை கவனமாக புலனாய்வு செய்யாமல் அவற்றிற்கு பற்பல கலவையான மருந்துக்குறிப்புகளைக் கொடுத்தும்  வீண் பெருமை பேசித் திரிவதை நான் குறிப்பிடவில்லை. அவர்கள் தங்களுடைய மருத்துவமுறையின் கொள்கை கோட்பாடுகளில் மாறாத விசுவாசம் கொண்டவராக ,  வரையறுக்கப்பட்ட நோய்ஆய்வியல் நூல்களில், நோய்களைப் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டிருப்பதையும், அந்த நோய்களில் கண்ணுக்குப் புலப்படாத , கற்பனையான ஒரு நோய்ப்பொருளை கண்டுபிடிக்கலாம் என்று கனவு காண்பவர்களாகவும் அல்லது ஒருவர் உடலில் உள்ளே காணப்படும் உறுதிப்படுத்தப்படாத இயல்பு திறந்த ஒரு பிறழ்வு போன்றவற்றைக் கவனத்தில் கொள்கிறார்கள். அவர்கள் அந் நோய்களில் எப்போதுமே ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்கிறார்கள், ஆனால் அவ்வாறு தெரிந்து கொண்டதுதான் என்ன? என்பதை அறிந்து கொள்ளவில்லை. இவ்வாறு சரியாகத் தெரியாத ஒரு நோய்ப் பொருளின் (நோயின்) மீது அவர்கள் கலவை மருந்துகளைக் கொடுத்து எழுப்பிய , அக்கலவையான ஆற்றல்கள் உண்டாக்கிய விளைவுகள் பற்றிய உண்மைகளை அல்லது புதிர்களை எந்த மனிதர்களாலும் விடுவிக்க முடியாமல் அதைக் கடவுள் மட்டுமே தெளிவுபடுத்துவதாக இருக்கிறது.  அத்தகைய விளைவுகளால் உண்டாகிய முடிவுகளில் இருந்து எதையும் கற்கவும் முடியாது; எந்த பட்டறிவும் கிடைக்காது. இவ்வாறு அமைந்த ஐம்பது ஆண்டுகால பட்டறிவு என்பது , அறிந்துகொள்ளமுடியாத வண்ணக்கலவையுடன் கூடிய ஆயிரக்கணக்கான உருவங்களை பலவண்ணக்காட்சி கருவி மூலம் வட்டமாக சுற்றிவிட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருப்பதைப் போன்றதாகும். 

No comments:

Post a Comment