Now,
as in the cure effected by the removal of the whole of the perceptible signs
and symptoms of the disease the internal alteration of the vital principle to
which the disease is due - consequently the whole of the disease - is at the same
time removed,1 it follows that the physician has only to remove the
whole of the symptoms in order, at the same time, to abrogate and annihilate
the internal change, that is to say, the morbid derangement of the vital force
- consequently the totality of the disease, the disease itself.2
But when the disease is annihilated the health is restored, and this is the
highest, the sole aim of the physician who knows the true object of his
mission, which consists not in learned - sounding prating, but in giving aid to
the sick.
Foot Note-1: A
warning dream, a superstitious fancy, or a solemn prediction that death would
occur at a certain day or at a certain hour, has not infrequently produced all
the signs of commencing and increasing disease, of approaching death and death
itself at the hour announced, which could not happen without the simultaneous
production of the inward change (corresponding to the state observed
internally); and hence in such cases all the morbid signs indicative of
approaching death have frequently been dissipated by an identical cause, by
some cunning deception or persuasion to a belief in the contrary, and health
suddenly restored, which could not have happened without the removal, by means
of this mortal remedy, of the internal and external morbid change that
threatened death.
Foot Note-2: It
is only thus that God the preserver of mankind, could reveal His wisdom and
goodness in reference to the cure of the disease to which man is liable here
below, by showing to the physician what he had to remove in disease in order to
annihilate them and thus re-establish health. But what would we think of His
wisdom and goodness if He has shrouded in mysterious obscurity that which was
to be cured in diseases (as is asserted by the dominant school of medicine,
which affects to possess a supernatural insight into the nature of things), and
shut it up in the hidden interior, and thus rendered it impossible for man to
know the malady accurately, consequently impossible for him to cure it?
நோய் நிலையில் புலன்களால் உணரத்தக்க முழுமையான அறிகுறிகளையும் மற்றும்
நோய்க்குறிகளையும் நீக்குவதால் , நோயினால் அகத்தினுள்ளே பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும்
உயிர்முதலாற்றலிலும் ( அல்லது உயிர் வாழ்வதற்கான இன்றியமையாத கோட்பாடு) மாற்றத்தை ஏற்படுத்தி அதனால் நோய் முழுமையாக நீக்கப்படுகிறது. அதே வேளையில் மருத்துவர், உயிராற்றலில் ஏற்பட்டிருக்கும் முழுமையான
நோய்க்குறிகளையும் ஒழித்துக்கட்டி நிர்மூலமாக்கிவிடுவதால் நோயின்
மொத்தக்குறிகளும் நீங்கி விடுகின்றன. அதாவது, உயிராற்றலில் ஏற்பட்டிருந்த நோயப்பாதிப்பையும் , அதன் மொத்தக் குறிகளையும் , ஆம்! நோய் முழுவதையும் -
முற்றிலுமாக நிர்மூலமாக்கி உடல்நலம் மீட்கப்படும் இச்செயலையே மருத்துவர் வாழ்வின்
உண்மையான , உயர்ந்த நோக்கமாகவும் , மேற்கொண்ட பணியாகவும்
கருதவேண்டும். அவ்வாறு நோயாளியின் பிணியைப்
போக்க உதவாமல் தாமே எல்லாம்தெரிந்த கற்றறிந்தவர் போல்
பிதற்றித்திறிவது வாழ்வின் உயர்ந்த நோக்கமாகாது.
அடிக்குறிப்பு -1: நோய் துவங்கி விட்டதாகவும் , நோய் அதிகரிப்பதாகவும் , இறப்பு நிகழப் போவதையும் , குறிப்பிட்ட இந்த நேரத்தில் இறப்பு நிகழ்வதையும் சுட்டிக்காட்டும் குறிகளாகவே, ஒரு எச்சரிக்கை செய்யும் கனவு, ஒரு மூடநம்பிக்கையான கற்பனைப்புனைவு, அல்லது குறிப்பிட்ட இந்த
நாளில் இந்த நேரத்தில் இறப்பு உண்டாகும் என்று உறுதியாக வருவதுரைத்தல் ஆகியவை அவ்வப்போது தோண்டுகின்றன. அதே நேரத்தில் , அகத்தில் உண்டாக்கும் மாற்றத்தினாலும் ( அதற்க்கேற்றவாறு புறநிலை
மாற்றமும் கவனிக்கப்பட்டுள்ளது) உண்டாகுகிறதே அன்றி வேறு வகையில் நிகழக்கூடியவை
அல்ல. அதனால் , இறப்பு ஏற்பட்டுவிடும் என்பது போன்ற நோய்த் தோற்றத்திற்கு இணையான காரணங்களாகிய தந்திரமாக ஏமாற்றும் இயல்புடைய அல்லது அந்த நோய் நிலைக்கு
எதிரான நிலையே அங்கிருப்பதாக இணங்கசெய்தல் போன்றவற்றின் மூலமாகவே ஆரோக்கியநிலை
(நலம்) திடீரென்று மீட்கப்படுகிறது. இத்தகைய மனம்
சார்ந்த மருத்துவத்தால் (மருந்துகள்) , இறப்பு உண்டாகுமாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தியும் , அகமும் , புறமும் சார்ந்ததுமான அந்நோய்
நிலையைப் போக்க முடியுமேயன்றி, அங்கே வேறு எதனாலும் அந்த
நோய் நீங்கும் நன்மை நிகழுமாறு செய்ய
முடியாது.
அடிக்குறிப்பு -2: மனிதர்கள் இவ்வுலகில் நோய்வாய்ப்படும் போது,
மனித நலத்தைப் பேணி
பாதுகாக்கும் கடவுள் மட்டுமே தமது மதி நுட்பத்தாலும் மற்றும் நற்குணத்தாலும், மருத்துவர்கள் அந்த நோயிலிருந்து எதை நீக்க வேண்டும் , எவற்றை நிர்மூலமாக்கவேண்டும்
, நலமான நிலையை மீண்டும் எப்படி உண்டாக்குவது என்ற வழிகளை
மருத்துவர்களுக்குக் காட்டமுடியும். ஆனால் அவர், நோய்களில்
குணமாக்கவேண்டியவற்றை மர்மமான , தெளிவற்ற வகையில் மூடி
மறைத்து [அறிவியல் விதிகளால் தாங்கள்
அவற்றை ஊடுருவிப் பார்த்துத் தெரிந்து கொள்வதாக அடக்கு ஆளும் மருத்துவத் துறையைச்(அலோபதி)சேர்ந்தவர்கள்
கூறிக் கொள்கின்றனர்] நோயாளியின் அகத்தில் மறைந்திருக்கும் நோய்
பாதிப்பை மனிதன் சரியாக தெரிந்து கொள்ள முடியாமலும் , அதனால் அந்த நோயைக் குணமாக்க முடியாமலும் கடவுள் செய்து விட்டால் , அவரது மதிநுட்பத்தைப்பற்றியும், நற்குணத்தைப்பற்றியும் நாம் என்ன நினைத்துக் கொள்வோம்.?
No comments:
Post a Comment