§
23
All
pure experience, however, and all accurate research convince us that persistent
symptoms of disease are far from being removed and annihilated by opposite
symptoms of medicines (as in the antipathic, enantiopathic or palliative
method), that, on the contrary, after transient, apparent alleviation, they
break forth again, only with increased intensity, and become manifestly
aggravated (see § 58 - 62 and 69).
நோய்க்குறிகளுக்கு நேரெதிர் குறிகளை உடைய மருந்துகளை கொடுத்து (அலோபதி அல்லது
ஆங்கில மருத்துவம், நோயின் குணத்திற்கு எதிரான
குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் முறை, அல்லது நோயைத் தணிவிக்கும் முறை ) சிகிச்சையளிக்கும் போது அங்கு உறுதியாக
நிற்கிற நோய்க்குறிகளை நீக்குவதும் மற்றும் ஒழித்துக்கட்டுவதும் சிறிதும்
கைகூடுவதில்லை என்பதையே நமது எல்லா தூய பட்டறிவும் , சரிநுட்பமான ஆராய்ச்சியும்
நம்மை நம்ப வைக்கின்றன. அதற்கு மாறாக , தற்காலிகமாகவும், உறுதி இல்லாத நிலையிலும் காணப்பட்ட அந்நோய்த் தணிவுக்குப் பிறகு
அந்நோய்க்குறிகள் முன்னிலும் கூடுதலான தீவிரமான நிலையில் வெளிப்படையாகத் தெரியுமாறு
அதிகரிக்கின்றன, ( மணிமொழி 58-62 மற்றும் 69 இல் பார்க்கவும்)
No comments:
Post a Comment