But
as nothing is to be observed in diseases that must be removed in order to
change them into health besides the totality of their signs and symptoms, and
likewise medicines can show nothing curative besides their tendency to produce
morbid symptoms in healthy persons and to remove them in diseased persons; it
follows, on the one hand, that medicines only become remedies and capable of
annihilating disease, because the medicinal substance, by exciting certain
effects and symptoms, that is to say, by producing a certain artificial morbid
state, removes and abrogates the symptoms already present, to wit, the natural
morbid state we wish to cure. On the other hand, it follows that, for the
totality of the symptoms of the disease to be cured, a medicine must be sought
which (according as experience shall prove whether the morbid symptoms are most
readily, certainly, and permanently removed and changed into health by similar
or opposite medicinal symptoms1) have the greatest tendency to produce similar
or opposite symptoms.
Foot
Note-1: The other
possible mode of employing medicines for diseases besides these two is the
allopathic method, in which medicines are given, whose symptoms have no direct
pathological relation to the morbid state, neither similar nor opposite, but
quite heterogeneous to the symptoms of the disease. This procedure plays, as I
have shown elsewhere, an irresponsible murderous game with the life of the
patient by means of dangerous, violent medicines, whose action is unknown and
which are chosen on mere conjectures and given in large and frequent doses.
Again, by means of painful operations, intended to lead the disease to other
regions and taking the strength and vital juices of the patient, through
evacuations above and below, sweat or salivation, but especially through
squandering the irreplaceable blood, as is done by the reigning routine
practice, used blindly and relentlessly, usually with the pretext that the
physician should imitate and further the sick nature in its efforts to help
itself, without considering how irrational it is, to imitate and further these
very imperfect, mostly inappropriate efforts of the instinctive unintelligent
vital energy which is implanted in our organism, so long as it is healthy to
carry on life in harmonious development, but not to heal itself in disease.
For, were it possessed of such a model ability, it would never have allowed the
organism to get sick. When made ill by noxious agents, our life principle
cannot do anything else than express its depression caused by disturbance of
the regularity of its life, by symptoms, by means of which the intelligent
physician is ask for aid. If this is not given, it strives to save by
increasing the ailment, especially through violent evacuations, no matter what
this entails, often with the largest sacrifices or destruction of life itself.
For
the purpose of cure, the morbidly depressed vital energy possesses so little
ability worthy of imitation since all changes and symptoms produced by it in
the organism are the disease itself. What intelligent physician would want to
imitate it with the intention to heal if he did not thereby sacrifice his
patient?
நோய்களில், உறுதியாக குணப்படுத்தக்
கூடியவையாகவும் அதனால் நலநிலைக்கு மாற்றக்கூடியவையாகவும் உள்ள ஒட்டுமொத்தக்(முழுமையான)குறிகள்
மற்றும் அறிகுறிகள் போன்றவற்றைத் தவிர அங்கு கவனிக்கப்படவேண்டியவைகள் ஒன்றுமில்லை. அதேபோல் மருந்துகளில் , ஆரோக்கியமான நிலையில் இருப்பவர்களிடம் செயற்கையான நோய்க்குறிகளை ஏற்படுத்தவும்
, நோயுற்றவரிடமிருந்து அந்நோய்க்குறிகளை நீக்கவும் ஆகிய
இயல்புகளைத் தவிர வேறு எவற்றையும் காணமுடியாது. அகவே, ஒருபுறம் அந்த மருந்துப்பொருள்கள்
மனித உடலில் குறிப்பிட்ட சில பாதிப்புகளையும் , அறிகுறிகளையும் கிளர்ந்தெழச்
செய்வதால் அதாவது சில செயற்கையான நோய்க்குறிகளை
உண்டாக்கவும் , ஏற்கனவே அங்கு இருந்த நோய்க்குறிகளை அடியோடு
ஒழித்துக்கட்டவும் செய்யக்கூடிய ஆற்றல் மருந்துகளுக்கு இருப்பதால் தான் அவை
நோய்களை நீக்குகின்றன. இன்னொருபுறம், குணமாக்கப்பட வேண்டிய நோயின் ஒட்டுமொத்தக் குறிகளையும் நீக்குவதற்கு (
நோய்க்குறிகள் உடனுக்குடனாகவும் , உறுதியாகவும், நிரந்தரமாகவும் நீக்கப்படுவதும் நலமான
நிலைக்கு மாற்றுவதும் அம்மருந்தின் ஒத்ததன்மையிலான குறிகளினாலா அல்லது எதிரான தன்மையிலான குறிகளினாலா என்பதை அனுபவத்தின் மூலம் அறியலாம்)
அவற்றிற்கு
ஒத்திருக்கும் குறிகளையோ அல்லது அவற்றிற்கு எதிரான குறிகளையோ மிகப்பெரிய அளவில்
உருவாக்கக்கூடிய சக்தியுள்ள மருந்த தேட வேண்டும்.
அடிக்குறிப்பு-1 :
இந்த இரண்டு முறைகளைத் தவிர நோய்களுக்கு மருந்தளிப்பதற்கு இருக்ககூடிய மற்றொரு
முறை , நோய்நிலையில் ஒத்தவகையான
குறிகளையோ அல்லது எதிரான குறிகளுடன் நேரடியான தொடர்பு இல்லாத , பல்வேறான முரண்கூறுகளை கொண்ட
குறிகளுக்கு மருந்தளிக்கும் அலோபதி ( ஆங்கில ) மருத்துவ முறையாகும் . இத்தகைய செயல்முறை வாய்ந்த
மருத்துவத்தை நான் ஏற்கனவே வேறொரு இடத்தில் காட்டியுள்ளவாறு, ஆபத்தான , பயங்கரமான விளைவுகளை உள்ளடக்கிய அம்மருந்துகள் போதியசான்றுகள் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுபவையாகவும்
, அடிக்கடியும் , திரும்ப திரும்ப அதிக அளவில்
கொடுப்பவையாகவும் அமைந்து நோயாளியின் உயிர்வாழ்க்கைக்கு பொறுப்பில்லாமல் , கொடுங்கொலைக்கு சமமாகி விடுகிறது. அத்தோடு, நோயை உடம்பின் வேறு
பகுதிகளுக்கு மாற்றிவிடும் எண்ணத்துடன்
வலியை ஏற்படுத்தும் செயல்களாகிய வாய் மற்றும் மலவாய் ஆகிய இருபுறங்களின்
வழியாக உடம்பில் உள்ளவற்றை வெளியேற்றுதல் , வியர்வையையும் , உமிழ்நீரையும் பெருகுமாறு செய்தல் , இன்னும் குறிப்பாக கூறவேண்டுமென்றால்
இரத்தத்தை வெளியேற்றி வீணடித்தல் போன்றவற்றை வழக்கமாக உடைய இந்த மருத்துவப்பயிற்சியே
வழக்கமாகவும், கண்மூடித்தனமாகவும் இடைவிடாமல் தொடர்ந்து
மேற்கொள்ளப்படுகிறது. நமது உறுப்பமைவில் அமைந்துள்ள உயிராற்றல் நலமாக இருக்கும்
வரையில் உயிர் வாழ்க்கையை ஒத்திசைவுடன் வளர்ச்சியுறச் செய்கிறது. ஆனால்
நோயுற்றபோது அது தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ள முடியாதது . இத்தகைய சூழ்நிலையில்
மருத்துவர் நோய்குறிகளுக்கு இணையாக
இயற்கைப்போல செய்து அங்கு உதவும் முயற்சியைச் செய்யவேண்டும் என்னும்
பாசாங்குடன் , தூண்டுணர்ச்சி உடையதும் , அறிவுத்திறன் இல்லாததும்
ஆகிய உயிராற்றலின்
மாற்றத்திற்குப் பொருத்தமில்லாததும், குறைபாடான மருத்துவமுயற்சியைச்
செய்வது எத்தகைய பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செயல் என்று எண்ணிப்பார்க்காமலும்
அம்மருத்துவப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நோய் உருவாகாமல் அமையும் திறம் உயிராற்றலுக்கு உள்ளதாக இருந்தால்
, அவ்வுருப்பமைவு நோய்வாய்ப்படுவதற்கு அது இசைந்திராது. நச்சுத் தன்மை வாய்ந்த பொருள்களால் உயிராற்றல்
நோய்வாய்பட்டபொழுது உயிர் ஒழுங்குமுறையில் ஏற்பட்டுள்ள இடர்பாட்டினால் உண்டாகிய
தனது தாழ்நிலையை குறிகளால் வெளிப்படுத்துவதைத் தவிர , அது வேறொன்றும் செய்யாமல் புத்திசாலித்தனமானமான மருத்துவரின் உதவியை
வேண்டிநிற்கிறது. அந்த உதவியை தர இயலாத நிலையில் , பயங்கரமான வெளிப்பாடுகளை
உண்டாக்கி உயிரைக் காப்பாற்றுவதற்குக் கடும் முயற்சி செய்கிறது. அத்தகைய
வெளிப்பாடுகளினால் உயிரை தியாகம் செய்வதற்கும் அல்லது உயிர் வாழ்க்கையை அழிவிற்கு
உட்படுத்துவதற்கும் உயிராற்றல் கவலைப்படுவதில்லை.
உயிராற்றல் பாதிப்புக்கு உள்ளானதால்
உடல் உறுப்பமைவில்
உண்டாகப்பட்டுள்ள மாற்றங்களும் , குறிகளும் ஆகிய எல்லாமே அங்குள்ள நோயாகும் . அதனால் நோயின் தாக்கத்தினால் தாழ்வடைந்துள்ள உயிராற்றலில்
நலத்தை கொடுக்கக்கூடிய திறன் குறைவாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் புத்திக்கூர்மை
படைத்த மருத்துவரால் அந்தத் துயரறரை தியாகம் செய்வதைத் தவிர குணமாக்கும்
நோக்கத்துடன் பின்பற்றுவதற்கு அங்கு எதுவுமில்லை.
No comments:
Post a Comment